மனமென்னும் புதையல்
எல்லோரும் செல்வந்தராக விரும்புவார்கள். ஆனால் அப்படி ஆசைப்படுபவர்களுள் வெகு சிலரே உண்மையிலேயே செல்வந்தராகும் எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள்,அந்த எண்ணங்களை செயல் படுத்தும் வழிமுறைகளைப் பற்றி ஆராயும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். முறையற்ற வழியில் பயனற்ற பொருளை ஈட்டும் இன்றைய உலகில் நேர்மையாக செல்வந்தரான மனிதர்கள் சொல்லப்போனால் ஒருவரும் இல்லை.
பெரும்பாலானோர் தான்
விரும்பும் செல்வம்
தனக்கு மட்டும் எளிதாக இலவசமாகக்
கிடைக்க வேண்டும் என்றே நினைக்கின்றார்கள்.மானுட
சக்திக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளில் அதீத நம்பிக்கை
கொண்டு நடக்காத ஒன்று தனக்காக
நடக்கும் என்று காலங் காலமாய்
காத்துக் கொண்டிருக்கின்றார்கள். செல்வம் என்பது பொருளாதார நிலையில்
ஏற்படும் மாற்றங்கள் .அந்த மாற்றம் உழைப்பின்றிக் கிடைப்பதில்லை. வெறும் நினைப்புகள் செயலூக்கிகளாக
இருக்குமேயன்றித் தானாகச் செயல்களாக நிலை மாறுவதில்லை.காலங்
கடந்தும் அப்படி
ஏதும் நிகழாமல் போகும் போது ஏமாற்றங்கள்
கோபாய்க் கொப்பளிக்க அது அவர்களைத் தீய
செயல்களில் ஈடுபடுமாறு தூண்டுகின்றது
.
இறைவன் எல்லோருக்கும் அளவிட்டாரியமுடியாத ஓர் அற்புதமான புதையல் ஒன்றைக் கொடுத்திருக்கின்றான். நம்பிக்கை இழந்தவர்கள் அதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடிவதில்லை .புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இது அவர்களுக்குச் சிக்காத இரகசியப் புதையல் தான். நம்பிக்கை புதைபொருளின்
மெய்ப்பொருளை தெரியச் செய்கின்றது. சட்டைப் பையில் இல்லாத பொருள்
மனமென்ற உடல் பையில் இருப்பதை
உணர ஆரம்பிக்கின்றார்கள்.
ஆம் ,ஒவ்வொருவருக்கும் அவரவர் மனமே ஒரு
புதையல்- மனதின் வல்லமையை, ஆற்றலை, வலிமையை புரிந்து
கொள்ள
முடியாத புற
உலகில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பொன்னும் பொருளுமே சிலர்
புதையல் என்பர். ஆனால் அவற்றையெல்லாம் மண்ணைத்
தோண்டாமல் மனதைத் தூண்டுவதினால் கிடைக்கும் என்பதால் மனம் கூட ஒரு புதையல் தான். மனம் என்பது அக உலகில் ஒரு புதையல்.தன் மனதின் மகத்தான மாயச் சக்தியை தெரிந்து கொள்வதை விட,அறிந்து கொள்வதை விட புரிந்து கொண்டிருப்பவர்களுக்கே மனமென்னும் புதையல் பலனளிக்கக் கூடியதாக இருக்கின்றது. தன் மனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் மனமென்னும் பிரபஞ்சத்தை ஆளும் வேந்திரனாகி விடுகின்றார்கள்.