Friday, December 30, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஆள விரும்பும் ஒருவன் அரசியலைப் பற்றி ஏதும் தெரியாமலே அரசியல்வாதியாகத் தன்னை தானே தேர்வு செய்து கொள்கின்றான். அவனுடைய விருப்பத்திற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது  ஏற்கனவே அரசியலில் சேர்ந்தவர்கள் எந்தத் தகுதியுமில்லாமல் பதவியும் ,அதன்மூலம் குறுகிய காலத்தில் அளவில்லாத பொருளும் சம்பாதித்து மேநிலையில் இருப்பது தான் .அவர்களைப்போல தாங்களும் சமுதாயத்தில்  முன்னேறிவிடவேண்டும் என்ற ஆசை உள்ளுறும் ஓர் உந்துசக்தியாக அமைந்துவிடுகின்றது. ஆனால் ஒருவரால் அரசியலில் இணைந்து உடனடியாக உயர்த்த பதவியைப் பெற்றுவிடமுடியாது..ஏனெனில் அவருக்கு முன்பாகவே பலர் மூத்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் சாகும் வரை பதவியை விட்டுக்கொடுப்பதே யில்லை .அவர்கள் கட்சித் தலைவருக்கு இணங்கித் தொடர்ந்து வேலை புரிந்து வருவதால் ,புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை. அவர்கள் பெரும் பாலும் தொண்டர்களாகவும், வட்டாரச் செயலாளர்களாகவும் மட்டுமே வளர்வார்கள் சில சமயங்களில் உள்ளாட்சிப் பொறுப்பு வெகுமதியாகக்  கிடைக்கும் .பொதுத் தேர்தலின் போது கட்சிக் கூட்டங்களில் பங்கேற்றும் ,பரப்புரை,நோட்டீஸ் விநியோகம் செய்தும்  ஆளுங் கட்சியைச் சேர்ந்த செல்வாக்குமிக்க சிலருக்கு ஆதரவாய்ப் பேசியும்  .எதிர்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்தும் ,அதை மக்கள் அறியுமாறு விளம்பரப்படுத்தியும் மூத்த உறுப்பினர்களின் நன்மதிப் பைப் பெறுகின்றான்   .உறுப்பினராக இருந்த அவன் செயலாளராகக் கட்சியில் பதவி உயர்வுக்கு இது வழி வகுக்கின்றது

 

Thursday, December 29, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 நம்முடைய ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் அரசாங்கத்தின் செலவில் வெளிநாடுகளுக்கு அரசியல் காரணமாக ச் செல்கின்றார்கள். அப்படிச் செல்லும் போது அந்த நாட்டில் தொழில் வளர்ச்சியை , கட்டமைப்பை, நிர்வாகத்தை , ஏற்றுமதி-இறக்குமதியை  ஆராய்ந்தறிந்து வளர்ச்சிக்கு உகந்த நிச்சியமான மாற்றங்களை நம் நாட்டிலும் கொண்டுவரலாம். அதைச் செய்யாமல் ,மறை வொழுக்கத்தால் ஈட்டிய பொருளை அங்கு வங்கிகளில்  சேமிக்கவும் , நட்பு ரீதியாக உரையாடிவிட்டு  எந்தப் பலனுமின்றி நாடு திரும்புவதும் நாட்டின் வளர்ச்சிக்குப் பயநாதருவதில்லை. வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஏற்றுமதி யை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏற்றுமதி குறைவாக இருக்கின்றது என்றால் உற்பத்திப்பொருட்கள் உலகத்தரம் வாய்ந்ததாக இல்லாமல் இருக்கலாம் .புதுமையை உட்புகு த்தி தரத்தை மேம்படுத்தும் போது ஏற்றுமதி பெருகக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது ,நாட்டு மக்களின் திறமை யையும் மனித வளத்தையும் நாட்டின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தும் நோக்கம் ஆட்சியாளர்களுக்கு இருக்கவேண்டும் .வெளிநாட்டினர் நம்முடைய உற்பத்திப் பொருட்களை விட கனிம வளத்தால் கிடைக்கும் மூலப்பொருட் களையே அதிகம் இறக்குமதி செய்ய விரும்புகின்றனர்.இதை பண்டுவப்படுத்தி  உற்பத்திப் பொருட்களாக்கி பல மடங்கு இலாபத்துடன் நம்மிடமே விற்றுவிடு கின்றனர்.நாம் மிக்க குறைந்த விலைக்கு உலோகத் தாதுக்களை விற்று ,மிக அதிக விலை கொடுத்து இராணுவத் தளவாடங்கள், தொழில் நுட்பச் சாதனங்களை வாங்குகின்றோம். இந்தச் சாதனையை அவர்கள் நம்முடைய திறமையான இந்தியர்களுக்கு வேலை கொடுத்து சாதிக்கிறார்கள். மூலப் பொருட்கள், திறமை மற்றும் மனித வளம் ,உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை  இலாபத்திற்கு  உறுதிமொழி எல்லாவற்றையும் கொடுத்து  இழப்பை  ஏற்றுக் கொள்கின்றோம் . சிங்கப்பூர் ஒரு சின்ன நாடுதான். அங்கு கட்டமைப்பு ,நிர்வாகம் ,சட்டம் ஒழுங்கு எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கின்றது. கனிம வளமே இல்லாத சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் வியக்கத்த வகையில் முன்னேறும் போது எல்லா வளமும் குறைவறப் பெற்றிருக்கும் இந்தியா ஏன் முன்னேறவில்லை.. மக்கள் சிந்திக்கிறார்கள் ஆனால் செயல்படுத்த முடியவில்லை. அரசியவாதிகள் சிந்திக்கவேயில்லை . 

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 விளை பொருட்களுக்கு இயல்பாக நல்ல விலை இருக்குமாறு செய்ய அவற்றின் விலையை தன்னிச்சையாக உயர்த்திவிடமுடியாது .மக்களின் வாங்கும் சக்தி குறைவாக இருக்கும் போது விலை உயர்த்தப்பட்ட விளை பொருட்கள் வாங்கப்படாமல் வீணாகி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகிறது .மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க ,அவர்களின் சம்பளத்தை அதிகரிக்கலாம் .சம்பளத்தை அதிகரித்தால் ,திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் என்று சொல்லி  வீண் செலவுகளால் பற்றாக்குறையை மிகைப்படுத்தி விடுகின்றார்கள் .அரசாங்கத்தின் நிதி இவர்களால் எடுத்துக்கொள்ளப்படும் போது ,அது சுமுதாயத்திற்குப் பயன்படாமல் முடங்கிவிடுகின்றது ..நிதி இருந்தும் இல்லாத தோற்றத்தையே அது ஏற்படுத்துகின்றது .மக்களிடம் பணம் தாராளமாக இருக்கும் போது ,அது வர்த்தகத்தின் மூலம்  பொருள் உற்பத்தியாளர்களிடமும் ,உற்பத்தியாளர்களிடமிருந்து ,தொழிலாளர்களிடமும் , கூடுதல் வரி மூலம் அரசாங்கத்திற்கும்  பணம் ஒரு வட்டச் சுற்று முறையில் தொடர்ந்து தடையின்றி நடைபெறுகின்றது. இது உடலில் ஏற்படும் இரத்தவோட்டம் போல , பூமியில் ஏற்படும் இரவு பகல் போல, .பெய்யும் மழை போல. .இயற்கையில் எது வட்டச் சுற்று முறையில் நிகழ்கின்றதோ அது நிலையானது  மட்டுமின்றி பயனுறு திறன் மிக்கதுமாகும் .நம்முடைய பொருளாதார நிபுணர்கள் சரியான யோசனைகளை தன்னலமிக்க ஆட்சியாளர்களுக்குச் சொல்லி  நாட்டின் நலனைப் பாதுகாக்கவேண்டும் .இதனால் அவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ,நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் அதே நன்மைகள் கிடைக்கும் .

Tuesday, December 27, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 வயதுக்கு உட்பட்ட மக்கள் எல்லோருக்கும் வேலை. நல்ல சம்பளம் இருந்தால் அவர்களுடைய வாங்கும் சக்தி அதிகம் இருக்கும்.விற்பனை அதிகமாக அதிக மாக உற்பத்தி பெருகும் .உற்பத்தி பெருகப் பெருக நாட்டின் பொருளாதாரம் மேம்படும் ..சம்பளம் அதிகரிக்க வரியும் அதிகரித்தால் ,வாங்கும் சக்தி மட்டுப் படுத்தப்பட்டு விடுகின்றது .வரி வருவாயை சம்பளத்தால் மட்டுமே அதிகரிக்கும் போக்கை அரசாங்கம் கைவிடாத வரை நிலையான ,நிஜமான பொருளாதார முன்னேற்றம் கைவசப்படுவதில்லை ..கனிம வளத்தைப் பயன்படுத்தி பொருள் உற்பத்தியைப்  பெருக்க வேண்டும். விவசாயத்தின் மூலம் விளை பொருட்களை அதிகரிக்கவேண்டும். பொருள் உற்பத்தியில் புதுமைகளை உட்புகுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.  எல்லோருக்கும் வாய்ப்பையும் வேலையை யும் கொடுக்கும் போது இது சாத்தியமாகின்றது. நாடு அந்நாட்டிலுள்ள அனைவராலும் முன்னேறவேண்டும் ஒரு சிலர்  மட்டும் வேலை செய்ய வேறு சிலர்  வாய்ப்பின்றித்  தடுமாற அதனால்  ஏற்படும் வேறுபாடு நாட்டுக்காக அவர்கள் அளிக்கும் பங்களிப்பை  வேறுபடுத்தி விடுகின்றது. ஒரு பொருள் அது ஒருநாடாக இருந்தாலும் எல்லோருக்கும் சமஉரிமையுள்ளது என்ற நம்பிக்கையை வளர்க்க வளர்க்க அந்த நாட்டின் முன்னேற்றம் ஆட்சியாளர் களின் முயற்சியின்றியே வெகுஇயல்பாக ஏற்படுகின்றது. அப்படியொரு நிலையை ஏற்படுத்த ஆட்சியாளர்களும் , அதிகாரிகளும் , பொது மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மக்களின் திறமை அதிகரிக்க கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்துவதை விட வெளிநாட்டு கல்விக்கூடங்களை இந்தியாவில் நிறுவ அனுமதிக்கலாம் . இதனால் பல திறமையானவர்கள் வருவார்கள், இவர்கள் நாட்டுக்காக மேலும் பல திறமையானவர்களை உருவாக்குவார்கள் .வெளிநாட்டு மாணவர்கள் கூட இங்கு படிக்க விரும்ம்பும் சூழல் கூட ஏற்படலாம்       

