Thursday, January 28, 2021

ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் நாம் இயற்கையால் சுட்டிக்காட்டப்படும் ஓர் உண்மையை இன்னும் உணராமலேயே இருக்கின்றோம்..ஒன்றின் வளர்ச்சியில் ஆக்கத்திறனும்  அழிவும் ஒருபோதும் சுழியாக இருப்பதில்லை. ஆக்கமும் அழிவும் கலந்தே இருக்கின்றன .புறத் தாக்கங்களின் வலிமைக்கு ஏற்ப அவற்றின் வாய்ப்புகள் மட்டும் மாறுகின்றன .ஆக்ககத்திற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் போது அழிவிற்கான வாய்ப்பு குறைகின்றது . புரிதலும் , புரிதலை மேம்படுத்தக் கூடிய கல்வியும், மனமும்  மனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய சுய வொழுக்கமும் இந்த வாய்ப்புக்களில்  குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன .
இயற்கையில் அழிவில்லாது என்று எதுவுமேயில்லை.சிறிய அணுவிலிருந்து பெரிய அண்டங்கள் வரை ஆக்கப்பட்டு  நிலையாகவே இருப்பதில்லை .வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களின்  இடையிலோ அல்லது இறுதியிலோ அழிவுறுகின்றன, அழிவை யாராலும் தடுத்துக் கொள்ள  முடிவதில்லை. இதில் மனிதன் மட்டும் சாகா வரம் வேண்டும் என்று வேண்டிக் கொள்வது இயற்ககைக்கு மீறிய எண்ணமேயாகும் .
ஒரு குழந்தை பிறந்து வளர்கின்றது என்றாலும் எந்த வயதிலும் இறந்து போகும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டே வாழ்கின்றது .கூடுதல் பாதுகாப்பு வளர்ச்சியைத் தருகின்றது என்றாலும் ஆக்கத்தை மட்டுமே தருவதில்லை ,அழிவைக் குறைக்கின்றது என்றாலும் அழிவை மட்டுமே குறைப்பதில்லை. ஆக்கத்தின் வளர்ச்சிப்படிகளில்  வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுவதும் ,அழிவின் வளர்ச்சிப்படிகளில் அழிவு தடுக்கப்படுவதற்குமான வாய்ப்புக்குகளை இயல்பாக உருவாக்கிக் கொள்கின்றன .இயற்கையான வளர்ச்சியும் , இயற்கையான  அழிவும் இல்லாத போது அழிவு தூண்டப்படுகிறது . இயற்கையில் இயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஆக்க மற்றும் அழிவிற்கான காரணிகளை யாராலும் முற்றிலுமாக இல்லாதிருக்குமாறு செய்துவிட முடியாது காரணிகளை ஊக்குவிக்கும் வழிமுறைகளை மட்டுமே மட்டுப்படுத்த முடியும் . மாறி மாறி வரும் பருவ காலங்களினால் ஏற்படும் வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள்  எந்த ஒரு உறுதியான கட்டிடத்தையும் சீரழித்துவிடும் .அதன் நிலைப்புக்குப்  புற  நடவடிக்கைகளை  மேற்கொள்ளாதவரை                     கட்டிடத்தை அழிவிலிருந்து பாதுக்காக்க முடியாது .முதலில் சிறு சிறு வெடிப்பு, விரிசல், அரிப்பு போன்ற அழிவுக்கு காரணிகளால் கட்டிடம் படிப்படியாகச் சிதைந்து ஒரு காலகட்டத்தில் அழிந்து  விடுகின்றது .மனிதன் ஆக்க்கத்திற்கான காரணி என்றால் அவனுடைய மனம் அழிவிற்கான காரணி. மனிதனுடன் மனமும் சேர்த்தே வளர்ச்சி பெறுகின்றன . மனிதனையும் மனதையும் பிரித்துப் பார்க்கவே முடியாது .நேர்மையாக வளரும் ஒரு மனிதன் மனதின் ஒரு கன நேர முயற்சியால் அழிந்து போய்விட நேரிடலாம் .
அழிவில் மறையும் போது ஆக்கம்  விழித்துக்கொள்கின்றது ,ஆக்கம் நிறைவடையும் போது அழிவு விழித்துக் கொள்கின்றது அழிவும் ஆக்கமும் ஒரு வட்டச் சுற்று முறையில் தொடர்ந்து நிகழ்கின்றன.இனி அழிவதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் ஆக்கமும்,,ஆக்கப்படுவதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் அழிவும் வலிமையடைகின்றன        

Wednesday, January 27, 2021

மக்களுக்கு அவ்வப்போது அறிவுரைகூறுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது. நாடு தனக்கு மட்டுமே உரிமையுள்ள  சொத்து என்று நினைக்கக் கூடாது .தங்களைக் கண்காணிக்க , கட்டுப்படுத்த தங்களுக்கு மேல் யாருமில்லை என்று கடமை தவறக்கூடாது .மக்கள் எல்லோருக்கும் எல்லா விவரங்களையும்  அறிந்தவர்களாக இருக்க முடியாது.  அதற்கு அவசியமுமில்லை .தங்களுக்குத் தெரியாத விஷயங்களினால் ஏமாற்றப்படலாம்  என்பதற்காக மக்கள் எல்லோரும்  ஒன்று  சேர்ந்து எல்லோருக்கும் பொதுவாக அரசங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். மக்களாட்சியில் அரசாங்கம் என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பே. மக்கள் மக்களால் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு .
ஆனால் நாட்டின் வரவு செலவு த் திட்டங்களில் தொடர்புகொள்ளும் போது  யாருமே சம்பாதிக்க முடியாத அளவிற்கு சம்பாதித்து விடவேண்டும் என்று பேராசைப்படும் அரசியவாதிகளால் நேர்மையான ஆட்சியைத் தர முடிவதில்லை. இவர்களுடைய சம்பாத்திய வழிமுறை அரசியல் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டு   தண்டிக்கப்படுவதிலிருந்து விதிவிலக்கு பெற்றது போன்ற ஒரு தோற்றத்தைத் தருவதால் அது உயர் அதிகாரிகளிடமும்  பரவி , அடிப்படை ஊழியர்களிடமும் ஊடுருவி , மக்களையும் தொற்றிக்கொண்டு வருகின்றது
அரசாங்கம் வெறும் அதிகாரத்தால் மட்டுமே ஆள நினைக்கின்றது . முன்னேற்ற நடவடிக்கைகளை  இனமறிந்து  முழுமையாக ஈடுபடாமலும் .அதை மக்கள் நோக்கமாக மாற்றி நாடு தழுவியவாறு முடுக்கிவிடாமலும் ,எதிர் கட்சியினருடன்  சொற்போர் புரிவதையே தங்கள் அன்றாடப் பணி என்றிருக்கும் அரசியல்வாதிகள் , மக்களுக்கு வேண்டிய நல்லனவெல்லாம் தானாக நடக்கவேண்டும் என்ற நினைப்புடனே செயல்படுகிறார்கள்
இயற்கையால் மட்டுமே அப்படி நடக்கமுடியும் .ஏனெனில் இயற்கையில் ஒவ்வொன்றும் ,ஒவ்வொரு அமைப்பும் தத்தம் பணிகளை செவ்வனே செய்கின்றன .கடமை தவறுவதேயில்லை .எப்படி இருந்தததோ, எப்படி  இருக்கப்போகின்றதோ, அப்படியே இருந்துகொண்டு செயல்படுவதால்  இயற்கையின் பொதுவுடைமை என்றைக்கும் மாறாதிருக்கின்றது அதனால் இயற்கையில் எங்கும் கண்காணிப்புப் பணி அவசியமில்லாதிருக்கின்றது. .ஒவ்வொரு அரசியல்வாதியும்  இயற்கை போலச் செயல்படவேண்டும் என்ற நன்னெறியையே மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது போல இயற்கை நடந்து கொள்கின்றது .
சமுதாயம் மனதால் ஆளப்படும்  மக்களால் ஆனது .மனதால் ஆளப்படும் எந்த அமைப்பையும் புறத்தோற்றத்தால் மதிப்பிடவே முடியாது .எனவே கண்காணிப்பு என்பது அவசியமாகின்றது . இந்த கண்காணிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களால் ஏற்படுத்தப்படும்  தடைகளை அகற்றுகின்றது .           இதற்காகத்தான்  அரசாங்கம் வரி வசூலிக்கிறது ,மக்களும் வரி செலுத்துகிறார்கள் .அரசாங்கத்தின் வருவாய்  வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமில்லை , வளர்ச்சியைத் தடை செய்யும் செயல்களையும் அகற்றுவதற்காகவும் ஆகும்

Tuesday, January 26, 2021

குழந்தைத் தொழிலாளர்கள் மிகுந்து வருவது ஒரு நாட்டின் பொருளாதார மந்த நிலையைச் சுட்டிக்காட்டும் ஒரு காரணியாக இருக்கின்றது. பிள்ளைகளை வேலைக்குப் பெற்றோர்கள் அனுப்புகின்றறார்கள் என்றால் குடும்பம் கூடுதல் வசதியுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தை விட வறுமையின் பிடியிலிருந்து விடுபடவேண்டும்  என்ற போராட்டத்தின் ஒரு முடிவே.   ஒருவர் வறுமையில் தள்ளப்படுவதற்கு திறமையின்மை , அல்லது திறமையை வெளிக்காட்டிப்  பயன்படுத்திக் கொள்ள முடியாமை ,எழுத்தறிவின்மையைப் பயன்படுத்தி மற்றவர்களால் ஏமாற்றப்படுதல் ,குறைந்த வருவாய் அதிக குழந்தைகள் ,போதைப் பொருள் பழக்கம். ,உல்லாச வாழக்கைகளில் ஈடுபாடு எனப் பல காரணங்களைக் குறிப்பிடலாம் .இதில் ஏதாவதொரு காரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளே ,குடும்பத்தின் வறுமையைப் போக்கும் பொருட்டு குழந்தைத் தொழிலாளிகளாக ஆக்கப் படுகின்றார்கள் .  குடும்பத்தின் வறுமை காரணமாகப் பிள்ளைகளைப் படிக்க கல்விக்கூடங்களுக்கு அனுப்பாமல்  கடிய வேலை செய்து குறைந்த சம்பளம் வாங்கத் தொழில்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள் .இதனால் பிள்ளைகள் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்குத்  தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாது போகின்றது மேலும் அந்த வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிடுவதால்  எதிர்காலத்திலும் வறுமையின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் போகின்றது.இதனால்  எதிர்கால  வளர்ச்சிக்கு முக்கியத்  தேவையான  திறமைகளை ஒரு நாடு நிரந்தரமாக இழந்துவிடுகிறது. தேவைப்படும் திறைமைகளுக்கு எப்பொழுதும் பிற நாட்டினரையே எதிர்பார்க்கவேண்டிய கட்டாய நிலை ஏற்படுவதால் முன்னேற்றம் பின்தங்கிவிடுகின்றது அல்லது ஒரு நாட்டின் முன்னேற்றம் பிற நாட்டினரால் தீர்மானிக்கப்படுகின்றது 
 .அதிக வேலைக்குக் குறைந்த ஊதியம் கொடுத்தால் போதுமானது , தொழிலாளர் பிரச்சனை என்று சிக்கல்கள் இல்லை , தொழிலார்களை விட குழந்தைகளிடம் காணப்படும் கூடுதல் நேர்மைத்தன்மை தவிர்க்கமுடியாத இழப்புக்களைத் தருவதில்லை போன்ற பல பயன்களைத் தரக்கூடியது என்பதால் தொழில் செய்வோர் குழந்தைத் தொழிலாளர்களுக்கு  முக்கியத்துவம்  கொடுக்கின்றார்கள்.    
இன்றைக்கு குழந்தை தொழிலாளர்கள் ,உணவருந்திய மேஜை , சாப்பிட்ட தட்டுக்களையும் ,குவளைகளையும் எடுத்து சுத்தம்  செய்ய  , இடத்தைப் பெருக்கி மொழுகி சுத்தம் செய்ய  ,உணவகங்களிலும் ,வயல் வேலை செய்ய , ஆடு மாடு மேய்க்க , குளிப்பாட்ட  ,தோட்டம், கழிவறை  சுத்தம் செய்ய , வீடு கூட்டி மொழுகி பண்டம் பாத்திரம் கழுவ ,துணி துவைக்க ,கார் வண்டி கழுவ ,கடைக்குப் [போய்  வேண்டிய பொருள் வாங்கி வர வீடுகளிலும் , சரக்கு வாங்கிவர, வரும் சரக்குகளை இறக்கி வைக்க ,பொருட்களை க் கொண்டு போய்க் கொடுக்க,,கடையில் அமர்ந்து கொண்டு பொருட்களை விற்பனை செய்ய ,,கடையைச் சுத்தம் செய்ய கடைகளிலும் ,பட்டாசு உற்பத்தி  போன்ற ஆபத்தான தொழில் செய்ய  , இயந்திரங்கள் செய்யும் கடினமான வேலைகளைச்  செய்ய  தொழிற்கூடங்களிலும் .பயன்படுத்தப்படுகின்றார்கள். ஆதரவற்ற குலத்தைகளைக் கொண்டு சில சமுதாயக் குற்றவாளிகள் பிச்சை எடுக்கவும், போதைப் பொருள் விற்கவும்,கடத்தவும்  பயன்டுத்துகின்றார்கள் .
திறமைகளை வளர்த்துக் கொள்ளப் படிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் பொன் முட்டையிடும் கோழிகள் , கோழிகுஞ்சுகளைக்  கொன்று கரிக்காக  விற்கும் கூட்டத்தால்  அரசுக்குக் கிடைப்பது சொற்ப வருவாய் மட்டுமே .   அரசியல்வாதிகளிடம்  நாட்டுக்காக ஏமாந்து போனோம் என்று வருத்தத்தைவிட  குழந்தைத் தொழிலார்களைத் தடுக்கும் ,கண்காணிப்பு வேலை செய்யாமல் சும்மா இருக்கும் மகிழ்ச்சியே அதிகம் காணப்படுகின்றது  

