.உனக்குள் ஓர் ஆளுநர் (The Governor within you)
ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ அவரவர் மனத்தால் ஆளப்படுகின்றார்கள் .இந்த மனதின் மனமே மனிதனின் நிலையைத் தீர்மானிக்கின்றது .மனம் அறவழி நாடுவதற்கும்
பிற வழியில் ஈடுபடு
வதற்கும் காரணம்
வளரும் போது நம் எண்ணத்தில் உறைந்து மனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
எண்ணங்களே. .அறவழி சாகாத சமுதாயத்தின் நேர்வழி என்பதால் மனம் மனிதனை ஆண்டாலும்
இல்லை மனிதன் தன் மனதை ஆண்டாலும் அதில் வேறுபாடு இல்லை. ஆனால் தீய வழியில் செல்லும் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் தவறினால் அதுவே தனி மனிதனை மட்டுமின்றி அவன் வாழும் சமுதாயத்தையும் சீரழித்துவிடும்.
நான் எப்பொழுதும் மன உணர்வுடன் இருக்கிறேன். மனம் என்னைக் கட்டுப்படுத்த அனுமதிக்காமல் பயிற்சி செய்வதன் மூலம் என் மனதைக் கட்டுப்படுத்த நானே முயற்சி செய்வேன். பண்டைய தமிழ் இலக்கியங்களான திருக்குறள் மற்றும் பகவத்கீதையின் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும்போது இம்முயற்சி எளிதாகிறது . என்னுடைய ஆரம்பகால வாழ்க்கையில் இதுபோன்ற விலைமதிப்பற்ற புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தமை க்காக இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் அனைத்து அரசியல் தலைவர்களும் இந்த புத்தகங்களைப் படித்தால், அவர்கள் ஒருபோதும் படையெடுப்பு மற்றும் போரைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் மாறாக மக்கள் நலன் தொடர்பான நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒருவரால் தங்கள் மனதைக் கட்டுப்படுத்த முடிந்தால் ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்
என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ ஒவ்வொருவரும் தங்கள் மனதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். இது இந்நூலில் நன்றாகப் பிரதிபலிக்கிறது
தலைப்பு: உனக்குள் ஓர் ஆளுநர் வெளியீட்டாளர்: அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு ஆண்டு 2022 பதிவு எண் ASIN: B09XFFG2LC மொழி : தமிழ் கருப்பொருள்: மனம் பக்கங்கள் 160 விலை 1 UD
ஒருவரின் வாழ்க்கை அவரது சொந்த எண்ணங்களால் முழுமையாக ஒழுங்கமைக்கப்படுகிறது. நல்ல எண்ணங்களை வளர்ப்பதும், கெட்ட எண்ணங்களை நீக்குவதும் ஒவ்வொரு தனிமனிதனும் தங்கள் செயல்பாடுகளில் ஆக்கப்பூர்வமாக இருக்கச் செய்கிறது. இது தனிமனிதனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பேரின்ப வாழ்க்கையை அளிக்கிறது. சம்பாதித்த பணத்தால் வெற்றியை அளக்காமல், அனுபவிக்கும் மகிழ்ச்சியை வைத்து மற்றவர்களை விட, தங்கள் மனதை கட்டுப்படுத்துபவர்கள் அதிக சாதனைகளை செய்ய முடியும்.
மனதின் பல்வேறு குணாதிசயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் ஒருவர் தனது சொந்த செயலூக்கமான மன அமைதியைப் பெற முடியும். சுய உந்துதல், கொடுக்கப்பட்டதில் திருப்தி, செயலுக்கு முன் திட்டமிடுதல், வெற்றிக்காகப் போராடுதல், பிறருக்குப் பின்னோக்கித் திரும்பாமல் உதவி செய்தல், உனக்காகச் சம்பாதித்தல், பிறருக்காகச் செலவு செய்தல் ஆகியவை ஒருவரின் உயிரைக் காக்க மனம் உதவுகிறது. பொறாமை, சுயநலம், காரணமற்ற பயம் மற்றும் மறைவான நடத்தை ஆகியவை மன அமைதியை அழிக்க மனதைப் பாதிக்கின்றன.. இந்த புத்தகம் மனதைப் பற்றியும் அதன் பல்வேறு குணாதிசயங்களைப் பற்றியும் சுருக்கமாக விளக்குகிறது.
இந் நூல் மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றித் தெரிவிக் கின்றது.மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தினமும் மனத்தைக் கவனிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது . மனதின் அறிவியலான உளவியல் ,கற்பனை சக்தி ,மனப்பக்குவம் ,மனக்கட்டுப்பாடு ,மன நம்பிக்கை, மன மகிழ்ச்சி போன்றவற்றை மனதின் வலிமையாகவும் ,மன பயம்,மனவழுத்தம், மனச் சோர்வு ,மனக் கவலை ,மனக் கிளர்ச்சி போன்றவை மனதின் பலவீனமாகவும் விவரிக்கின்றது . உடல் ஊனமுற்றிருந்தாலும் மனம் ஊனமின்றி இருந்தால் எல்லோரையும் போல வாழமுடியும் என்ற வாழ்வியல் தொடர்பான கருத்தை நிக் வுஜிசிக் ,வில்மா ருடோல்ப் ,மாரியப்பன் தங்கவேலு ,கெலன் கெல்லர் ,லூயி பிரெயில் ,லூட்விக் வான் பீத்தோவன் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றால் உறுதிப்படுத்துகின்றது ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய மனமே கடவுள் என்ற புதிய சிந்தனையை இது வழங்குகின்றது
Super
ReplyDelete