கணக்கில புலியா இருங்க
தலைப்பு கணக்கில புலியா இருங்க
வெளியீட்டாளர்: அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு
ஆண்டு : மே 2020
பதிவு எண் ASIN BO89B7Y7GJ
மொழி : தமிழ்
கருப்பொருள் : கணக்குப் புதிர்கள்
பக்கங்கள் 172 விலை 5 USD
நம் குழந்தைகள் நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்க வேண்டுமா ?
ஆக்கப் பூர்வமான செயல்களில் மட்டும் ஆர்வம் கொள்ள வேண்டுமா ?
சுயமாகவே முயன்று சுய சார்பும் சுய மதிப்பும் பெற வேண்டுமா
?
நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா?
செலவின்றி மனதை ஒருமுகப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டுமா ?
தேர்வுகளில் ஒவ்வொரு முறையும் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா
?
வகுப்பில் தொடர்ந்து முதல் மாணவனாகத் திகழ வேண்டுமா
?
ஞாபக சக்தியை அதிகரித்துக் கொண்டு சாதனை படைக்க வேண்டுமா
?
போட்டிகளில் எப்போதும் வெற்றிக்கு மேல் வெற்றி காண வேண்டுமா ?
சீரிய சிந்தனைகளால் எண்ணங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமா?
தலைமை தாங்கும் தகுதியுள்ளவராக வளர்ந்து வழிகாட்டியாக வேண்டுமா ?
ஆளுமைத் திறனை மேம்படுத்திக் கொண்டு நற்பொருள் ஈட்ட வேண்டுமா ?
அனைத்துப் பிரச்சனைகளையும் ஒரே முயற்சியில் சரி செய்யக்கூடிய ஒரு தீர்வு இருக்கின்றது என்றால் அது விளையாட்டுக் கணக்குகளின் மூலம் சிந்தனை மற்றும்
செயல் திறன்களை வளர்த்துக் கொள்வதாகும் . அந்த அடிப்படை நோக்கில்
“கணக்கில புலியா இருங்க” என்ற இச் சிறு நூலை எழுதினேன் இதில் மூளைக்கு வேலை என்ற தலைப்பில் 55 கணக்குப் புதிர்களும் அதற்கான விடைகழும் போதிய விளக்கங்களுடன் கூறப்பட்டுள்ளன .ஒவ்வொரு கணக்குப் புதிருடனும் சில சுவாரசியமான தகவல்கள் இணைக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பாகும்.
No comments:
Post a Comment