 

Monday, December 26, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

விளை பொருட்கள் என்பது வற்றாத ஆற்றல் மூலம் ..சூரிய ஒளியும் பூமியில் நீரும்  இருக்கும் வரை இதைப் புதுப்பித்துக்கொள்ள முடியும் .தொல்பொருள் எச்சம் போல அருகிக் கொண்டே வந்து ஒரு காலகட்டத்தில் இல்லாமற் போவதில்லை .விளை பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யவேண்டும் .மக்களின் வாங்கும் சக்தியை வளர்த்து வைத்திருந்தால் ,இந்த விளை பொருட்கள் முழுவதும் விற்பனையாகிவிடும் ..அது அடுத்து கூடுதல் விளை பொருட்களை உற்பத்தி செய்யும் எண்ணத்தைத் தூண்டிவிடும் .விற்பனையாகாமல் உற்பத்தி செய்த விலைக்கு கூட விற்கமுடியாமல்  விளைபொருட்களை குப்பையில் கொட்டுவது விவசாயிகளுக்கு மட்டும் நஷ்டமில்லை ,அது நாட்டிற்கும் நஷ்டம் .இந்த இழப்பைத் தவிர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கலைகளை மேற்கொள்ள வேண்டும். .சம்பளத்தை உயர்த்தி மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த முயற்சி எடுக்காத ஆட்சியாளர்கள் விற்பனையாகாத விளைபொருட்களை கெட்டுப் போகாத உணவுப்பண்டங்களாக மாற்றும் பயிற்சியை அளிக்க வேண்டும் .காய்கறிகளை வற்றல் வரளி யாகவும் ,ஜாம் ஜாஸ்,சிப்ஸ்,சூஸ் ஆகவும் மாற்றலாம். சேமிக்கப்படும் உணவு தானியங்கள் திறந்த வெளியில் கிடந்து மழையில் நனைந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு .வரி வருவாயை உயர்த்தவும் ,வசூலிப்பதில் ஆர்வமும் காட்டும் ஆட்சியாளர்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்து  அக்கறை கொள்ளவேண்டும். நூற்றுக்கணக்கான கோடிகளில் சிலைகளை ஏற்படுத்து வதற்குப் பதிலாக ,தானியங்களின் சேமிப்புக் கிடங்குகள் , உலகத்தரமான கல்விக்கூடங்கள் , பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் , பொதுமக்களுக்கான  பொதுவிடங்களின் நவீன கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு, வேலையற்றோருக்கு வேலை வாய்ப்பு போன்றவற்றை உருவாக்கவேண்டும் . இதில் அக்கறை செலுத்தாத எந்த அரசும் சிறந்த அரசாக இருக்கமுடியாது .

 

Sunday, December 25, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

தொழில் துறையில் முன்னணி நாடாக்கிக் காட்டுகின்றேன் என்றும் மாநிலமாக்கிக் காட்டுகின்றேன் என்றும்  பல ஆட்சியாளர்கள் வெளிநாட்டி லிருந்து முதலீட்டாளர்களை வரவழைத்து சில நாட்கள் அரசாங்கச் செலவில் கருத்தரங்கம் நடந்துவார்கள் .இதன் மூலம் நாட்டிற்குப்  பல இழப்புக்களே ஏற்படுகின்றது . முதலில் தொழில் தொடங்கவரும் வெளிநாட்டினருக்கு அளவில்லாத சலுகைகள் கொடுப்பதின் மூலம் நம் வளர்ச்சியில்  ஒரு பகுதியை முன் கூட்டியே அடகுவைத்து விடுகின்றோம் .நம்முடைய கனிம வளத்தையும் மனித வளத்தையும் பயன்படுத்தி ஆதாயத்தில் பெரும்பகுதியை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள் .ஆட்சியாளர்க்குடன் கூட்டுச் சேர்ந்து எழுதப்படாத ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்கள் .ஆட்சியாளர்களும் அவர்களுடைய கணக்குக் காட்டமுடியாத பணத்தை முதலீடு செய்ய எது சரியான தொழில் என்பதை இந்த ஆலோசனைக்கு கூட்டம் மூலம் முடிவு செய்கின்றார்கள் .வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அறிமுகத்தையும் நட்பையும் ஏற்படுத்திக் கொள்ளவும்  , எதிர்காலத்தில் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். பலமுறை வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தி சில தொழில்கள் தொடங்கப்பட்டாலும் அதனால் நாடு சரியான முறையில் வளர்ச்சி பெறவில்லை. மாறாக ஆட்சியாளர்கள் மட்டுமே முன்னேறியிருக்கின்றார்கள் ..ஒரே உழைப்பிற்கு வெளிநாட்டினர் அதிக ஊதியமும் இந்தியர்கள் குறைந்த ஊதியமும் பெறுவதும், இந்தியாவில் பயன்படுத்திக் கொள்ளப்படாத கனிமவளத்தை குறைந்த செலவில் பெற்று பயன்படுத்திக்கொள்ளவும், உற்பத்தியில் பெரும்பகுதியை மக்கள் தொகை மிக்க இந்தியாவில் எளிதில் சந்தைப்படுத்தவும் , இந்தியாவில் விற்பனை செய்யமுடியாத விலையுயர்ந்த பொருட்களை குறைந்த செலவு மற்றும் வரிகளுடன் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இங்கு தொழில் தொடங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது இதனால் இந்தியாவில் தொலாளிகள் கிடைக்கின்றார்கள் ஆனால் முதலீட்டாளர்கள் ,தொழில் முனைவோர்கள் கிடைப்பதில்லை .இந்தியர்களில் கல்வி ,உழைப்பு ,அனைத்தும் அவர்களுடைய சொந்த நாட்டிருக்கே பயன்தரவேண்டும். இந்தியர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொழில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெறுமாறு செய்து  இந்தியாவில் தொழில் தொடங்க முயற்சி மேற் கொள்ள வேண்டும். இதனால் இந்தியாவில் நிரந்தரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். இது கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சியை நிலைப்படுத்தும். இந்தியக் குடிமக்களின் மதிப்பும் .இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்த்தும் .இந்தக்கனவு நிஜமாக வேண்டுமானால் ,இந்தியாவிற்கு அப்துல் கலாம் போன்ற கொளகைப்பிடிப்புடன் கூடிய தகுதியான தலைவர்கள், தலைவர்களுக்குச் சரியாக வழிகாட்டலும் ஒத்துழைப்பும் தரக்கூடிய துணைவர்களும்  வேண்டும்           

Saturday, December 24, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

இந்தியாவில் கனிம வளம் நிறைய இருக்கின்றது.  மக்கள் தொகை மிகுந்து இருப்பதும் , பழங்காலத்திலிருந்தே நாட்டை அபகரிக்க  எதிரிகள் ஊடுறுவிப் போராடியதும் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது .நாட்டின் வளங்களைப் பொதுவுடைமையாக்காமல் தனிவுடைமையாக்குக்கும் போக்கால் அவற்றின் பயன்பாட்டைகாலங்காலமாய் இழந்துவருகின்றோம்.கனிம வளங்கள் கிடைக் கும் இடங்களை முன்னறிந்து அவற்றைப்  பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த  வேண்டும் .அவை நாட்டின் சொத்து . ஆட்சியாளர்கள் தங்களின் சொத்துப்போல உரிமை கொண்டு அனுபவிக்க நினைக்கிறார்கள் .கனிம வளம் திருட்டுப் போக வாய்ப்பில்லை. ஏனெனில் இவையாவும் திறந்த வெளியில்  இருப்பதுடன் ,தனி ஒருவரால் நீண்ட காலம் மறவொழுக்கச் செயலாகச் செய்யமுடியாது. அரசாகத்திற்குத் தெரியாமல் யாரவது ஆற்று மணலை அள்ளிக் கொண்டே இருக்கமுடியுமா ? காட்டு மரங்களை வெட்டி கட த்திக்கொண்டே போக முடியுமா ? சுரங்கம் வெட்டி தாதுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியுமா ? ஆட்சியாளர்களின் துணை இல்லாமல் ,தனியொருவரால் இத்தகைய தேசத் துரோகச் செயல்களைச் செய்யவே முடியாது. போதிய பாதுகாப்பு அமைப்புக்கள் இருந்தும் தனியொருவர் தொடர்ந்து குற்றச் செயல்களைச் செய்து வருவதை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அது அரசாங்கத்தின் அறியாமையை இல்லை, பலவீனம் .