Monday, January 25, 2021

ஆனால் வழக்கம்போல கண்காணிப்பு இல்லாமல் அரசு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்திலேயே நடக்கின்றன..மக்களின் நன்மதிப்பைப்  பெறவேண்டிய சூழ்நிலைகளில்  இலாபம் வந்ததாகக் கூறுவார்கள்.உண்மையில் இலாபம் இருந்தால் நிறுவனங்கள் மேலும் மேலும் விரிவடைந்திருக்கும்.பல புதிய கிளைகளுடன் பல புதிய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தியிருக்கும் எங்கும் விற்பனை நிலையங்களை ஏற்படுத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்கியிருக்கும் . மேலும் நியாயமான விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு நிரந்தரமாக  வழங்கவும் முடிகின்றது .இதனால் நமக்கு வேண்டிய  வேலை வாய்ப்புக்களை நாமே உருவாக்கிக் கொள்ளமுடியும் .ஆனால் இன்றைய அரசாங்கம் தொழிலார்களின் பிரச்சனைகளைத் தீர்வு செய்யமுடியாமல் அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதில் விரும்புகின்றது..எந்த நோக்கத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டதோ அதே நோக்கத்தின் போக்கிலேயே அதன் வளர்ச்சி விரிவடையாதது நோக்கத்தின் பயனை அனுபவிக்கமுடியாமல் செய்துவிடுகிறது.அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்போது விலைவாசி ஏற்றம் தவிர்க்கயியலாததாக இருக்கின்றது தொழிலாளர்கள் குறைப்பு நடவடிக்கை வேலையில்லாதோரின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது .
நமக்கு வேண்டிய வேலை வாய்ப்புக்களை வெளி நாட்டினர் இங்கே  தொழில் தொடங்குவதால் மட்டுமே முடியும் என்று இருக்காமல் நம் தேவைகள், வாய்ப்புக்கள் இவற்றை முன்னறிந்து தொழில் தொடங்கவேண்டும். எல்லா வசதிகளையும் வாய்ப்புக்களையும்  தேடாமல் பெறவல்ல அரசாங்கமே தொழில் தொடங்காவிட்டால் எல்லாவற்றையும் முனைந்து பெறவேண்டிய தொழில் முனைவோரால் தொழில் தொடங்கவே முடியாது .
ஒருவர் வாழ்வதற்காக ஒரு வேலை செய்து பொருள் சம்பாதிக்கிறார் .சம்பாத்தியம் அன்றைக்கு அவருடைய வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளப்  போதுமானதாக இருக்கின்றது ..இன்னும் கூடுதல் வசதியுடன் வாழ அவருக்குக் கூடுதல் சம்பாத்தியம் தேவைப்படுகின்றது .எதிர்காலத் தேவைக்காகச் சிலர் சேமித்து வைக்க விரும்புவார்கள் அதற்காகச்   சிலர் வேறொரு வேலை செய்து சம்பாதிப்பார்கள் . இதற்கு அடிப்படையான உளவியல் நமக்கு சில வாழ்வியல் உண்மைகளைத் தெரிவிக்கின்றது.எதிர்காலம் எப்படியிருக்கும் என்று யாருமே சரியாக மதிப்பிடத் தெரிவதில்லை  எதிர்காலம் மிகவும் கஷ்டமாக இருக்கும் என்றும் அதனால்  தேவைகள் எதிர்காலத்தில் அதிகமாயிருக்கும் என்றும் நினைப்பதால் பெரும்பாலான மக்கள்  கூடுதல் சம்பாத்தியம், கூடுதல்  சேமிப்பில் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் ஆனால்   இரண்டு வேலை செய்ய நேரம் கிடைப்பதில்லை .பெரும்பாலானோருக்கு உடல் ஒத்துழைப்புக் கொடுப்பதுமில்லை  . அதனால் கூடுதல் வேலை செய்யாமலேயே கூடுதல் சம்பாத்தியம் பெறும் வழிமுறைகளிலேயே மக்கள்  நாட்டம் கொள்கின்றார்கள் .பெரும்பாலும் இந்த வழிமுறைகள் நேர்மையானதாக இருப்பதில்லை .ஒரு முதலாளியே பல தொழில் புரிவதும் ,அரசியல்வாதிகளே  தொழில் அதிபர்களாக இருப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்மையற்ற வழிமுறைகளாக இருக்கின்றன இவர்கள் கூடுதல் சம்பாத்தியத்தையும் ,தவறான வழியில் ஈட்டிய பொருளையும் முடக்கி வைக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள். மேலும் தவறான வழியில் ஈட்டிய பொருளுக்கு பின்னாளில் கணக்குக் காண்பிக்க இது பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது
உலகில் எங்கோ ஒரு மூலையில் ,நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் போது , நம் தாய்நாட்டில் எப்படிக்  கிடைக்காமல் இருக்கின்றது ? எந்த நாட்டோடு ஒப்பிட்டாலும்  நம் நாட்டின் இயற்கை வளம் ஒன்றும் குறைந்ததில்லை..  ஏன் நம்நாடு நம் இளைஞர்களின்  திறமைகளை முறையாக இனமறிந்து மதிப்பிட்டு திட்டமிட்டு பயன்படுத்தாமல் வீணடிக்கின்றது ? ஒவ்வொரு திறமையானவர்களுக்கும் வேலை கொடுப்பதால் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கின்றது என்பதற்காக இலஞ்சம் கொடுக்கின்றார்கள் .இதனால் 
இலஞ்சம் கொடுக்க முடியாத திறமையானவர்களின் திறமைகளை இழப்பதுடன் இலஞ்சம் கொடுக்கும் திறமையற்றவர்களுக்கே வேலை கொடுக்கும் நிலை ஏற்படுகின்றது .இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கிக் கொள்ளும் திறமையானவர்கள் கூட இலஞ்சம் கொடுத்ததால் ஏற்படும் மனநிலைப்பாதிப்பால் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. மேலும் தவறுகள் செய்யவும் துணிவு கொள்கின்றார்கள். திறமையற்றவர்கள் வேலையும் செய்வதில்லை , கொடுத்த இலஞ்சத்தை ஈடுகட்ட அதிக இலஞ்சம் கேட்கின்றார்கள் . திறமையும் நேர்மையும் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலைதேடிச் சென்றுவிடுகிறார்கள்  உண்மையில் நம்முடைய இளைஞர்களின் திறமைகளை மிச்சி சரியாக மதிப்பிடுவதும் பயன்படுத்திக் கொள்வதும் பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளே.
தாய் நாட்டிலேயே கிடைக்கும் திறமையானவர்களை புறக்கணிப்பதும் ,திறமையற்றோரைப் பணியில் அமர்த்துவதும் ஆள்பவர்கள் நாட்டுக்குச் செய்யும் தீங்காகும் .அரசாங்க வேலைகளை விற்கும் போக்கை ஆள்பவர்கள் கைவிடவேண்டும் .அரசாங்க பணி நியமனங்களை நீதித்துறை, கல்வித் துறை, மிதித்த துறை சார்ந்த குழுவே தீர்மானிக்கவேண்டும் .அப்பொழுதுதான் சட்டத்திற்குப் புறம்பான நியமனங்கள் ஓரளவாவது தடுக்கப்படும் .
உண்மையில் வேலைவாய்ப்பு எங்கும் கொட்டிக்கிடக்கிறது ஆனால் அரசாங்கம் அவற்றைச் சுட்டிக்காட்டி வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதில்லை .இந்திய மக்களில் பெரும்பாலானோர் வாழ்வாதாரத்தைப் பெறத்  தங்கள் வேலைகளைத் தாங்களே தேடிக்கொள்கின்றார்கள் .ஆனால்  அவர்கள் பொருள் சம்பாதிக்கும் போது  அரசாங்கம் ஏதோ உதவிசெய்துவிட்டது போல வரி விதிப்பை மட்டும் தவறாமல் செய்துவிடுகிறது .வரிவிதிப்புக்கு எவ்வளவு உரிமை அரசாங்கத்திற்கு உள்ளதோ அதைவிட அதிகமான உரிமை வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதிலும் இருக்கின்றது .இதை மக்களும் மக்கள் அரசாங்கமும் நன்கு உணர்ந்து கொண்டு நடக்கவேண்டும். மக்கள் ஆட்சியில் மக்கள் தான் முதலாளிகள் அரசியல்வாதிகள் அனைவரும் தொழிலாளிகள்தான் . ஆனால் உலகெங்கும் முதலாளி -தொழிலாளி நிலைகள் இடம்மாறி வருகின்றன.
ஒரு நல்ல அரசாங்கம் தன் செலவுகளை முழுதும் வரி விதிப்பிலேயே செய்யக்கூடாது. அதனிடமுள்ள உயர்ந்த நிதிநிலைக்கு  பெரிய பெரிய திட்டங்களை மேற்கொள்ளமுடியும். நாட்டிலுள்ள வளங்களையும் ,மூலப்பொருட்களையும்  செலவின்றிப் பெறமுடியும். அரசின் வருவாய்க்கு வரி வேறு இல்லை. இந்தநிலையில் அரசு நிறுவனங்களின் லாபம் அதிகமாக இருக்கவேண்டும்..ஆனால் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் நடக்கின்றன. .அரசின் இலாபம் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் இலாபமாகிவிடுவதால் தனி நபர்களின் பொருளாதாம் மேம்பட்டாலும் நாட்டின் பொருளாதாம் மேம்படுவதில்லை .
அரசாங்கம் இலாபம் தரும் பல தொழில்களை மேற்கொள்ளும்போது அரசியின் வருவாயைப்  பெருக்கிக்கொள்ள முடியும் .அதனால் வரி விதிப்பை குறைக்க மக்களின் உரிமையுள்ள பொருளாதாரத்தை உயர்த்த முடிகின்றது. விலைவாசி ஏற்றத்தை மட்டுப்படுத்த முடிகின்றது .

Sunday, January 24, 2021

போலிப்பொருட்கள்  அரசாங்க அதிகாரிகளின் அனுமதியின்றி உற்பத்தி செய்யவோ அனைத்து தொடர்ந்து சந்தைப்படுத்தவோ முடியாது. .எனவே போலிப்  பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதும் ,சந்தைப் படுத்தப்படுவதும் தடையின்றி நடைபெறுகின்றது என்றால் அதில் எதோ ஒரு வகையில் ஆட்சியாளர்களும் ,அரசாங்க அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கின்றது .
பொருட்களை வாங்கும் போது போலிப்பொருட்களை இனமறித்து  கொள்ளும் திறமை பெரும்பாலான மக்களுக்கு இருப்பதில்லை. அதனால்  போலிப்பொருட்கள் வாங்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடிவதில்லை .அதனால்  அப்படிப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதையும்  சந்தைப்படுத்தப்படும்போது ஏமாற்றப்படுவதையும் மக்களுக்காக   மக்களால் மட்டும் தடுத்துக் கொள்ள முடிவதில்லை .   எனவே நாட்டில் போலிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதையும் ,அவை சந்தைப்படுத்தைப்படுவதையும்  உடனுக்குடன் கண்டறிந்து தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் .அது அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் செய்யவேண்டிய  கடமையுமாகும்.
மக்கள் பொருளின் பயன்பாட்டின் மூலமும் விளம்பரத்தாலும் பொருளை வாங்கும் பழக்கமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் ,அது போலியான பொருள் என்பதை வாங்கிப் பயன்படுத்தியபின்னரே மக்களால்  தெரிந்து கொள்ள முடிகின்றது.  தரக் கட்டுப்[பாடுகள் பற்றிய நுட்ப அறிவு இல்லாதிருப்பதால் பொருட்களின் போலித்தன்மையை முழுமையாக அறியாதிற்கும் நிலையே நீடித்திருக்கும். தரக்கட்டுப்பாடுகளைத் தெரியப்படுத்தி விட்டதால் அது எங்கும் பின்பற்றப்படுவது என்று நம்பிக்கைகொள்வது போதுமானதில்லை. அது பின்பற்றப்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு.போலிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது தொடருமானால் அது தொழில்  வளர்ச்சியை  முடக்கிவிடும் .அது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட   ஒரு வலிமையான காரணமாகும் .
ஆட்சியாளர்கள் ஒருவர் ஊழல் செய்தால் அதைத் தலைவர்தான் தட்டிக்கேட்கவேண்டும். அவரைப் பொறுப்பிலிருந்து நீங்கிய பின் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் விசாரணையில் ஒளி மறைவு இல்லாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இது மட்டுமே ஊழல் தடுப்பை சமுதாயத்தில்  தீவிரமாகப்  பரப்பும். ஆனால் பெரும்பாலும் மக்கள் செய்யும் ஊழல்களையும் குற்றங்களையும் விரிவாகப் பேசும் அரசாங்கம் ஆட்சியிலிருப்போர் செய்யும் குற்றங்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. .ஏதும் தெரியாதவர்கள் போல நடந்துகொள்வார்கள்..தானே தலைவராக நீடித்திருக்கவேண்டும் என்ற விருப்பத்தால் ஊழல் வாதிகள் அளிக்கும் ஆதரவிற்கு இது தலைவர்கள் கொடுக்கும் இலஞ்சமாகும். .இலஞ்சம் பணமாகவோ ,பொருளாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை .ஊழல் செய்வதற்கு அனுமதி அளிப்பதும் , செய்த ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும்  கூட இலஞ்சமாகும் .உண்மையில் குற்றங்களை  விட குற்றஞ் செய்வோரை ,அதைத் தடுக்கும் உரிமையுள்ளவர்கள் தடுக்காமல் இருப்பது தான் பெரிய குற்றமாகும்.
ஒருவருக்கு ஒருவரால் காரியம் ஆகவேண்டுமென்றால் ,அவர் அந்தக் காரியத்தைச் செய்யக் கட்டாயப்படுத்தமுடியாது. சம்பளம் கொடுப்பதற்காக மக்களிடமிருந்து வரி வாங்கி  மக்களுக்குக் காரியங்கள் செய்வதற்காகவே அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்  ஆனால்  காரியத்தைச் செய்ய  சம்பளம் மட்டும் போதாது என்று  இலஞ்சம் கேட்கின்றார்கள் . மக்களின் காரியத்தைச் செய்யவேண்டும் அல்லது அதைச் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை மக்களிடம் விளக்க வேண்டும். அலைக்கழிக்கப்படும் போது மக்கள் இலஞ்சம் கொடுக்கும் கட்டாயத்திற்கு த் தள்ளப்படுகின்றார்கள் .ஒருவர் பிறரை லஞ்சம் கொடுக்குமாறுக்  கட்டாயப்படுத்த முடியும். ஆனால் ஒருவர் ஒருவருக்கு இலஞ்சம் கொடுப்பதை மறுக்க முடியும். பெரும்பாலும் இலஞ்சம் வாங்கும் குற்றங்கள் . அதைக் கொடுக்க மறுப்பவர்களால் மட்டுமே வெளிஉலகிற்குத் தெரியவருகின்றது
ஏனெனில் முன்னது இருவர்க்கிடையேயான ஒரு பரிமாற்றுச் செயல்  பின்னது ஒருவரால் மட்டுமே தீர்மானம் செய்யக்கூடிய தன் விருப்பச் செயல் ..அதனால் மனக்கட்டுப்பாட்டால் தடுத்துக் கொள்ள அல்லது நிறைவேற்றிக் கொள்ள முடியும் .மக்களின் மனக்கட்டுப்பாட்டால் மட்டுமே இலஞ்சக் குற்றங்களை ஓரளவு மட்டுப்படுத்த முடியும்.
மனத்தடை என்பது தடைகளில் சிறந்த தடையாகும். ஏனெனில் இது அமைதி வழி யில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்முறையாக இருப்பதால்  எதிர்மறையான பின் விளைவுகளை ஏற்படுத்துவதில்லை .இலஞ்சம் கொடுத்து காரியத்தை முடித்துக் கொள்ளும் விருப்பமில்லை என்று எல்லோரும் மனக்கட்டுப்பாட்டோடு இருந்துவிட்டால் இலஞ்சம் வாங்கி வாழ்வோர் மனம் திருந்துவதைத்தவிர வேறு வழியில்லாமல் போகும்.
ஒரு சிலர் இலஞ்சம் கொடுத்து மற்றவர்களுக்கு முன்னர் காரியத்தை முடித்துக் கொள்ள விரும்புவார்கள். இவர்களுக்கு மனத்தடை மிகவும் அவசியம் .வேறு சிலர் இலஞ்சம் கொடுத்து தவறான செயலுக்கு அனுமதி வாங்குவார்கள் .இவர்கள் அந்த அனுமதியால் தவறான வழியில் பொருள் சம்பாதிக்கும் வாய்ப்பு அல்லது பயன் பெறமுடிவதால்  இலஞ்சம் கொடுப்பதை மறுப்பதில்லை. பாதிப்பு வந்த பின்பே இவர்களை மக்களால் இனமறிந்து கொள்ள முடிகின்றது .இலஞ்சம் வாங்குவார் நினைத்தால் இவர்கள் செய்யப்போகும் தவறுகளை இலஞ்சம் வாங்காமல் மறுத்துத் தடுக்கமுடியும் 

Saturday, January 23, 2021

 உற்பத்திப் பொருட்கள் புதுமையானதாகவும் கூடுதல் பயன்தரக்கூடியதாகவும் இருப்பதுடன் தரமானதாகவும் இருக்க வேண்டும் .அப்பொழுதுதான் வர்த்தகத்தை உலக அளவில் பெருக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் .இது நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக மேம்படுத்திவிடுவதுடன் , புதிய புதிய வாய்ப்புக்களின் மூலம் மக்கள் அனைவரையுமே தொழித்துறையில்  ஈடுபாடு  கொள்ளுமாறு தூண்டி அதன் தொடர்ச்சியைக் கூடுதல்  முயற்சிகளின்றி இயல்பாக வடிவமைத்து விடுகின்றது. கூடுதல் வருவாய் என்பது போலியான பொருள் உற்பத்தியாலின்றி ,கூடுதல் விற்பனையின்  மூலம்  பெறமுடிவதால் வளர்ச்சியுடன் கூடிய நிலையான வர்த்தகத்தை உருவாக்கிக் கொள்ளமுடிகிறது . உற்பத்திப் பொருட்கள் தரமானதாகவும் ,மக்கள் நலனுக்குத் தீங்கிழைக்காததாகவும் இருக்கவேண்டும்.  உற்பத்தியாளர்கள் இந்தக்  கட்டுப்பாட்டிற்கு  உட்பட்டு  பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதை  அரசாங்கத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். இவ்வதிகாரிகள் நேர்மையாகச் செயல்படுகின்றார்களா என்பதை அரசாங்கத்தின் அமைச்சகம் கண்காணிக்கவேண்டும். மக்களுக்காக  அதிகாரிகளும் ,அரசாங்க அமைப்புகளுமே  அதிகம் கண்காணிக்கப்படவேண்டும். ,     உற்பத்திப் பொருட்கள் தொடர்ந்து தரமானதாக இருக்க தொழிலாளர்களும்  அர்ப்பணிப்புடன் நேர்மையாகச்  செயல்படவேண்டும். இதற்கு தொழில் அதிபர்கள் தொழிலாளர்களுடைய நலனை மட்டுமின்றி அவர்களுடைய குடும்ப நலனையும் ஒரு வரம்பிற்கு உட்பட்டு கவனிக்கவேண்டும், வீட்டு வசதி , போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி , சலுகை விலையில் உணவுப் பொருட்கள் மற்றும்  ஆடைகள்  , உடற்பயிற்சிக்  கூடம் , விளையாட்டு மைதானம் போன்றகள் மூலம்  இதைச் செய்யலாம் . தொழிலாளர்கள்  எப்பொழுதும் உற்சாகமாக இருப்பதால்  உற்பத்தி த்திறன் இயல்பாக அதிகரிக்கின்றது. .தொழிலாளர்களுக்காகச் செய்த கூடுதல் செலவை விட கூடுதல் உற்பத்தியால் கிடைக்கும் வருவாய் கூடுதலாகவே இருப்பதால் இழப்பு ஏற்படுவதற்கு வழியில்லை. இதற்கு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள தொடர்பில் பிளவு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வண்டியது அவசியம் .  

ஒரு முறை தரமற்ற பொருளால் மக்களை ஏமாற்றிவிட்டால் , அப்புறம் தரமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மலிவான விலையில் கூட சந்தைப்படுத்த முடியாது. தொடர்ந்து உலகச் சந்தையில் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் உற்பத்திப் பொருளின் தரம் ,பயனுறு திறன்  சிறப்பாக இருக்கவேண்டும் .இதை  உறுதிப்படுத்த அரசாங்கம் நேர்மையான தரக்கட்டுப்பாடு அமைப்பை நிறுவுவதோடு அதன் செயல்பாட்டையும் கண்காணிக்கவேண்டும் மலிவான விலையில் தரமான பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான  தொழில் நுட்ப அறிவையும் ,பயிற்சியையும் தொழிமுனைவோர்களுக்கு வழங்க அரசாங்கம் வழிசெய்யவேண்டும் .மூலப்பொருட்கள் , தடையில்லா மின்சாரம் , தண்ணீர் , சாலை வசதிகள், ஏற்றுமதி, இறக்குமதிக்கான உதவி மற்றும் சலுகைகள்  கிடைப்பதற்கும் அரசாங்க அமைப்பின் மூலம் உதவிகள் செய்யவேண்டும் .


