Friday, September 29, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 .நுண்பொருள் உலகம் (World of microparticles) 


தலைப்பு : நுண்பொருள் உலகம்

வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை

ஆண்டு : ஜூன் 1996

குறிப்பெண் : A 900 ISBN 81-234-0486-7

மொழி : தமிழ்

கருப்பொருள் அடிப்படைத் துகள்கள் , உயர் ஆற்றல் இயற்பியல்  

பக்கங்கள் 252 விலை Rs.64

  நான் தஞ்சாவூர் இராஜா  சரபோஜி அரசுக் கல்லூரியில பணிபுரிந்தபோது மூதறிவியல் மாணவர்களுக்கு அணுக்கரு இயற்பியல் பாடம் எடுத்தேன். அடிப்படைத் துகள்கள் பற்றி நிறையக் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வெளியிட்டிருக்கிறேன். இருப்பினும் எனக்குள்ளும் அடிப்படைத் துகள்கள் பற்றி  நிறைய ஐயங்கள் உண்டு . அதற்காக அடிப்படைத் துகள்கள் பற்றி பல நூல்கள் வாங்கியுள்ளேன். நான் படித்ததை நான் புரிந்து கொண்டதை ஒரு நூலாக எழுதவேண்டும் என்று மனதிற்குள் ஒரு ஆசை துளிர்த்தது . கோடை விடுமுறையில் எனக்கு 2 மாதம் ஓய்வு கிடைத்தது. குடும்பத்தினரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு நான் மட்டும் தஞ்சாவூரிலேயே தங்கி இந்த நுண்பொருள் உலகம் என்ற நூலை எழுதினேன்..மீர் பதிப்பகத்தார் ஆங்கிலத்தில் வெளியிட்ட “Microworld”  என்ற நூலின் கருத்துக்களோடு தலைப்பையும் பயன்படுத்திக் கொண்டேன். நூலில் அளவு 200 பக்க நோட்டுக்களில் 3 நோட்டுக்கள் .  ஒரு சமயம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தேர்வுத்தாள் திருத்தச் சென்ற பொழுது அப்போது அங்கு துணை வேந்தராக இருந்த சேதுநாராயணன் அவர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தரமான பாட நூல்களை வெளிட்டு வருவது எனக்கு முன்பே தெரியும் என்பதால் , நுண்பொருள் உலகம் என்ற இந்த நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டு சேதுநாராயணன் அவர்களிடம் கொடுத்தேன். அவர்களும் வெளியிடுவதாக வாக்குறுதி கொடுத்து வாங்கிக்கொண்டார்கள் . சில காலம் வெளியிடவில்லை. மறுமுறை தேர்வுத் தாள் திருத்தும் பணிக்குச் சென்ற போது என்னுடைய கையெழுத்திப் பிரதியை மறக்காமல் என்னிடம் திருப்பித் தந்து விட்டார் கள் . நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது விடுமுறை நாட்களில் என் தாயாரின் தாயார் வீட்டில் விளையாடுவேன்.. அவர்கள் நினைவாக இந்த நூலை வெளியிட்டுளேன். இந்நூலில் அடிப்படைத் துகள்கள் பற்றிய நெடிய முன்னுரை யுடன்  எதிர்த்துகள்கள். நியூட்ரினோக்கள் ,கேயன்ங்கள் ,ஹைபெரான்கள் ஒத்ததிர்வுத் துகள்கள் ,குவார்க்குகள் போன்ற நுண்துகள்களைப்    பற்றிய முழு விவரங்களையும் விவரிக்கின்றது ..ஏறக்குறைய இது ஒரு ஆய்வு நூல் போல இருக்கின்றது .இந்த நூலைப் படித்த பலரும் பாராட்டினார்கள் . இந்த நூலுக்கு சிறந்த நூலுக்கு வழங்கப்படும் பரிசு கிடைக்கும் என்று நினைத்தேன். நினைப்பு நினைப்பாகவே போனது . பரிசு கிடைக்காவிட்டால் என்ன மனதிற்கு ஒரு திருப்தி கிடக்கின்றதே  அதை யார் தடுக்கமுடியும்

 

No comments:

Post a Comment