கனிம வளங்களை நாட்டுக்காகப் பயன்படுத்தும் போது ,எல்லோருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கின்றது. எல்லோரும் சம்பாதிப்பதால் வறுமையால் குற்றங்கள் நிகழ்வதில்லை .பணப்புழக்கத்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கின்றது . அவர்கள் உயிர்வாழ நல்ல உணவுப் பொருட்களை வாங்குவார்கள். அதாவது நாட்டில் இயல்பாக விவசாய உற்பத்தி அதிகரிக்கின்றது. ஆட்சியாளர்கள் நாட்டின் வளங்களை அபகரித்துக் கொண்டால் பணம் பெட்டகங்களிலும் ,வங்கிகளும் முடங்கிப்போகின்றன .மக்களின் வருமானம் குறைந்து போகின்றது .விவசாயத்தால் பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும் வாங்கப்படுவதில்லை .பொருள் வீணாக வீணாக விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஈடுபாடு குறைந்து போகின்றது . இது நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும் . நாட்டிலுள்ள பொருளாதார வல்லுநர்கள் இது பற்றிய எச்சரிக்கையை தன்னலமிக்க ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்

Wednesday, December 21, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஒரு குறிப்பிட்ட பணியில் சேர்வதற்கு இன்னென்ன தகுதிகளை ப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதைப் போல அமைச்சராவதற்கும் அரசியலில் பங்கேற்பதற்கும் தேவையான தகுதிகள் இல்லாதிருப்பது ம் ,ஒரு தொழில் தொடங்க முதலீடும் நெறிமுறைகளும் இருப்பதைப்போல ஒரு கட்சி தொடங்க ஒரு விதிமுறை இல்லாதிருப்பதும் இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம்.எந்த முதலீடும் இல்லாமல் ,குறைந்தபட்சக்  கல்வித் தகுதியும் இல்லாமல் ,நாட்டின் முன்னேற்றத்தில் போலித்தனமில்லாத அக்கறை மற்றும்  ஈடுபாட்டுடன்  கூடிய நோக்கமும் கொள்கையும் இல்லாமல் ஒருவர் படிப்பறிவு  அதிகமில்லாத மக்கள் மிகுந்த நாட்டை ஆள்வது ஆபத்தானது..

அமைச்சராவதற்கும் ,அரசியலில் பங்கேற்பதற்கும் உரிய தகுதிகள் சட்டத்தால் வரையறை செய்யப்படவேண்டும் .ஒரு தகுதியும் இல்லாமல் உயர்ந்த பொறுப்புக்களை வகிப்பதால் ,நாடு முன்னேற்றத்தில் பின்தங்கி வளமிழந்து வருகின்றது .இதற்கான அரசியல் சட்டத்திருத்தங்களை அரசியல்வாதிகளே கொண்டுவரவேண்டியிருப்பதால்  பெரும்பாலும் அவர்களுக்குப் பாதகமான சட்டத் திருத்தங்களை ஏற்படுத்த விரும்புவதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களாக இல்லாமல் எதிர்கட்சியினராக இருக்கும் போது ஆட்சியாளர்களைக் களங்கப் படுத்ததும் நோக்கத்திற்காக  வாய்ப்பேச்சுக்கு மட்டும் எதிர்ப்பது போல பேசுவார்கள் மற்றபடி ஒருநாளும் நடைமுறைக்கு வருவதில்லை 

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

உலகில் இந்தியா பல மதங்கள்,பல இனங்களைச் சேர்ந்தவர்களும்  ,பல மொழிகள் பேசுபவர்களும் ஒற்றுமையாக வாழும் ஒரே நாடு  அதனால் அரசியல்வாதிகளுக்கு அரசியலோடு  மதம் ,இனம் மொழி பற்றிய தெளிவான அறிவு அவசியம். மக்களின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதனால் அரசியல் வாதிகளுக்கு பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் .அப்பொழுது தான் நாட்டின் பல பகுதிகளில் .வாழும் மக்களின் தேவைகளையும் மனநிலை யையும் புரிந்துகொண்டு சேவையாற்றமுடியும். அடசியல்வாதிகளுக்கு நாட்டின் இறையாண்மை பற்றிய அறிவு அவசியம்.  நாட்டு மக்களின் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு பணியாற்ற இது முக்கியம்  .ஒரு அரசியல்வாதிக்கு ஒரே யொரு மொழி மட்டுமே தெரிந்திருக்குமானால் அவர் ஓராண்டு காலத்திற் குள் மற்றொரு    மொழியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இல்லை யென்றால் அவர் பதவியை இழக்க நேரிடும் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும்

 

          ஒரே  அரசியல்வாதி ஒரேசமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வகிக்கும் வாய்ப்பை அளிக்கக்கூடாது .மனிதவளம்மிக்க நாட்டில் ஆட்களுக்குப் பற்றாக் குறை இல்லை. ஜனநாயக  நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்கள் தலைவனாகவே ஆகலாம் என்று சொல்லப்பட்டாலும் அரசியலில் வருவாய்த் துறைகளை ஒரு சிலர் மட்டுமே தங்கள் ஆளுமைக்குள் வைத்துக்கொள் கின்றார்கள் . இந்த மனப்போக்கு அவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கு அனுகூல மிக்கதாக இருக்கின்றது. மக்கள் தவறு செய்யாமலிருக்க அரசாங்க அமைப்புக்கள் இருப்பதைப்பைபோல அரசியலவாதிகள் தவறு செய்யாமலிருக்க மக்கள் அமைப்புக்கள் இருக்கவேண்டும். அரசாங்க அமைப்புக்களை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளையே அவை கண்காணிப்பதுமில்லை தண்டிப்பதுமில்லை .

Sunday, December 18, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 பொருளாதாரத்தால் மேன்மையடைந்த பல நாடுகளின் வளர்ச்சி நிலைகளைக் கவனிக்கும் போது இதுநாள் வரை நம் சிந்தனையைத் தொடாத சில உண்மைகள் தெரியவருகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கவனிக்கத் தகுதியான ஆட்களும் ,வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான பொருளும் , அப்பொருளைத் தொடர்ந்து கொடுத்துவர சம்பாதிக்கும் மக்களும் வேண்டும் தகுதியான ஆள் என்பது சுதந்திரமான எண்ணத்துடன் மக்களால் தேர்தெடுக்கப்படும் வேட்பாளர்  அவர் துறை சார்ந்த அறிவும் , பொருளாதாரம் பற்றிய சிந்தனைகளும் ,மக்கள் நலத்தில் உறுதியான விருப்பமும் கொண்டிருக்கவேண்டும் . மக்களின் எண்ணங்களைத் திரித்தும், மயக்கியும், கட்டாயப்படுத்தியும் மக்களின் அறியாமையால் தேர்ந்தெடுக்கப்படும் நபராக இருக்கக் கூடாது. இந்தியாவில் தகுதியான வேட்பாளர்கள் அப்பகுதி மக்களால் முடிவு செய்யப்படுவதை விட கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றது .இவர்களும் சுயநலத்தின் பொருட்டு சுய சிந்தனைகளின்றி செயல்படுகின்றார்கள் ஆட்சியாளர்கள் அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்,ஒரு முறைகூடத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது .நிர்வாகத்தில் தகுதியான அதிகாரிகளையும் ,அலுவலர்களையும் கொண்டு செய்யவேண்டிய பணிகளைச் செய்யவேண்டும் .சுய விளம்பரம் தேடிக்கொள்ள அரசின் நிதியை வீண் செலவு செய்யக்கூடாது. தன்னால் அரசுக்கு ஏற்படும் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்திய ஆட்சியாளர்கள் பெரும்பாலானோர் சராசரி இந்தியனை விட நம்பமுடியாத அளவு பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள் ..தாங்களும் அப்படி உழைப்பின்றிப் பொருள் சேர்க்கவேண்டும் என்ற பிழையான எண்ணத்தில் பெரும்பாலான  மக்கள் அரசியல்வாதியாகி ஆட்சியில் பங்கேற்கப் போட்டிபோட்டுக்கொன்டு  சண்டை போட்டுக்கொள்கின்றார்கள். ஒரு அரசியல்வாதி ஆட்சியில் இடம்பெற்றவுடனேயே திடீர் பணக்காரராகிவிடும் நிலை இந்தியாவில் மட்டுமே. இவர்கள் கருத்துச் சண்டையோடு பகைமை உணர்வுடன் பாதகச் செயல்களையும் மறைவொழுக்கமாகச் செய்கின்றார்கள்

 