Friday, January 22, 2021

 மக்களுக்கு மக்களே கெடுதல் செய்கின்றார்கள். காவலர்களில் காவலர்களே குற்றவாளிகளுக்கு உளவாளிகளாக இருப்பதும் , இராணுவத்தில் இராணுவத்தினரே எதிரிகளுக்கு உளவு செய்வதும் மக்கள் மனநிலையின் கட்டுப்பாடற்ற  பரிணாம வளர்ச்சியின் தொற்றே .மக்கள் ஏன் அப்படி நடந்து கொள்கின்றார்கள் .ஒருவருக்கு நம்பிக்கைதரக்கூடிய முன் உதாரணமின்றி குற்றங்கள் செய்யும் தைரியம் வருவதில்லை. அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் , அதிகாரிகளுக்கு இலஞ்சம் வாங்கும் தைரியத்தைக்  கொடுக்கின்றது.அதிகாரிகள் வாங்கும் இலஞ்சம் வர்த்தர்களுக்கு மக்களை ஏமாற்றும்  தைரியத்தைக் கொடுக்கின்றது அதிகாரிகளிடம் கொடுக்கும் இலஞ்சத்தாலும் ,  வர்த்தகர்களிடம்  ஏமாந்து பெறும் இழப்புக்களினாலும் மக்களுக்கு தவறுகள் செய்யும் மனநிலையைவளர்த்துக் கொண்டு விடுகின்றார்கள் .மக்கள் ஏமாந்து போவதால்  தவறு செய்கின்றார்கள் ஆனால் வர்த்தகர்களும்,அதிகாரிகளும் ,அரசியல்வாதிகளும் ஏமாற்றுவதற்காகவே தவறு செய்கின்றார்கள்.மக்களுக்குத்  தவறு செய்ய அதிகம் வாய்ப்புக் கிடைப்பதில்லை . ஆனால் வர்த்தகர்களுக்கும் ,அதிகாரிகளுக்கும் , அரசியல்வாதிகளுக்கும்  இந்த வாய்ப்புக்கள் கூடுதல் முயற்சிகளின்றி இயல்பாகவே அமைந்துவிடுகின்றது. அந்த வாய்ப்புக்களைத் தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக பதவிக்காகவே போராடுகின்றார்கள். இலஞ்சம் கொடுத்து பதவிக்கான நியமன ஆணையைப் பெறுகின்றார்கள். நாடு இவர்களால் சுரண்டப்பட்டுக் கொண்டே இருப்பதால் , எந்த முயற்சியும் முன்னேற்றத்தை கண்ணில் காட்டுவதில்லை . சிறு சிறு துளிகள் ஒன்று சேர்ந்தால் ஆற்றில் வெள்ளமாகின்றது .அதுபோல மக்களை ஒன்று திரட்டி நேர்மையற்ற அரசுக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கிவிடமுடியும்.ஆனால் நேர்மையின்மைக்கு எதிராக ஒரு கூட்டணியை உண்டாக்க முடிவதில்லை. .மக்கள் இயக்கமாக இருந்தால் மட்டுமே அந்த முயற்சியில் ஓரளவாது வெற்றி காணமுடியும் .அதற்கு ஆளுமைத் திறன்மிக்க , தைரியமான தலைமை தேவை. 

வாழ்வாதாரம் இல்லாதபோது மாற்று முயற்சிகளை மேற்கொள்கிறான். எதுவும் பயனளிக்காதபோது உயிர் வாழத்  தவறு செய்யும் நிலைக்குத்  தள்ளப்படுகிறான்.திருடத் தைரியமில்லாதவன் பிச்சை எடுக்கிறான். அவர்களிடத்தில் நேர்மை இன்னும் மறையாமல் இருக்கின்றது .இவர்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுத்து  பிச்சை எடுப்போரை ,வேலையின்றி த் தவிப்போரை மட்டுப்படுத்த வேண்டும் .ஏனெனில் பிச்சை எடுக்க வெட் கப்படுகின்றவன் திருடுவதற்குத் தயங்குவதில்லை .இரண்டையும் சேர்த்துச் செய்ய நினைப்பவர்கள் இலஞ்சம் ,ஊழல் போன்ற குற்றச் செயல்களைச் செய்கின்றார்கள் . 

குற்றவாளிகளுக்குத் தெரிந்தே உதவுபவன் காலப்போக்கில்  குற்றவாளியாகி விடுகின்றான். குற்றவாளியாகி குற்றவாளிக்கு உதவி செய்தவன் குற்றவாளியாலேயே பாதிப்பிற்கு உள்ளாகிறான் .குற்றவாளியால் நேர்மையாகச் செயல்பட முடியாததால் , உண்மை பேசமுடியாததால் .அவன் தன் பிள்ளைகளை அவனால் நன்மக்களாக வளர்க்க முடியாமல்,,நாட்டுக்கு நல்ல குடிமக்களைக் கொடுக்க முடியாமல் போகின்றது.   


 தவறு ,குற்றம் செய்வதற்கும் ,அவற்றை மறைப்பதற்கும்   கிடைக்கும் வாய்ப்பும் ,ஒத்துழைப்பும்  நேர்மைக்குக் கிடைப்பதில்லை அதனால் நேர்மை எண்ணத்திலும் ,குற்றம் செயலிலும் இருக்கின்றது 

நிரூபணம் இல்லாமல் எந்தக்  குற்றத்தையும் செய்ய மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.இவர்களுக்குச்  சமுதாயத்தில் மலிந்து வரும் குற்றச் செயல்களே வழிகாட்டியாக இருக்கின்றன. 

தவறுகளைத் தவறுகளால் திருத்தினால் திருத்தும் தவற்றைத் திருத்தவே முடியாது .ஏனெனில் யாரும் பார்க்கவில்லை யாராலும் கண்டுபிடித்து நிரூபிக்க முடியாது என்ற எண்ணம் இருக்கும் போது தவறுகள் விருப்பச்  செயல்களாகிவிடுகின்றன.

ஏமாற்றப்படுகின்றவர்கள் அதிகமாகி வருகின்றார்கள் என்றால் ஏமாற்றுகின்றவர்கள் அதிகமாகி வருகின்றார்கள் என்பதும் ,வாழ்வாதாரமின்றி மக்கள்  உயிர் வாழப் போராட்டம் மேற்கொள்வதும் தான்.மக்களில் ஒரு பிரிவினரின் அறியாமையால்  மற்றொரு பிரிவினரின் அதிகாரத்தால்  ஏமாற்றப்படுவது  தடுக்கப்படவேண்டும் .இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நல்ல அரசுக்கு உண்டு .ஏமாற்றினால் மதி ஏமாந்தால் அது விதி .விதியை மதி வெல்லும் என்பது இதுதானோ .இது மதியுமில்லை விதியுமில்லை.. கேட்பார் கேட்காததினால் கெடுவார் கெட்டு  தீச் செயல்  புரிந்தார் .வலியாரை எதிர்க்க வலிமையின்றி அதை  மௌ னமாய் ஏற்றுக்கொண்டார், 

மக்கள் நலத்திற்கும் நாட்டு நலத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பொதுவாக சட்டம் புரிந்து கொள்வதில்லை 

அரசியல் ஒரு தொழிலல்ல .அது மக்களுக்குச் செய்யவேண்டிய தன்னலமற்ற சேவைகளுக்காகச் செய்யும் அர்ப்பணிப்பு  இதை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் உணரவேண்டும் .அரசாங்கம் தரும் பாதுகாப்பு குற்றங்கள் செய்யும் துணிவையும் ,அதை மறைக்கும் அதிகாரத்தையும் தருகின்றது என்பதற்காக நாட்டைத் தவறான வழியில் வழிநடத்திச் செல்லக்கூடாது. அதிகாரம் குற்றங்கள் செய்வதற்காகயில்லை  குற்றங்கள் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக .

வெளிப்படைத் தன்மை யில்லையின்றால் விதிமுறைகள் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் எங்கோ திட்டமிடப்படுகின்றன என்றும் அர்த்தப்படும்      


Thursday, January 21, 2021

 அரசியல் கட்சிகள் கணக்கில்லாமல் பலவாக இருப்பது பொதுவாக நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லதல்ல . அரசியல்வாதிகள் மட்டுமல்ல குற்றவாளிகளும் அதிலுள்ள எதிர்மறையான வாய்ப்புக்களை அவர்களுடைய சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுகின்றார்கள்.ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக்  கொண்டாட்டம் என்பார்கள் ..கட்சிகள் பலவானால் ஊர் இரண்டுபடவே செய்யும். கட்சியை உருவாக்கி தலைவராகி விடவேண்டியது. ஆளும் போது  செய்த ஊழல்களினால் தனித்து வெல்லமுடியாது என்று அச்சப்படும் கட்சிகள் இவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்புவார்கள். எந்தக் கட்சி இந்தமுறை வெல்லும் என்று கணித்து அந்தக்கட்சியோடு கூட்டணி சேர சில சின்னக் கட்சிகள் விரும்பும். கூட்டணியில் கட்சியின் கொள்கைகள் மறக்கப்பட்டுவிடும் ..

ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் சின்னச் சின்னக்  கட்சிகளின் நிபந்தனைகளும்.அதிகாரமும் மக்களாட்சியில் ஊடுருவும் சர்வாதிகாரத் தனத்தையே வெளிப்படுத்திக் காட்டும் .தோள் கொடுப்போம் என்று தோள் மீது ஏறி அமர்ந்துகொண்டு விடுவார்கள். நாட்டு நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள ஓர் அரசியல்வாதி ,பதவியைப்பெறுவதற்காக அல்லது தக்கவைத்துக் கொள்வதற்காக பதவிக்காகவே அரசியல் செய்யும்   கூட்டணி கட்சிகளின் ஆதரவை விரும்பமாட்டார்.

ஒரு கட்சிக்கு ஒரு நல்ல தலைவர் அமைவது அரிது.ஏனெனில் ஒரு  தலைவர் தனித்த  கொள்கையின் தாக்கத்தினால் உருவாவதை விட கட்சியில் இருக்கும் பொறுப்பாளர்களின் விருப்பமே தலைமையை நிரந்தரமாக்குகின்றது. கட்சியின்  கொள்கை என்பது அக் கட்சியிலுள்ள பெரும்பாலான பொறுப்பாளர்களின் கருத்தாகிவிடுவதால் அது காலத்திற்கும் ,சூழ்நிலைக்கும் ஏற்ப மாறிக்கொண்டே போவது தவிர்க்கயிலாததாக இருக்கின்றது .

கூட்டணியில் இருக்கும் ஒருவர் ஊழல் குற்றத்தால் குற்றம்சாட்டப்பட்டால் , ஆட்சியிலிருப்பவர்கள் அந்தக் குற்றச்சாட்டையே குற்றம்சாட்டுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ,அது தனக்குத் தெரியாது என்று வருத்தம் தெரிவிப்பார்கள் .அரசியல் தெரிந்த உண்மையான அரசியல் தலைவர் ஆட்சிப் பொறுப்பில் தனக்கு உண்மையாகத்  துணையாக இருக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே பொறுப்புக்களைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அவர் அவருடைய  கட்சியிலிருக்கவேண்டும் என்ற கட்டாயம் கூட இல்லை.. திறமையான நாட்டு மக்களாக இருந்தாலே போதுமானது.அப்படிப்பட்ட நபர்களைத் தெரிவு செய்யக் கூடிய ஆளுமைத் திறன் ஒரு நேர்மையான தலைவருக்கு இருக்கவேண்டும் .சரியான நபரைத்  தெரியாமல் தேர்வு செய்யக்கூடிய ஒரு தலைவரால்  ,நாட்டு மக்களின் மனதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கவே முடியாது. ஒரு சராசரி மனிதனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் எத்தகைய திறமையுள்ள தலைவரும் நாட்டைச் சிறப்பாக ஆளவே முடியாது.     


Tuesday, January 19, 2021

 ஏமாறுபவர்களுக்குத் தெரியாமல் ஏமாற்றுவது இன்றைக்கு மக்களிடையேமிகுந்து வருகின்றது. எனினும் இதில் அதிகம் பங்கேற்பவர்கள் வியாபாரிகளும் வர்த்தகர்களும்தான் . பொருள் அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்ற பேராசையில் விற்கும் பொருளைக் குறைவாக அளவிட்டு விற்பார்கள்.இது கூடப் பரவாயில்லை . கலப்படம் செய்தும், போலியாகப் பொருளை உற்பத்திசெய்தும்  விற்பதுதான் மிகுந்த ஆபத்தானது .மக்களைக் கவருவதற்காக, வண்ணப் பைகளில் அடைத்தும்  இலவசங்களைத் தந்தும் விளம்பரம் செய்வார்கள் கலப்பட உணவுப்பொருட்கள் உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாகின்றது .இவை உடலில் உள்ள இயற்கையான பாதுகாப்பு அம்சங்களைப் பாதித்து  கட்டுப்படுத்த முடியாத புதிய புதிய நோய்களை உண்டாக்குகின்றது.இந்தியாவில் புற்றுநோய் அதிகம் இருப்பதற்கு கலப்பட உணவு ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்  கலப்பட உணவால்  உழைக்கும் மனிதர்களுடைய செயல்திறன் குறைகின்றது. மாணவர்கள் உரிமையுள்ள கல்வியைப் பெறுவதில் குறைபாடு ஏற்படுகின்றது .உழைப்போரின் உழைப்பும், உழைக்க வருவோரின் அறிவும் குறைந்து போவதால் நாட்டின் வளர்ச்சி  மட்டுப் படுத்தப்படுகின்றது .ஒரு செயலின் தாக்கம் மறைமுகமாக பல செயல்களில் ஏற்படும் என்பதை  அறிந்து முன் நடவடிக்கை மூலம் தவிர்க்கவேண்டியதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிலர் பொருளை அதிக விலைக்கு விற்பார்கள்.வேறு கடைகள் இல்லாத சூழ்நிலைகளில், திருவிழாக்கள்,பொருட்காட்சி  ,திரையரங்குகள் போன்றவிடங்களில் ருள் வாங்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் . சொன்ன விலைக்கே பொருளை வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். 

ஒரு வகையினர் பயனாளிகள் அல்லது பொருளின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய பொருளில்  சிலவற்றைக் களவாண்டு விடுவார்கள் ..பொதுவாகப் கார் ,கணிப்பொறி போன்ற வற்றை பழுதுநீக்க பணிமணிகளில் கொடுத்தால் ஒரு சிலர் அதிலுள்ள ஒரு சில நல்ல பொருட்களை களவாண்டு கொள்கின்றார்கள்..எக்ஸ்சேஞ்  முறையில் பழைய கார்களை வாங்கி புதிய கார்களை விற்பவர்கள் .களவாண்ட  உறுப்புக்களை ப் பயன்படுத்தி புதுப்பித்து நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றார்கள் ..புதிய பொருட்களை  விற்பவர்கள் அதன்  பழைய பொருளையும்  விற்கும் அனுமதியுள்ளவர்களாக இருக்கக்கூடாது .         

எழுத்தறிவின்மையையால் பல ஏழைமக்கள் ஏமாறுபவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி பலர் அவர்களை ஏமாற்றுகின்றார்கள்.. 

Sunday, January 17, 2021

 பள்ளிகளிலும் ,கல்லூரிகளும் மாணவர்களுக்கு வாரம் 5 -1/2 நாட்கள் வகுப்பு, சனிக்கிழமை காலையில் 1/4 th மாணவர்களுக்கு  வளாகத்தை தூய்மைப்படுத்துதல்  ,மரம்,செடிகளை நட்டுப்  பராமரித்தல், உள்ளூர் கோயில்களில் உழவாரப்பணி ,  போன்றகள வெளிப்புலப்  பணிகளைச் செய்யலாம்..மீதி மாணவர்களுக்கு ஆளுமைத் திறமை பயிற்சி, தொழில் நுட்பப் பயிற்சி , அவசர காலச் சேவை பயிற்சி , தீயணைக்கும் பயிற்சி , கைத்தொழில் பயிற்சி,யோகா பயிற்சி ,விளையாட்டுப் பயிற்சி  நிறுவனத்திற்குள்ளேயே அளிக்கவேண்டும் .இதை ஒரு சுற்று முறையில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும்படி செய்யவேண்டும் .மாணவர்கள் படிப்பு முடிந்து  பணியில் சேருவதற்கு முன்னர் குறைந்தது ஓராண்டு இராணுவத்தில் பணி  புரியவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவேண்டும் .ஓய்வூதியதார்கள் குறைந்தது ஓராண்டு காலம்  அரசின் நிர்வாகத்திற்கு சேவை செய்ய வேண்டும்... 

வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்யும் நிறுவங்களின் பணிபுரியும் தொழிலார்கள் ஒரு பகுதியினர் வளாகத்தை த் தூய்மைப்படுத்துதல் , மாசுகளை அகற்றுதல்  போன்ற பணிகளை செய்யவேண்டும் . .இதை ஒரு சுற்று முறையில் அனைத்துத் தொழிலாளர்களும்  பங்கேற்கும்படி செய்யவேண்டும்.

