Thursday, September 7, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 Improving your Mathematical skill

  நான் பொது அறிவியல், பொழுதுபோக்கு கணிதம் மற்றும் சுயமுன்னேற்றம்  ஆர்வமாக இருப்பதால், நம் சமூகத்தின் ஒழுக்கத்தையும் ஆர்வத்தையும்  மேம்படுத்துவதற்காக  பொதுவாக பொது மக்களுக்கான  அறிவியல், விளையாட்டுக் கணக்குகள் மற்றும் சுயமுன்னேற்றம் பற்றிய புத்தகங்களை மட்டுமே அதிகம்  எழுதுகிறேன். தமிழ் என் தாய்மொழியாக இருப்பதாலும், தமிழில் அறிவியல் தமிழ் வளர்க்கப்படவேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பத்தாலும்    தமிழில் எழுதுவது வெகு இயல்பாகவே வருகின்றது   ஒரு சில நூல்களை மட்டுமே ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். அவற்றுள்Improving your Mathematical skill என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த நூலும் ஒன்று.  அமேசான்  KDP யில் வெளியிடப்பட்ட  இந்தப் புத்தகம்  மாணவர்கள் மற்றும் பொது மக்களின் கணித ஆர்வத்தை மேம்படுத்துகிறது.   . 

 








 

தலைப்பு : Improving your Mathematical skill                                                                                              வெளியீட்டாளர்: அமேசான்  KDP  ஒளியச்சுப் பதிப்பு                                                                                 ஆண்டு : ஏப்ரல் 2023                                                                                                                                 பதிவு எண் : ASIN: B0C6W5K671                                                                                                                        மொழி : ஆங்கிலம்                                                                                                                             கருப்பொருள்: பொழுதுபோக்குக் கணிதம்                                                                                 பக்கங்கள் 128  விலை: 5 USD 

        இது ஒரு வகையான பொழுதுபோக்கு கணிதப் புத்தகம், இது  மாணவர்களிடையே கணித திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது. இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது - ஒற்றைப்படை-இரட்டை எண்கள், இயற்கணித சூத்திரங்கள்,  உயர் மதிப்புக்களுடன் கூடிய இரு எண்களை மனதிற்குள்ளேயே பெருக்கி விடை கூறுவதற்கண் தந்திர முறைகள் , ஒரு  எண் ஓரெண்ணால் வகுபடும் தன்மையை அறியும் ஆய்வு முறை, இருமுடி,மும்மடி மற்றும் உயர் மடி எண்கள் அவற்றின் பொதுப் பண்புகள்  வரையறுக்கப்பட்ட மற்றும் முடிவிலா தொடர்கள் மற்றும் இறுதியாக கணிதப் பொய்மை போன்றவற்றை விவரித்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் கணிதப்  புதிர்களையும் அதன் தீர்வுகளையும் வழிமுறையோடு விவரிக்கின்றது  இதில் பெர்மாட்டின் கடைசித் தேற்றமும் , பீலின் அனுமானக் கோட்பாடும் கூடச்   சேர்க்கப்பட்டுள்ளன . இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் பல புதிர் கணக்குகளும் அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.கணக்குப் புதிர்கள்  கணிதத்தில் ஆர்வத்தை வளர்ப்பதற்கும், கணிதத்தில் மட்டுமல்லாது , சமூக வாழ்க்கையிலும் தோன்றும் சிக்கல்களைத் தீர்ப்பதில் திறமையை மேம்படுத்துவதற்கும்  உதவுகின்றது

No comments:

Post a Comment