Friday, December 16, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 ஆட்சியாளர்கள் பள்ளிக்கூடம், கல்லூரி ,பல்கலைக் கழக ஆசிரியர்களையும் ,துணைவேந்தர்களையும் நியமிக்கின்றார்கள். நீதிபதிகளைக் கூட இவர்களே நியமிக்கின்றார்கள்  .அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பணியாளர்களை நியமிக்கின்றார்கள் இவர்கள் இருக்கும்  பதவிக்கு ஆதரவு அளித்துவருமாறு தூண்ட.தேர்வு முறையில்  வட்டாரப் பிரதிநிதிகளுக்கும்  அதிகாரம் வழங்கி அவர்களும் பிழைப்பதற்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். வெறும் வாய்மொழியிலான ஒப்பந்தம் மூலம் செயல்கள் நடைபெறுவதால் தவறுகள், சட்டத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை..ஆட்சியாளர்களின் முதன்மைப் பொறுப்பு ,மக்களுக்காகச் சேவை செய்வதுதான். நாடு வளம்பெற  எங்கும் யாராலும் தீய செயல்கள் நடைபெறாமல் கண்காணித்து அரசாங்க அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தவேண்டும் .மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவேண்டும் .ஆனால் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும்  மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களை எல்லாம் அவர்களுடைய சுய நலத்திற்காகவும் ,பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

அரசியல்வாதிகளின் அதிகாரம் அளவுக்கு மீறியவாறு இருப்பதை அனுமதிப்ப தால் ,இன்றைக்கு அதன் வளர்ச்சியை சட்டத்தாலோ அல்லது மக்களின் எதிர்ப்பாலோ தடுத்துக் கொள்ளமுடியாத நிலையே உருவாகி வருகின்றது . .அவர்கள் ஊழலால் கிடைக்கும் பெரும் பொருளால் எல்லோரையும் விலைக்கு வாங்கும் தகுதிமிக்கவர்களாக இருக்கின்றார்கள் மக்கள் மக்களை ஏமாற்றாமல் இருக்க ஆட்சிமுறையில் பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதைப் போல , ஆட்சியாளர்களும் மக்களை ஏமாற்றாமல் இருக்க அடசியலில் சட்டத் திருத்தங் கள் அவசியம். இதை மக்களே எடுத்துச் சொல்வதைவிட நீதிபதிகளே சுட்டிக்காட்டவேண்டும். .மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்கள் பிரதிநிதி முதலமைச்சரையும் , ப்ரெசிடெண்ட்டையும் தேர்ந்தெடுக்க அவர்கள் மற்ற அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் கட்சியே மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதால் அடிப்படையே தவறாகி விடுகின்றது .ஏனெனில் அங்கே கட்சியின் விருப்பமே மக்களின் விருப்பமாகத் திணிக்கப்படுகிறது. மக்கள் சபை இருப்பதைப்போல ஒவ்வொரு பகுதியிலும் நன்மக்களால் ஆன ஒரு குழு அமைக்கப்படவேண்டும். இக்குழுவில் அப்பகுதியைச் சேர்ந்தநீதிபதிகள் ஓய்வு பெற்ற  நல்லாசிரியர்கள், வழக்கறிஞர்கள் ,சமூகஆர்வலர்கள் நியமிக்கப் படவேண்டும் .இந்தக்குழுவின் ஒருமித்த பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அரசுப்பணியாளர்களை நியமிக்கவேண்டும். பரிந்துரைக் கும் ,மறுப்பிற்கும் முறையான காரணங்களையும் விளக்கங்களை யும் இக்குழு சமர்ப்பிக்கும்

 

Thursday, December 15, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே 

 அரசாங்கப் பணிக்காகச் செய்யப்படும் தேர்வு முறை முழு நம்பிக்கையளிப்பதாக இல்லை..ஆட்சியளர்கள் பொருள் வாங்கிக்கொண்டு தகுதியற்றவர்களை நியமித்து விடுகின்றார்கள் உண்மையில் அதற்கான கல்வித் தகுதி அவர்களிடம் இல்லாததால் தேர்வு செய்யும் முறையில் ஆட்சியாளர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. இவர்களால் திறமையை வளர்த்துக்கொண்டு போட்டிபோடுபவர்கள் பல சமயங்களில் புறக்கணிக் கப்பட்டுவிடுகின்றார்கள் .இதனால் திறமையானவர்களின் பணியை இழப்பதுடன் ,திறமையற்றவர்களின் பணியால் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இனவாரியான ஒதுக்கீடு தவறான அணுகுமுறையாகும். அரசாங்கம் திறமையற்றவர்களின் ஓய்விடம் இல்லை. அது திறைமையானவர்களால் நாட்டை வளப்படுத்தும் முயற்சியை அழித்துவிடுகிறது. பல திறமையானவர்கள் சொந்த நாட்டிற்காக வேலை செய்வதைவிட , மற்ற நாடுகளில்  தேர்வு செய்யப்பட்டு பணியாற்றும் போக்கு இன்றைக்கு வளர்ந்து வருகின்றது .இது நாட்டிற்கு ஏற்படும் பெரிய இழப்பாகும் வேண்டுமானால் பிற்பட்ட வகுப்பினருக்கு தகுதியை வளர்த்துக்கொள்ள போதிய நிதி உதவி அளிக்கலாம் .ஆனால் தேர்வு முறையில் சலுகை அளிக்கக் கூடாது எவ்வளவு பேர் தேவை , அவர்களின் உண்மையான  தகுதியை மதிப்பிட்டு எப்படித் தேர்வு செய்வது என்பதெல்லாம் துறைசார்ந்த உயர் அதிகாரிகளின் கடமை...அதிகாரிகள் தேர்வு முறையில் தவறு செய்வார்கள் என்று ஆட்சியாளர்கள் அனைத்து தேர்வு முறையையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டார்கள். மேலும் அவர்களுடைய முடிவுக்கு அதிகாரிகளும் இணங்குமாறு  செய்து கொள்கின்றார்கள்.

 

Monday, December 12, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-

அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தால் எங்கெங்கு வருவாய் அதிகம் வருகின்றதோ அதையல்லாம் அதிகாரிகளளின் துணையுடன்  விவரங்களைத் தெரிந்துகொண்டு ,எதையாவது காரணங்களை சொல்லி அதைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துவிடுவார்கள். பழங்காலத்தில் ஆட்சியாளர்கள் கோயில்களுக்கு பொருளும் நிலமும் வழங்கினார்கள் . இன்றைக்கு அவை திருட ப்பட்டு அல்லது கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன .பல கோயில்கள் சிதிலமடைந்து கேட்பாரற்று இருக்கின்றன . சொத்து அதிகமுள்ள கோயில்களில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட சிதிலமடைந்த கோயில்கள் மீது காட்டுவதில்லை . இதைப் புதுப்பிப்பதில் அக்கறை காட்டமாட்டார்கள். அதைப் புதுப்பிக்க பொதுமக்கள் பொதுமக்களிடம் வசூலித்து புதுப்பித்து அவர்களிடம் கொடுத்தால் புன்னகையுடன் வாங்கிக்கொள்வார்கள்..இதில் வேடிக்கை என்னவென்றால் புதிய கோயில்கள் கட்ட விரும்புகின்றார்கள். இதில் செலவுக்கணக்கை மிகைப்படுத்திக் காட்டி  கொள்ளையடிப்பதற்கான வழிகள் நிறைய இருக்கின்றன அரசியல்வாதிகள் துறை எதுவானா லும் அதிகாரிகளையும், அலுவலர்களையும் , ஆசிரியர்களையும் ,பொறிஞர் களையும் நியமிக்கும் பொறுப்பை  எடுத்துக்கொண்டு விடுவார்கள் . துறை சார்ந்த அறிவு இல்லாமையால் ,பெரும்பபாலும் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவதில்லை. பணப் பரிமாற்றமே தேர்ச்சி பெற்றவரைத் தீர்மானிக்கின்றது .தகுதி மிக்கவர் தேர்ந்தெடுக்க ப்படாமல் ,தகுதியில்லாதவர் தேர்ந்தெடுக்கப்படுவதால்  பணியும் சிறப்பாக நடப்பதில்லை.. பெரும்பாலும் இவர்கள் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்குத் துணைபுரிந்து ஆதாயம் தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்   

Sunday, December 11, 2022

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-11 

தேர்தலின் போது தீயவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள் ,நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்வார்கள் ,தீயவர்களுக்கு நல்லவர்களுக்கும் அவர்கள் சுட்டிக்காட்டும் வேறுபாடு வோட்டுக்குப் பணம் தரும் வேட்பாளர்கள் தீயவர்கள் அப்படிப் பணம் ஏதும் தராதவர்கள் நல்லவர்கள் என்பதாகும் .உண்மையில் பணம் தரும் வேட்பாளர் ஏற்கனவே அரசியலில் பணம் சம்பாதித்தவராக இருப்பார். அதனால் வெற்றிபெற்ற பிறகு செலவுசெய்த பணத்தைப் போல பல மடங்கு சம்பாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பணத்தை செலவு  செய்வார்கள் . ஆனால் புதிதாக வருபவர்கள் சுயேட்சை வேட்பாளர் களாகவே இருப்பார்கள் ,பழைய, ஏற்கனவே பழக்கமுள்ள தொண்டர்கள் இருக்கும் போது புதியவர்களை ஒரு கட்சி வேட்பாளர்களாக இருக்க அனுமதிப்பதில்லை. இவர்கள் பணம் கொடுக்கக்கூடாது என்பதற்காகக் கொடுக்கவில்லையா ,இல்லை பணம் அவ்வளவு இல்லை என்பதற்காகக் கொடுக்கவில்லையா ? பெரும்பாலும் வெற்றி பெற்று வந்த வேட்பாளர்கள் எல்லோரும் எண்ணத்தாலும் செயலாலும் மாறிவிடுகிறார்கள். நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் பதவியாலும் அதிகாரத்தாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக வே இருக்கின்றார்கள்