அரசாங்கம் மக்கள் செய்யும் குற்றங்களைக் கவனிக்கும் அளவில் 10 % கூட நிர்வாகம் செய்யும் குற்றங்களைக் கண்காணிப்பதில்லை  குற்றம் செய்ய உள்ளார்ந்த விருப்பம் இருந்தாலும் மக்களில் மக்கட்தொகையில் 10 -20 சதவீதத்தினருக்கே விருப்பப்பட்ட குற்றங்களைச் செய்யாக்கூடிய வாய்ப்பும் , செய்து முடிக்கக் கூடிய திறமையும் இருக்கின்றது. ஆனால் அரசியல்வாதிகள்  ,உயர் அதிகாரிகள்  ,வருவாய்த் துறை ஊழியர்ககளில்  இந்த சதவீதம் 90 ஐ நெருங்கியிருக்கின்றது 

மக்கள் தங்கள் தேவைகளைத் தேடிக்கொண்டால் அது உழைப்பு மட்டுமின்றி ,வளர்ச்சியும் கூட அதை அரசாங்கம் கொடுத்தால் அது விலையில்லாப்பொருள்.ஒருவருடைய அன்றாடத் தேவைகளையே விலையில்லாப் பொருட்கள் பூர்த்திசெய்துவிடுமானால் ,அவர் உழைக்க விரும்பமாட்டார்..உழைப்புக்கேற்ற தேவைகள்  இல்லாததால் தேவைகளின் அளவை   எல்லையற்றதாக வளளர்த்துக்கொள்ளும் மனநிலையைப் பெறுகின்றார்.ஒரு மனிதன் உழைத்து வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்ட உடலிலுள்ள அனைத்துக் கருவிகளும் .தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளப்படாதபோது  அந்தக் கருவிகளின் பயனுறுதிறனை காலப்போக்கில் இழந்துவிடுவான்.கருவிகளைக் கொண்டு பயனீட்டத் தெரியாதவன் பிறருக்கு பயன் கொடுக்கத்  தெரியாதவனாக  இருப்பதோடு,பாரமாகவும் இருப்பான்.       

அரசியல் என்பது மக்களை அனைவரையும் தன் வசப்படுத்தி தங்கு தடையில்லாமல்  நாட்டை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வதாகும்..அரசியல் என்பது ஒரு தொழிலில்லை அது உண்மையில் மக்களுக்காக நாட்டுக்குச் செய்யும் சேவையாகும்..அரசியல் இன்றைக்கு ஒரு தொழிலாக மாறிவருவது அரசியலின்  புனிதத் தன்மையை சீரழித்து வருகின்றது.இதைத் தடுக்கவேண்டும் என்று விரும்புவதைவிட  அதில் பங்கேற்று ஆதாயம் அடைய விரும்புவர்களே அதிகம் என்பதால் சீரழிவு எல்லோருடைய ஒப்புதலுடன் தொடர்வது தவிர்க்கயியலாததாக இருக்கின்றது.

உழைக்காமல் கிடைக்கும் எதுவும் சில காலம் பயன்தரலாம் . ஆனால் வாழ்க்கை முழுதும் பயன்தருவதில்லை .மகிழ்ச்சியை த் தொலைத்துவிட்டு அச்சப்பட்டுக் கொண்டே வாழும் மனநிலையை ஏற்படுத்திவிடும் .

பேச்சு வழக்கில் நாம் பலவற்றை மிக எளிதாக ஒப்புக்கொள்கின்றோம் .ஆனால் செயல் நிலைக்கு வரும்போது நாம் ஒப்புக் கொண்டதைக் கூட நாமே ஏற்றுக்கொள்வதில்லை. தனக்காக ஒரு எண்ணம்  ,பிறருக்காக வேறொரு  எண்ணம்  கொண்டு வாழும் போக்கு இன்றைக்கு மக்களிடையே மிகுந்துவருகின்றது.இதனால் இன்றைக்கு யார் நல்லவர் , யார் தீயவர் என்று அறிந்துகொள்ள முடியாதிருக்கின்றது  


Friday, January 15, 2021

 ஊழலைத் தடுக்க எல்லோரும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியம் என்றாலும் அது மக்களுக்கு  நிச்சியமான பயனளிப்பதில்லை .ஏனெனில்  ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தாலும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் தட்டிக் கேட்கும் அதிகாரமில்லை. கிடைக்கும்  ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளால்  தடுப்பதற்கோ ,தண்டிப்பதற்கோ வழியில்லை. ஊழல் செய்வோர் தப்பித்துக்கொள்வதோடு தொடர்ந்து தவறுகளைக் கூடுதல் துணிவோடு  செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் 


மக்கள் தங்கள் உரிமைகளைப்  பாதுகாக்க விழிப்புணர்வோடு இருந்தால் மட்டும் போதாது.அதற்குச் சமுதாயம் தழுவிய பாதுகாப்பும்    சட்ட ரீதியான பாதுகாப்பும் வேண்டும். அதற்குப்  பதிவுசெய்யப்பட்ட அதிகாரமுள்ள  தனித்துவமான மக்கள் இயக்கமொன்று அமைக்கப்படவேண்டும் .  ஒரு சிலர் சுய லாபத்திற்காக ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகப் பேசுவதையும் .பொய் சாட்சி சொல்லி ஆதாரங்களை அழிப்பதையும்  மக்கள் இயக்கத்தின் மூலம் தடுக்க வேண்டும். ஊழல் வாதிகளுக்கு எதிரான எந்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் தனி மனிதர்கள் அல்லாது மக்கள் இயக்கத்தின் மூலமாகவே எதிர்கொள்ளவேண்டும். நல்லோர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் ,குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே காவலர்களால் துன்புறுத்தப்படுவதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் .


பணம் சம்பாதிக்க ஆசைப்படுவது தவறில்லை. ஏனெனில் அது உழைத்து முன்னேற நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர்  உந்தற் காரணி  .பணம் என்பது உண்ண  உணவு , உடுக்க உடை ,இருக்க வீடு போன்றவைகளைப் பெறுவதற்காக மட்டுமின்றி  கல்வி பெறுவதற்கும் , இன்ன பிற வாழ்க்கை வசதிகளைப் பெறுவதற்கும்  பிறருக்கு உதவி செய்வதற்கும் தேவைப் படுகின்ற ஒரு கருவி .ஒரு மனிதன் தன் தேவைகளை முழுமையாக  நிறைவேற்றிக்கொள்ளும் போதுதான் பிறருக்கும், நாட்டிற்கும் பயன்தரக்கூடியவனாக  ஆகின்றான். கூடுதல் சம்பாத்தியமே சேமிப்பாகவும், தொழில் தொடங்குவதற்கான முதலீடாகவும் இருக்கின்றது. சேமிப்பில்லாதவர்கள் தொழில் தொடங்க விருப்பம்கொள்ளும்போது கடன் வாங்குகிறார்கள்.கடன் சுதந்திரமாகச் செயல்படும் நிலையைச் சீர்குலைத்துவிடுவதால் தொழிலின் முன்னேற்ற நடவடிக்கைகளில் அதன் பாதிப்பு  எதிரொளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளமுடியாதிருக்கின்றது  .  எனவே ஒவ்வொரு மனிதனும் கூடுதல் பணம் சாம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது  தவறில்லை . ஆனால் அப்படி நினைக்கும் போது அவர்கள் ஒரு சுய காட்டுப்பாட்டுடன்  செயல்படவேண்டும். .முதலாவது சம்பாத்தியம் நேர்மையான சுய உழைப்பின் மூலம் பெறப்படுவதாக இருக்க வேண்டும் .பிறரை ஏமாற்றி அபகரிக்கக் கூடாது.தீயவழிகளில்  பொருள் திரட்டக் கூடாது . அடுத்து கூடுதல் சம்பாத்தியத்திற்கு ஓர் அடிப்படை நோக்கமிருக்கவேண்டும்.தனக்கும், பிறருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கவேண்டும்  பெரும்பாலும் அடிப்படை நோக்கமில்லாத சம்பாத்தியம் ஒரு வரம்பிற்குள் அடங்குவதில்லை. .அது யாருக்கும்  பயனின்றி வங்கிகளில், வீடுகளில் இரகசிய இடங்களில் ஒளித்து வைக்கப்படுகின்றன.நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனம் முடக்கப்பட்டுவிடுவதால் முன்னேற்றம் பின்தங்கிவிடக் காரணமாகின்றது  .  சம்பாதியுங்கள் , நிறையச் சம்பாதியுங்கள் ஆனால் அது நேர்மையான வழியில் இருக்கட்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள் 


Thursday, January 14, 2021

 ஊழலுக்குக் காரணம் யார் ? எல்லா ஊழல்களுக்கும் மூல காரணம் அரசியல்வாதிகளே என்று பலர் சொல்வார்கள்.  அதில் மாற்றுக் கருத்து இருப்பதற்கு இடமில்லை. ஆனால் அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் ஆதாரங்களை மறைத்துவிட்டு மறுப்பதால் எந்த அதிகாரமில்லாத மக்கள் ஊழலை ஒழிக்கமுடியாமலும் ,ஒத்துப்போக முடியாமலும் நீண்ட காலமாகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

உயர் அதிகாரிகள் எல்லோரும் ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட்டு  அவர்கள் செய்யும் ஊழலுக்கு ஒத்துப் போகின்றார்கள் .அதனால் ஊழலில் அவர்களுக்கும் கணிசமாக ஒரு பங்கு கிடைத்துவிடுவதுடன் ,அரசியல்வாதிகளின் ஆதரவும் கிடைக்கின்றது. இந்த ஆதரவை அவர்கள் தனித்துச் செய்யும் பிற குற்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கின்றார்கள்..

 எல்லாப் பொது மக்களுக்கும் நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமை, வாய்ப்பு, வசதிகளை ஒரு சிலர் தட்டிப்பறித்துக் கொண்டு போவதும் ,பொதுமக்களுடைய  வரிப்பணத்தை பொதுமக்களுக்காகச் செலவு செய்யாமல் ,செலவு செய்ததாகப் போலியாகக் கணக்கை மட்டும் காட்டிவிட்டு பணத்தை சுருட்டிக் கொள்வது முதன்மை ஊழல் .   இந்த வகையான ஊழலை ப் பெரும்பாலும் அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் செய்கின்றார்கள் .மக்களுக்கு சரிசமமாகப் பங்கீடு செய்யவேண்டிய அதிகாரமும் ,பொறுப்பும் , கடமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊழல் செய்யும் வாய்ப்பு இயல்பாகக் கிடைக்கின்றது  என்பதால் ஊழலின் முதல் குற்றவாளி அரசியல்வாதிகள் தான். அவர்கள் பங்கீடு செய்யும் வாய்ப்பை அதிகாரிகளுக்குக் கொடுத்தால்தான் அதிகாரிகள் ஊழல் செய்யமுடியும்..இதற்காகவே அரசியல்வாதிகள் ஆளுங்கட்சியில் பதவி பெறுவதற்காகப்  போராடுவார்கள் .

எதையும் விரைவாகவும் , குறுக்கு வழியிலும் சாதிக்க பொருள் வசதியும், வாய்ப்பும் உள்ள சுயநலக்காரர்களும் ஊழல் செய்கின்றார்கள்..சிலர் தொழில் தொடங்க அனுமதி, அரசாங்க வேலை கிடைக்க பணி நியமனம் ,உயர் படிப்பு படிக்க  வாய்ப்பு போன்றவைகளுக்காக அதற்கு அதிகாரமுள்ளவர்களுக்கு பொருள் கொடுத்துப் பெறுவதும் ஒருவகையான ஊழலே. இதை  இலஞ்சம் என்றும் கூறுவார்கள் . இதனால் சரியான நபருக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பு அவர்களால் தட்டிப்பறிக்கப்படுகின்றது ..பெரும்பாலும் ஊழலால்  சம்பாதிக்கும் பணம் கறுப்புப் பணமாக பதுக்கிவைக்கப்படுகின்றது .நாட்டின் முன்னேற்றத்திற்காகப்  பெறப்படும் வருவாயை ஊழல் மூலம் ஒரு சிலர் அபகரித்துக் கொள்வதால் திட்டத் செலவிற்கான நிதி பற்றாக்குறையாகவே இருக்கின்றது..இதனால் எந்தத் திட்டமும் திட்டமிட்டபடி நிறைவேற்ற முடிவதில்லை .

 .பல வேலைகளைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது ஒரு குழுவில் இருப்பவர் மிக எளிதான வேலையைத் தேர்ந்தெடுப்பார்..பயணத்தை மேற்கொள்ளும் போது எல்லோரும் குறுக்குப் பாதை அல்லது வேகத் தடைகள் இல்லாத பாதைகளில்  செல்வார்கள் .இதை மனிதர்கள்  மட்டுமல்ல இயற்கையும் கூட அப்படித்தான் விரும்புகின்றது..இரு புள்ளிகளுக்கிடையே ஒளி எப்போதும் சிறுமத் தொலைவைக் கடந்தே பரவுகின்றது .நீர் வழிந்தோடும் போது எதிர்ப்புக் குறைந்த பாதையையே தேடுகின்றது. அலைபாயும் மனித மனமும் கூட இதற்கு விதிவிலக்கில்லை..எதிர்ப்புக் குறைந்திருந்தால் மனிதர்களிடம்  நேர்மை குறைந்து போகின்றது .குறைந்த எதிர்ப்புக்களைக் கொண்ட பாதையில் மனிதர்கள்  நேரமையைக் கடைபிடிக்கத் தவறிவிடுகிறார்கள் .வீட்டில் பெற்றோர்களின் எதிர்ப்பு இருப்பதால் பிள்ளைகள் ஒழுக்கத்தோடு வளர்கின்றன .பள்ளியில் ஆசிரியரின் எதிர்ப்பு இருப்பதால் மாணவர்கள் புரிதலோடு  கற்றுக்கொள்வதுடன் தவறு செய்யவும் அச்சப்படுகின்றார்கள் .அதுபோல நாட்டில் சமுதாய எதிர்ப்பு இல்லையென்றால் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நேர்மையைத் துறந்து விடுவார்கள் தீய செயல்களும் ,எதிர்ப்பும் வினை- எதிர்வினைச் செயல்கள்.எதிர்வினை இல்லாவிட்டால் வினையின் வீச்சு அதிகமாகவே இருக்கும் 

ஊழல் புரிந்தவன் அச்சப்படவில்லை  தொடர்ந்து ஊழலைச் செய்து கொண்டே இருக்கின்றான். ஊழலுக்கு எதிராகப் போராட நினைக்கிறவன் என்ன செய்வதென்று புரியாமல் பரிதவிக்கின்றான் .பொருளைத் திருடியவன் கவலையின்றி மகிழ்ச்சியாக இருக்கின்றான்  பொருளை இழந்தவன் மேலும் பொருளை இழந்து மீட்டுப் பெறமுடியாமல் துன்பப் படுகின்றான் .இந்நிலை நிலைக்கும் போது சமுதாயத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன .பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடைகின்றன . ஓர் உண்மையான அரசாங்கம் நல்ல திட்டங்களைச்  செயல்படுத்துவதற்கு முன்னர் சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாகவுள்ள போக்குகளை அகற்றவேண்டும்  இல்லாவிட்டால் ஓட்டைச் சட்டியில் தண்ணீர் மோந்து விவசாயம் பண்ணும் கதையாகிவிடும்          

 நீதியை நிலை நாட்டுவதற்கு ஒருவர் அநீதியால் இழந்ததைவிடப் பல மடங்கு செலவு செய்ய வேண்டிய நிலையே நீடித்திருப்பதால்  பல அநீதிகள் வெளித்தெரியாமலேயே இருக்கின்றன.சமுதாயம் மெள்ள மெள்ளச்  சீரழிந்து வருவதற்கு மக்களிடம் இருக்கும் இந்த எண்ணமும் ஒரு காரணமாகும் 

மி சூரியனை ஒரு வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது .ஒரு நாளில்லை  ஒரு மாதமில்லை ,ஒரு ஆண்டு இல்லை கோடிக் கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றது .ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு காலமெல்லாம் இயங்கி வருவதால் பூமிக்கு இது இயலுவதாகின்றது. தன் இயக்கப் பாதையை விட்டு விலகி  வேறுபாதையில் சென்றால் பூமிக்கு அழிவு காலம் ஆரம்பம் என்று சொல்லாம்..அது போல சூரியக் குடும்பம் போன்ற சமுதாய வாழ்க்கையில்  கோள்கள்  போன்ற தனி மனிதர்கள் ஒரு காட்டுப்பாட்டிற்கு  உட்பட்டே வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி .கட்டுப்பாடில்லாத வாழ்க்கை நூலறுந்த பட்டம் போல,        

முதாய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதென்பது உலக சுகங்களை ஒன்றுவிடாமல் அனுபவிக்கத் தேவையான பொருளை ஈட்டுதல் என்றுதான் நினைக்கின்றார்கள் .ஆனால் எவ்வளவு விரும்புகிறார்களோ அவ்வளவு முயற்சியில் ஈடுபடுவதில்லை..அதற்காகத் தன் விருப்பங்களை விட்டுவிடவும் மாட்டார்கள். எல்லாம் தானாக தனக்குக் கிடைக்க வேண்டும் என்று முயற்சியில் நம்பிக்கையிழந்த ஒரு சிலரும் .குறுக்கு வழியில் நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புத் தேடும் பலரும் முயல்வார்கள் .சமுதாயத்தின் சராசரி நிலையிலிருந்து விலகி வாழவேண்டும் என்றே ஆசைப்படுவார்கள் .

நல்லவைகளை விட தீயவைகளே அதிகம் மனதில்  தாக்கத்தை ஏற்படுத்துகின்றன .நல்ல அறிவுரைகளை விடத்  தீய அறிவுரைகளே மனதில் எளிதில் இடம் பிடித்துவிடுகின்றன. ,நல்ல பக்கவழக்கங்களை விடத்  தீய பழக்கவழக்கங்களையே மனம் இயல்பாக நாடுகின்றது .வாழ்க்கையின் தரம் மேலும் மேலும் குறைந்து போவதற்கு சமுதாய மக்களின் மனநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களே .அடிப்படைக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை. பேச்சளவிலான திருத்தங்களும் . நீதியைப் பின்பற்றாத  சட்டங்களும் திருத்தப்படாத சமுதாயம் வளர்ச்சிபெறவே வழிவகுக்கின்றன. திருத்தப்படாத சமுதாயம் , மனித சமுதாயத்திற்கு  உள்ளெதிரியாகிவிடும். எதிர்களில் மிகவும் ஆபத்தான எதிரி உள்ளெதிரியே ஏனெனில் உள்ளெதிரி எப்போதும் அருகிலிருப்பதுடன் ,உடன் இனமறிந்து கொள்ளவும் முடியாது ..

