Saturday, October 16, 2021

short story

 விரல்கள்

 

 

மெ .மெய்யப்பன் 

 

ஒரு குட்டித் தீவிற்கு  சுற்றுலா வந்த பயணிக்கு   ஒரே ஆச்சரியமாக இருந்தது. கார் டிரைவர் ,ஹோட்டல் பணியாளர் சுற்றுலா வழிகாட்டி  போன்ற அனைவருக்கும் இடது கையில் ஒரு விரல் வெட்டப்பட்டு இல்லமால் இருந்தது . மாய லோகம் எனப்படும் அரண்மனைக்கு   அழைத்துச் செல்லும்போது .,வழிகாட்டியிடம் இது பற்றி கேட்டும் விட்டார் 

 

வழிகாட்டி தயக்கத்துடன் கூறினான். இங்கு திருடினால் அவர்களுடைய சுண்டுவிரலை வெட்டி விடுவார்கள் .மீண்டும் திருடினால் இரண்டாவது விரலையும் வெட்டி விடுவார்கள்.

 

மாய லோகத்தில்  சுற்றுலாப்பயணிகளுக்கு   அந்நாட்டின் அரசன் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ளலாம். விருந்தில் கலந்துகொண்டு விட்டு வழிகாட்டியுடன் ஹோட்டலுக்குத் திரும்பும் போது மனத்தைக் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டும் விட்டான்  " அரசன் கையுறையைக் கழட்டும் போது நான் கவனித்தேன் , அரசனின் இடது கையில் ஐந்து விரல்களும் இல்லையே.? அரசன் திருடினாரா  ? அப்படி என்ன திருடினார் ? " 

" ஷ் , சத்தமாகப் பேசாதீர்கள் . அரசர் அந்தப்புரத்தில் இருந்த அரசியாரின் தோழிகளைத் திருடிவிட்டாராம் . அதற்கான தண்டனையை நாட்டின் வழக்கப்படி அரசியார் கொடுத்துவிட்டாராம் "

  .