Wednesday, November 28, 2012

Sonnathum Sollaathathum-7சொன்னதும் சொல்லாததும் -7

புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் நாம் படிக்கும் பாடப் புத்தகங்களிலிருந்து தோன்றுவதில்லை பாடங்களைப் படிப்பதின் மூலம் நாம் வளர்த்துக் கொள்ளும் கற்பனை களின் வளமே அந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது. அந்தக் கற்பனையால் முடியாதது என்று எதுவும் இல்லை. அங்கு முடியாததும் முடியும், எட்டாத உயரமும் எட்டும், அனந்தம் கூட அங்கே ஒரு எண்ணக் கூடிய எண் தான் .

2011 -ம் ஆண்டு வேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்ற டேனியல் சசெக்ட்மன் (Daniel Schechtman ) னின் முயற்சிகள் இக் கருத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுபோல் இருக்கின்றன .24 ஜனவரி 1941 ல் இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் நகரில் பிறந்தவர். படிகம் போன்று தோற்றம் தரும் திண்மப் பொருளைக் கண்டுபிடித்ததற்காக நோபெல் பரிசை வென்றவர் .இயற்பியல்,வேதியியல்,மருத்துவம் போன்ற துறைகள் பல கிளைகளாக விரிந்து பலராலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் அதிகமாக தெரிவிக்கப்படுவதால் ,பொதுவாக ஒவ்வொரு துறையிலும் இரண்டு அல்லது மூன்று சாதனையாளர்களுக்கு நோபெல் பரிசை பகிர்ந்து அளிப்பார்கள் .2011 ல் வேதியியலுக்கான நோபெல் பரிசு டேனியல் சசெக்ட்மன்னுடைய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் கருதி அவருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"படிகம் போலத் தோற்றம் தரும் படிகம் இல்லை,விஞ்ஞானிகள் போலத் தோற்றம் தரும் விஞ்ஞானிகள் மட்டுமே இருக்கின்றார்கள் " என்று இரு  நோபெல் பரிசு பெற்ற (வேதியியல் மற்றும் சமாதானம் ) லினஸ் பாலிங், டேனியல் சசெக்ட்மன்னுடைய கண்டுபிடிப்பை மறுத்துக் கூறினார்.

 இது போன்று இயற்பியல் பண்புடைய புதிய திண்மப் பொருளைக் கண்டுபிடித்த போது அதை யாரும் நம்பவில்லை. அவருடன் இருந்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூட இது இயலாதது என்றே நினைத்தார்கள் .ஆனால் காலம் செல்லச் செல்லஅவருடைய கண்டுபிடிப்பின் உண்மையை அறிந்துகொண்டார்கள் .கற்பியலான படிகங்கள் (Quasi crystals )தனிச் சிறப்பான இயற்பியல் பண்புகளைப் பெற்றுள்ளன -கடினமாகவும் ,உடைந்து நொருங்கக் கூடியதாகவும் வழுவழுப்பாகவும் ,பல உலோகங்கள் போலன்றி மின் கடத்தாப் பொருளாகவும் இருக்கின்றன. வரையறுக்கப்பட்ட ஒரு பாங்கில் அணுக்கள் திணிக்கப்பட்டிருந்தாலும் இயல்பான படிகங்களில் காணப்படுவதைப் போன்று கட்டமைவுப் பாங்குகள் தொடர் வரிசையில் தோன்றி யிருப்பதில்லை.இவை புதிய பயன்களை உலகிற்கு வழங்கி இருக்கின்றன,

காலத்தால் நான் கற்றுக்கொண்டது ஒரு முக்கியமான பாடம் -" ஒரு நல்ல விஞ்ஞானி அடக்கமாக எதையும் உற்றுக் கவனிப்பவராக இருப்பார் . வெறும் புத்தகத்தை மட்டுமே படிப்பவராக இருக்க மாட்டார் " என்று டேனியல் சசெக்ட்மன் கூறிய கருத்து இளைய தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது..

இயற்கையே விஞ்ஞானத்தின் மூலம் .எவர் இயற்கையை நுட்பமாய் ஆராயகின்றார்களோ அவர்களே விஞ்ஞானத்தில் சாதனை படைக்கின்றார்கள் என்ற பேருண்மைக்கு இவருடைய அறிவியல் வாழ்கை நமக்கு ஒரு பாடம் .

Monday, November 26, 2012

Kavithai


திருந்த ஒருவர் தோன்ற வேண்டும்

தப்புத் தப்பாய் தாய்மொழி பேசினேன்

திருத்தம் செய்ய பெற்றோர் ருந்தனர்  

கோணல் கோணலாய் எழுத்தை எழுதினேன்

திருத்தம் செய்ய  குரு ருந்தார்

மிதி வண்டி பழக கீழே விழுந்தேன்

திருத்தம் செய்ய பழக்குனர் இருந்தார்

சின்னத் தப்புகள் நிறையச் செய்தேன்

திருத்தம் செய்ய சான்றோர் இருந்தனர்.