ஊழலை இந்தியாவில் ஒழிக்க முடியாது. ஏனெனில் அதை நாம் நெடுங்காலமாக வளர விட்டுவிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆட்சியாளர்களுக்கு கூடுதல் வருவாய் , வழிதெரியாத மக்களுக்கு காரியம் ஆனாச் சரி என்ற எண்ணம் இரண்டும் சேர்ந்து ஊழல் ஒன்றும் தப்பில்லை என்ற  எண்ணத்தையே நிலைப்படுத்தியிருக்கின்றது.வாங்குவோர் ,கொடுப்போரைக் கொடுக்க வைக்க சட்டத்திற்குத் தெரியாத பல வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் ம்,தாமதம் செய்யச் செய்ய லஞ்சத்தை மறுப்புபவனும் இலஞ்சம் கொடுத்து காரியத்தை முடிக்கத்  தயங்குவதில்லை. தாமதப்படுத்துதல்  இலஞ்சம் வெங்காயருக்கு ஒரு வலுவான ஆயுதமாக இருக்கின்றது. 

களையெடுக்காமல்  பயிர் விளைச்சலில் சாதனை படிக்க நினைக்கின்றோம்  

குற்றவாளிகளைப்  பிடித்து  தண்டனை வாங்கிக்  கொடுப்பதை  விட குற்றவாளிகள் கொள்ளையிட்ட பொருட்களை ப் பறிமுதல் செய்து அதை யாருக்கும் தெரியாமல் பங்கு போட்டுக் கொள்வதிலேயே காவலர்களும்,உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அதிக அக்கறை காட்டிவருகின்றார்கள்.


Wednesday, January 13, 2021

 ஊழலை ஒழிக்க ஆக்கப்பூர்வமான அரசியல் மாற்றங்கள்  


ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அதில் உண்மையாகவே விருப்பம் இல்லாதவர்களிடம் கொடுக்கப்படுவதால்  அது நிறைவேற்றப்படாமல் இருப்பதோடு ஊழல் பெருக்கத்திற்கும் ஆதரவாய் இருக்கின்றது. அதனால்தான் ஊழல் ஒழிப்பு நீண்டகாலமாக  வெறும் கனவாகவே இருக்கின்றது  ஊழலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கின்றது என்று உறுதிப்படுத்தப்பட்ட  நிலையில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை  அரசியல்வாதிகளிடம் ஒப்படைப்பது நாம் செய்யும் தவறாகும் .அரசியலுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு தனித்துவமான அமைப்பு மட்டுமே ஊழலை ஓரளவாவது கட்டுப்படுத்தும் .அத்தகைய அமைப்பை அமைக்கும் பொறுப்பு நேர்மையான அரசியல்வாதிகளுக்கு உண்டு .ஏனெனில் அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காகவே பொதுச் சேவை செய்யும் மனப்பான்மையோடு  பதவியை ஏற்றுக்கொண்டவர்கள் .அரசியல்வாதிகள் செய்யத் தவறினால் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதவேண்டிய கட்டாயம் சட்ட வல்லுநர்களுக்குத் தவிர்க்கயியலாததாக  இருக்கின்றது  இதிலுள்ள சிக்கல் இதை நன்மக்களே உணர்த்தவேண்டிய கட்டாயமாக இருக்கின்றது 


ஆக்கப்பப்பூர்வமான அரசியல் மாற்றங்கள் ஏற்படவேண்டும். இது ஒரு கட்சித் தலைவர் போய் மற்றொரு கட்சித் தலைவர் ஆட்சி புரிவதால் வருவதில்லை . ஏனெனில் அவர்களிடம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான பொதுக் கொள்கைகள்  பேச்சளவில்  உறுதியானவை போலத் தோன்றினாலும் செயலளவில் பலவீனமாகவே இருக்கின்றன. அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏறக்குறைய ஒன்றுபோலச் செயல்படுவது தலைமை மாற்றத்தினால்  மக்கள் நலத்திற்கான புதிய  மாற்றங்கள் ஏற்பட வழியில்லை என்பதை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை.மீண்டும் மீண்டும் தலைமை மாற்றத்தினால் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


இன்றைக்கு இந்தியாவில் பின்பற்றப்படும் ஆட்சியாளர்களுக்கான தேர்தல் முறை பயனற்றது.ஏனெனில் அதை எவ்வளவு முறை திருத்தங்களுடன் மேற்கொண்டாலும் நன்மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் ஏற்படுவதற்கான வழி தென்படவில்லை.மதம், இனம்,மொழி  சார்ந்த தேர்வு முறையும் நாட்டு மக்களின் பொது நலனுக்கு பயனளிப்பதில்லை.   மக்களின் பொருளாதாரம்  , கல்வி, வாழ்க்கைச் சூழல் , வாழ்வாதாரத் தேவைகள்    ,போன்ற பலவிதமான சமச்சீரின்மையால் பெரும்பாலான மக்கள்  சரியான ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் திறமையில்லாதவர்களாகவே இருக்கின்றார்கள்.நிரந்தரத் தேவைகளைத் நிறைவேற்றுவதாக  பொய்யான உறுதிமொழிகளால் மக்களைக் கவர்ந்தும் , இலவசங்களை அள்ளிக் கொடுத்தும்    வாக்குகளை அதிகம் பெற்று  தேர்தலில் வெற்றிபெறும் போக்கால் நாடு முன்னேறுவதற்கான வாய்ப்பு சிறிதுமில்லை .              


கட்சித் தலைவர்களே வேட்பாளர்களை நியமிக்கிறார்கள்  .கட்சித்தலைவரின் நியமனம் பெற்ற கட்சி வேட்பாளரே தேத்தலில் வெற்றி பெறுகின்றார் .நியமனம் பெறாத கட்சி உறுப்பினர் வெற்றிபெறுவதில்லை  தேர்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள்  கட்சித் தலைவர் நினைக்கின்றபடியே செயல்படமுடியும் . சுயமாகச் சிந்தித்துச் செயல்படமுடியாது..அதாவது அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருப்பதைவிட  கட்சித் தலைவரின் பிரதிநிதியாகவே இருக்கின்றார். சட்ட மன்ற ,அல்லது  மக்கள் மன்ற உறுப்பினர்கள் பலவாக இருந்தாலும் கட்சித் தலைவரின் கருத்தும் முடிவும் மட்டுமே அவர்களுடையதாகி அரங்கேறுகிறது ..கட்சித்தலைவரின் கருத்தும் முடிவும் தவறாக இருக்கும் போது அதை மறுப்பதற்குக் கூட  அவர்களுக்கு உரிமையில்லாது  போகின்றது. தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவுசெய்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு  , உறுப்பினர்களின் தனித்த கருத்துகளுக்கு இடமின்றி  கட்சித் தலைவரின் கருத்தையும் முடிவையும் ஏற்றுக்கொள்வது என்பது முழுமையான ஜனநாயகம் ஆகாது. இதற்குக் கட்சித்தலைவரையே நிரந்தரமாக பதவியிலிருக்குமாறு செய்துவிடலாம்.


நாடு முழுக்க பல கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு , அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி நாட்டை ஆளும் தலைவரைத் தேர்ந்தெடுகின்றது.இது மக்களாட்சி என்று சொல்லப்பட்டாலும், ஒரு வகையில் மக்களாட்சிக்கு எதிரானதும் கூட .ஒரு சிறிய பகுதிக்கு அப்பகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களால் ,நாடு  முழுமைக்கும் சரியான, நேர்மையான ,தகுதியான ஒரு பொதுவான தலைவரைத் தேர்வு செய்வது  மக்களாட்சியாகாது .நாட்டை ஆள்பவர் நாட்டு மக்கள் எல்லோராலும் தேர்தெடுக்கப்படுபவராக இருக்கவேண்டும் .நாட்டை ஆளும் தகுதியுடைய யார்வேண்டுமானும் தலைமைப் பதவிக்கு ப் போட்டியிடலாம். தேர்தல் என்பது அது மட்டுமே. மைய அரசுக்கு ஜனாதிபதி ,மற்றும் பிரதம மந்திரி யும்  மாநில அரசுக்கு முதலமைச்சரும் மக்களால் தேர்வுசெய்யப்பட்டால் போதும். தங்களுக்குத் தேவையான தகுதி வாய்ந்த திறமையானவர்களை அவர்களே அமைச்சர்களாகவும் ,வட்டாரப் பிரதிநிதிகளாகவும்  நியமித்துக் கொண்டு  நிர்வாகம் புரிவார்கள்.நாட்டு மக்கள் அனைவராலும் தேர்வு செய்யப்பட்ட ஒரு நல்ல தலைவர், நல்ல அமைச்சர்களையும் , வட்டார உறுப்பினர்களையும் தேர்வு செய்வார். நல்ல அமைச்சர்கள் நல்ல அதிகாரிகளை உருவாக்குவார்கள்., நல்ல அதிகாரிகளால் நல்ல பணியாளர்கள் இயல்பாகக் கிடைப்பார்கள்.அரசாங்கம் என்ற இயந்திரம் செம்மையாக இயங்கிச் செல்ல இதைவிட வேறு என்ன வேண்டும் ? பதவிக்காக திடீர்திடீரென்று கொள்கையற்ற பல கட்சிகள் உருவாவது தவிர்க்கப்படுவதுடன் ,திறமையான, நேர்மையான முழுத்தகுதியான மக்கள் தலைவர்களை  மக்களே தேர்வு செய்யும் வாய்ப்பும்  கிடைக்கின்றது ..இந்த மாற்றங்கள் சட்டங்களாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது இருக்கட்டும் . இப்படிப்பட்ட சிந்தனைகள் கூட  இன்றைய அரசியல்வாதிகள் யாரிடமும் இல்லை .ஏனெனில் அவர்கள் அரசியலால் பெறும் ஆதாயங்களையும்  அனுகூலங்களை யும் இழந்துவிட நேரிடும் என்பதால் எந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் மாற்றங்களை அனுமதிப்பதேயில்லை.


Tuesday, January 12, 2021

 அது ஒரு பொம்மை என்றாலும் பார்த்தவுடனேயே ஒரு தத்துவத்தை அறிவுறுத்தக்கூடிய ஆற்றலுடையது என்பதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது .மூன்று குரங்குகள் அடுத்தடுத்து அமர்ந்திருக்க ஒவ்வொன்றும் பார்ப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட  செய்தியைக் கூறுமாறு வெவ்வேறு செயல்களைக்  காட்டிக் கொண்டிருந்தன .தீயதைப் பேசாதே என்று ஒரு குரங்கு வாயைப்  பொத்திக்கொண்டிருந்தது, தீயதைப்  பார்க்காதே என்று மற்றொரு குரங்கு கண்ணை மூடிக்கொண்டிருந்தது .தீயத்தைக் கேட்காதே என்று மூன்றாவது குரங்கு தன்னிரு காதுகளையும் கைகளால் அடைத்துக் கொண்டிருந்தது. தீயதைப் பேசினால்  வாய் இனிய சொற்களை உச்சரிக்காது  , தீயதைப் பார்த்தால் நல்லனவற்றைப் பார்த்து வேற்றுமையை உணர்ந்து விலக்க  வேண்டியதை விலக்கி  ஏற்றுக்கொள்ள வேண்டியதை ஏற்றுக்கொள்ளும்  பக்குவம் வராது. தீயதைக் கேட்டால் அதுதான் சமுதாயத்தின் நிலையோ என்றெண்ணி மனம் எளிதில் ஏற்றுக்கொண்டுவிடுவதுடன் அதைப் பின்பற்றவும் தூண்டும் .


இப் பொம்மையின் உட்பொருளாக உளவியல் சார்ந்த வாழ்வியல் கருத்துக்கள் உள்ளன என்பதை வெகு சிலரே புரிந்து கொண்டிருக்கின்றார்கள் .மனதை உருவகப் படுத்தி குரங்காக்கியிருக்கின்றார்கள் .கிளைவிட்டு கிளை தாவும் குரங்கைப் போல மனம் எப்போதும்  எண்ணங்களுக்கிடையே தாவிக்கொன்டே இருக்கும். குரங்கு சேட்டைகள் செய்வதைப்போல மனமும் சிலசமயங்களில் விபரீதமாய் எண்ணங்களில் வட்டமிடும் .அயர்ந்து தூங்கும் போது கூட மனம் ஓய்வெடுத்துக் கொள்வதில்லை. எண்ணங்களின் பிம்பங்கள் கனவாய் மலர்கின்றன..அகமனதின் உள்ளார்ந்த விருப்பமே  கனவுக்  காட்சிகளாய் வெளிப்படுகின்றது .ஓயாது அலைபாயும் மனதை ஒருவன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது எல்லோருக்கும் அவ்வளவு எளிதான காரியமில்லை 


'எய்ட்ஸ் ' நோய் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியை சமுதாயத்தில் ஏற்படுத்த குறும்புக்கார இளைஞர்கள் சிலர் இன்றைக்கு இதில் நான்காவதாக ஒரு குரங்கையும் இணைத்திருக்கின்றார்கள் . தகாத உறவு கொள்ளாதே என்ற கருத்தை வலியுறுத்தி அக்குரங்கு தன்  பிறப்புறுப்பைப்  பொத்திக் கொண்டிருக்கிறதாம் .இந்தக் குறும்பை பெருகிவரும் இலஞ்சத்தின் பொருட்டு மேலும் கொஞ்சம் விரிவுபடுத்தலாம் .இலஞ்சம் வாங்காதே , இலஞ்சம் கொடுக்காதே என்று அறிவுறுத்துமாறு ஐந்தாவதாக ஒரு குரங்கு தன்னிரு கைகளையும் மடக்கி  வைத்திருக்கலாம் . சட்டத்தின் எச்சரிக்கைக்கு செவிமடுக்காத மக்கள், மக்களுக்கான அதிகாரிகள் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆட்சியாளர்கள்  இந்த குரங்கு பொம்மையின் அறிவுரைக்குக் கட்டுப்படுவார்கள்  என நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல்தான். 


தவறு செய்பவர்கள் தவற்றை ஒப்புக் கொள்வதில்லை .எந்த அறிவுரை கூறினாலும் அதற்கு வேறு விதமாக விளக்கம் வேறு கொடுப்பார்கள். .மனிதர்கள் பேசும் பொய்களைக் கேட்க விரும்பாமல் தன்  காதுகளையும் ,செய்யும் குற்றங்களை ப் பார்க்க விரும்பாமல்  தன் கண்களையும் , மீண்டும் மீண்டும் விரும்பப்படாத  அறிவுரைகளைச் சொல்லக் கூடாது என்று தன்  வாயையும் அந்தக் குரங்குகள் மூடிக்கொண்டிருக்கின்றவாம் .இன்றைக்குக் கற்பிக்கப்பட்டுவரும் புதிய விளங்கங்களே தீய ஒழுக்கங்களில்  மக்கள் கொண்டுள்ள மறைமுகமான விருப்பத்தைத் தெரிவிக்கக்கூடியதாக இருக்கின்றது  நல்லதைப் பேசாதே ,நல்லதைப் பார்க்காதே ,நல்லதைக் கேட்காதே என்று பார்ப்பவரை அறிவுறுத்துமாறு  அம்மூன்று குரங்களும்  கூறுகின்றனவாம் .ஒரே பொம்மைக்குச் சொல்லப்படும் கருத்து மாற்றங்கள் சமுதாய மக்களின் சராசரி எண்ணங்களின் பரிணாம வளர்ச்சியையே  படம் பிடித்துக் காட்டுகின்றது. 


இன்றைக்கு சமுதாய மக்களில் பெரும்பாலானோர்  ஏன் இப்படி விபரீதமாகச் சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருக்கின்றார்கள் .இதற்கு  அடிப்படைக் காரணம் அவர்களுடைய கண்ணோட்டத்தில்  குற்றச் செயல்கள் தண்டிக்கப்படுவதில்லை ,தடுக்கப்படுவதுமில்லை .அது மறைவொழுக்கமாக எல்லோரிடத்திலும் பரவிவருகிறது. தடுக்கும் தண்டிக்கும் உரிமையுள்ளவர்களே தவறான வழியில் கிடைக்கும் பொருளுக்கு பேராசைப்பட்டு   குற்றச் செயல்களை வளர விட்டுவிடுகின்றார்கள்  இது போன்ற எண்ணங்கள் வெறுப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தி  குற்றச் செயல்களின் ஈடுபாடு கொள்ளுமாறு செய்துவிடுகிறது.            

   

ஒவ்வொருவரும் நல்லனவற்றை  புறத்தே ஆதரித்தாலும்  தொடர்ந்து  அகத்தே நிராகரித்தது வருகின்றார்கள். அகநிலை மாற்றங்களை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் ,அதன் பரிணாம வளர்ச்சி சமுதாயத்தால்  பிரதிபலிக்கப்படும் போது மதிப்பிடமுடிகின்றது. அகநிலை மாற்றங்கள் நம்முடைய பொதுவொழுக்கங்களில் குறிப்பிடத்  தகுந்த  மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.