அரசியல்வாதிகள் மறைவொழுக்கம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு நிலையான கொள்கை கிடையாது. போலியாக இருப்பதால் அடிக்கடி நிறம் மாறும். பொய் சொல்லியே மறைவொழுக்க நடவடிக்கைகளை மறைப்பார்கள். மறைவொழுக்கத்தால் புறவெளியில் மட்டுமே ஆதாயம் தேடமுடிவதால் அவர்களுக்கென ஒரு கோஷ்டியை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள். ஆதாயத்தில் பங்கு கொடுத்து அவர்களையும் மறைவொழுக்க நடவடிக்கையில் ஈடுபடச் செய்கின்றார்கள் .இப்படியொரு கோஷ்டிக்குத் தலைவனாக இருப்பவர்களே பின்னால் ஆள்பவர்களாக வருகின்றார்கள். இந்த வாய்ப்பு கோஷ்டியிலுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. தலைவர் தப்பித்தவறி மாட்டிக்கொண்டுவிட்டால் இவர்கள் குற்றச்சாட்டை மறுத்துப் போராடுவார்கள் .வீதியெங்கும் நோட்டிஸ் ஒட்டுவார்கள். மக்களிடையே கலவரத்தைத் தூண்டுவார்கள் .அவர்களுடைய நோக்கம் நீதியை நிலைநாட்டுவதில் இல்லை ,குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுவதிலிருந்து தப்பித்து தொடர்ந்து மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதேயாகும்  வழிமுறை தவறாக இருந்தாலும் ஆதாயம் கிடைக்கின்றது என்பதற்காக இன்றைக்கு ச் சமுதாய மக்கள் இப்போக்கை மனதளவில் விரும்புகின்றார்கள் .எல்லோரும் மறைவொழுக்கத்தில் ஈடுபட்டால் சமுதாயத்தில் ஒருவர்கூட உயிர் வாழமுடியாத சூழ்நிலையே உருவாகும் என்பதை க் கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும் சாகக்கூடாத சமுதாயத்தின் நலத்தை மேம்படுத்த முன்வரவேண்டும்

Saturday, December 10, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே—11 

தேர்தலின் போது தீயவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள் ,நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்வார்கள் ,தீயவர்களுக்கு நல்லவர்களுக்கும் அவர்கள் சுட்டிக்காட்டும் வேறுபாடு வோட்டுக்குப் பணம் தரும் வேட்பாளர்கள் தீயவர்கள் அப்படிப் பணம் ஏதும் தராதவர்கள் நல்லவர்கள் என்பதாகும் .உண்மையில் பணம் தரும் வேட்பாளர் ஏற்கனவே அரசியலில் பணம் சம்பாதித்தவராக இருப்பார். அதனால் வெற்றிபெற்ற பிறகு செலவுசெய்த பணத்தைப் போல பல மடங்கு சம்பாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பணத்தை செலவு  செய்வார்கள் . ஆனால் புதிதாக வருபவர்கள் சுயேட்சை வேட்பாளர் களாகவே இருப்பார்கள் ,பழைய, ஏற்கனவே பழக்கமுள்ள தொண்டர்கள் இருக்கும் போது புதியவர்களை ஒரு கட்சி வேட்பாளர்களாக இருக்க அனுமதிப்பதில்லை. இவர்கள் பணம் கொடுக்கக்கூடாது என்பதற்காகக் கொடுக்கவில்லையா ,இல்லை பணம் அவ்வளவு இல்லை என்பதற்காகக் கொடுக்கவில்லையா ? பெரும்பாலும் வெற்றி பெற்று வந்த வேட்பாளர்கள் எல்லோரும் எண்ணத்தாலும் செயலாலும் மாறிவிடுகிறார்கள். நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் பதவியாலும் அதிகாரத்தாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக வே இருக்கின்றார்கள்

Friday, December 9, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-10 

           ஆட்சியாளர்கள் மக்கள் குற்றம் புரியாமல் இருக்க அரசாங்கத்தின் பொது அமைப்புக் களை ப் பயன்படுத்துகின்றார்கள் என்று சொல்வதை விட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மக்களே ஏற்படுத்திக்கொண்ட அமைப்பை  மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடக் கூடாது என்பதற்காக நிலைத்திருக்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக் கின்றார்கள். மக்களைக் குற்றம் புரிய அச்சப்படுத்தும் இந்த அமைப்புக்கள் ஆட்சியாளர்கள் தங்களுடைய  தவறான செயல்பாடுகளை மட்டுப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகைகளைக் கூடுதலாக அளித்தும், ,உயர்பதவியை வழங்கியும்,  மறைபொருளைக் கொடுத்தும்அவர்களே குற்றவாளியாகும் பொழுது அதிலிருந்து அவர்களை விடுவித்தும், அவர்களும ஊழல் புரிவதற்கான வாய்ப்புக்களை பிரகாசப்படுத்தியும் போன்ற இன்ன பிற செயல்களைச் செய்கின்றார்கள். குற்றம்புரிபவன் ஒரு சாதாரணக் குடிமகனாக இருக்கும் போது சரியான ஆதாரமில்லாமல் வெறும் வாய்மொழிக் குற்றச்சாட்டிற்கே  நிரூபிக்கப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுவதற்கு முன்பாகவே சொல் லொண்ணா தாக்குதலுக்கு உள்ளாகிறான். சில சமயங்களில் உயிரிழப்பும் ,உடல் ஊணமும் ஏற்படுகின்றது.. குற்றங்களை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட இந்த அம்மைப்புக்கள்  அதே குற்றத்தைப்  புரிந்து தண்டித்துவிட்டதாகக்   கூறுவதால் குற்றங்கள் தடுக்கப் படுவதில்லை. தவறான வழிமுறைகளால் குற்றங்கள் தடுக்கப்படும் போது அவை தொடந்து பெருகவே வாய்ப்பிருக்கின்றது. இதனால் அரசும் அரசாங்கமும்  மறைவொழுக்கமாகக்  குற்றச்செயல் களைச் செய்வதை வழக்கமாய்க் கொண்டுள்ளன .சாதாரணக் குடிமக்கள் செய்யும் குற்றங்களைத் தடுக்கும் எந்த பொது அமைப்பும் அரசாங்கம் செய்யும் குற்றங்களைத் தடுக்க ஒரு சிறு முயற்சிகூட எடுத்துக்கொள்வதேயில்லை. உண்மையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் நேர்மையன்னவர்கள் இல்லை. பதவியால் ஊழல் செய்வதற்காகவே பணம் செலவழிக்கிறார்கள் . ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் . மக்களுக்காக சேவை செய்ய யாரவது சண்டை போட்டுக்கொள்வார்களா. குற்றவாளிகளாலும் , குற்றம் புரிந்த ஆரசியல் வாதிகளாலும் தங்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கின்றது என்பதற்காக பெரும்பாலான பாதுகாவலர்கள்  கடமை தவறிவிடுகிறார்கள். .உண்மையில் இதை எந்தவொரு தனி மனிதராலும் ,அமைப்பாலும் நிரூபிக்கவே முடியாது. அரசாங்கம் நினைத்தால் மட்டுமே முடியும் . அரசாங்கத்தில் நேர்மையானவர்கள் சங்கமித்தல் மட்டுமே இது நிகழும் . இப்படிப்பட்ட நல்ல மாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் இந்தியாவில் நாளுக்குநாள் அருகிக்கொண்டே வருவது இருக்கும் ஒரு சில நல்லோரர்களை அச்சமூட்டிவருகின்றது

 

