Sunday, January 19, 2014

Eluthaatha kaditham

எழுதாத கடிதம்

இந்தியாவின் பலம் மற்றும் பலவீனங்களை டை போட்டுப் பார்த்தால் ச்சத்தின் எல்லைக்கே செல்ல வேண்டிவருகின்றது. ஒரு னிதன் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றியே சரியா முடிவு செய்யத் தெரியாத போது அதைவிடப் பல மடங்கு சிக்கலான நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி முடிவு செய்வது பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும்.

ஒரு கட்சி அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சிக்காரர்ளை ஊழல் வாதிகள் என்று சாடுகின்றார்கள். மீண்டும் வி பெறுவதற்கு ஊழல் மக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றது, ஊழல் நிலைத்திருக்கின்றது என்பதை விட அது பல புதிய பரிமாணங்களைக் கடந்து பல மடங்கு பெருகிவருவது கவலையளிக்கின்றது.

ஒரு தேசிய கட்சியினருக்கு மாற்று தேசிய கட்சியினர் கருத்துக்களால்  எதிரிகளாக இல்லாமல் கைமையுணர்வால் எதிரிகளாக கருதப்படுவது மிகுந்த கவலையளிக்கின்றது

பொருளாதார வளர்ச்சி இல்லையில்லையென்றாலும்
வறுமைக்கு எதிரா நடவடிக்கைகள் அங்கே தொலைந்து போய்விடுவது மிகுந்த கவலையளிக்கின்றது

நாட்டின்  பாலியல் கொடுமை,லஞ்சம்,ஊழல் போன்றவை நாட்டின் தலைநகரிலேயே தலைவிரித்தாடுகின்றது காவல் துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள் அதில் அவர்களுக்கும் ஒரு ஆதாயம் கிடைப்பதால்  குற்றங்களுக்கு ஆதாரவாகச் செயல்படுகின்றார்கள். காவலாளியே குற்றவாளியாக இருப்பதாக ஒரு முதலமைச்சரே கூறியிருக்கின்றார் என்றால் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு என்ன நிலையில் இருக்கின்றது என்பதை கற்பனை செய்யும் போது மிகுந்த கவலையளிக்கின்றது.

பெரும்பாலான அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் தங்கள் பணியை
பெறுப்புணர்வோடு செய்வதில்லை. மாறாக அலுவலகத்தில் பொழுதை வெட்டியாகப் போக்கிவிட்டு வேறு வகையான வருமானங்களுக்கு வழி தேடி அலைகின்றார்கள்.அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புள்ள உயர் அதிகாரிகளும்,அமைச்சர்களும் விதி விலக்கா
இல்லாமல் அவர்களை விடச் சிறப்பாகச் செயல்படுவது கவலையளிக்கின்றது
.
கண்காணிப்பு இல்லாததால் எல்லோரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றலாம் என்ற முடிவுக்கு ந்து முனைப்புடன் செயல்படத் தொடங்கி விட்டார்கள். அப் போக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.

வரிப் பணம் நாட்டில் மீண்டும் முதலீடு செய்யப்படுவதில்லை. லாபம் தாராத செலவினங்களால் முதலே அழிந்து வருகின்றது. கையாடல்,கருப்புப் பணம்,வீண் செலவு,ஆடம்பரச் செலவு, கட்டமைப்பை வலுப்படுத்தாத இலவசத் திட்டங்களால் இந்தியா மேலும் மேலும் வறுமையை நோக்கிப் பயணிப்பது மிகுந்த கவலையளிக்கின்றது.   


Friday, January 17, 2014

cartoon

கார்ட்டூன் 
ஈராக்கில் குண்டு வெடித்து இருவர் பலி மூவர் காயம் 
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சுட்டு ஆறு பேர் பலி  நாலு பேர் காயம்
அமெரிக்காவில் ஒரு மாணவன் துப்பாக்கியால் சுட்டு ஒரு ஆசிரியை பலி .
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நீல நடுக்கத்தில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் பலி
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 10 பேர் காணவில்லை
சீனாவில் ஏற்பட்ட பட்டாசு லை விபத்தில் 10 பேர் பலி
இந்தியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 பலி நூற்றுக்கணக்கானோர் மயக்கம் 

இதுதான் population bomb என்பதோ

Friday, January 10, 2014

Puzzle

கணக்குப்புதிர்


ஒரு அம்மாவிற்கு மூன்று பிள்ளைகள் .ஒருநாள் அம்மா கொஞ்சம் வடை சுட்டு ஒரு சட்டியில் வைத்திருந்தாள்.விளையாடப் போன பிள்ளைகள் ஒவ்வொருவராய் பசியுடன் வீடு திரும்ப,முதலில் வந்த மூத்த பிள்ளை சுட்டு வைத்திருந்த வடையில் சரிபாதிக்கு ஒன்று குறைவாகச் சாப்பிட்டான். அடுத்து வந்த இரண்டாவது பிள்ளை மீதி இருந்தவடையில் பாதிக்கு ஒன்று குறைவாகச் சாப்பிட்டான் .கடைசியாக வந்த மூன்றாவது பிள்ளை மீதி இருந்த வடையில் பாதிக்கு ஒன்று குறைவாகச் சாப்பிட மீதி சட்டியில் அம்மாவிற்கு 2 வடைகள் மட்டும்தான் இருந்தது.அப்படியென்றால்அம்மா சுட்ட வடைகள் எவ்வளவு?அம்மாவிற்கு 4,5பிள்ளைகள் இருந்தால் விடையில் என்ன மாற்றம் ஏற்படும் ?

அம்மாசுட்டவடைகள்-2; விடையில் மாற்றமில்லை

Friday, January 3, 2014

Arika ariviyal


சூரியக் குடும்பத்தில் பூமி

சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி,பூமி செவ்வாய்,வியாழன்,சனி, யுரெஸ்,நெப்டியூன் என்ற வரிசையில்
8 கோள்கள் உள்ளன.இவற்றுள் பூமியில் மட்டும் யிரினங்கள் உள்ளன.இதற்கு என்ன காரணம் ?



நீரானது னி ,நீர் .நீராவி என மூன்று நிலைகளிலும் இருக்கக் கூடியவாறு சூரியனிலிருந்து அளவான வெப்பத்தைப் பெற சரியான தொலைவிலும், சரியான நிறையுடன் சரியான சுற்றியக்கத்தையும் பூமி பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.
வியாழன்,சனி,யுரெஸ்,நெப்டியூன் போன்ற பெரிய கோள்களில் ஈர்ப்பு அதிகம் ,வெப்ப நிலை குறைவு இதனால் ஹைட்ரஜன் நீங்கலா வளிமங்கள் உறைந்து விடுகின்றன. மீத்தேன் அமோனியா போன்ற வளிமங்கள் தெவிட்ய (Saturated) நிலையில் உள்ளன. இவை நச்சுத் தன்மை கொண்டவை. இவ் வளிமண்டலத்தில் உயிரினம் தோன்றிப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடவே முடியாது
புதனில் சிறிதளவு கூட காற்றோ ,வளி மண்டலமோ இல்லை. வெள்ளியில் உள்ள வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மிக அதிகமாகச் செறிவுற்றுள்ளது. செவ்வாயில் வளி மண்டலம் மிகவும் மெல்லியது. பூமியை விடக் குளிர்ச்சியாக இருக்கின்றது நீர் உறைந்து பனிக்கட்டியாக இருக்கின்றது.