சமுதாயத்தில் அன்றாடம் நிகழும்  நிகழ்வுகள் கூட இக் கருத்தை தெரிவிக்கின்றன. திருட்டு, கொள்ளை, ஏமாறுபவருக்குத் தெரியாமலே ஏமாற்றுதல் , வழிப்பறி , கொலை ,கற்பழிப்பு ,போன்ற குற்றங்கள் மிகச் சாதாரணாமாகி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நடந்து கொண்டிருக்கின்றன . இது சிறிய வளர்ச்சியில் காணப்படும் பெரிய வீழ்ச்சி , நுண்ணிய ஆக்கத்தில் மறைந்திருக்கும் பேரழிவு ,முன்பெல்லாம் தீய செயல்கள் எல்லாம் அரிதாக அரங்கேறின. யாரும் அறியாமல் இரவில் நடந்தன .தனி நபராக  மட்டுமே குற்றச் செயலில் ஈடுபட்டார்கள் . ஆனால் இன்றைக்கு  பட்டப்பகலில் நடு வீதியில்  பலர் முன்னிலையில்  இக் குற்றங்களை நடக்க ஆரம்பித்திருக்கின்றன .கூட்டுச் சேர்ந்து பெரிய அளவில் குற்றங்கள் புரிவதும் , சின்ன விஷயத்திற்கும் ,கருத்து வேறுபாடு கொண்டு கொலை செய்வதும் மட்டுப்படுத்தப்படாத   அதன் பரிணாம வளர்ச்சியாகும்  .இந்த மாற்றங்கள் மக்களால் மனப்பூர்வமாக விரும்பப் படாவிட்டால் அது பரிணாம வளர்ச்சியடைய  வாய்ப்பில்லை. இன்றைக்கு யாரும் தவறுகளைச் சுட்டிக்காட்ட முன் வருவதில்லை. சமுதாய வீதியில் எல்லோருக்கும் தெரியும் படி ஒரு குற்றம் நடந்தால் அருகில் இருப்பவர்கள் அதைக் கண்டு கொள்ள அச்சப்படுகின்றார்கள் .தீயதைச் செய்ய யாரும் வெட்கப்படுவதில்லை.பிறரைக்கண்டு அச்சப்படுவதுமில்லை  நல்லறிவுரை கூட இன்றைக்கு ஒருவரை கொலை செய்யத் தூண்டி விடுகின்றது .இதனால் நல்லவை இயல்பாக வெளிப்படத் தயங்குகின்றன.இதனால் குற்றங்கள் இன்றைக்கு சமுதாயத்தில் மிகுந்து வருவது மட்டுமின்றி  அவைகள் நியாயப்படுத்தப்படவும் செய்கின்றன.நல்லவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள் தீயவர்கள் போற்றப்படுகிறார்கள் . இத்தனைநாள் இன்றைய இளைஞர்களும் நாளையச் சந்ததியினரும் நல்லனவற்றைப் பார்த்து கற்றுக்கொள்வதை விட அதிகமாக மிக மிக அதிகமாகத் தீயன வற்றைப் பார்த்து பழகிக்கொள்கின்றார்கள் .   


Sunday, January 10, 2021


கைக் கடிகாரம் பழுதடைந்து விட்டது என்றாலோ , கார் ரிப்பேர் என்றாலோ ,கழிவு நீர் குழாயில்  அடைப்பு என்றாலோ ,கட்டடத்தில் விரிசல் என்றாலோ .உடலில் நோய் என்றாலோ அவற்றைச் சரிசெய்யும் திறமை உள்ளவர்களிடம் காட்டி சரிசெய்து கொள்கின்றோம். அதை அவர்களைத் தவிர பிறரால் முழுமையாகச் சரிசெய்யமுடியாது . அது போலத்தான் ஊழல். இலஞ்சம். ஏமாறுபவருக்குத் தெரியாமல் ஏமாற்றுவது போன்ற குற்றங்களும் .இது சமுதாயத்தின் நலனைப் பாதிக்கும் ஒரு தொற்று நோய்  . தொற்று நோய்க் குற்றங்களைச் செய்பவர்களுக்குச் சாகாத சமுதாயத்தைப் புரிந்து  கொள்ளும் அக்கறையும் அறிவும்  இல்லை  .தொற்று நோயைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கும்  அவர்களைத் திருத்த வேண்டிய கடமை சமுதாயத்திற்கு உண்டு.  இந்த நோய்யைக் குணப்படுத்தி சமுதாய நலனை மீட்டுப் பெறுவது சாகாத சமுதாயத்தின் கடமை என்றாலும் அதைத் தொடங்கிச் செய்யவேண்டிய பொறுப்பு அதற்குத் தகுதியானவர்களே. ஆட்சியாளர்களுக்கு சமுதாய நலனைப் பாதுகாப்பதில் முழுப் பொறுப்பும் கடமையும் உண்டு. மக்கள் எல்லோரும் அவரவர் வேலைகளில் முன்னேற்றம் காண  வேலைகளில் கவனமாக இருக்கவேண்டும், பிற வேலைகளில் அக்கறை கொள்வதென்பது இரண்டாம் பட்சமே .தங்களுக்காகச் சாகாத சமுதாயசத்தின் நலனைக் கவனிக்க வேண்டும் என்று மக்களால் மக்களுக்காக நியமிக்கப்பட்ட அமைப்பே அரசாங்கம். மக்களை விட அரசாங்கத்திற்கே சமுதாய நலன் காப்பதில் அதிகப் பொறுப்பு உள்ளது  ஆனால்  ஆட்சியாளர்கள் தகுதியைத் தொலைத்துவிட்டதால்  பொறுப்பையும்  கடமையையும்  சரிவரச் செய்வதில்லை .அதனால் ஊழல் என்ற தொற்று நோய் ஒரு கொள்ளை நோய்போல சமுதாயத்தில் பரவிவருவதைத் தடுத்துக் கொள்ள  முடியாதிருக்கிறது.
அரசாங்கம் அதிக  அதிகாரம் கொண்டது. அதன் கட்டமைப்பு மூலம் சமுதாக் குற்றங்களைக் கட்டுப்படுத்திவிடமுடியும். காவல் துறையும் ,நீதித்  துறையும்  அப்பழுக்கில்லாது  தங்கள் கடமைகளை நேர்மையாகச் செய்தால் சமுதாயத்தில் குற்றம் பெருக வாய்ப்பில்லை. அதைக் கண்காணித்து ஒழுங்கு படுத்தவேண்டிய ஆட்சியாளர்கள் அதற்கு நேர் மாறாகத் தங்கள் செய்யும் குற்றங்களுக்கு அரசாங்கப் பாதுகாப்பாக மாற்றி அமைத்து வருகிறார்கள்..இதனால் தவறுகளைத் தொடர்ந்து செய்யும் மனத் தைரியம்  வலுவடைகிறது . மேலும் இவர்களைப் பார்த்தும் இவர்களுடைய பாதுகாப்புடனும்  மற்றவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கும் தூண்டப்படுகிறது. அரசாங்கம் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது. குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசாங்கம் நிலைப்படுமானால்  நாட்டின் முன்னேற்றம் பின்தங்கி சமுதாயம் சொல் லொன்னா கொடுமைகளுக்கு ஆளாகி        இயற்கையால் தீர்மானிக்கப்பட்ட நாட்களுக்கு வெகு முன்பே அழிந்து போகும்   
தனக்குச் சிறிதும் உரிமையில்லாத சொத்து ,பணம், பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் தவறான வழிமுறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவையாவும் ஊழல் என்ற தலைப்பிற்குள் ஒன்றாகிவிடுகின்றன..இலஞ்சம் வாங்குதல்  ஒருவரை ஏமாற்றி பொருள் பெறுதல், எல்லாம் ஒருவகையில் ஊழலின் புற வேற்றுமைகளே .வேலைக்காக ஊதியம் பெற்றுக் கொண்டு கடமையை விற்பது புற  இலஞ்ச ஊழல் என்றால் கடமையாற்றாமல் சும்மா இருப்பது அக இலஞ்ச ஊழலாகும் அக இலஞ்ச ஊழலில் அவர்கள் வாங்கும் சம்பளப்பணமே இலஞ்சமாகிவிடுகின்றது .இவர்கள் சம்பளம் தரும் முதலாளியையும் ,வாடிக்கையாளர்களையும் சமகாலத்தில் ஏமாற்றுகிறார்கள்.இவர்களால் அரசு இயந்திரம் மற்றும் நிர்வாகத் துறையின் பயனுறுதிறன் வெகுவாகக் குறைந்து  போகின்றது
எல்லோருக்கும் இலவசங்களை வழங்குவது ஆட்சியாளர்கள் எல்லோருக்கும் தெரியும்படி செய்யும் ஒருவகை ஊழலாகும் .சுயமாகச் சம்பாதிக்கும் வழிகள் யாவும் குறுகிவரும்  நிலையில் இலவசங்கள்  மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையே அளிக்கின்றது .இலவசங்களின்  பின்னணியில் இருக்கும் பொது நலத் தீங்குகள் யாருக்கும் பெரிதாகத் தோன்றுவதில்லை .  இலவசம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோருக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும். சமுதாயம் முழுமைக்குமான ஒரு திட்டமாக  இருக்கக்கூடாது .யாரெல்லாம் உண்மையிலேயே வறுமைக்கு கேட்டிற்குக் கீழ் வாழ்கின்றார்கள் என்று மதிப்பிட்டுத் தெரிந்து கொள்ளமுடியாத நிலையில் இதை செம்மையாகச் செயல்படுத்தவும் முடியாது .மக்கள் தங்களை நம்பி மீண்டும் ஆட்சியில் அமர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக அரசின் வருவாயை இலவசங்களாக மக்களுக்கு அள்ளிக் கொடுப்பது ஊழலின் நாடகமாகும் .மக்கள் எல்லோரும் தங்களுக்குத் தேவையான வற்றை தானே சம்பாதிக்கும் சம தகுதியுள்ளவர்களாக இருக்கும்போது ,அவர்களுடைய தேவைகளை இலவசங்களாகக் கொடுப்பது அவர்களை மேலும் சோம்பேறிகளாக்கிவிடும்..அரசாங்கத்திடமிருந்து  இலவசங்களைப் பெறும்  போது மேலும் மேலும் இலவசங்களை அரசாங்கம் தரவேண்டும் என்று விரும்புவார்கள். இது உழைக்கும் மனப்பான்மையை மனதிலிருந்து அகற்றிவிடுகின்றது . இலவசங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்கள் தங்களுக்கு வேண்டியத்தைச் சம்பாதிக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கவேண்டும்.அதுவே நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாங்கத்தின் செயல்முறையாக இருக்கும்.

Saturday, January 9, 2021

ஊழல் என்றல் என்ன ?
 
பொதுச் சொத்தை, பொதுப் பணத்தை  யாருக்கும் தெரியாமல் தனதாக்கிக் கொள்வது. பொதுச் சொத்தும் ,பொதுப் பணமும் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த ஊழல் இருக்கின்றது.அரசாங்கத்தின் கஜானா , கோயில் சொத்து , பொது நிறுவனங்கள் வங்கிகளில் மக்கள் சேமிப்பு ,மக்கள் நலத் திட்டங்களுக்காக  ஒதுக்கப்பட்ட நிதி  போன்றவை  ஊழல் செய்ய கண்ணை உறுத்தும் மூலங்களாக இருக்கின்றன  .இதில் அரசியல்வாதிகளும் , ஒரு சில தனி நபர்களும் ஆர்வம்  கொள்வதற்குக்  காரணம் அது யாருக்கும் உரிமையுள்ள பொருளாக இல்லாதிருப்பதால்  பெரும்பாலும் தனி மனிதர்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை ,  ஒருவர் தயக்கமின்றி ஊழல் ஈடுபடுவதற்கு மக்களின் இந்த மனநிலை அனுகூலமாக இருக்கின்றது. பொதுவாக  ஊழல்  செய்வதற்கு வாய்ப்பைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் பிரச்சனை செய்வார்கள்.இவர்கள் எழுப்பும் பிரச்னை  ஊழலில் ஒரு பங்கைத் தருவதற்குச் சம்மதிக்கும் வரை தொடர்கின்றது.. பிறகு அவர்கள் ஒரு கூட்டணியாகச் செயல்பட ஆரம்பித்து விடுகின்றார்கள். ஊழலும் பிற தொழில் போல விரிவுபடுத்தப்படுகின்றது  ,ஒரு சில  சமூக ஆர்வலர்கள் தட்டிக் கேட்பார்கள். இவர்கள் உண்மையான சமூக ஆர்வலர்களா இல்லையா என்பதை அவர்களுக்கும் ஊழல் செய்யும் வாய்ப்பைக் கொடுத்துப்பார்த்தால் தான் தெரியும்..ஏனெனில் இன்றைக்கு உள்நோக்கமின்றி, ஒரு உள்ளார்ந்த எதிர்ப்பார்ப்பின்றி சமூக சேவை செய்யக்கூடியவர்கள் யாருமில்லை.
.ஊழல் செய்வதற்கு தனி நபர்கள் முதலில் தங்கள் செல்வாக்கையும் மக்கள் நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் சத்தமின்றிச் செயல்படுவார்கள். மக்களின் நம்பிக்கையில் இழப்பில்லாத வரை ஊழல் தொடர்ந்து செய்யப்படும் .  நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க சிலர் அடியாட்களைக் கொண்டு எதிர்ப்பவர்களை மிரட்டிவருவார்கள். ஒரு சிலர் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அரசாங்க அமைப்பின் துணையால் எதிர்ப்பை எதிர்கொள்வார்கள். எதிர்ப்பைச் சமாளிக்கும் முயற்சியில் பலவிமான குற்றங்கள் செய்யப்படுகின்றன. ஆட்சியாளர்களின் பின்னணி இருக்கும் போது இந்த குற்றங்கள் ஆதரமின்மையால் தண்டிக்கப்படுவதுமில்லை. ஊழல் சமுதாயத்தில் கொடுமையான குற்றங்களையும் அறிமுகப்படுத்தி வளர்த்துவிடுகின்றது . தண்டிக்கப்படாமல் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதால் குற்றங்களின் பரிணாம வளர்ச்சி மக்களை அச்சத்தின் எல்லைக்கே இட்டுச் செல்கின்றது. 
ஊழல் செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. என்பதை அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்துள்ளனர்.. ஆட்சியாளருக்கு இருக்கும் வாய்ப்பு எதிர்கட்சியினருக்கு இல்லாததால் பொதுவாகத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும். உண்மையில் மக்களுக்குச் சேவை  செய்வதற்கு இப்படி கடுமையான போட்டியும் தேவதையில்லை. பதவியும் தேவையில்லை. அரசின் நிதியைக் கொண்டு ஆட்சியாளர்கள் எந்தச் செலவு செய்யதாலும் அதில் திட்டத் செலவை அதிகமாகக் காட்டி ஊழல் செய்யும் பணத்தை மூடி மறைத்து விடுகின்றார்கள்..பெரும்பாலும் கட்டுமானப் பணிகளில் இது தவறாமல் நடைபெறுகின்றது.. இவர்கள் ஊழல் செய்வதால் திட்டத்தில் ஈடுபடும் பிறரும் அவர்கள் பங்கிற்கு ஊழல் செய்வார்கள். ஊழல் செய்தவர்கள் ஊழல் செய்கின்றவர்களைக் கேட்க முடியாமல் போவதால் பெரும்பாலும் செய்து முடிக்கப்படும் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை  . திட்டத் செலவை மேலும் மேலும் அதிகரித்து திட்டத்தை ஒருவழியாக முடித்தாலும் முழுமையாகப் பயன்தருவதில்லை.
ஆட்சியாளர்கள் பதவி ஏற்றவுடன் ஊழல் செய்வது மக்களுக்குத் தெரியாமலிருக்க வரி வருவாயை அதிகரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். .நிதி ஒதுக்கீடு பெறுவதற்குத் எதுவாக பல திட்டங்களை முன் மொழிவார்கள்..இவர்களுக்கு ஊழல் செய்ய அரசாங்கத்தின் பாதுக்காப்பு அம்சங்களை பலமாக்கிக்  கொள்கின்றார்கள்.. காவல் துறையும் நீதித்துறையும் ஆட்சியாளர்களின் பொறுப்பில் இருக்கும் வரை இந்த மறைமுகமான பாதுகாப்பு இருக்கவே செய்யும். .இது மக்களுக்கு ஒரு சட்டம் , அரசியல்வாதிகளுக்கு வேறொரு சட்டம் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்துவதால் , சட்டம் மற்றும் காவல் துறைகளின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சீர்கெட்டு வருகின்றது. இது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலை கணப்பொழுதில் உருவாக் கிவிடும்  அபாயத்தை  கொண்டுள்ளது  என்பதை ஒரு சிலரே புரிந்து வைத்திருக்கின்றார்கள்;
கோயில் சொத்து கொள்ளையயடிக்கப்பட கோயில் நிர்வாகிகள் போட்டி போடுகின்றார்கள். கடவுளுக்குச் சொந்தமான அசையும் மற்றும்  அசையா சொத்துக்களை கள்ளத்தனமாக தனதாக்கிக் கொண்டுவிடுகின்றார்கள்.உயிருள்ள மனிதனே ஒன்றும் கேட்கமுடியாத போது ,உயிரற்ற கற்சிலையான கடவுள் எப்படி க் கேட்பார் என்ற தைரியம்  ..இவர்கள் அடிக்கும் கொள்ளையைப் பார்த்து  கோயிலைப் சுற்றிப்பார்க்க வந்தவன் அங்குள்ள உண்டியலை உடைத்து உள்ளே உள்ள பணத்தை களவாண்டு செல்வது தப்பில்லை என்று நினைக்கின்றான் . குற்றம் குற்றங்களை வளர்க்கும் நிலையை இங்குமட்டுமல்ல எங்கும் பார்க்க  முடியும்.
வங்கிகளில் நடக்கும் மறைமுகமான ஊழல்களுக்கு அளவேயில்லை. வாடிக்கையாளர்களை அதிகரித்தும், புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தியும்  வருவாயை அதிகரித்துக் கொண்டாலும் செய்யும் ஊழலை மறைப்பதற்காக அபராதம், சேமிப்புக்கு வட்டி விகிதக் குறைப்பு, கடனுக்கு வட்டி விகித அதிகரிப்பு , கடமையின்றி சேவைக்கட்டணம் ,என்று   வாடிக்கையாளர்களிடமிருந்தே வசூல்  செய்வதை  வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் ..வாராக்  கடன் அரசியவாதிகளுக்கும் வங்கி மேலாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் மாதிரி. பினாமிகளுக்கு கொடுக்கப்படும் கடன் வாராக் கடனாகி இவர்களுடனையே ஐக்கியமாகி விடுகின்றது. கடன் கொடுத்து தள்ளுபடி செய்யும் போது  கடன் கொடுத்ததாக எழுதப்பட்ட  கணக்குகள் இவர்கள் மேற்கொள்ளும் ஊழலில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.. இதற்காகவே ஆட்சியர்கள்  நிதி ஒதுக்கீட்டை அதிகம் செய்வார்கள்.
அரசியல்வாதிகள் பெரிய பெரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது அனுமதி வழங்குவதற்கு ஒரு பெரிய தொகையை இலஞ்சமாக வாங்கி கொண்டுவிடுகின்றார்கள். இது பெரும்பாலும் வர்த்தகம் முடியும் நிலையில் கூட  வெளியில் கசிவதில்லை .ஆட்சி மாற்றத்தின் போது மட்டுமே விஸ்வரூபம் எடுக்கின்றது. என்றாலும் மறைமுகச் சமரசங்களினால் அவை சிறிது காலத்திற்குளாகவே மறைந்து போகின்றன.