Thursday, December 8, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-9 

சொந்த வீடு கட்ட விரும்பி முயன்றால் அதற்கான வரைபடம், பாதை ,திட்டச் செலவு போன்ற ஆவணங்கள் இருந்தால்தான் அனுமதிப்பார்கள் இது பல மாதங்களாகும் . ஓட்டுநர் உரிமம் வேண்டுமென்றால் பயிற்சி பெற்று தேர்வில் திருப்தியளிக்கவேண்டும் .ஒரு குறிப்பிட்ட பணியில் சேர விரும்பினால் அதற்கான தகுதியை விரும்பப்படுமளவிற்கு நிரூபித்துக் கா ட்டவேண்டும் .எல்லாப்பணிகளுக்கும், எல்லா மக்களுக்கும்  இருக்கும் இந்த வரையறைக்கு விதிவிலக்காக இருப்பவர்கள் இந்திய அரசியவாதிகள் மட்டும்  தான் .இவர்கள் ஆளுமைக்குரிய தகுதியை நேர்மையான முறையில் எந்த நிலையிலும்  நிரூபிப்பதில்லை. அரசியல், பொருளாதாரம் ,வர்த்தகம் சட்டம் ஒழுங்கு பற்றிய குறைந்தபட்ச அறிவும் ,கல்வித்தகுதியும் கொண்டிருப்பதில்லை. .பணத்தாலும் ,அதிகாரத்தாலும் , போலியான வாக்குறுதிகளாலும் தேர்தலில் வெற்றிபெற்று பதவியைக் கைப்பற்றி சுயநலத்தால் மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். .இவர்களால் மக்களும் மறைவொழுக்க நாயகர்களாக மாறிவருவதால் இனி திருத்தவே முடியாத பாழான சமுயாதமே எஞ்சி வாழும் . மக்களின் மறைவொழுக்கம் அந்தச் சமுதாயத்தையும் விழுங்காமல் விடுவதில்லை. நூற்றுக்கணக்கான கோடிகளில் திட்டம் என்ற பெயரில் செலவிற்கு அனுமதிப்பார்கள். .இதற்கு வரைபடமோ , செலவுக்கணக்கிற்கான விவரங்களோ இருப்பதில்லை. இதெல்லாம் அவர்களுடையே விருபத்திற்கேற்றவாறு பின்னல் செய்யப்படுபவையாகும் .பெரும்பாலும் இது போன்ற திட்டங்களில் செலவு பலமடங்கு அதிகமாக இருக்கும். இந்தக்கூடுதல் செலவு ஊழலுக்கு உள்ளாகி யாருக்கும் தெரியாமல் மறைந்துவிடுகிறது. இந்த ஊழலை யாராலும் நிருபிக்கவே முடியாது. ஏனெனில் 10 கோடி செலவிற்கு 100 கோடி அரசாங்கத்தின் முன் அனுமதி உள்ளது. பொதுவாக பெரிய அளவில் நடக்கும் ஊழல்கள் யாவும் அரசாகத்திற்குத் தெரியாமல் நடக்கவே முடியாது. .அரசாங்கமே இதில் மறவொழுக்கமாக ஈடுபடுவதால் ,அவர்கள் எப்போதும் கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள் .எக்காலத்திலும் நிரூபிக்க முடியாமல் மக்களும் மனதிற்குள் கொதிப்பதோடு விட்டுவிடுவார்கள்

திட்டத்தை விருப்பமாகச்  சொல்லலாம். அதற்கான வல்லுநர்களே அதை முழுமையாக நிறைவேற்றவேண்டும் . ஆட்சியாளரே திட்டத்தை வரைந்து, அனைத்துச் துறை சார்ந்த செயல்களையும் தானே செய்வது தவறாகும் . ஆட்சியாளர் சகலகலா வல்லவரில்லை . உண்மையில் நம்முடைய அரசியல் சட்டங்களை மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு  திருத்த வேண்டும். ஏனெனில் இன்றைக்குச் சட்டங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுபோன்ற ஒரு தோற்றத்தில் தீயவர்களுக்கே பாதுகாப்பளிப்பதாக இருக்கின்றது .சட்டம் ஆதாரம் இருந்தால்தான் தண்டிக்கும் .என்பதைத் தெரிந்து கொண்டு ஆதாரமில்லாமல் குற்றச் செயல்களை செய்யும் போக்கை வளர்த்து வருகின்றார்கள். 100 குற்றங்களில் 1 குற்றவாளி மட்டும் தண்டிக்கப்படுகின்றான் 99 குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றார்கள் என்றால் அந்தச் சட்டங்கள் எப்படி மக்களுக்கு நன்மையளிக்கும் .இந்தச் சமுதாயம் எப்படி நலமாக முன்னேறும் ? சட்டங்கள் நேர்மையானவர்களால்  மாற்றப்படவேண்டும்       

 

Wednesday, December 7, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-8 

அரசியல்வாதிகள் எதற்காக அதிகாரம் கொடுக்கப்பட்டதோ அதை அதற்காகவே பயன்படுத்தப்படுவதேயில்லை. மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள், தவறுகள் செய்வதற்கு கொடுக்கப்படும் அனுமதியாகக் கருதுகின்றார்கள் செய்த தவறுகளை மறைப்பதற்கும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கும்  அதிகாரத்தையே ஒரு கேடையமாகக் கொள்கின்றார்கள்  இதற்குக் காரணம் அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமையான ஜனநாயக அமைப்பு ஜனநாயகத்தில் இல்லை..அப்படியொரு அமைப்பை நல்லோர் ஒருவர் முயன்றால் அதற்கு மக்கள் ஆதரவும் இருப்பதில்லை ,அரசியல்வாதிகளும் தங்கள் அதிகாரத்தால் அதன் வளர்ச்சியைத்  தடுத்து நிறுத்திவிடுகின்றார்கள்  தீயவர்களைத் கட்டுப்படுத்தி  தீமைகளைத் தடுக்கக் கொடுக்கப்பட்ட அதிகாரம் வேண்டாத தீயவர்கள் பாதிக்கப்படவும் வேண்டிய தீயவர்கள் பாதுகாப்பாய் இருக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது இதனால் வேண்டாத நல்லவர்கள் தீயவர்களாக்கப்படுவதும் ,வேண்டிய தீயவர்கள் நல்லவர்களாக்கப்படுவதும் சட்டத்தையும் ஏமாற்றி வளர்ந்து சமுதாயத்தில்  எதிர்மறையான இழப்புக்களை   ஏற்படுத்து கின்றன   மறைவொழுக்கத்தால் தவறுகள் செய்வதற்கும், தீயோர்களின் கூட்டணியுடன் அவற்றை விரிவுபடுத்துவதற்கும் துணிவு கொள்கின்றார்கள் . கூட்டணி அவர்களுக்கு தைரியத்தையும் ,சமூகப்  பாதுகாப்பையும் தருகின்றது உழைப்பின்றிக் கிடைக்கும் பொருளைக் கொண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடுகின்றார்கள். கூட்டணியையும் சொந்தச் செலவின்றி தக்கவைத்துக் கொள்கின்றார்கள். பதவியால் தவறுகள் செய்வதற்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்களுக்கு பொருளும் உயர் பதவியும் கொடுத்து கைப்பாவையாக வைத்திருப்பார்கள் . எதிராகச் செயல்படுபவர்களை அதிகராத்தல் பணி இடமாற்றம் , உயர்பதவி மறுப்பு ,அரசின் சலுகைகள் குறைப்பு போன்ற வற்றால் அச்சப்படுத்துவார்கள்

Tuesday, December 6, 2022

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-7 

   கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்று சொல்வார்கள். அதுபோல ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அவர்களாலேயே அழிந்து போவார்கள் என்று சொல்லலாம் கத்திச் சண்டையில் ஒருவர் தோற்பதும் அல்லது அழிவதும் உடனடியாக நடந்து விடுகின்றது . ஆனால் சமுதாயம் தழுவிய போராட்டத்தில் இது மெதுவாக நிகழ்கின்றது .இறுதியில் அழிவு ஒட்டுமொத்தமாக ஏற்படுகின்றது

     . பொதுவாக ஏமாற்றிப்பிழைப்பவர்கள் அவர்களுடைய பாதுகாப்பிற்காக கூட்டுமுயற்சியில் செய்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அரசியல்வாதிகள் அதிகாரிகளுடனும்  அதிகாரிகள் அலுவலர்களுடனும் ,அலுவலர்கள்  மறைவொழுக்கத்திற்காக பிற அலுவலர் களுடன் நட்புடனும்  இணைந்து செயல்படுகிறார்கள். இந்த நட்புணர்வு மக்கள் நலத்திற்காகவோ ,தொழில் நேர்மைக்காகவோ ஏற்பட்டதில்லை ,மறைவொழுக்க நடவடிக்கைக்காக பின்பற்றப்பட்டு வருகின்றது பொதுவாக சுயலாபம் கருதி பணியாற்றுபவர்கள் கிடைக்கும் எதையும் முழுமையாக அனுபவிக்கவே விரும்புவார்கள் இதனால் .பங்கீடு செய்வதில் தவறு செய்வார்கள்.மறைவொழுக்க நடவடிக்கைகளுக்குள் மற்றுமொரு மறைவொழுக்கம் தூண்டப்படுகிறது .ஏமாற்றுபவர்களுக்கு எந்த நிலையிலும் முழுத் திருப்தி  ஏற்படுவதில்லை  அதனால் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றுபவர் களையே ஏமாற்ற விரும்பிச் செயல்படுகிறார்கள்   .இதில் ஏற்படும் அதிருப்தி வெளிப்பட்டுத் தெரியவரும்போது  நட்பை நொடிப்பொழுதில் பகைமையாக்கி விடுகின்றது  ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் நிலைகுத் தள்ளப்படுகின்றார்கள்  கூட்டணியாகச் செயல்பட்டவர்கள் கோஷ்டியாகச் சண்டையிடும் அழிவும் அதிகமாக இருக்கின்றது. 

