Wednesday, July 28, 2021

 புறத்தடைகள் பெரும்பாலும் ஒருவருக்கு அறிமுகமானவர்களால் ஏற்படுத்தப்படுகிறது. சிலர் கெடுதல் செய்வார்கள் .வேறுசிலர் உதவி செய்ய மறுத்துவிடுவார்கள் . தவறான வழிகாட்டி கேடு செய்பவர்களும்  உண்டு ..தானே மற்றவர்களைவிட  யர்ந்தவனாக இருக்கவேண்டும்  என மனத்திற்குள் ஒவ்வொருவரும் நினைப்பதால் . மற்றவர்கள் தன்னைக்காட்டிலும் உயர்ந்த நிலையை அடைந்துவிடக்கூடாது என்று கெடுதல்  செய்கின்றார்கள். எல்லா நேரங்களிலும் எவர் தன்னுடைய வேலைகளைத்    தானே செய்துமுடிக்கவேண்டும் என்று விரும்பிச் செயல்படு கின்றார்களோ  அவர்களுக்கு புறத்தடைகளின் பாதிப்பு    குறைவாகவே இருக்கும் .

 

தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடை யாக இருக்கமுடியாது  என்பதால் யாரும் அகத்தடைகளைப்பற்றி   அதிகம் சிந்திப்பதில்லை. புறத்தடைகளை இனமறிந்து அகற்றிக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் .எதிரிகளை நண்பனாக்கிக் கொள்ளலாம் ஆனால்  நண்பனாகவே  உடனிருக்கும் உள்ளெதிரியை அவ்வளவு  எளிதில் மாற்றிவிடமுடியாது.அதனால் புறத்தடைகளை விட அகத்தடைகளே ஒருவருடைய சுய முன்னேற்றத்திற்குச்  சத்தமின்றி சலனமின்றி அதிக அளவில் பாதிப்[[பாதிப்பை ஏற்படுத்துகின்றன      ..    

Tuesday, July 27, 2021

சுயமுன்னேற்றத்தில் அகத்தடைகள்

 ஒவ்வொருவருடைய  முன்னேற்றத்திற்கும்  தடைகள் இருப்பதுதுண்டு.எந்த   சாதனைகளும்  தடைகளைத் தாண்டி   செல்லும் முயற்சிகளுக்கு அப்பால் தான் படைக்கப்படுகின்றன,பொதுவாகத்  தடைகள் இருவகைப்படும் அவற்றை புறக்தடை என்றும் அகத்தடை என்றும் கூறுவார்கள். புறத்தடைகள் மற்றவர்களாலும் புறக்காரணங்களினாலும் ஏற்படுத்தப்படுவது .ஒருவருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட்டு மனம் பொறுக்காமல் அதைத் தடுக்க  பிறரால் ஏற்படுத்தப்படும் கெடுதல்கள் புறத்தடைகளுள் முதன்மையானதும் மோசமனாதுமாகும் .பொதுவாக இவற்றை நாம் சுய அறிவு மற்றும் அனுபவத்தின்  மூலம் யூகித்தறிந்து கொண்டு தவிர்த்துக் கொள்ள முடியும்  .உடல் நலக்   குறைவு, விபத்துக்கள் ,இயற்கைப் பேரிடர்கள் , குறித்த காலத்தில் கிடைக்காத உதவிகள்  புறக்காரணங்களினால் ஏற்படும் தடைகளாகும் .நுண்ணறிவினால் இவற்றை ஓரளவு முன்னறிந்து கொண்டு  தடுத்துக் கொள்ள முடியும் ஒருவர் தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடையாக இருப்பது அகத்தடையாகும். அகத்தடைகளை யாரும் அகத்தடைகளாகவே  நினைப்பதில்லை மாறாக இனமறியப்படாத யாரோ ஒருவராலும் அல்லது தனக்குப் பிடிக்காத  உறவினராலும் செய்யப்படும் ஒரு செயலாகவே நினைக்கின்றார்கள்.பொதுவாக எல்லோரும் தாங்கள்  மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெற்றுவிட்டால் அதைத் தனது சாதனை என்றும் தோற்றுவிட்டால் அது பிறரால் செய்யப்பட்ட  சதி என்றும் கூறுவார்கள்.  

 

Tuesday, July 6, 2021

சுய முன்னேற்றத்தைப் பாதிக்கும் அகத்தடைகள்

 சுய முன்னேற்றத்தைப் பாதிக்கும் அகத்தடைகள் 

 

எல்லோரும் என்ன நினைக்கின்றார்கள் என்றால் அவர்களுடைய முன்னேற்றத்தில் ஏற்படும் தடங்கல்களுக்கும் ,  தடைகளுக்கும் மற்றவர்களே காரணமாக இருக்கின்றார்கள் என்றும் அதில் தங்களுக்கு ஒரு சிறிதும் பங்களிப்பு இல்லை என்றே  நம்புகின்றார்கள் . உண்மையில் ஒருவருடைய முன்னேற்றத்தில் அவரால் ஏற்படும் தடை மற்றவர்களால் ஏற்படும் தடையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகம். இது அகத்தடையாக இருப்பதால் தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தானே தடையாக இருப்பதை யாரும் அறிந்திருப்பதும்  இல்லை. சுட்டிக்காட்டினால் ஒப்புக்கொள்வதுமில்லை தனி மனித ஒழுக்கமின்மை ,மறைவொழுக்கத்தால் சமுதாய ஒழுக்க மீறல்கள் ,தொழில் திறமையின்மை ,நேரந் தவறுதல் , ஆளுமைத் திறமையின்மை , பேராசை , முயற்சியின்மை ,நோக்கமின்மை , ஆர்வமின்மை , நம்பிக்கையின்மை ,போன்ற பல அகத்தடைகளால்  ஒவ்வொருநாளும் எல்லோரையும்  எதோ ஒரு வகையில் சறுக்கி  விழுந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த சறுக்களுக்குத் தனக்குப் பிடிக்காத ஒருவரே காரணம்  என்று   .தீர்மானமாய் இருப்பதால் அவர்கள் அவர்களுடைய பிரச்சனைக்கு சரியான தீர்வு காணமுடியாமல் நீண்ட காலம்  தடுமாறி கொண்டிருப்பார்கள்.   .