Friday, January 8, 2021

ஊழல் ஒழிய வேண்டும் என்றல் அது வெறும் வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லை உண்மையில் அது அவ்வளவு சுலபமான செயலில்லை . கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடின்றி சமுதாயத்தில் ஊழல் பெரிதாக வளர நாமே காரணமாகிவிட்டோம்  .மக்களின் வாழக்கையோடு ஒன்றரக் கலந்து விட்ட ஊழலை ஒழிப்பது என்பது இன்றைக்கு எல்லோருக்கும் ரிய சவாலான காரியமாக மாறியிருக்கின்றது .
எல்லோரும் ஊழல் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றார்கள். எல்லோரும் ஏகமனதாக விரும்பும் போது ஊழல் எப்படி இன்னும் தடுக்கப்படாமல் இருக்கின்றது  என்ற வியப்புடன் அதை நுண்ணாய்வு செய்யும் போது நம்முடைய விருப்பத்தின் உண்மையான முகம் தெரியவருகின்றது  ஒவ்வொருவரும் மற்றவர்கள் செய்யும் ஊழலை மட்டுமே கருத்திற்கொண்டு எதிர்க்கிறார்கள் .அவர்கள் செய்யும் ஊழலை மிகத் தாராளமாக அனுமதித்துக் கொள்கின்றார்கள் .இவர்களுடைய எதிர்ப்புக் கூட அவர்கள் செய்யும் ஊழலை மூடி மறைப்பதற்காக மட்டுமே வெளிப்படுகின்றது . இந்தியாவில் கொஞ்சம் அதிகம் என்பதைத் தவிர  கொரோனா தொற்றுக் கிருமி போல  ஊழல் உலகெங்கும் விரிந்து பரவியிருக்கிறது .மேலும் இது  தொடர்ந்து விரியும்  பிரபஞ்சம் போல வியப்பின் உச்சியை  எட்டுமளவிற்கு விரிந்து கொண்டே செல்கின்றது. கொரோனாவை ஒழித்தாலும் ஒழித்துவிடுவார்கள் ஆனால் ஊழலை மட்டும் ஒழிக்க மாட்டார்கள் .
ஊழல் ஒழிப்பு  வெறும் வீரமான வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லை. ஒரு செயல் திட்டத்தால் மட்டுமே நிறைவேற்றமுடியும் . அதையும் தனி மனிதனோ அல்லது அரசாங்கம் தனித்தோ  ஈடுபட்டு வெற்றி காணமுடிவதில்லை .ஏனெனில் அது ஒரு மறைமுகமான ஒழுக்கமாக இருப்பதால் எல்லோரும் ஒன்றிணைத்து  செயல்பட்டாலே  அதை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.  தற்காலியப்  பயன் கிடைக்கின்றது என்பதற்காக அதில் சுயவிருப்பம் கொள்வதை ஒவ்வொருவரும் புரிதலோடு தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
ஊழலைக்  கட்டுப்படுத்தும் முயற்சியை யார் மேற்கொண்டாலும் அதை முழுமையாக  நிறைவேற்றக் கூடிய கடமையும்  அதிகாரமும்  அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனால் ஊழல் ஒழிப்பில் ஆட்சியாளர்கள்   நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும். ஏழை -பணக்காரன், பதவியிலிருப்பவன்- பதவியில்லாதவன்  என்ற பாகுபாடெல்லாம் ஊழல் ஒழிப்புக்கு எதிரானவை .ஊழல் ஒழிப்பு வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு முழு முதல் குற்றவாளி  அரசாங்கமே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் .  தலைக்கவசம் அணியாதவன் , வங்கியில் சேமிப்புக்கு கணக்கில் குறைத்த பட்ச பணம் இல்லாதவன் போன்றவர்களுக்கு கடுமையாக இருக்கும் சட்டம் ஊழல் புரிவோருக்கு அதில் பாதியளவு கூடக் கடுமையாக இல்லாமலிருப்பது அரசாங்கத்தின் தவறான ஊழல் கொள்கையையே படம் பிடித்துக் காட்டுகின்றது.

Wednesday, January 6, 2021

ஊழலற்ற சமுதாயம் -6
அரசுப் பணியில் இருந்து கொண்டு வேறொரு தொழிலை தொழிலைத் தனக்காகத் தொடங்குபவர்கள் பெரும்பாலும் அவர்களுடைய மனைவி ,பிள்ளைகள் மற்றும் நெருக்கிய குடும்பத்தினர் பேரில் பதிவு செய்திருப்பார்கள். எனினும் தொழில் நிர்வாகம் ,முழுதும் இவர்களுடைய கையில் தானிருக்கும். இவர்களால் தொடங்கப்படும் தொழில் துறையில் புதிய இடர்பாடுகள் காணப்படுவதுண்டு.  படித்து முடித்த வுடன் வாய்ப்பும் திறமையும்  உள்ளவர்கள்  தைரியமாகத் தொழில் தொடங்கி தொழிமுனைவோர்களாக ஆகிவிடுகிறார்கள். தைரியம் இல்லாதவர்களே வேலை வாய்ப்புத் தேடி பணியில் அமர்கிறார்கள்.தொழில் தொடங்கத்  தைரியம் இல்லாதவர்கள் கையில் தவறான வழியில் பொருள் கிடைத்துவிட்டது என்பதற்காகத் தொழில் தொடங்கினால் அது நிச்சியமாக ஒரு குருட்டுத் தைரியமாகத்தான் இருக்கும் .தொழிலோடு தொடர்புடைய பல்வேறு இரகசியங்களைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களால் தொழிலில் தொடர்ந்து வெற்றிகரமாக ஈடுபடமுடிவதில்லை .
ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுவதற்கும் ,அதில் தடையில்லாத முன்னேற்றம் காண்பதற்கும் அக் குறிப்பிட்ட தொழிலில் தனித்த திறமையை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். போதிய திறமை இல்லாவிட்டால் அத்தகைய திறமைகள் உள்ளவர்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க  வேண்டும். தொழில் செய்வதற்கு நல்ல ஆளுமைத் திறன் அவசியம். ஆளுமைத் திறனின்றி வெறும் பணத்தாலேயே எல்லாப்பிரச்சனைகளையும் தீர்வு செய்துவிடமுடியும் என்று நம்பி தொழிலில் இறங்குபவர்கள்  இடைநிலையில் தடுமாறுகிறார்கள். .ஆளுமைத் திறன் என்பது உரிமையுள்ள அறிவு மட்டுமல்ல  அது ஒழுக்கம் மற்றும் உளவியல் சார்ந்த பல அம்சங்களை க் கொண்டுள்ளது. நல்லொழுக்கம் ,நேர்மை, வாய்மை, நேர்நதவறாமை , பண்புடைமை .பணிவு , கடமை தவறாமை , ஒருபாற்கோடாமை ,திட்டமிட்டு செயலில் ஈடுபடுதல் , சமுதாய நலன் காத்தல்  போன்ற பல்வேறு பொருண்மைகளை உள்ளடக்கியது .இவற்றையெல்லாம்  அனுபவத்தால் மட்டுமே வளப்படுத்திக் கொள்ள முடியும், பணத்தால் பெறவே முடியாது .
சம்பளத்திற்காக ஒரு வேலையையும் சம்பாத்தியத்திற்காக மற்றொரு வேலையையும்  ஒரே சமயத்தில் இருவேறு பணிகளில் ஈடுபடும்போது கவனக் குறைவு வெகு இயல்பாகிவிடுகின்றது . இது ஆளுமைத்  திறனை வெகுவாக மட்டுப்படுத்திவிடுகின்றது
தவறான வழியில் பொருளீட்டி  தொழில் தொடங்குவோர் தொழிற்சசாலையில் பணிபுரிவோர் காலப்போக்கில் நேர்மையானவர்களாக இருக்கமாட்டார்கள். முதலாளிகளின் ஊழல் பற்றிய விவரங்கள் அவர்களுக்கும் தெரிய வர , நேர்மையின்மை பற்றிக் கொள்ளும் தீயைப்போல சட்டெனெத் தொற்றிக்கொண்டு விடுகின்றது..அவர்களும் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புத் தேடிக்கொண்டிருப்பார்கள்.பெரும்பாலும் தவறான வழியில் சம்பாதித்த பணத்தால் தொடங்கப்பட்ட தொழிற்சசாலைகளில் பணியாற்றும் தொழிலாளிகள் முதலாளிகளுக்கு உள்ளெதிரிகளாகவே இருப்பார்கள். எப்போது முதலாளியைக் காலைவாரிவிடுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.இதனால் முதலாளி - தொழிலாளி உறவு மேம்படு வதில்லை . .இது தொழில் வளர்ச்சியைப் பாதித்து நஷ்டத்தை ஏற்படுத்த ஒரு வலிமையான காரணமாக இருக்கின்றது .
 .  
ஊழலற்ற சமுதாயம் -5
ஒரு சிலர் பணியிலிருந்து கொண்டே வேறொரு தொழிலில் ஈடுபடுவார்கள். பொதுவாக தனியார் துறையில் வேலை செய்பவர்களை விட அரசுத் துறையில் வேலை செய்பவர்களே தொழில் அதிபராக  பிற தொழில் தொடங்குவதையும்  இரண்டாவது வேலையில்  ஈடுபடுவதையும்   செய்கின்றார்கள். இதற்குக் காரணம் முதலீடு செய்வதற்குத்  தேவையான கூடுதல் பணத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பணிபுரியும் அலுவலகத்திலேயே உருவாக்கிக் கொண்டு  பயன்படுத்திக்கொள் கின்றார்கள். தட்டிக் கேட்க யாருமில்லாததால் அரசுத் துறைகளில் ஏறக்குறைய அனைவருமே ஏதாவதொரு தவற்றை மறை முகமாகச்  செய்பவர்களாக இருக்கின்றார்கள். தவறு செய்ய  வாய்ப்புக் கிடைக்காதவர்களே நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள், நல்லவர்கள் என்று மற்றவர்களால் நினைக்கப்படுகின்றார்கள். இது தலைமையிலிருந்து அடிமட்ட ஊழியர்கள் வரை வேறுபாடின்றி காணப்படுகின்றது.
புதிதாகத் தொழில் செய்வதற்காகச் சிலர் , தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வதற்காகச் சிலர் லஞ்சம் வாங்குவதாகக் கூறுவார்கள். தொழில்  பற்றிய தொழில்நுட்ப  அறிவு சிறிதும் இல்லாமல் தொழில் தொடங்குவது இழப்பில் தான் முடியும்.தொழில்  தெரியாமல் தொழில் தொடங்குவது ஒரு முட்டாள்தனமான செயல் . அதைத்  தவறான வழியில் ஈட்டிய பொருளால்  தொடங்குவது தவறான செயல் மட்டுமல்ல  தண்டனைக்குரிய குற்றமுமாகும். 
அரசியல்வாதிகள். அரசு உயர் அதிகாரிகள் ,வருவாய்த் துறை  அலுவலர்கள் எல்லோரும்  செய்யும் ஊழல், வாங்கும் இலஞ்சம் , செய்யும் தவறுகள் போன்றவற்றால் கிடைக்கும் கூடுதல் வருவாயை தொழிலில் முடக்கிவைக்கின்றார்கள் . தொழில் தெரியாதவர்கள் , பெரும்பாலும் வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைக்கின்றார்கள். உள்நாட்டு வங்கிகளில் பணத்தை கோடிக்கணக்கில் போட்டு வைத்தால் எங்கே தன் தகுதிக்கு மீறிய சொத்துக் குவிப்பைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் இப்படிச் செய்கின்றார்கள். இவர்கள் பெரும்பாலும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புள்ள, வெளிநாடுகளில் நெருங்கிய உறவினர்களைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களாக இருக்கின்றார்கள் அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் உள்நாட்டில் சொத்துக்களை வாங்குகின்றார்கள். சொத்துக்களின் விலை ஏற்றத்திற்கு இவர்களே காரணமாக இருக்கின்றார்கள். பினாமி என்று வார்த்தை இவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
பிள்ளைகள் செய்யும் தவறுகளைப் பெற்றோர் திருத்த வேண்டும் மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர் திருத்தவேண்டும். அது போல தவறுசெய்யும் ஊழியர்களை உயர் அதிகாரிகள் திருத்தவேண்டும். உயர் அதிகாரிகள் செய்யும் தவறுகளை நாட்டை ஆள்பவர்கள் திருத்த வேண்டும் .நாட்டை ஆள்பவர்களே தவறு செய்பவர்களாக இருந்தால் திருத்த யாருமின்றி  குற்றங்கள் பெருகவே செய்யும். எனவே தவறுகள் செய்யாதவர்களிடம் நாட்டை ஆளும் உரிமையைக் கொடுக்கவேண்டும் என்பதை மக்கள் உணரவேண்டும்.உயர் அதிகாரிகளின் கண்காணிப்பு இருந்தால் அலுவலர்களிடம் காணப்படும்  ஊழலையும் ,இலஞ்சத்தையும்  கட்டுப்படுத்திவிடமுடியும். ஆட்சியாளர்களின் கண்காணிப்பு இருந்தால் உயர் அதிகாரிகளிடம் காணப்படும் இலஞ்சத்தையும் ,ஊழலையும் தடுக்க முடியும். இதெல்லாம் ஆட்சியாளர்கள் ஊழல் செய்யாத நேர்மையாளர்களாக இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆனால் அவர்களே அத்  தவறுகளைச்  செய்வதால் அமைப்பு ரீதியிலான கண்காணிப்பு  மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒப்புக்குச் செய்யப்படும் ஒரு செயலாகவே இருக்கும். .மேலும் பெரும்பாலான கண்காணிப்பாளர்கள் பணத் திற்கும் ,போதைக்கும் அடிமையாகி அதை நிலைப்படுத்திக் கொள்வதற்காக தடுப்பதற்குப் பதிலாக ஊக்குவித்து விடுகிறார்க்ள
 
 அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று நம் முன்னோர்கள் இதை அன்றைக்கே சுட்டிக்காட்டத்  தவறவில்லை   கேப்டன் இல்லாத கப்பல் கரை சேருவதில்லை.கப்பலில் இருப்பவர்கள் மடிந்த பின்பு கரை சேருவதால் பயனுமில்லை
கண்காணிப்பு இல்லாத சமுதாயம் நலம் பெறுவதில்லை. கண்காணிக்கும் உரிமையுள்ளவர்கள் குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவேண்டும்..அது அவர்களது கடமையுமாகும் .  அதனால் ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பதைவிட மற்றவர்கள்  தன்னைக் கண்காணித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கண்காணிப்பதையே விட்டுவிடுவார்கள்.  பொது நலத்தை விட சுய நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து  இவர்கள் பணியில் செய்வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்யமாட்டார்கள் .தான் செய்யும் தவறுகளை யாரும் கண்காணித்து கண்டுபிடித்துவிடக்கூடாது என்ற கள்ளத்தனத்தோடு மிகுந்த கவனமாகச் செயல்படும்போது பிறர் செய்யும் தவறுகளைக் கண்காணிக்கத் தவறிவிடுகிறார்கள். கண்காணித்தால் தானும் கண்காணிக்கப்படுவோம் ,தடுத்தால் தானும் தடுக்கப்படுவோம் என்ற உள்ளார்ந்த உணர்வு அவர்களைச் செயலிக்கச் செய்துவிடுகின்றது. மக்களைத்  திருப்திப்படுத்துவதற்காக ஒப்புக்குக் கண்காணிப்பது போல நடந்துகொள்வார்கள். தவறுகளைக் கண்டுகொள்வதில்லை. .களவாணிகள் எப்போதும் களவாணிகளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு செயல்படுவார்கள். சுய தொழிலில் மேற்கொண்டு செய்வேண்டிய முதலீடுகளுக்கும்  , இடையிடையே ஏற்படும் இழப்புக்களை நேர் செய்யவும்  கடமை தவறி  பொருள் சம்பாதிக்கும் பழக்கத்தை கூட்டணி அமைத்துக் கொண்டு  விரிவு படுத்திக் கொண்டிருப்பார்கள்.
 
