Fun with numbers – Prime numbers
தலைப்பு :Fun with Numbers-Prime numbers
வெளியீட்டாளர்: அமேசான்
KDP ஒளியச்சுப் பதிப்பு
ஆண்டு : ஆக்ஸ்டு 2020
ASIN பதிவு எண் BO8FHBPPMW
மொழி : ஆங்கிலம்
கருப்பொருள் : பகா எண்கள்
பக்கங்கள் 46 விலை 2 USD
பொழுதுபோக்கு கணிதம் பற்றிய இந்த புத்தகம் பகா எண்களைப் பற்றி விவரிக்கிறது. இதில் 17 பகா எண்களுடன் கூடிய விளையாட்டுக் கணக்குகள் உள்ளன. பெர் மாட்டின் கடைசி தேற்றத்திற்கு பகா எண்களால் ஆன தீர்வு ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குக் கீழே உள்ள பகா எண்களின் எண்ணிக்கை, வேத கணிதம் மற்றும் சுழற்சி எண்கள் ஆகியவை அறிய சுவாரஸ்யமானவை.ஒருகுறிப்பிட்ட சிறியஎண் வரையுள்ள பகாஎண்களின் எண்ணிக்கை யை அறியும் முறைக்கான ஒரு தொடர் தொடர்பை நிறுவியுள்ளேன் .உயர் எண்களுக்கு இதை விரிவுபடுத்தும் முயற்சி முற்றுப்பெறவில்லை.பகா எண்கள் கொண்ட மாயச் சதுரங்கள் மற்றும் புதிர்கள் உண்மையில் பொழுதுபோக்கு. இது கணிதத் திறனை வியக்கத்தக்க வகையில் மேம்படுத்துகிறது. இந்த புத்தகம் அமெச்சூர் கணிதவியலாளர்களுக்கு பெரிய, பெரிய, மேலும் பெரிய பகா எண்களை வேட்டையாட பயனுள்ளதாக இருக்கும்
அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பில் வெளியிடப்பட்ட
முதல் ஆங்கில நூல் .இதை மின்னூலாகவும் , மின்னச்சு நகல் பதிப்பாகவும் (paper back
) வெளியிட்டனர்
தலைப்பு Fun with numbers – Prime numbers
வெளியீட்டாளர்: அமேசான் KDP ஒளியச்சு நகல் பதிப்பு
ஆண்டு ஆக்ஸ்டு 2020
ASIN பதிவு எண் BO8FHVYCKD
மொழி : ஆங்கிலம்
கருப்பொருள் : பகா எண்கள்
பக்கங்கள் 46 விலை 2 USD
2006 ல் அமெரிக்கா சென்ற போது என் மகன் என்னை அருகிலுள்ள பொது நூலகத்திற்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு அலுவலகத்திற்குச் சென்றுவிடுவான். மதியம் உணவிற்காக வீடு திரும்பும்போது அழைத்துச் செல்வான். அப்போது அதிகமாக கணக்குப் புதிர்கள் பற்றியும் ,அண்டவியல் பற்றியும் படித்து குறிப்புக்கள் எடுத்துக் கொண்டேன் .அதில் பகா எண்களும் அடங்கும்.;
அவற்றுடன் சயன்ஸ் டுடே சயன்ஸ் ரிப்போர்ட்டர் மூலம் சேகரித்த விஷயங்களையும் சேர்ந்து இந்நூலை உருவாக்கினேன்.
No comments:
Post a Comment