. வள்ளுவத்தில் இயற்பியல் கூறுகள் (The Physics in Thiruvalluvam)
தலைப்பு : வள்ளுவத்தில் இயற்பியல் கூறுகள்
வெளியீட்டாளர்: செல்விப் பதிப்பகம் ,காரைக்குடி
ஆண்டு: ஏப்ரல் 2006
மொழி தமிழ்
கருப்பொருள்: திருக்குறள் , அறிவியல் தமிழ்
பக்கங்கள் : 96, விலை Rs. 35
தமிழில் உலக அறிவியலையும் ,உலக அறிவியலில் தமிழையும் இணைத்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற உணர்வு எஎன்னிடம் தீவிரமாக இருந்ததால் மன நிறைவு பெறும்வரை அறிவியல் தமிழில் கட்டுரைகளையும் ,நூல்களையும் எழுதினேன் . அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த நூல். அறிவியலில் நான் கற்ற இயற்பியலும், தமிழ் மொழியும் எனக்கு உரிமையுள்ளதாக இருந்ததால் தமிழ் இலக்கியங்களில் உள்ள அறிவியல் கருத்துக்களை புரிந்துக்கொள்ள முடிந்தது .தமிழ் இலக்கியங்கள் மிகவும் தொன்மையானது .அதில் சொல்லப்படாத கருத்துக் களே இல்லை .அவற்றின் அடிப்படையான நோக்கம் ஒன்றுபட்ட சமுதாயத்தின் வளர்ச்சி என்பதை விட சமுதாயத்தின் இனிய வாழ்க்கை மட்டுமே .முன்னோர் களின் கருத்துக்களுக்கும் படைப்பாக்கங்களுக்கும் அடைப்படியாக இருந்தது இயற்கையின் பன்முகத் தோன்றங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களே அவர்களுடைய எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் வெளிப்பட்டன எண்ணங்களும் சிந்தனைகளும் இயற்கையாகவே இருந்ததால் அவர்களுடைய படைப்புக்களில் அறிவியலின் பல அம்சங்களும் வெகு இயல்பாகவே குறிப்பிடப்பட்டிருந்த.ன.இந்நூல் திருக்குறளில் பொதிந்துள்ள சில உயர் இயற்பியல் கருத்துக்களை புலப்படுத்திக் காட்டுவதுடன் அதில் கையாளப்பட்டுள்ள பைந்தமிழ் சொற்களை புனராக்கஞ் செய்து கலைச் சொல்லாகப் பயன்படுத்தும் முறையையும் தெரிவிக்கின்றது. குறள் மட்டுமின்றி பிற தமிழ் இலக்கியங்களிலிருந்தும் தேவைப்படும் கலைச் சொற்களைப் பேரதுடியும் என்பதை சிலப்பதிகாரத்தைக் கொண்டு நிறுவுகின்றது. இதில் நிறை-ஆற்றல் சமன், ஒத்ததிர்வும் ஒத்தியக்கமும் ,ஆற்றல் அழிவின்மை விதி போன்ற இயற்பியல் கருத்துக்களும் வரம்பும் வளமும் , நீரின் நன்மைகள் ,மனமும் உளவியலும் ,போன்ற சமூக அறிவியல் சார்ந்த கருத்துக்களும் விவரிக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள பல செய்திகள் ,மதுரை தமிழ்ச்சங்கம் வெளியிட்டு வரும் மாத இதழான செந்தமிழில் 2004 ம் ஆண்டில் சில மாதங்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளது
No comments:
Post a Comment