சூரிய ஆற்றலும் பயன்களும் (Solar energy and its uses)
1970 களில் தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட தமிழ் பல்கலைக் கழகம் 1980 களில் வாழ்வு உயர வளர் தமிழ் அறிவியல் என்ற அடிப்படை நோக்கத்துடன் இயல். இசை, நாடகம் போன்றவற்றோடு நான்காவது தமிழாக அறிவியல் தமிழையும் வளர்த்தது .அப்போது தமிழில் அறிவியல் களஞ்சியம் ,பொது அறிவியல் நூல்கள் அறிவியல் கருத்துக்களை மக்களிடையே பரப்ப மக்களுக்கான அறிவியல் சொற்பொழிவு. மூதறிவியல் ,மருத்துவம் ,பொறியியல் போன்ற உயர் படிப்புகளுக்கான பாடத் திட்ட நூல்களை தமிழில் வெளியிடுதல் ,போன்ற பல பணிகளில் ஈடுபட்டது .நான் என்னுடைய அறிவியல் ஆர்வத்தின் காரணமாக இத்தகைய நான்கு பணிகளிலும் பக்கங்களிப்புசெய்ய விரும்பி ஈடுபட்டேன்
1976-85 ல் நான் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் பணிபுந்து வந்தேன் .அப்போது தமிழ் பல்கலைக் கழகத்தில் காவேரி ஆற்றுப்படுகை வளர்ச்சிச் திட்டங்கள் பற்றிய ஒரு கருத்தரங்கம் நடை பெற்றது. அதில் வாசிக்கப்பட்ட 32 ஆய்வுக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டது .அறிவியல் களஞ்சியத்திற்கான பல கட்டுரைகளையும் எழுதிக் கொடுத்தேன் .அப்போது கிராமப்புறங்களில் அறிவியல் சிந்தனைகளை பரப்பும் எண்ணத்துடன் மாதந்தோறும் தஞ்சாவோருக்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் வர விடுமுறை நாட்களில் அறிவியலாரைக் கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தி கிராம மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்கள். அதில் சொற்ப்பொழிவு நிகழ்த்த எனக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. சமயம் அண்ணா பல்கலைக் கலக்கம் படிக வளர்ச்சி மையத்தின் தலைவர் Dr. இராமசாமி அவர்கள் நடத்திய படிக வளர்ச்சி தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு திரும்பியிருந்தேன். என்னிடம் படிக வளர்ச்சி மற்றும் சூரிய ஆற்றல் சேமிப்பு மற்றும் பயன்கள் பற்றிய சிந்தனையே மேலோங்கி யிருந்தது. அதனால் சூரியஆற்றலும் பயன்களும் என்ற தலைப்பில் சொற்ப்பொழிவு ஆற்ற ஒப்புக்கொண்டேன்
29-4-1984 அன்று சூலமங்கலம் என்ற கிராமத்தில் பொது மக்கள் முன்னிலையில் அச் சொற்பொழிவைச் செய்தேன். சொற்பொழிவின் அடக்கத்தை ஒரு சிறு நூலாக எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த நூலை சமர்ப்பித்தேன். இது 1987 ல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது .இந்நூலுக்கு தமிழக அரசு 1987 ம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் தமிழ் நூலாகத் தேர்வு செய்து முதல் பரிசு அளித்தது என்பது குறிப்பிடத் தக்கது
தலைப்பு : சூரிய ஆற்றலும் பயன்களும் வெளியீட்டாளர்: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் ஆண்டு : ஜனவரி 1987 பதிவு எண் 76 மொழி : தமிழ் கருப் பொருள்: ஆற்றல் இயற்பியல் பக்கங்கள்:124 ,விலை: Rs.20
தமிழக அரசு வழங்கிய பரிசை தமிழ்நாட்டின்
அப்போதைய முதலவர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து வாங்கினேன்.
Dr.M.Meyyappan Nannan- KalaingarKarunanithi (CM)- Anbalagan
No comments:
Post a Comment