Sunday, September 24, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

 

அறிவியல் அறிவோம் (Understanding the Science)


தலைப்பு : அறிவியல் அறிவோம்

வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு

ஆண்டு : ஜூன் 2020

ASIN பதிவு எண் : BO8B61V76T

மொழி : தமிழ்

கருப்பொருள் அடிப்படை இயற்பியல்:

பக்கங்கள் 200 விலை 18 USD

பல சந்தர்ப்பங்களில், பொது அறிவியலில் ஒரு கேள்வியை ஒரு மாணவர் கேட்கும் போது, பல பெற்றோர்கள் அதற்கு திருப்திகரமான பதில்களை வழங்கத் தவறிவிடுகிறார்கள். பதிலை வழங்குவதற்கு ஒவ்வொரு பெற்றோரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு  வெளியிலிருந்து தேவையான விவரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை. ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்  இதற்கு அடிப்படை அறிவியல் பற்றிய நூல்களை வாங்கிக் கொடுக்கலாம் .முடியாத போது பொது நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தையும் அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலுக்கான  வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம் குறிப்பாக இயற்பியலில் அடிப்படை அறிவியலைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். இயக்கவியல் (சர் ஐசக் நியூட்டன்) முதல் நவீன இயற்பியல் வரை (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்) இது 230 கேள்விகளையும் அதன் பதில்களையும் 143 விளக்கப்படங்களுடன் கொண்டுள்ளது.

இந்நூல் இரு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி 91 பக்கங்களில் ஒரு பொருள் பற்றிய விளக்கத்துடன் வினாக்களையும் இரண்டாம் பகுதி 91 பக்கங்களில் அக் கேள்விகளுக்கான பதில்களையும் கொண்டுள்ளது. இதில் நிலையியல் இயக்கவியலில், 42 கேள்விகளும் ,பொருட்பண்பியலில் 33 கேள்விகளும் ,ஒலியியலில் 18 கேள்விகளும் ,வெப்பவியலில் 40 கேள்விகளும், ஒளியியலில் 30 கேள்விகளும் காந்தவியலில் 7 கேள்விகளும் ,மின்னியல் மின்னணுவியலில் 33 கேள்விகளும் அணுவியலில் 12 கேள்விகளும் விண்ணியற்பியலில் 15 கேள்விகளும் ஆக 9 இயற்பியல் பாடப் பிரிவுகளில் 230 கேள்விகள்  அதற்கான பதில்களும் விவரிக்கப்பட்டுள்ளன .

நான் வகுப்பில் பாடம் நடத்தும் போது சில சமயங்களில் சிந்திக்கத் தூண்டும் அறிவியல் வினாக்களைக் கேட்டு மாணவர்களிடமிருந்து பதில் பெற முயற்சிப்பேன்.  இறுதியில் சரியான பதிலைக் கூறி விளக்கம் அளிப்பேன். அறிவியலைப் புரியச் செய்யும் அறிவைத் தட்டியெழுப்பும் இந்த அறிவியல் வினா விடைகளை அவ்வப்போது தொகுத்துவைப்பேன்.இப்பழக்கம்  நான் நீண்ட காலமாக விஞ்ஞானச் சுடர் (கோயம்புத்தூர்), அறிக அறிவியல்  (காரைக்குடி) போன்ற அறிவியல் மாத இதழ்களில் தொடர்ந்து கொடுத்துவந்துள்ளேன்  வாசகர்கள் கேட்கும் இயற்பியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்  அளிக்கும் வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது .ஆங்கிலத்தில் காரியர் டைஜெஸ்ட் , ஜூனியர் சயின்ஸ் டைஜெஸ்ட் போன்ற பத்திரிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி வினாக்களையும் விடைகளையும் தொகுத்து எழுதிவந்துள்ளேன் .இந்திய இயற்பியல் ஆசிரியர் கழகம் நடத்திய MCQ வினாத்தாள் போட்டியில் என்னுடைய கேள்வித்தாள்  இரண்டாம்  பரிசை வென்றது. மூதறிவியல் மாணவர்களுக்கு உயர் இயற்பியல் பாடங்களை நடத்தும் போது இப்படிச் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளைக் கேட்டு  அதற்கான  பதில் களையும் பெற்று சேகரித்து வைத்ததால் நூல் எழுதும்போது அவை எனக்குப் பயனுள்ளதாக இருந்தன 

 


  

நீண்டகாலமாகச் சேகரித்த குறிப்புக்களைக் கொண்டு இந்நூலை எழுதினேன். முதலில் இந்நூல் NCBH நிறுவனத்தாரால் வெளியிடுவதாக இருந்தது.ஒளியச்சு எடுக்கப்பட்டு பிழை திருத்தம் செய்யப்பட்டு ஏதோ சில காரணங்களுக்காக நீண்டகாலம் வெளியிடாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள் .நான் நச்சரிக்க ஒரு நாள் திடீரென்று நூலை அச்சிடயியலாது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள் நூலாசிரியரின் உழைப்பை மதிக்க மறந்து விட்டார்கள் என்ற மனவருத்தம் இன்றைக்குக் கூட ஆறவில்லை  

அறிவியல் அறிவோம்


தலைப்பு அறிவியல் அறிவோம்

வெளியீட்டாளர் : மணிவாசகர் பதிப்பகம், சென்னை

ஆண்டு மார்ச் 2022

மொழி : தமிழ்

கருப்பொருள்: அடிப்படை இயற்பியல் (வினா-விடை)

பக்கங்கள் 200 விலை Rs.175

தமிழக மாணவர்களுக்குப் பயன்படவேண்டும் என்று அமேசானில் வெளிவந்த  மின்னூலை  இயற்பியல் அச்சுப்  பதிப்பாக மணிவாசகர் பதிப்பகம்  மூலம் வெளியிட்டேன்

No comments:

Post a Comment