விஞ்ஞானத்தில் சில விந்தைகள் (some oddities in science)
என் புத்தகங்கள் என் வாழ்க்கை
தலைப்பு:
விஞ்ஞானத்தில் சில விந்தைகள்
வெளியீட்டாளர்:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை
ஆண்டு : நவம்பர் 2008
பதிவு எண் ISBN 978-81-234-1421-8
மொழி : : தமிழ்
கருப்பொருள் பொது அறிவியல்
பக்கங்கள் 127 விலை: Rs.69
அறிவியல் கட்டுரைகளை எழுதும்போது எனக்குள்ளும் சில ஐயங்கள் ஏற்படும். அதற்கு விளக்கம் தேடுவேன். சிலவற்றிற்கு க் கிடைத்தன சிலவற்றிற்கு இன்னும் கிடைக்கவில்லை கிடைத்தனவற்றைத் தொகுத்து விஞ்ஞானத்தில் சில விந்தைகள் என்ற இந்த நூலை எழுதினேன் இதில் 18 தலைப்புக்கள் 4 பிரிவுகளில் - . அண்டவியல் .உயிரியல் ,கணிதவியல் ,மற்றும் நுண்பொருளியல், வகுக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் பேரண்டம் ,,கருந்துளை விண்மீன்கள் ,சூரியன், சூரியக் குடும்பம் ,பூமிக்கு வெளியே உயிர்வாழ்க்கை,இனமறியா விண்பொருட்கள்,பெர்முடா முக்கோணம் என்ற 7 தலைப்புகளும் ,உயிரியலில் கிர்லியன் விளைவு, கனவு, மரணத்தின் போது மனநிலை, மறுபிறப்பு என்ற நான்கு தலைப்புகளும் ,கணிதவியலில் பிபி நோ சி எண்கள் என்ற ஒரு தலைப்பும் நுண்பொருளியலில் டாக்கியான் ,குவார்க்குகள் ,நியூட்ரினோக்கள் ,மின்னூட்டம் ,ஈர்ப்பு ,இயற்கை மாறிலிகள் என்ற 6 தலைப்புக்களும் அறிவியலின் விந்தைகளை விவரிக்கின்றன. மூதறிவியல் மாணவர்களுக்கு அடிப்படைத் துகள்கள் பற்றி பல ஆண்டுகள் பாடம் நடத்தும் போதும் பேரண்டத்தின் பலவேறு கூறுகளை விவரிக்கும் பொது அறிவு நூலகளைப் படித்த போதும் இப்படியொரு நூலை எழுதவேண்டும் என்று நினைப்பேன். அந்த நினைப்பின் முயற்சசியே இந்நூல்
No comments:
Post a Comment