Wednesday, September 20, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

எண்ணத்தின் வண்ணங்கள் (Colourful thoughts)

 


தலைப்பு : எண்ணத்தின் வண்ணங்கள் 

வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு

ஆண்டு : அக்டோபர் 2020

ASIN பதிவு எண்: BO8KVYPYM3

மொழி : தமிழ்

கருப்பொருள்: கவிதை 

பக்கங்கள் 103 விலை 2 USD

        எனக்கும் ஒருநாள் சின்னச் சின்ன ஆசையொன்று வந்தது. கவிதை நூலொன்று படைக்கவேண்டும் என்று. அறிவியலைப் படித்துவிட்டு எல்லோரும் அறிவியல் அறிஞனாக வருவார்கள்.  புலம் பெயர்ந்து கவிஞனாக யாரும் விரும்பமாட்டார்கள். உனக்கென்ன அப்படியொரு ஆசை என்ற மனதின் அறிவுறுத்தலையும் மீறி முயற்சித்தேன் .விளைவு கவியல்லாதவனின் கவிதைகள் என் எண்ணத்தின் வண்ணமலர்களாகப் பூத்தது . கவிதைகளில் வீசும் அறிவியல் நெடி அதை உணர்த்தும். அறிவியலுக்கும் கவிதைக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது அறிவியலின் நோக்கம் புரியாத விஷயத்தைப் புரியும்படி எளிமையாக்கிச் சொல்வது , இயற்கையில் புதைந்திருப்பதைத் தோண்டி எடுத்துக் காண்பிப்பது . கவிதையின் நோக்கம் புரிந்த ஒன்றைப் புரியாதபடி சொல்வதாகும். தெரியும் காட்சியை மனதுக்குள்ளே புதைப்பதாகும் .சிந்தித்துப் பார்த்தல் இரண்டும் ஒன்றுதான் என்பது தெரியவரும் .ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது என்பதைத் தவிர பெரிய வித்தியாசமில்லை. இதில் 75 கவிதைகள் மூன்று பொதுத் தலைப்புகளில் அமைந்துள்ளன. அகவியலில் 9 கவிதைகளும் . புறவியலில் 38 கவிதைகளும் அறிவியலில் 28 கவிதைகளும் உள்ளன. நான் இதைக் கவிதைகள் என்று குறிப்பிட்டாலும் தமிழ்ச் சமுதாயம் அப்படியே நினைக்குமா என்று தெரியவில்லை

No comments:

Post a Comment