ஒரு தவறான செயல்  தடுக்கப்படாது  சமுதாய மக்களிடம் பரவுமானால் அச் செயல் ஒரு தொற்று நோய் போல விரைந்து பரவிவிடும் . கண்காணிக்கப் படும்  குற்றங்கள் ஒரு கூட்டுத் தொடரிலும் கண்காணிக்கப்படாத  குற்றங்கள் ஒரு பெருக்குத் தொடரிலும்  செல்வதால் கண்காணிக்கப்படாத குற்றங்கள்  ஒரு நிலையில் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அது சீர்த்திருத்த முடியாத சமுதாயத்தை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும்

Tuesday, January 5, 2021

ஊழலற்ற சமுதாயம் –4

 

 

யாரும் வறுமை காரணமாக லஞ்சம் வாங்குவதில்லை.. ஆடம்பரமான உல்லாசவாழ்க்கையில் மயக்கம் கொண்டு லஞ்சம் வாங்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்பவர்களே அதிகம் கொடுக்கப்பட்ட உழைப்பையும் செய்யாமல் , அளவுக்கு மீறிய தீனியை உண்பதால் உடலில் கொழுப்புக்கள் படிந்து தொந்தியும் தொப்பையுமாகத் தோன்றுவார்கள். வெளிப்படைத்தன்மை இல்லாததால் அவர்களுடைய பேச்சையும்  செயலையும் புரிந்து கொள்ளமுடியாது. எதாவது விவரம் கேட்டால் பணிவின்றி எரிந்து விழுவார்கள். மனைவி மக்களுக்குக் கூட  உண்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் . தன்னுடைய எண்ணத்தையும் செயலையும் மூடி மறைக்க நேரத்திற்குத் தகுந்தார் போல மாறி மாறி பேசும் பழக்கம்  இருக்கும். உல்லாச வாழ்க்கையில் மேலும் மேலும் ஈடுபட அவர்களுடைய தேவை அதிகமாகி பெரிய தவறுகளையும் ,குற்றங்களையும் செய்யத் துணிவார்கள். தான் மாட்டிக்கொண்டுவிட்டால் தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு சில உயர் அதிகாரிகளுடன் தொடர்பைப்  புதுப்பித்துக் கொண்டு  அவ்வப்போது வாழ்த்து தெரிவிப்பார்கள், பண்டிகைக்  காலங்களில்  பரிசுப் பொருட்கள் ,இனிப்புத் திண்பண்டங்களை அன்பளிப்பாய் வழங்குவார்கள்.  அவர்களுடைய வீட்டு விழாக்களில்  சொந்தக்காரர் களையும் விஞ்சி ஒரு உழு மாடுபோல வேலை செய்வார்கள். உல்லாச வாழ்க்கைக்காக இலஞ்சம் வாங்குவோர்களால் சமுதாயத்தில்  உளவியல் பாதிப்புக் களினால்  ஏற்படும் மனநிலை மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சியை பெரிதும் குன்றிப்போகச் செய்கின்றது. நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சிதான்.  அது வேறு இது வேறு அல்ல.

 

இலஞ்சம் வாங்குவோர் கடமையை விலைக்கு விற்கிறார்கள் . தவறான அனுமதி கொடுத்து  கடமையில் தவறுசெய்வதற்கு அதிக இலஞ்சம் என்பதால் அதைச் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். அரசாங்கம் மக்களுக்குக்  கொடுக்கவேண்டிய  அனுமதி  இவர்களுடைய கையில் ஒரு விலை பொருளாகிவிடுகின்றது இதற்கு MRP  என்று எதுவும் இல்லாததால்  ஒவ்வொரு நாளும் ஒரு விலை , ஒவ்வொருவருக்கும் வேறு விலை

 

 இவர்களுக்கு இலஞ்சம் கொடுப்பதற்கு  இலஞ்சம் கொடுப்பவர்கள் தவறான வழியில் பொருள் சம்பாதிக்க வேண்டியிருக்கின்றது. அல்லது லஞ்சம் கொடுத்ததால்  அதை மீட்டுப் பெற வேண்டிய கட்டாயத்தால் தவறு செய்ய வேண்டியிருக்கின்றது. மக்கள் உடல் தகுதிக்கு மீறி  அதிகம் உழைக்க வேண்டியிருக்கின்றது. இதனால் திறமையினால் பொருள் சம்பாதிக்கும் நல்வழியை விட்டுவிட்டு ,தவறான வழிமுறைகளினால் பொருள் ஈட்டும் முறையைப் பின்பற்ற விருப்பம் கொள்கின்றார்கள். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம்  காணப்படவில்லை.. இந்நிலை கல்வி யறிவில் கொண்டுள்ள நம்பிக்கையை  ஏறக்குறைய எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள் என்பதை த் தெரிவிக்கின்றது. சம்பாதிக்க கல்வியறிவு , தனித்திறமை ,உடல் உழைப்பு எதுவும் தேவையில்லை ஊழல் ,செய்தும் ,இலஞ்சம் வாங்கியும் , ஏமாற்றியும்  சம்பளத்தை விடப் பலமடங்கு அதிமாகச் சம்பாதிக்க முடியும் என்பதை நிலைப்படுத்த  மக்கள் நல்வழியை விட்டுவிட்டு அல்வழியைப் பின்பற்றி ஒழுகி சமுதாய நலனைச் சீர்குலைக் கின்றார்கள் . லஞ்சம் வாங்குவோர் உழைக்காமல்  உல்லாசமாய் வாழ்வதும், இலஞ்சம்  கொடுப்போர்  கடுமையாக ,உழைத்துக்  கஷ்டப்பவதும் சமுதாயத்தில் காணப்படும் ஒரு இழிநிலை. மக்களின் மனநிலையை இது  மிக எளிதில் பாதிக்கின்றது . மேலும் இப் பாதிப்பு விரைந்து மக்களிடையே  பரவுவதற்கும் காரணமாக அமைத்து விடுகின்றது. நாட்டின்  வளர்ச்சி மக்களின் ஆக்கத் திறமைகளினால் இல்லாது ஆகாத திறமைகளினால் அமைந்தால் அது போலித்தனமான வளர்ச்சியாக மட்டுமே இருக்கும். இந் நிலை ஆட்சியாளர்களுக்கும்  , பொருளாதார வல்லுனர்களுக்கும் தவறான புள்ளிவிவரங்களைத் தருவதால் . நாட்டின் உண்மையான பொருளாதார நிலையை மதிப்பிட முடியாதிருக்கிறது. தவறான மதிப்பீடுகள் தவறான முன்னேற்றத்திற்கே வழிகாட்டுகின்றது . அதனால் தான் நிறைவேற்றப்பட்ட எந்தத் திட்டமும் முழு வெற்றியைத்  தந்து மக்களுக்குப் பயனளிக்கவில்லை .

 

இலஞ்சத்தால் கூடுதல் பொருள் ஈட்டுவோர் , அதைப் பெரும்பாலும் தவறான வழிகளில் செலவு செய்வதால் நாட்டில் இனமறிந்து கொள்ளமுடியாத  குற்றங்களும் குற்றவாளிகளும் பெருக்கிக் கொண்டே போகின்றார்கள் . பணத்தை வெளிநாடுகளில் முடக்கி வைப்பதால் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குக் கிடைக்கும்  நிதி குறைவாகின்றது. இலஞ்சம்  வாங்குவோர் குடும்பத்தில் இலஞ்சம் வாங்குவதை தெரிந்திருந்தாலும்  தெரியாவிட்டாலும் அதைப் பெரும்பாலும் எதிர்ப்பதில்லை. மாட்டிக்கொள்ளாமல் செய்யுமாறு மட்டுமே அறிவுரை கூறுவார்கள். இதற்குக் காரணம் சமுதாயத்தில் மற்றவர்களை விட  ஒவ்வொருவரும் ஒருபடி மேலாக வாழவேண்டும் என்று நினைப்பதுதான்   . இது  ஒரு போட்டி மனப்பான்மையாக  மக்களிடையே  ஏற்படுத்தி  சுய தூண்டுதலால் எல்லைதாண்டிப் போவதால் குற்றத்தின் பரிணாம வளர்ச்சி  முடுக்கப்படுவதுடன் , இயல்பு நிலையை ஒரு காலத்திலும் மீட்டுப்பெறமுடியாத ஒரு போக்குத் தன்மையை நிலைப்படுத்தி விடுகின்றது..      .   

 


Monday, January 4, 2021

ஊழலற்ற சமுதாயம் –3

 

 

இலஞ்சத்தை நம்பி அகலக்கால் வைத்ததால் கடன் அதிகரிக்கின்றது ,.ஒரு வழியில் கை நிறையக் காசு வந்தாலும் மறுவழியில் அதே வேகத்தில் செலவாகி பொருள் பற்றாக்குறை நீடித்கின்றது . குற்றம்  செய்யும் போது தீயவர்களே கூட்டாளிகளாக வருகின்றார்கள்.  கூட்டாளிகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால் வரவில் ஒரு பகுதியை அவர்களுக்காகச் செலவழிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது என்றைக்காவது ஒரு நாள் அவர்கள் கையில் ஒரு வலுவான ஆதாரம் சிக்கிவிட்டால் அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டே பயமுறுத்தி தொடர்ந்து பணம் பறிப்பார்கள் . அதற்காகவே தீய பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுப்பார்கள்.  தீய வழியில் வரும் பணம் தீயவழியிலேயே போகும் என்ற ஆன்றோர் வாக்கை  மெய்ப்பிக்கும்  ஒரு சான்றாகத் திகழ்வார்கள். அடுத்தடுத்து வரும் பிரச்சனைகளைச்  சமாளிக்க வேண்டியிருப்பதால்  குடும்பத்தில் கொண்டுள்ள அக்கறை குறைய குடும்ப நலன் பாதிக்கப்படும், என் நண்பருடைய வாழ்க்கையும் இப்படித்தான் சீரழிந்து போனது. என்றைக்கு இலஞ்சம் வாங்கும் பழக்கத்திற்கு அடிமையானரோ அன்றைய தினத்திலிருந்து என் நண்பருடைய  வாழ்க்கை படிப்படியாக சீரழிந்து போனது . குடும்பம் மகிழ்ச்சியை இழந்து ஒவ்வொருநாளும் ஒரு ஆபத்தை எதிர்நோக்கி கவலைப்பட்டுக்கொண்டிருந்தது. இன்றைக்கு போலீஸ் விசாரணை நீதிமன்றம்  எனத் தினமும் அலைந்து கொண்டிருக்கின்றார் .  உறவினர்கள் மற்றும் சொந்தங்களின் பேச்சும் முறிவும் வாழ்க்கையின் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது . ஒரு கட்டத்தில் அவர் தற்கொலைக்குக் கூட முயற்சித்து தோற்றுப்போயிருக்கின்றார்., 

 

எண்ணங்களுக்கு ஏற்ப வசப்படாத வசதிகளைப் பெருக்கிக் கொள்வதை விட  வசப்படும் வசதிகளுக்கு ஏற்ப எண்ணங்களுக்கு ஒரு வரம்பை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. என்ற பொன்மொழிக்கு என் நண்பருடைய  வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. குடும்பத்தின் மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாகத் தொலைத்துவிட  இந்த இலஞ்சம் ஒரு காரணமாக இருக்கின்றது என்பதை பாதிப்பு கடுமையாக இருக்கும் போதும் கூட ஊழல் புரிவோர் உணர்வதேயில்லை.

Sunday, January 3, 2021

ஊழலற்ற சமுதாயம் –2

 வறுமை காரணமாக ஒருவர் தவறு செய்கின்றார் என்றும் ,தவறு செய்வதற்கு வறுமைதான் காரணம் என்றும் சொன்னால்  தவறு செய்யாமலிருக்க அந்த வறுமையை எப்படிப் போக்குவது என்று சிந்தித்துச் செயல்படுவது ஒரு சிறந்த சமுதாயத்தின் கடமையாகும் . இது அரசின் முதண்மைக் கடமைகளுள் ஒன்றுமாகும்  

 

ஒரு வேலையில் இருந்துகொண்டு அதற்கான ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு வாழும் போது வறுமை எப்படி வந்தது ? அந்த வறுமைக்கு யார் பொறுப்பு ? எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் வறுமை இயற்கையானதில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் . வறுமையின் ஆதி  மூலத்தை ஆராயும் போது இது தெளிவாகப் புரிய வருகின்றது .

 

ஒருவரின் வறுமை மூவேறு காரணங்களினால் வரலாம். முதலாவது அவரது திறமையின்மையால் வரும் இழப்பு .உரிமையுள்ள கல்வி,, ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தனித்த திறமை, ,தொழில் நுட்பம், ஆக்கப்பூர்வமான உழைப்பு போன்றவை ஒருவது திறமைகளை வெளிப்படுத்தும். வளர்த்துக்கொண்ட திறமைகளைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டாலும் , அல்லது இழந்துவிட்டாலும் வறுமை விழித்துக்கொண்டு விடும். இரண்டாவது வரவுக்கு மீறி செலவு செய்யும் பழக்கத்தை  வழக்கப்படுத்திக் கொள்வதால் வருவது. கவர்ச்சி கரமான  விளம்பரங்களின் தாக்கத்தினால் இன்றைக்குப் பலரும் தேவையின்றி தேவையில்லாத பொருட்களை வாங்கி  தேவையான பொருளைத் தேவையான நேரத்தில் வாங்கமுடியால் கஷ்டப்படுகிறார்கள். ஆடம்பரத்தில் கொண்டுள்ள மோகத்தாலும் , உல்லாச வாழ்க்கையில் கொண்டுள்ள உள்ளார்ந்த விருப்பத்தாலும்  தவறான செலவினங்களைத் தவிர்த்துக் கொள்ளாததாலும்,தகுதிக்கு மீறிய வாழ்க்கை முறையில் ஈடுபடுவதாலும்  செலவு வரவுக்குள் அடங்குவதில்லை. வறுமை மிகக்  குறுகிய காலத்திற்குள் நிலைகொண்டு விடுகின்றது .மூன்றாவது  மது . மாது  போன்ற தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி ஈட்டிய பொருளை வீணாக்குவதால் வரும் வறுமையாகும். இப்பழக்கம் உரிமையான திறமைகளை விழுங்கிவிடுவதால் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி  வாழ்க்கையில் அனைத்தையும் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும். இந்த மூன்று காரணங்களிலும் வறுமைக்கு புறக்காரணம்  என்று எதுவுமேயில்லை. பணியில் இருந்து ஊதியம் பெறும் போது வறுமை காரணமாக ஒருவர் தவறு செய்வதாகக் கூறினால் உண்மையில் அருவருடைய வறுமைக்கு அவர் மட்டுமே  காரணமாக இருக்கின்றார்.

 

வறுமை தீண்டாமலிருக்க பொருளீட்டும் திறமைகளுள் ஒன்றை அறிந்து  பயன்படுத்தத் தெரிந்திருக்க  வேண்டும். இத்திறமைகளைப்  கல்வியாலும்  பயிற்சியாலும் பெறமுடியும் .எவ்வளவுக்கெவ்வளவு திறமைகளை வளர்த்துக்கொண்டோமோ அவ்வளவுக்கவ்வளவு ஒருவர் பொருளீட்டும் வாய்ப்பைப் பெறுகின்றார் .வறுமையை விரட்ட எவ்வளவு பொருளீட்டவேண்டுமோ  அவ்வளவு திறமையை வளர்த்துக்  கொள்ள வேண்டியது ஓவ்வொருவரின் இளமைக்காலக் கடமையாகும் .. அல்லது எவ்வளவு திறமை இருக்கின்றதோ அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் .. வாழ்க்கை தகுதிக்கு ஏற்ப அமைகின்றது. ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கு ஏற்ற வாழ்க்கையையே வாழ வேண்டும் என்பது இயற்கையின் அனுமதி .

 

லஞ்சம் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளைச் செய்வதில்லை என்பதை விட  செய்யாமலிருந்து காலப்போக்கில் தங்கள் தனித் திறமைகளை நிரந்தரமாக  இழந்துவிடுகின்றார்கள் என்பதே உண்மை. திறமைக் குறைவு காலப்போக்கில் திறமை இழப்பாகிவிடுகின்றது. அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை சம்பளத்தால் தீர்மானிக்கப்படுவதை விட வாங்கும் லஞ்சத்தால் தீர்மானிக்கப்ப ட்டுவிடுகின்றது. லஞ்சமின்றி அவர்களால் வாழவே முடியாது என்ற நிலைக்கு ஆளாகிவிடுவதால் எந்த அறிவுரையும் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

 

லஞ்சம் வாங்கி கூடுதல் பொருளீட்டுவதால் தகுதிக்கு மீறிய வாழ்க்கையும் , ஆடம்பரச் செலவு செய்யும் புதிய பழக்கத்தால் வரவிற்கு மீறிய செலவும்  சம காலத்தில் ஏற்படுவதால் வறுமை வாழ்க்கையில் சட்டெனெ உட்புகுந்துவிடுகின்றது . வறுமையை விரட்டித் தொடர்ந்து ஆடம்பரமாகவே வாழ கூடுதல் லஞ்சம் வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். கூடுதல் லஞ்சம் நாட்டின் விலைவாசி ஏற்றத்திற்கு ஒரு காரணமாக அமைகின்றது. ஏனெனில் லஞ்சம் வாங்குபவர் பொருளை வாங்கவேண்டும் என்று விரும்பினால் என்ன விலை கொடுத்தும் வாங்குவார் அதற்காக லஞ்சம் கொடுப்பவர்கள் கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருப்பதால் அவர்கள் அவசியமாக வாங்கவேண்டிய பொருளை  விலைகொடுத்து வாங்கமுடியாது துன்பப்படுவார்கள். உண்மையில் லஞ்சம் வாங்குவோரின் போலித்தனமான வறுமை லஞ்சம் கொடுப்பவர்களின் உண்மையான வறுமைக்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது.