.உலோகங்களும் நாமும் (Metals and we )
தலைப்பு : உலோகங்களும் நாமும்
வெளியீட்டாளர் : திருமகள் நிலையம் ,சென்னை
ஆண்டு: ஏப்ரல் 2006
மொழி : தமிழ்
கருப்பொருள்: கனிம வேதியியல். உலோகங்கள்
பக்கங்கள் 200 விலை Rs.57.
உலோகங்களைப் பற்றிய பொது அறிவியல் விவரங்களை
மீர் பதிப்பகத் திலிருந்து பெற்ற மலிவு விலைப் புத்தகங்கள் இரண்டும் சயன்ஸ் டுடே மற்றும் சயன்ஸ் ரிப்போர்ட்டரும் தந்தன . இயற்கையில் காணப்படும் 92 தனிமங்களின்
75 சதவீதம் உலோகங்களாகும். இவற்றுள் பெரிலியம் ,அலுமினியம் .டைட்டானியம் வனேடியம் குரோமியம்
,செம்பு துத்தநாகம் காலியம் செளினியம் ,சிர்கோனியம் ,மாலி ப்பிட்டினம் , காட்மியம்
ஈயம் தோரியம் மற்றும் யுரேனியம் ஆகிய 15 உலோகங்களை
ப் பற்றிய பொதுவான இயற்பியல் மற்றும் வேதியியல் விவரங்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றி
இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன ..வேறு சில உலோகங்களை இதுபோலத் தொகுத்து உலோகங்களும்
நாமும் -2 என்ற தலைப்பில் வெளியிட வேண்டி திருமகள் நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன்.
எதோ சொல்ல முடியாத சில காரணங்களினால் காலதாமதம்
செய்யவே நான் பலமுறை விசாரிக்க, அவர்கள் அந்த
நூலை வெளியிடவில்லை என்று திருப்பி அனுப்பவும் இல்லை , இன்றுவரை பிரசுரித்ததாகவும்
தெரியவில்லை . ஆசிரியர்களின் உழைப்பை மதிக்கத் தெரியாதவர்கள்
No comments:
Post a Comment