கல்லாது விடைகளைத் தப்பாய் தந்தேன்

திருத்தம் செய்ய ஆசிரியர் இருந்தார்

பருவத்தில் ஒழுக்கம் தவறி நடந்தேன்

திருத்தம் செய்ய பண்பாளர்கள் இருந்தனர்.

இல்லறத்தில் பொல்லாமை செய்யத் துணிந்தேன்

திருத்தம் செய்ய இல்லாள் இருந்தாள்

வீதியில் வண்டியை வேகமாய் ஓட்டினேன்

திருத்தம் செய்ய காவலர் இருந்தார்

தேர்தலில் ஜெயிக்க பிறவழி முயன்றேன்

திருத்தம் செய்ய அதிகாரி இருந்தார்

அரசியலில் நுழைந்து அனைத்தும் செய்தேன்

திருத்தம் செய்ய அங்கே யாருமில்லை

திருந்தவே முடியாத சமுதாயம் இருந்து

காலத்தால் சீரழிந்து போனதே சரித்திரம்

திருந்துவோர் தாங்களாய்த் திருந்தா விட்டால்

திருத்தம் செய்ய வழியே இல்லை  

Cartoon


கார்ட்டூன்

இங்குமொரு சமரசங்குலாவும் இடம்  

ஐயா ,செயின்ட் ஜான் ஸ்கூல் எங்கிருக்கு ?

ஜாகிர் ஹுசைன் வீதியில் இருக்கு .

ஐயா ஸ்கூல் முதல்வர் ராமகிருஷ்ண ஐயர் இருக்காங்களா ?

ஐயா,வணக்கமுங்க.என் பையனை ஒன்னாங் கிளாசிலே சேர்க்கனுமுங்க.

அப்படியா ,பையன் பெயர்

முஸ்தபா

பையன் அப்பா பெயர்

செபாஸ்டியன்

பையன் அம்மா பெயர்

சரஸ்வதி

கலப்புத் திருமணமா ?

ஆம்

முஸ்தபா எப்படி ?

அது எங்க அப்பா வச்ச பேரு

உங்க அப்பா பேரு என்ன ?

மொகமத் இஸ்மாயில்

உங்க அம்மா பேரு என்ன ?

கிறிஸ்டினா

தொழில்முகவரி

இலக்குமி பிரிண்டிங் பிரஸ்

மேரி மாதா வீதி

இஸ்மாயில் புது நகர்

முகவரி

இயேசு இல்லம்

111 , அப்துல் கரீம் வீதி ,

கண்ணதாசன் நகர்

சமத்துவபுரம், நல்லூர்

Saturday, November 24, 2012


விண்வெளியில் உலா

கரடியின் முன் மற்றும் பின்னங்கால்களுக்கு இடையில்,அதாவது பீட்டா(β) மற்றும் காமா(γ) அர்சா மேஜோரிஸ் விண்மீன்களுக்கு இடையில் 6.5 ஒளிப்பொலிவெண் கொண்ட ஒரு சிறிய விண்மீன் உள்ளது. கூர்மையான பார்வை உள்ளவர்களால் மட்டுமே இதைப் பார்க்க முடியும்.எனினும் பைனாகுலரில் இது தெளிவாகத் தெரிகிறது. இது 1810 ல் குரூம் ப்ரிட்ஜ் (Groombridge) என்ற வானவியலாரால் இனமறியப்பட்டு 1830 என்று முகவரி யிடப்பட்டது.இது மஞ்சள் நிறங் கொண்ட,சூரிய ஒளியில் 7 ல் ஒரு பங்கு ஒளியைச் சிந்துகின்ற மிகச் சிறிய அளவிலான ஒரு விண்மீன். புறத் தோற்றத்தில் ஒரு சாதாராணமான விண்மீன் போலத் தோன்றினாலும் ,மிகவும் விரைவான இடப்பெயர்வு இயக்கத்தைப் பெற்றிருப்பது வித்தியாசமானது.அகப்பை வடிவில் அமைந்துள்ள அர்சா மேஜர் வட்டார விண்மீன்கள் இது போல நகர்வியக்கத்தைப் பெற்றிருக்குமானால் விண்மீன்களின் தனித்த இயக்கத்தை வெகு காலத்திற்கு முன்பே அறிந்திருப்பார்கள்.குரூம் ப்ரிட்ஜ் விண்மீனின் நிறமாலை வரிகள் ஊதா முனைப் பக்கமாக இடம் பெயர்ந்து காணப்படுகின்றன .இந்த விண்மீன் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. நிறமாலை வரிகளின் இடப்பெயர்வை அளவிட்டு இது 98 கிமீ / வி என்ற வேகத்தில் நம்மை நோக்கி வருவதாக மதிப்பிட்டுள்ளனர் அண்ட விரிவாக்கம் போன்ற பிற காரணங்களையும் சேர்ந்து இதன் மொத்த இயக்க வேகம் 300 கிமீ/வி என அறிந்துள்ளனர்.இவ்வளவு அதிகமான வேகத்தில் இயங்குவதால் இந்த விண்மீன் ஒரு கால கட்டத்தில் அர்சா மேஜர் வட்டாரத்தை விட்டே வெளியேறி விடலாம் என்றும் இன்னும் 6000 ஆண்டுகளில் கெமோ பெரினிசெஸ் என்ற வட்டாரத்திலும்12000 ஆண்டுகளில் இது லியோ வட்டாரத்திலும் சஞ்சரிக்கலாம் என்றும் அனுமானிப்பதற்கு இது இடம் தருகிறது . மாறாத நிலை உடையதாக நம்பப்பட்ட விண்மீன்களைப் பற்றிய பழங் காலத்தவர்களின் கருத்துகள் தவறாகப் போவதற்குக் காரணம் பிரகாசமான வெறும் கண்களுக்குப் புலப்பட்டுத் தெரியக் கூடிய எந்தவொரு விண்மீனும் இது போல விரைந்த இடப்பெயர்வியக்கதைப் பெற்றிருக்க வில்லை என்பதுதான்

