Saturday, September 9, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

Ramanujan Numbers- Mathematical Thoughts and ideas

 

 

தலைப்பு Ramanujan Numbers- Mathematical Thoughts and ideas

வெளியீட்டாளர் எஸ் . சந்தன்  அண் கோ , நியூ டெல்லி

ஆண்டு   ஜூன் 1996

பதிவு எண்: ISBN: 81-219-1272-5

மொழி : ஆங்கிலம்

கருப்பொருள்: விளையாட்டுக் கணக்குகள்

பக்கங்கள்: 116 விலை:150

      பொதுவாக எனது தாய்மொழியான தமிழில் எழுத்துகளை கற்பனை செய்து பார்ப்பேன், பிறகுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பேன்.இந்தப் புத்தகம் எனது தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களின் விளைவு.

      இது கணிதத்தை வேடிக்கையாகக் கையாளும் ஒரு பிரபலமான அறிவியல் புத்தகம் இந்நூல் முழுதும் இராமானுஜன் எண்களைப் பற்றியும் அவற்றின் பல்வேறு பண்புகளைப்பற்றியும் விவரிக்கின்றது . இராமானுஜன் எண் என்பது எந்த எண்ணை  இருவேறு இருமடிகளின் கூடுதலாக இருவேறு வழிகளில் குறிப்பிடமுடியுமோ  அந்த எண்ணாகும் இதை இரண்டாம் தர இராமானுஜன் எண்கள் (R2) என்பர் [ R2 = a2 + b2 = c2 + d2 ]. மூன்றாம் தர  [ R3 = a3 + b3 = c3 + d3 ] , நான்காம் தர  [ R4 = a4 + b4 = c4 + d4 ராமானுஜன் எண்களையும் இந்நூல் விவரிக்கின்றது

           இது கணிதத்தில் தன்னார்வத்தையும் நினைவாற்றலையும்  வளர்த்துக்கொள்ள உதவுகிறது, கணிதச் சமன்பாடுகளைத் தீர்வு செய்யும் முயற்சி வாழ்க்கையில் எந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு  காணும் திறமையை வழங்குகின்றது , இந்நூலை என் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்து வெளியிட்டேன். பண்ணப் பண்ணப் பொருள் பலவிதமாகும் என்று சான்றோர்கள் கூறுவார்கள். ராமானுஜன் எண்கள் பற்றி ஒரு நூலை எழுதி முடித்த போது அது தொடர்பான வேறு சிந்தனைகள் மனதில் தோன்றி புதிய முயற்சிகளுக்கு வித்திட்டது . அதன் விளைவாக வேறு சில நூல்களையும் எழுதி வெளியிட்டேன்

No comments:

Post a Comment