கலைச் சொல் அகராதி (இயற்பியல் ) (Dictionary of Scientific terms – Physics)
தலைப்பு கலைச் சொல் அகராதி (இயற்பியல் )
வெளியீட்டாளர் : அமேசான் KDP ஒளியச்சுப் பதிப்பு
ஆண்டு : ஆகஸ்டு 2021
ASIN பதிவு எண் BO9CV5CMLR
மொழி : தமிழ்
கருப்பொருள் : அறிவியல் கலைச் சொற்கள்
பக்கங்கள் 111 விலை 1 USD
இது அறிவியல் சொற்களின் அகராதி. நான் நவீன அறிவியலில் பல தமிழ் புத்தகங்களையும் பொது அறிவியல் கட்டுரைகளையும் எழுதும் போது பல ஆங்கில நூட்களைப் படிப்பேன். தேவையான கலைச் சொற்களை நானே மொழியாக்கம் செய்வேன். அதில் நான் பல சொற்களைப் பயன்படுத்தினேன் - தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக் கழகம் எனக்கு Science and Technology in India என்ற ஆங்கில நூலை மொழிபெயர்ப்புச் செய்யவும், காவிரி ஆற்றுப் படுகை வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய கருத்தரங்கக் கட்டுரைகளை மொழிபெயர்ப்புச் செய்யவும் வாய்ப்புக் கொடுத்தது. அது கலைச் சொற்களை உருவாக்கும் முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு பயிற்சியாக இருந்தது. நீண்ட
காலமாக தமிழ் மொழியில் கட்டுரைகளையும், பொது மக்களுக்கான பொது அறிவியல் நூல்களையும்,
இயற்பியல் பாட நூல்களையும் எழுதிய போதும் சில நூல்களை மொழிபெயர்ப்புச் செய்தபோதும்
பயன்படுத்திய மற்றும் உருவாக்கிய இயற்பியல் தொடர்பான கலைச் சொற்களைத் தொகுத்து பின்வரும் இளைய தலைமுறையினருக்குப் பயன்படும் என்ற
நோக்கத்தில் இந்நூலை எழுதியுள்ளேன் நீண்ட நாட்களுக்குப் பிறகு, கிடைத்த தொகுப்புகளைத் தொகுத்தேன். என்றாலும் சில சேகரங்களை கண்டுபிடிக்க முடியாமல் விட்டுவிட்டேன் .அதனால் இதை முழுமைப்படுத்த முடியவில்லை தமிழில் மக்களுக்கான அறிவியல் புத்தகங்களை எழுத முயற்சிப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வளர்ந்து வரும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வெளிப்படுத்தும் திறனால் மட்டுமே ஒரு மொழி செழிக்க முடியும் என்பதால் இது போன்ற அடைப்படை நூல்கள் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தேவை.
இந்நூலின் இறுதியில் பிற் சேர்க்கையாக இயர்ப்பியல் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சில முன்னொட்டுப் பெயரடைகளும் பின்னொட்டு விகுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது புதிய கலைச் சொற்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
சங்க காலத்தில் உயரெண்களுக்குத் தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்களை த் தெரிவிக்கின்றது
No comments:
Post a Comment