Tuesday, June 30, 2015

creative thoughts



அணு உலையும் வாழ்வியலும் -4
அணு உலையில் ஓவ்வொரு கருப்பிளப்பினாலும் கிடைக்கும் 2 அல்லது 3 நியூட்ரான்களில் அடுத்த கட்ட கருப்பிளப்பிற்கு ஒரேயொரு நியூட்ரானை மட்டும் பயன்படுத்த வேண்டும். குறைவாகப் பயன்படுத்தினால் அது
பற்றாக்குறைக்கு வழி வகுக்கும். வளர்ச்சிக்கு அது ஒரு பெரும் தடை. அதிகமாகப் பயன்படுதினால் அது சமுதாயத்திக்கு கேடு .ஆற்றல் பகிர்ந்து நலம் தருவதற்கு முன்பே ஓரிடத்தில் குவிந்து எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கின்றது.. நல்லவை குறைய ஒருவரும் விரும்பலாகாது. அல்லவை வளர  சிறிதும் இடம்தரலாகாது  என்பதையே  இது எடுத்தியம்புகின்றது.
அணு உலையிலிருந்து  வெளிப்படும் ஆற்றலை உடனுக்குடன் வெளியேற்றி சமுதாயத்தின் பயன்பாட்டிற்குக் கொடுக்க வேண்டும் .இல்லாவிட்டல்  அணு  உலை வெடிப்புக்கு ஆளாகி  சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிடும் அணு குண்டுகளை விட மக்களின் தன்னலப் போக்கு ப ற்றிய எண்ணங்களே சமுதாயத்தை அழிக்கும் வலிமையான காரணமாக இருக்கின்றது . அணு உலை ஒரு போதும் ஆற்றலைச் சேமித்து வைத்துக் கொள்வதில்லை,அதுபோலத்தான் அரசும் .மக்களுக்கான வளத்தை தனக்காக சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது. இப் போக்கிற்கு இருக்கும் ஆதாரங்களை அழித்து விட்டாலும் பின்விளைவுகள் புலப்படுத்திக் காட்டத் தவறுவதில்லை  அவர்களுடைய வாழ்க்கை முறையில் காணப்படும் திடீர் மாற்றங்களே அதை அப்பட்டமாக  எடுத்துக் காட்டுகின்ட்றது. .இதனால் மக்களும் நீதி தவறி நடக்கத் தொடக்கிவிடுகின்றார்கள். மட்டிக்கொள்ளாமல் எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்தாலும் அவன் நல்லவன் என்று கொள்ளப்படுவதால் இதில் எல்லோரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவே விருப்பம் காட்டி வருகின்றார்கள்.

Friday, June 19, 2015

creative thoughts



அணு உலையும் வாழ்வியலும் -3
அணு குண்டு சோதனை நடத்தி அணுவாற்றலை ஆக்கப்பணிகளுக்குப்
பயன்படுத்தத் தெரியும் என்று காட்டியிருக்கின்றோம். ஆனால் அணு உலைக்குத் தேவையான மூலப் பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியத் தைப் பெறும் தொழில் நுட்பம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம். ஆண்டு முழுதும் இலவசமாகக் கிடைக்கும் சூரிய ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள விருப்பம் காட்டவில்லை. ஆற்றல் பற்றாக்குறைக்கு எல்லோரும் இரையாகி வருகிறோம்.

செவ்வாய் கோளுக்கு நெடிய பாதை போடுகின்றோம். எங்களுக்கும் விண்வெளி ஆராய்ச்சி தெரியும் என்று உலகோர்க்குத் தெரிவிப்பதற்காக.
ஆனால் இங்கே உள்ளூர் சாலை ஒன்று கூட உருப்படியாக இல்லை.
சாலைகள் பழுதடைய வேண்டும்,அதை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அதனால் முறைகேடாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே போடப்படும் சாலைகள். நூராண்டுகள் ஆனாலும் பழுதடையாத உள்ளூர் சாலைகளை அமைத்து உள்ளூர் போக்குவரத்தை மேம்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தும் பாடம்
கற்றுக்கொள்ளவில்லை. திட்டச் செலவு முழுதும் திட்டமிட்ட பணிகளுக்காகவே செலவிடப்படாமல் வெறும் நிருவாகச் செலவோடு
நின்றுபோவதைத்தான் நாம் இன்றைக்கும் பின்பற்றி வருகின்றோம். செவ்வாயில் நிழல் போன்ற சொர்க்கலோக வாழ்க்கைக்காக பூவுலகில்
நிஜ வாழ்க்கை நரகமாய் இருக்க வேண்டாமே. பிழையிருந்தால் முதலில்
சரி செய்ய வேண்டியது பிழைகளேயல்லாது புதிய முயற்சிகளில்லை.
தொழில் நுட்பம் தெரியாமல் புதிய தொழில் கூடங்களை வேற்று நாட்டாரின் உதவியுடன் தொடங்க முயற்சிக்கின்றோம். ஆனால் இங்கே
வீடுகளுக்குப் போதிய மின்சாரமும், குடி நீருமில்லை. அடிப்படைக்
கட்டமைப்புகள் வலுவாக இல்லாத போது புதிய முயற்சிகள் முழுமையடைந்து எதிர்பார்த்த பயன் தருவதில்லை. சரி செய்யவேண் மென்ற எண்ணம் சிறிதும் இல்லாததாலே இந்நிலை இன்னும் இருந்து. கொண்டிருக்கின்றது என்பதை நாம் இன்னும் உணரவேயில்லை.
இடிந்து விழும் பள்ளிக்கூடக் கட்டடங்கள், அடுக்கு மாடிக் கட்டடங்கள்,
விமான நிலையங்கள் சுற்றிலுமிருக்க நடுவே ‘smart city’ உருவாக்க
பேராசைப்படுகின்றோம். வரிக்குதிரைப் பார்த்து வண்டிக்குதிரை சூடு
போட்டுக்கொண்ட கதையாகி விட  வேண்டாம்.
வசதி வந்துவிட்டது என்று வாகனங்கள் வாங்கி ஓட்டுகின்றோம். ஆனால் சாலை வசதிகள் மேம்படாததால் அடிக்கடி விபத்தில் சிக்கி அவதிப்படுகின்றோம். கல்விக் கூடங்கள் எண்ணிக்கையால் பெருகிவிட்டன ஆனால் கல்வியில் தரமில்லை, பயன் தரும் நுண்ணறிவும், நலந் தரும் மெய்யறிவும் வளரவேயில்லை. அரசியல்வாதிகள் தேவைக்கு மேல் இருக்கின்றார்கள் ஆனால் சேவை
மனப்பான்மைதான் குறை.

மாற்றங்கள் வேண்டும் ஆனால் அந்த மாற்றங்கள் நொடிப் பொழுதில்
தீர்மானிக்கப்படுவதைப் போல செயல்படுத்த முடியாது என்பதையும், எல்லா மாற்றங்களையும்  ஒரே சமயத்தில் மேற் கொள்ள முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் தன்
தேவை மனப்பான்மையை விட்டுவிட்டு சேவை மனப்பான்மையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரசியலுக்கு வந்தால் அதுவே நம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்