Monday, March 31, 2014

Eluthatha kaditham

எழுதாத கடிதம் 
அரசு அலுவலகங்கள் யாவும் மக்களுக்காகப் பணியாற்றி உதவி செய்யும் அமைப்புக்களாக இல்லாது வர்த்தக அமைப்புகள் போலச் செயல்படுகின்றன. எந்த அலுவலகம் சென்றாலும் நேர்மையான அணுகுமுறையால் ஒரு சிறிய காரியத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை.தவறான அணுகுமுறையால் தவறான காரியங்கள் கூட நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையயை அளிப்பதற்காக 
எல்லா அலுவலகம் முறை தவறி நடந்து வருகின்றன. .தவறான அணுகுமுறையை மட்டுமே நாட வேண்டும் என்ற நோக்கில் ஏறக்குறைய எல்லாப் பணியாளர்களுமே செயல்பட்டு வருவது மிகுந்த மன வருத்தத்தைத் தருகின்றது
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ,சார் பதிவு அலுவலகம்,ஊராட்சி, பேரூராட்சி,நகராட்சி,மாநகராட்சி அலுவலகங்கள்,தாலுகா,ஆட்சியாளர் அலுவலகங்கள்,கருவூலம்,வணிக்கவரி அலுவலகம்,காவல் துறை அலுவலகங்கள்,என எல்லா வகையான அரசுத் துறை அலுவலகங்களும் மக்களைப் பாடாய்ப் படுத்துகின்றன.சில நிமிடங்களில் முடிக்கக் கூடிய காரியங்கள் எல்லாம் பல மாதங்கள் இழுத்தடிக்கப்படுகின்றன.
கையூட்டுக் கொடுத்தால் மட்டுமே காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற இழி நிலை இன்றைக்கு நிலைப்பட்டு வருகின்றது. தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையில் யாருக்கும் இல்லை. இப் போக்கைத் தடுத்து நிறுத்தி நெறிப்படுத்திக் கொள்ளாவிட்டால் இனி வரும் நாட்களில் எந்தவொரு கால கட்டத்திலும் அதை அகற்றிக் கொள்ளவே முடியாது.அதனால் நமது ஒருங்கிணைந்த முன்னேற்றம் சிறிதும் இல்லாது போகும். ஒருங்கிணைந்த பணி, பணியில் நேர்மை,ஆர்வம்,தொழில் நுட்பம்,செயல் திறன்,போன்றவற்றில் காட்டப்படாத கவனத்தால் நம்முடைய முன்னேற்றம் பெருமளவு பாதிக்கப்படுகின்றது

1-2 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதற்கு நிரந்தரமில்லாத சில காரணங்கள் ஆட்சியாளர்களுக்கு இருக்கலாம்.ஆனால் ஊழல்,இலஞ்சம்  இவற்றை முழுமையாக ஒழித்துக் கட்டிவிட்டால் வேறு எந்த புதிய முயற்சியுமின்றி சும்மா இருந்தாலே வளர்ச்சி வீதம் பல மடங்கு உயரும். 50 சதவீத வளர்ச்சியை எட்டுவது கூட சாத்தியமே

