ஒரு சிறந்த மாணவனாLanguageக வளர்வதும் வளர்ப்பதும் எப்படி? (How to grow and grow into a good
student)
தலைப்பு : சிறந்த மாணவனாக வளர்வதும் வளர்ப்பதும் எப்படி ?
வெளியீட்டாளர் கண்ணப்பன் பதிப்பகம் , சென்னை
ஆண்டு: ஜனவரி 2021
மொழி தமிழ்
கருப்பொருள்: சுய முன்னேற்றம்
பக்கங்கள் 208
விலை Rs.130
மாணவர்களுக்காக எழுதப்பட்ட இந்த ஒளியச்சு நூல் தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் சென்றடைய வேண்டும் என்ற விருப்பத்தில் ,சென்னையிலுள்ள கண்ணப்பன் பதிப்பகம் மூலம் அச்சிடப்பட்ட நூலாக வெளியிட்டேன். மென்மை யான மனிதராக ,எல்லோருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உடையவராக பஞ்சாயத்து தலைவராக இருந்து தன் கிராமத்தை மேம்படுத்தி வாழ்ந்து மறைந்த என் மாமனார் அவர்களுக்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கின்றேன். இந்நூல் 7 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. 1.
அறிவே ஆற்றல் கல்வியே செல்வம் 2.குழந்தையின் கல்வியில் பெற்றோரின் பங்கு 3.ஒழுக்கம் விழுப்பம் தரும் 4. இலக்கை அடையத் தேவையான கருவிகள் 5.திறமைகள்-மனிதனின் அகவாற்றல் 6.உன்னால் முடியும் தம்பி, உனக்கு நீதான் சிறந்த வழிகாட்டி 7. சமுதாயம் நேசிக்க சமுதாயத்தை நேசி,வகுப்பறைகளும் ,பெற்றோரும் கற்றுக்கொடுக்காத அல்லது கற்றுக்கொடுக்க முடியாத பல விஷயங்களை ஒருவருக்கு அவர் வாழும் சமுதாயமே கற்றுக்கொடுக்கும். இந்த நூல் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது .
100 புத்தகங்களை கண்ணப்பன் பதிப்பகத்திலிருந்து விலைக்கு வாங்கி என் மாமனாரின் உறவுக்காரர்களுக்கு இலவசமாகக் கொடுத்தேன். நாங்கள் ஆண்டு தோறும் மாசி மாதம் முதல் புதன் கிழமையன்று கொண்டாடும் திருமாத்தாள் படைப்பு வீட்டில் பலரும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஏலமிடுவதற்குப் பலவிதமான பொருட்களை வழங்குவார்கள் .ஏலமிட்டு வரும் வருவாயினை திருமாத்தாள் அறக்கட்டளைக்கு சேர்த்துக்கொள்வார்கள். இந்தப் புத்தகத்தின் 4 நகல்களை திருமாத்தாளுக்கு படைத்தேன் .படைப்பு வீட்டில் நூல்களைப் படைத்த முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கின்றேன்
No comments:
Post a Comment