       இந்தச் சமுதாயம் திருந்திவிடும் என்ற நம்பிக்கையுடன் இன்றைக்கு சமுதாயத்தில் வெகு சில அப்பாவி ஏமாறுபவர்களே இருக்கிறார்கள் .அதற்குக் காரணம் எல்லோரும் ஏற்கனவே ஒருவரையொருவர் ஏமாற்றும் ஏமாற்றுபவர்களாக எண்ணத்தாலும் செயலாலும் மாறிப்போயிருக்கின்றார்கள் .ஒரு சில ஏமாற்றுபவர்களைத் திருத்த முடியும் , தண்டிக்கவும் முடியும். ஆனால் எல்லோரும் ஏமாற்றுபவர்களாக மாறிவிட்டால் திருத்தவும் முடியாது தண்டிக்கவும் முடியாது . தண்டனை அளித்தால் அதிலிருந்து வெகு எளிதாகத் தப்பித்துக் கொள்வார்கள். மறைவொழுக்கத்தால் வளரும் ஒரு சமுதாயத்திற்கு வளமான எதிர் காலம் இருக்கவேமுடியாது . வளர்ச்சிக்கான திட்டங்களின் செயல்பாடுகளின்றி முன் னேறியதாகச் சொல்லிக்கொள்வதால்  முன்னேற்றத்தை முழுமையாக இழந்து நாட்டிற்கு வாரிசின்றி அழிந்து போகும். ஒரு நாடு அழிந்து போகுமானால் அதற்குக் காரணம் நாட்டு மக்கள் இல்லை ,நாட்டை ஆளும் அரசியல்வாதிகளே .  பொறுப்புணர்வுடன் கடமையாற்றத் தவறிய ஆட்சியாளர்களின் தகுதியின்மையே நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றது. மக்களும் ஏமாற்றுவதால் கிடைக்கும் ஆதாயத்தை மனதிற்குள் விரும்புவதால் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தாலும் மனத்தால் மறுப்பதில்லை. .மக்களின் இந்த பலவீனமே அரசியல்வாதிகள் தொடர்ந்து மறைவொழுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாத துணிவு தருகின்றது

Monday, December 5, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-6 

நாடு அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் சம உரிமையுள்ளது. ஆள்பவர்களுக்கு அதிக உரிமை இல்லை.அப்படிப்பட்ட வளர்ச்சி ஆபத்தானது இது எப்போதும் சர்வாதிகார ஆட்சிமுறையில் முடிவடையும். உண்மையில் ஆட்சியாளர்களுக்கு அதிகச் சேவையாற்றும்  கடமையேயுள்ளது.  சேவை மனப்பான்மையின்றி செயல்பட்டு சுயநலத்தால் தவறுகள் பெருகி விடக்கூடாது என்று அவர்களுடைய சேவையை  மதித்து  சம்பளம் கொடுத் தார்கள் .ஆனால் அதையும் வாங்கி கொண்டு சுயநலத்தால் தவறுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் இது ஜனநாயக நாட்டில் கூட ஆட்சியாளர்கள் சர்வாதிகார விருப்பமுள்ளவர்களாக இருப்பதைக்காட்டுகின்றது.

நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்குமாறு அமைப்பை வலிமைப்படுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணித்து தடுக்கவேண்டிய கடமையும்  அரசாங்கத்திற்கு உண்டு. உண்மையில் எல்லோருக்கும் வேலை வாய்ப்பும் வருமானமும் இருக்கும் போது அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சிந்தனையில்லாதவர்களாக இருக்கின்றார்கள். அரசாங்கத்திற்கும் வரி வருவஈய் அதிகரிக்கின்றது. .ஒரு குறிப்பிட்ட பகுதியினரிடமிருந்து  வரியைத் தொடர்ந்து அதிகரிப்பதை விட எல்லோருக்கும் வேலை கொடுத்து எல்லோரிடமும் அளவான வரியை வசூலிப்பதால் வரிவருவாய் மக்களின் எதிர்ப்பின்றியே  அதிகரித்துக் கொள்ள முடிகின்றது வருவாய் மூலம் நாட்டின் அகக் கட்டமைப்பை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் . இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்து வதற்கு அடிப்படையாகவும் இருக்கவேண்டும்.உள்நாட்டுத் தேவைகளுடன் வெளிநாட்டுத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் திறமையை ஊக்குவிக்க வேண்டும். பொருளாதாரத்தால் உச்சம் தொட்ட நாடுகள் இதைத்தான் செய்தன  வாழ்வாதாரத்திற்க்காக மக்களை போராடவிட்டுவிட்டால் ,ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை மக்கள் அறிவதற்கான வாய்ய்பு இல்லாது போகின்றது என்பதால் ஆட்சியாளர்கள் மக்கள் எப்போதும் ஏதாவது பிரச்சனைகளால் அல்லல் படுமாறான சூழ்நிலையையே ஏற்படுத்துகிறார்கள் ஆட்சியாளர்களின் தவறான போக்கிற்கு அதிகாரிகள் மட்டுமன்றி சட்டம் ,காவல் துறையும் துணை போகின்றது. உழைப்புக்கு கிடைக்கும் ஊதியத்தை விட உபரியாகக் கிடைக்கும் கள்ளப் பணமே மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. .இதனால் அவர்கள் வசதியுடன் வாழலாம்  ஆனால் பாதிக்கப்பட்ட சமுதாயம் வாழாமல் போகும் .அதை எதிர்ப்பதற்குத் தனிமநாதர்களுடைய எதிர்ப்பு பயனளிப்பதில்லை . சமுதாயம் விழித்துக் கொள்ளும் போது ,சுயநலத்திற்காக தவறுகள் செய்த அனைவரும் வாரிசுகள் இன்றி அழிந்துபோவார்கள்    

  

Sunday, December 4, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-5 

ஆடம்பர வாழ்க்கை தரும் போலியான சுகங்களை அனுபவிக்கும் வாழ்க்கைமுறையில் ஏக்கம் கொண்டு அதை அடைய நேர்மையான வழியைப் பின்பற்றத் தகுதியின்றித் தவறிவிடுவதா லும்  அதையும்   விரைந்து பெற குறுக்குவழியில் முயல்வதாலும் அவர்கள் மேற்கொள்ளும் எம்முயற்சியும் பலனளிப்பதில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் செலவிற்கு அளவில்லாத திட்டங்கள் இருக்கும் அனால் வரவிற்கு உருப்படியான உண்மையான நேர்மையான திட்டங்கள் ஏதும் இருப்பதில்லை  தொடர்ந்து  வரவின்றி செலவு செய்யும் போக்கால்   நிலைமாறாத அவர்களுடைய நிரந்தரமான ஏழ்மைக்கு வசதியாக வாழ்பவர்களே காரணம் என்ற எண்ணத்தை த் தூண்டிவிடுகிறது. 

இரண்டாவது காரணம் ஒருவருடைய வாழ்வாதாரத்தில் குறுக்கீடு செய்வதால் ஏற்படும் பின்விளைவுகளாக்கும் .ஒரு நாட்டில் வாழும் அனைவருக்கும் வாழ்வாதாரம் இருக்கவேண்டும். நாட்டின் பொது அமைப்பு இதை உறுதி செய்யவேண்டும் .இதில் அரசாங்கம் தவறு செய்யும் போது வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தவறான செய்லபாடுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்  அரசாங்கம் அறியாமையால் இது போன்ற பிழைகளைச் செய்ய வாய்ப்பில்லை. ஏனெனில் நாட்டின் மிகச் சிறந்த அறிவாளிகள் ஆள்பவர்களாக இல்லாவிட்டாலும் பலர் அதிகாரிகளாக இருக்கின்றார்கள் . இவர்கள் ஆள்பவர்களுக்கு சரியான யோசனை கூறாமல் அவர்களின் தவறான எண்ணப் போக்கிற்கு கூடுதல் வழிகாட்டி உதவும் போது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் பணக்கார ஏழைகளாக மாறிவிடுகிறார்கள்

ஒரு நல்ல அரசாங்கம் தன் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்குமாறு திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் .ஒருவருக்கு இருக்கும் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்  கொடுக்க வேண்டும் . தவறான வழியில் வளரும் வாழ்வாதாரங்களை தொடக்கநிலையிலேயே முன்னறிந்து தடுக்க வேண்டும். முற்றிய நிலையில் அதைத் தடுக்க முடியாது.  தடுப்பதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலும் அதை அரசாங்கம் கவனிக்காமலேயே விட்டுவிடுகிறது. அதைச் சமுதாயப் பிரச்சனையாகக் கருதாமல் தனி மனிதர்களுடைய பிரச்சனையாகக் கருதுவதால் இது போன்ற பொதுப்பிரச்சனைகள் காலங்காலமாய் தீர்வின்றி விமர்ச்சிக்கப்படுவதோடு நின்றுவிடுகிறது . ஒரு நாடு என்பது நாட்டு மாக்கள் அனைவர்க்கும் பொதுவானது. அதை ஆள்பவர்கள் தனக்கு உரிமையானது போல நடந்து கொள்ளும் போது இந்தப்பிரச்சனை மேலும் சிக்கலுள்ளதாகிவிடுகின்றது .ஒரு பொருள் நாலுபேருக்கும் பொதுவானதாக இருக்கும் போது அப்பொருள் நால்வராலும் பாதுகாக்கப் படுகின்றது .மாறாக ஒருவருக்கு மட்டுமே உரிமையானது என்றால் மற்றவர்களால் அது பாதுகாக்கப்படுவதில்லை . இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நாட்டிலுள்ள அனைவராலும் நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்றால்  அதில் அனைவருக்கும் பொறுப்பைத் தருகின்ற பங்களிப்பு இருக்கவேண்டும்    

 

Saturday, December 3, 2022

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-4 

       ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். முதலாவது சமுதாயத்தில் விரிவடைந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு பக்கம் செல்வந்தர்கள் ,மறுபக்கம் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படும் ஏழை எளியவர்கள். இரு வர்க்கத்தினரும் தகுதியின்றி அனுபவிக்கும் வாய்ப்புக்களை மட்டுமே தேடுகிறார்கள். இந்த எண்ணம் ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருதும் போக்கிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.       வசதி மிக்கவர்கள்நேர்மையான வழியில் அவரவர்  தகுதிக்கு ஏற்ப  செல்வத்தைப் பெறவில்லை .வறியவர்களும் தகுதியை வளர்த்துக் கொண்டு முயற்சி மேற்கொள்ளாமல் ,விரும்பியது தானாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். நினைத்தது நினைத்தது போல நடக்காததால் ,அவர்களுடைய வறுமைக்கும் இயலாமைக்கும் செல்வந்தர்கள் தான்  காரணம் என்ற  நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாட்டில் தோன்றும் இனச் சண்டை., சாதிச் சண்டை , மதச் சண்டை எல்லாவற்றியிருக்கும் அடிப்படை மக்களிடையே  மிகுந்துவரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் .இது நிலைப்பட்டு வளரும் போது ஒருவர் மற்றவரைப் எதிரியாகக் கருத்துவதோடு அவர்களை அழிக்கவும் நினைத்து ச் செயல்படுகிறார்கள் .. 

