Thursday, October 31, 2013

Philosophy

தத்துவம்
ஈர்ப்பில்லாவிட்டால் கட்டுப்பாடான வாழ்க்கை முறை அமைவதில்லை.இது உயிர்ப் பொருளாக இருந்தாலும் அல்லது உயிரற்ற பொருளாக இருந்தாலும் உண்மையாக இருக்கிறது
ஈர்ப்பு என்பது ஒன்றில் கொள்ளும் ஆர்வம்,டுபாடு,ஆசை,பற்று எனலாம்
ர்ப்பு தனிமையில் அல்லது  ஒருமையில் விளைவதில்லை. இருமையில் ஏற்படுகின்றது. மனிதன் எதையாவது விரும்புகின்றான் என்றால் அவன் விரும்புவதற்கு பொருளொன்று வேண்டும்.அந்தப் பொருளும் மனிதன் விருப்பப்படுமாறு இருக்கவேண்டும் அப்பொழுதான் மனிதனுக்கும் அந்தப் பொருளுக்கும் டையே ஒரு ஈர்ப்பு ஏற்படும். பன்மையில் இந்த ஈர்ப்பு ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் சமநிலையில் தான் எந்த அமைப்பும் அல்லது வளர்ச்சியும்  நிலைப்புத் தன்மையுடன் அமையமுடியும் என்பது இயற்க்கை விதி. சமநிலையற்ற அமைப்புகளில் கட்டுப்பாடான இயக்கமுறை இல்லாததால் ஒன்று அது சமநிலையை நோக்கி இயங்க வேண்டும் அல்லது சீரழிந்து போகவேண்டும். முன்னது வளர்ச்சியின் ஒரு கட்டம்,முன்னேற்றம்; பின்னது அழிவு பின்னேற்றம்..
பிரபஞ்ச வெளியில் விண்ணுறுப்புக்களெல்லாம் இந்த ஈர்ப்பினால் ஒரு சமநிலையைப் பெற்று காலமெல்லாம் நிலைத்திருக்கின்றன. அப்போது அவை ஒன்றோடொன்று பகைத்துக் கொண்டு மோதிக் கொள்வதில்லை ஒவ்வொன்றும் தங்களுடைய இயக்கத்திற்கு மற்றவை தோன்றி இருத்தலை அனுகூலமாக்கிக் கொள்கின்றன.

அதைப்போல ர்ப்பிற்கு இரண்டு வேண்டும் ஒன்று நீ  என்றால் மற்றொன்று எது என்பதை நீதான் தேர்வு செய்யவேண்டும். நீ  விரும்புவது மற்றவர்களாலும் விரும்பப்படுகின்றது என்றால் சமநிலையோடு ஒத்துப் போகத் தெரிந்திருக்க வேண்டும் .அப்போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகளே சமுதாயம் முனோக்கி நடை போடுகின்றதா அல்லது பின்னோக்கிப் போகின்றதா என்பதை தீர்மானம் செய்யும்

Wednesday, October 30, 2013

Creative thoughts

Creative thoughts
உலக மக்களின் இனிய வாழ்க்கைக்கு பொன் விதியொன்று உள்ளது .பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களோ
தையே நீங்களும் பிறருக்குச் செய்யவேண்டும்.இது எவ்வளவுக்கெவ்வளவு கூடுதலாகச் செய்கின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாயம் வளம் பெறும்.நலமான சமுதாயமே வளமான தனிமனிதனின் வாழ்க்கை.

சேவை மனப்பான்மை உள்ள அரசியல்வாதிகளுக்குத் தங்கள் விருப்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உண்மையில் எவ்விதமான புறச்சூல்களும் உதவிகளும்தேவைப்படுவதில்லை. புறச் சூழலும் உதவியும் இருந்தால் மட்டுமே சேவை என்றால் அது சமுதாய நலம் தரும் சேவையாக இருக்கமுடியாது.

பதவி எதுவானாலும், சேவை செய்யும் மன்ப்பான்மை இல்லாவிட்டால் பதவிக்கும் கூட இழுக்கு
சேர்ந்து விடும். பட்டுச் சட்டை போட்டு உடல் முழுதும் சந்தனம் பூசியிருந்தாலும் விலக்கி வைக்கப்படும் தொழு நோயாளி போல மனதளவில் ஒதுக்கப்படுவார்கள்.
மறக்கமுடியாமல் ன்னிப்பது ன்னிப்பேயல்ல. பழியுணர்வை எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ள இது வழிவகுக்கும்..