Saturday, March 29, 2014

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்

அரசு இயந்திரத்தை இயக்கி அதைச் சரியாகக் கொண்டு செலுத்த மக்களால் மக்களுக்காக  உருவாக்கப்பட்டதே அரசாங்கம். வேட்பாளர் போட்டியிட்டு தேர்தல் நடைபெறும் நாள் வரை மட்டுமே இதில் மக்களுக்கு முக்கியத்துவம். இந்திய அரசியல் அமைப்பில் இந்திய மக்கள் வெறும் கருவேப்பிலை மாதிரி தான்  
மக்களுக்கு வேண்டிய சமுதாயப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் அதை நிர்வகிக்கும் பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கும்,அரசுப் பணியாளர்களுக்கும் உண்டு. அவற்றை எல்லாம் கண்காணித்து மேலும் மேலும் நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆளும் அரசுக்கு உள்ளது. இவர்கள் எல்லோரும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களை மறந்து பல இந்தாண்டுகள் டிவிட்டன. சுய விருப்பங்களின் காரணமாகப் புதிய பொறுப்புக்களை மட்டுமே இரகசியமாகச் செய்து வருகின்றார்கள். பெரும்பாலும் அவர்களுடைய செயல்பாடுகளில் முழுமையான வெளிப்படைத் தன்மை இருப்பதில்லை. 
அரசாங்கம் ஒவ்வொரு முறையும் தேர்தல் மூலம் மக்களால் தீர்மானிக்கப்படுகின்றது. நேர்மையான, சரியான வேட்பாளர்கள் யாரும் களத்தில் யாருமில்லாததால் ,இதில் மக்கள் செய்யக்கூடிய பிழைகள் ஏதுமில்லை. அதனால் மக்கள் வோட்டளித்தாலும் வோட்டளிக்காவிட்டாலும் தேர்தலுக்குப் பின் ஏற்படும் பின் விளைவுகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. தவறு செய்த வேட்பாளரை தேர்தலில் போட்டியுடும் வரை வளர விட்டதே நிர்வாகத்தின் குற்றமே. ஆனால் பிழையை மக்கள் மீதே நிர்வாகம் சுமத்தப்பார்க்கிறது
ஆட்சிப் பணி என்பது ஒரு விதத்தில் மக்களுக்குச் செய்யும் தொண்டுதான். மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பது உண்மையான,கொள்கை ரீதியிலான விருப்பமாக இருக்குமானால் அதைச் செய்து முடிப்பதற்கு அரசுப் பதவி தேவையேயில்லை.அரசுப் பதவி தந்தால் அதைச் செய்வேன்,இதைச் செய்வேன் என்று சொன்னால் அது தொண்டு இல்லை,பணியின் கடமை. அரசின் வருவாயை மக்கள் நலனுக்காகச் செலவழிக்க வேண்டும் என்பது அரசியல் .
அரசின் வருவாயைச் செலவு செய்வதில் முறைகேடுகள் செய்து தனக்காக ஆதாயம் தேடிக்கொள்ளும் வழிமுறைகள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதால் அரசியலுக்கு வருவோர் அத்தகைய தவறான ண்ணத்தை மனத்தில் நிலை நிறுத்திக் கொண்டே வருகின்றார்கள்

இவர்கள் தனித்துச் தவறு செய்யும் போது அப்படி வாய்ப்புக் கிடைக்காத எதிரிகளால் பிடிபட குறுகிய  வாய்ப்பிருப்பதால்  அதை அடைப்பதற்கு அதையே கூட்டணியாகச்  செய்யும் போக்கு இன்றைக்கு வளர்ந்து கொண்டு வருகின்றது. அரசியல்வாதிகளிடம் மட்டுமிருந்த இந்த ண்ணப் போக்கு இப்பொழுது அதிகாரிகளையும், பணியாளர்களையும் பற்றிக்கொண்டு விட்டது. அலுவலகங்களில் யாரும் தனக்காக மட்டும் லஞ்சம் கேட்பதில்லை,மேல் அதிகாரிகளுக்கும் மற்றும் கீழ்  அலுவலர்களுக்கும் என தனியாகக் கேட்கின்றார்கள்.அதிகாரிகளையும் அலுவலர்களையும் சேர்த்துக் கொள்வதால்,மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்யும் புதிய பரிணாமம் ஏற்பட்டிருக்கின்றது.இதனால் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் தவறு செய்யும் போது அதைத் தட்டிக் கேட்க வேண்டிய அரசாங்கம் மௌனமாக இருந்து விடுகின்றது.ஆட்சியாளர்கள் அவர்களைக் கண்காணித்து நெறிப்படுத்துவதில்லை.மக்களும் இதில் தவறு செய்கின்றார்கள். அப்படியொரு வாய்ப்பு யாருக்கும் இருக்கவே கூடாது என்று அவர்கள் விரும்புவதில்லை. இந்த ண்ணமே தவறா போக்கின் பரிணாம வளர்ச்சிக்கு வலிமையான ஊக்கக் காரணியாக இருக்கின்றது

Sunday, March 16, 2014

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 

உங்கள் வாக்குகளை விற்காதீர்கள் ,இலவசப் பொருட்களை வாங்கிக் கொண்டு தவறான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்காதீர்கள் என்று
வோட்டளிக்கும் மக்களுக்குத்தான் எவ்வளவு விதமான அறிவுரைகள். இதில் எல்லோரையும் போல எனக்கும் உடன்பாடுதான்.ஆனால் ஒரு நாள் வாங்கி தவறு செய்பவரை விட பல நாள் தவறு செய்து பொருள் குவித்து ஒரு நாள் கொடுப்பவரே அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவர்.

எல்லோருடைய வாக்குகளையும் விலைக்கு வாங்கும் அளவிற்கு ஒரு வேட்பாளர் பொருள் எப்படிச் சேர்த்தார் ? எதற்காக வோட்டை விலைக்கு வாங்குகின்றார் ? சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் முயற்சி இது என்று எல்லோருக்கும் தெரியாமலா இருக்கும். சின்ன மீனே தவறான வழிமுறையில் பிடித்ததுதானேவோட்டளிக்க வேட்பாளர் தரும் பொருளை வாங்கினால் கடுமையாகத் ண்டிக்ப்படுவீர்கள் என ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களை அச்சப்படுத்தும் விதத்தில் அறிவுரை கூறும் அமைப்புகள் ன் வேட்பாளர்களுக்கு அப்படிக் கடுமையாக அறிவுரை கூறத் தயங்குகின்றார்கள். வேட்பாளர்களிடம் அளவுக்கு மீறி பொருள் இருக்கின்றது. பாவம் சாதாரண மக்களிடம் ஒரு நாள் முழுமையாகச் சாப்பிடக் கூட பொருள் இல்லை.உழைத்துப் பொருள் சம்பாதித்து சாப்பிட நிரந்தரமான
ழியுமில்லை. கொடுக்கும் கை நீட்டினால்,வறுமையில் வாடும் கைகள் வெகு இயல்பாக நீளும் தானே.  
வருமான வரித் துறை இவர்களுக்கு எப்படி இவ்வளவு பொருள் வந்தது என்று கணக்குக் கேட்காதா ? நீதித் துறை இவர்களுக்கு எப்படி இவ்வளவு
சம்பாதிக்க முடிந்தது என்று கேட்காதா?  
அரசியல் வாதிகள் எல்லோரும் கூட்டாளிகள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை எடுத்துக் கூறலாம். ஒரு மத்திய அமைச்சர் சொல்கிறார். பதவியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டினால் சிக்கிக் கொண்டால், தான் தப்பிப்பதற்காக பிற அமைச்சர்களையும்,பிரதமரையும் இழுத்து விட்டு  காட்டிக் கொடுக்கக் கூடாது என்று. இது அரசியல் நாகரீகம் இல்லையாம். எது நாகரீகம்? எது தர்மம்? யாருக்கு நாகரீகம் தெரியவில்லை ? யாருக்குத் தர்மம் கிடைக்கவில்லை ?  
பொதுப் பணியில் என்ன ரகசியம் இருக்க முடியும்?. பொதுப்பணியில் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் இப்படிக் கணக்கில்லாமால் சம்பாதிக்க முடியும் என்றால்,கோளாறு நாம் எல்லோரிடமும் தான் இருக்கிறது என்று அர்த்தம்.அப்படி ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் மக்கள், இந்த நாட்டில் இருக்கும் வரை இந்திய அரசியல்வாதிகளுக்கு எப்போதும் காட்டில் மழைதான்.