இது மக்களுக்குள் நடக்கும் சண்டை என்றும் ,இதற்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்று நினைப்பதும் ஒரு அரசாங்கம் செய்யும் தவறாகும் .நாட்டின் நலத்தில் அக்கறையுள்ள ஒரு அரசாங்கம் மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு எல்லைமீறி வளரும் போக்கைத் தொடக்க நிலையிலேயே தடுத்திருக்க வேண்டும் . ஆனால் அரசாங்கத்தின் துணையோடு அரசியல்வாதிகள் மக்கள் சண்டையில் ஆதாயம் தேடும் போக்கால் இந்தப் பிரச்சனைக்கு விடியல் இன்றி சமுதாயத்தில் நிரந்தரமாகி வருகின்றது .ஆட்சி மாற்றத்தால் புதியவர்கள் வரும்போது அவர்களும் முன்னவர்களைப் போல வசதியையும் வாய்ப்பையும் அடுத்த சில நாடகளுக்குள் யே பெற்றுவிடவேண்டும் என்று அரசின் வருவாயை அதிகரித்து நிர்வாகத்தின்  மூலம் ஆதாயம் தேடுகிறார்கள் .இது பொருளாதார ஏற்றத்தாழ்வை மிகைப்படுத்திவிடுகின்றது      

 

Friday, December 2, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-3

ஏமாறுவதற்குத் திறமையோ திறமையின்மையோ தேவையில்லை . சமுதாயம் விரும்பியதைப் போல நல்லதை மட்டும் கற்றுக்கொண்டு தீயதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் வாழும்  போது ஒருவர் எவ்வளவு தனித் திறமைகளைப் பெற்றிருந்தாலும் ஏமாந்து போய்விடும் வாய்ப்புள்ளவராகவே இருக்கின்றார். இதைச் சமுதாயத்தின் பலவீனமாகக் கருதி வேறு சிலர் சுயநலம் காரணமாக மக்களை ஏமாற்றத் துணிவு கொள்கின்றார்கள் . தீயத்தைத் தீயது என முன்னறிந்து தவிர்த்துக்கொள்ளவும் தடுத்து நிறுத்தவும் சமுதாயம் முன்வரவேண்டும் .தவிர்த்துக் கொள்வது என்பது தன் விருப்பச் செயல் ,அதைப் பிறர் குறுக்கீடுயின்றி சுய  விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றிக்கொள்ளமுடியும். ஆனால் தடுப்பது என்பது எதிர் வினைச் செயல் .அதை எதிர்க்கும் போது  அதனால் விளையும் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் இருக்கவேண்டும். களவறியாத மனிதர்களால் இதைச் செய்யமுடிவதில்லை  எதிர் வினைச் செயல்களைச் தனி மனிதர்கள் மேற்கொள்வதை விட சமுதாயத்திற்கான ஒரு பொது அமைப்பே  மேற்கொள்ளவேண்டும் ,உண்மையில் அதற்காக உருவாக்கப்பட்டதே அரசாங்கம். ஒரு நாட்டில் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றால் அந்நாட்டின்  அரசாங்கம் பலவீனமாகி மக்கள் நலத்தில் அக்கறை கொள்ளாத அமைப்பாக மாறிவருகின்றது என்று அர்த்தம்மக்கள் மக்களை ஏமாற்றுவது பெரும்பாலும் மறைவொழுக்கமாக வளர்ந்துவருகின்றது .இதன் வளர்ச்சி இதில் பெரும்பாலான மக்கள் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்ற உண்மையைத் தெரிவிக்கின்றது மக்களும் ,அரசும்  மறைவொழுக்கத்தால் கிடைக்கும் சுயலாபங்களைக் கருத்திற்கொண்டு அதைப் புதுமைப்படுத்திக் கொண்டே வருகின்றார்கள் 

உண்மையில் ஏமாறுவதற்குத் திறமை தேவையில்லை ஏமாற்றுவதற்குத்தான் தனித் திறமை தேவை. இது ஒருவருடைய சுயவிருப்பமின்றி , தனித்த முயற்சியின்றி மேம்படுவதில்லை. ..இதை வளர்க்க எண்ணத்தில் ஒரு கரு உருவாகி உருப்பெருக்கம் அடைந்திருக்கவேண்டும் .இந்த எண்ணம் அடிப்படையான காரணமின்றி ஒருவரிடம் தஞ்சமடைவதில்லை .இந்தக் காரணங்கள் ஒன்றும் பெரிய இரகசியமில்லை, எல்லோராலும் அறியப் பட்டவைகளே.. இவர்கள் உழைத்துப் பொருள் சேர்த்து வாழ்க்கையை அனுபவிக்கும் மக்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டு ,தானும் அவர்களைப் போல வாழ்க்கையை அனுபவிக்கத் தேவையான பொருள் ஈட்டும் வழி தெரியாமல் மறைவொழுக்கத்தை மறைவாகப் பின்பற்றும் பழக்கத்தால் வழி தவறிச் செல்கின்றார்கள். சமுதாயத்தில் ஒவ்வொருவரும் உழைத்துப் பொருள் ஈட்டும் வாய்ப்பை ஜனநாயக அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் .அப்படித் தவறும் போது அரசாங்கமும் இந்தக் குற்றத்திற்கு ஒரு பொறுப்பாளியாகின்றது          

    

Thursday, December 1, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே-2

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே 

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று சிலர் கூறுவார்கள் ஏமாறுபவர்கள் இருப்பதால் ஏமாற்றுபவர்கள் வந்தார்களா இல்லை ஏமாற்றுபவர்களால் ஏமாறுபவர்கள் உருவாக்கப்படுகின்றார்களா? .இது ஏறக் குறைய கோழியிலிருந்து முட்டைமுதலில்  வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி முதலில் வந்தததா என்று கேட்பதைப் போல இருக்கின்றது. கோழி-முட்டை பிரச்சனைக்கு அறிவியல் பூர்வமான ஒரு தீர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது . இயற்கையில் எதுவும் அப்படியே  தோன்றுவதில்லை .ஏனெனில் அப்படித் தோன்றுவதற்குத் தேவையான ஆற்றலும் பொருளும் ஒரே வரவில் கிடைப்பதில்லை. உயிரினங்களின் இனப்பெருக்கம் நம்மக்குச் சுட்டிக் காட்டும் மிகப்பெரிய உண்மை பிரபஞ்சத்தில் எதுவும் ஒரு நுண்ணிய கருவிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது அது ஆற்றலையும் பொருளையும் உட்கவர்ந்து தான் விருப்பப்படும் அளவிற்கு பெரிய உருவதைப் பெறுகின்றது. இது உயிரினங்களுக்கு மட்டுமில்லை இப்பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்கள், விண்மீன்கள் என எல்லா உயிரற்ற பேரியல் பொருட்களுக்கும் கூடப் பொருந்தும்  மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றமில்லாத இந்த விதிதான் பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளையும் தீர்மானிக்கின்றது  . இந்த விதி  நுண்ணிய முட்டையிலிருந்து சிறிய உயிரினம் பிறந்தததையும் அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் பெற்று வளர்ந்து கிளைகளாகப் பிரிந்ததையும்  தன் இனத்தின் சாகாமைக்காக்க பெரிய முட்டைகளை இட்டு வந்ததையும் தெரிவிக்கின்றது . இயற்கையில் முட்டை இடுகின்ற  கோழி  இருக்கலாம் , கோழியைத் தரும் முட்டை இருக்கலாம் ஆனால் எது முதலில் வந்தது என்று கேட்டல் முட்டைதான் முதலில் வந்து கோழிக்கு அடிப்படையான சிறிய உயிரினங்களை உருவாக்கியிருக்கவேண்டும் என்று கூறலாம். 

ஏமாறுபவர்கள் என்ற இனம் ஏமாற்றுபவர்கள் வந்த பின்னரே உண்டானது . ஏமாற்றுபவர்களே தவறான சிந்தனையை மேற்கொண்டு புதிய பாதையை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு முன்பு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட பாதையில் தொடர்ந்து செல்லும் மனிதர்களை  ஏமாறுபவர்களாக்குவதை விட ஏமாற்றுபவர்களிடமிருந்து பாதுகாக்கப் படவேண்டும், அந்தப் பாதுகாப் பைத் தராத எந்த நாடும் உண்மையில் நாட்டின் நலத்தில் அக்கறையில்லாத நாடேயாகும்