மறக்க வேண்டும் என்பதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது வெவ்வேறு..மன்னித்து மறத்தல் என்பது பகை உணர்வை விட்டொழிப்பதற்குத்தான். எனினும் நம்மோடு தொடர்புடையவர்களிடம் தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருப்பது தவறல்ல.

Bhagavad Geetha

பகவத் கீதை-என் பார்வையில் 
இதயத்தாக்கம் (Heart attack) ஏற்பட்டு சில மாதங்கள் படுக்கையில் இருந்த போது எனக்கு பகவத்கீதை நூலொன்றை படிக்கக் கொடுத்தார் என் நண்பரொருவர். எனக்கு இலக்கியங்களில் டுபாடு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லையென்றாலும் அப்போது எனக்கு படிப்பதற்கும் எழுதுவதற்கும் நிறைய நேரம் கிடைத்தது. கையில் கிடத்த புத்தகங்ளையெல்லாம் படித்தேன்.கீதையையும் குறளையும் ஒப்பிட்டு 1996 ல்தெய்வீக கீதையில் திருவள்ளுவம்” என்னும் ஒரு நூலை எழுதி வானதிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டேன்.எனக்கு இந்த இரு நூல்களிலும் மிகுந்த புலமை இல்லையென்றாலும் அவற்றைத் தொர்ந்து படிப்பதையும் சிந்திப்பதையும் விரும்புகின்றேன்.

தத்துவங்களை கசடறக் கற்று அவற்றை மனம் ப்பி மனதார ஏற்றுக் கொள்ளும் போது மனத்தில் இனம் புரியாத ஒரு அமைதி ஏற்படுகின்றது. அறிவில் தானாகவே ஒரு தெளிவு திடீரெனத் தோன்றுகின்றது.அந்த அமைதியும் அறிவும் ஒருவனை மிக மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அந்த ண்ணத்திற்கு முன்னே செல்வச் செழிப்பும் ஆடம்பரமும் கேலிப் பொருளாகி விடுகின்றன.இந்த நிலை, பிரபஞ்ச வெளியில் எங்கும் காணப்படும் அமைதியைப் போல ,கடின உழைப்புக்கு  பின் வேண்டப்படும் ஓய்வைப் போல இருப்பதால் உடலும் மனமும் ஒன்றிணைந்து ஒத்தியங்கும் நிலைக்கு உள்ளாகின்றன. எழும் ண்ணத்திலும்,செய்யும் செயல்களிலும் பிழைகள் ஏற்படுவதில்லை.  வாழ்க்கையின் உண்மையான மெய்ப்பொருளை வெகு இயல்பாக உணரும் நிலைக்கு சென்றுவிட முடிகின்றது. பொருள் ரீதியாக ஒன்றுமில்லாவிட்டாலும் உலகை மட்டுமில்லை இந்த பிரபஞ்சத்தையே வென்றுவிட்ட ஆனந்தத்தில் திழைக்கின்றோம்.

பகவத் கீதைநான்’ என்ற அகந்தையை விட்டொழியுமாறு சொல்கின்றது. நான் என்ற வரம்பிற்குட்பட்டு உன்னை நீ எண்ணிக் கொள்ளும் போது உன் மனமும் அறிவும் ஒரு குறுகிய கட்டுண்ட எல்லைக்குள் சுருங்கி விடுகின்றன. ந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் மொத்த மனதுடனும் மொத்த அறிவுடனும் உன்னை நீ இணைத்துக் கொள்ளும் போது நீ பிரபஞ்சம் போல மிகுந்த,அளவில்லாத ஆற்றலுடையவனாகின்றாய்.அப்போது மனம் வலிமையும் உடல் அளவில்லாத திறமையையும் பெறுகின்றன.தனிமனிதனாக இருப்பதை விட சமுதாயத்தில் இருக்கும் போதுதான் பாதுகாப்பு அதிகமிருக்கின்றது என்று நாம் நினைக்கின்றோம், விலங்கினங்களும் அப்படித்தான் நினைக்கின்றன..