ஐந்தாம் தமிழ் வளர்ப்போம் (அறிவியல் கவிதைகள்) (Flourishing the fifth Tamil- Scientific poems)
தலைப்பு : ஐந்தாம் தமிழ் வளர்ப்போம் (அறிவியல் கவிதைகள் )
வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு
ஆண்டு நவம்பர் 2020
ASIN பதிவு எண் BO8N1H1S3D
மொழி : தமிழ்
கருப்பொருள் : அறிவியல் தமிழ், கவிதை
பக்கங்கள் 37 விலை 1 USD
தமிழக அரசு கல்லூரிகளில் இளமறிவியல் மற்றும் கலைப் பிரிவுப் பாடங்களைத் தமிழில் கற்பிக்க முயற்சி மேற்கொண்டபோது ஆசிரியர்களுக்கான தமிழ்வழிப் பயிற்சி வழங்கியது . நான் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் டிசம்பர் 1974
லும் ,சென்னை மாநிலக் கல்லூரியில் டிசம்பர் 1976
லும் நடந்த பயிற்சி அரங்கில் நான் கலந்துகொண்டேன். அப்போது ஒரு பயிற்சியாளர் ஒரு சில இயற்பியல் விதிகளை கவிதைவடிவில் கூறினார். அப்போது அது என்னை ஈர்க்கவில்லை என்றாலும் தமிழில் அறிவியல் நூல் எழுதும் போது அறிவியல் கவிதைகள் எனும் புதிய முயற்சியில் ஈடுபட விரும்பினேன். அந்த விருப்பத்தின்
வெளிப்பாடே இந்நூல். இயற்பியலின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சில அடிப்படை அறிவியல் கருத்துகளை விவரிக்கும் 19 கவிதைகள் இதில் உள்ளன. அறிவியலை மொழியின் ஒரு பகுதியாக புகுத்தி தமிழை வளர்க்கும் கன்னி முயற்சி இது. கணிதத்தில் பெருக்கல் அட்டவணை போன்ற அறிவியல் கருத்துகளை நினைவில் வைத்துக் கொள்வது பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்
தமிழ் மொழியை வளர்க்க தமிழ் உலகச் சான்றோர்கள் சங்கம் அமைத்து தமிழை இயல் இசை நாடகம் என்று பிரித்து வளர்த்தார்கள் .அதனால் தமிழ் இலக்கியங்கள் உலக இலக்கியங்களுள் முதன்மையாய்
விளங்குகின்றது .இனி அறிவியல் தமிழை நான்காம் தமிழாக வளர்க்க அறிவியல் அறிஞர்கள் அறிவியலின் அண்மைக்கால வளர்ச்சியை தமிழில் எழுத முன்வரவேண்டும் .தமிழை வளர்க்கவேண்டும் என்று விரும்பும் தமிழ் மக்கள் ஐந்தாம் தமிழாக அறிவியல் கவிதைகளைப் படைக்க முன்வரவேண்டும் ஏனெனில் கவிதை வடிவில் இளைஞர்களின் மனதில் ஆழப்பதிந்து விடுகின்றது
மதுரையில் நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கிடையே குவாண்டம் இயக்கவியல் பற்றி தமிழில் கட்டுரைப் போட்டி வைத்தார்கள் .அதில் என்னுடைய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது . அது என்னுடைய அறிவியல் தமிழுக்குக் கொடுக்கப் பட்ட அங்கீகாரம் என்றே நினைக்கின்றேன்
No comments:
Post a Comment