அர்சா மேஜர் வட்டாரத்தில் பல இரட்டை விண்மீன்கள் காணப்படுகின்றன. இதில் குறிப்பிடும் படியானது கரடியின் முன்னங்கால் பகுதியில் உள்ள லியோ மைனர் வட்டாரத்தை ஓரளவு ஒட்டியுள்ள 26 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள சை(ξ) அர்சா மேஜோரிஸ் என்ற 4 ஒளிப் பொலி வெண் கொண்ட ஓர் இரட்டை விண்மீன் உள்ளது.இதில் நமது சூரியனை ஒத்த ஒரே மாதிரியான இரு மஞ்சள் நிற விண்மீன்கள் ,அவற்றின் பொது மையத்தைச் சுற்றி 60 ஆண்டுகால சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகின்றன. முதன் முதலாக சுற்றுக் காலம் அளவிட்டறியப்பட்ட முதல் இரட்டை விண்மீன் இதுவே ஆகும். இதன் மூலம் ஈர்ப்பு உலகளாவியது என்பதையும் அதுவே இப் பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் விண்மீன்களைக் கட்டுப்படுத்துகிறது என்று நிறுவப்பட்டது..பின்னர் சை அர்சா மேஜோரிஸ் A மற்றும் B விண்மீன்கள் ஒவ்வொன்றும் இரட்டை விண்மீன்கள் என நிறமாலை பகுப்பாய்வு மூலம் அறிந்தனர். இதில் ஓர் இரட்டை விண்மீன்களின் சுற்றுக் காலம் 669 நாட்களாகவும் மற்றதின் சுற்றுக் காலம் 4 நாட்களாகவும் உள்ளது. அதாவது சை அர்சா மேஜோரிஸ் நான்கு விண்மீன்களின் இணையாகும். இந்த வட்டாரத்தை நுணுகி ஆராய்ந்து இதில் வெறும் கண்களுக்கு புலப்படும் பல விண்மீன்களின் பிரகாசம் மாறி மாறி ஒளிர்வதைக் கண்டனர். மாறொளிர் விண்மீன்களில் பல வகையுண்டு.உருவ அளவு மாறுவதாலும், துணை விண்மீனின் மறைப்பினாலும், ஓரளவு குறுகிய

கால நெடுக்கையில் ஒரு விண்மீன் மாறி மாறி ஒளிரலாம். டபிள்யு அர்சா மேஜோரிஸ் ஒரு மறைப்பு வகை மாரொளிர் விண்மீனாகும்.இதிலுள்ள இரு விண்மீன்களும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருக்கின்றன. ஒரு விண்மீன் உருவத்தால் பெரியதாகவும் அருகிலும் இருப்பின் பகுப்பு ஈர்ப்பு விசை (differential gravitational force ) திகமாக இருக்கும். பொதுவாக ஈர்ப்பு விசையைக் கணக்கிடும் போது முதன்மை மற்றும் துணை உறுப்புக்களைப் புள்ளிப் பொருளாகக் கருதுவார்கள் . நெடுந் தொலைவில் இருக்கும் போது இப்படிக் கருதுவது தவறாகாது ஆனால் ஒன்றுக் கொன்று மிக அருகில் இருக்கும் போது ஓர் உறுப்பிலுள்ள வெவேறு பகுதிகள் மற்றோர் உறுப்பிலிருந்து வெவ்வேறு தொலைவுகளில் இருக்கின்றன அதனால் ஓர் உறுப்பிலுள்ள வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அளவிலான ஈர்ப்பிற்கு உள்ளகின்றன

எனலாம் இதையே பகுப்பு ஈர்ப்பு விசை என்பர். இதனால் விண்மீன்களின் வடிவம் மாற்றத்திற்கு உட்படுகின்றது. விண்மீனின் நடு வரைக் கோட்டுப் பகுதிகள் உப்பித் தட்டை வடிவம் பெறுவதால் முட்டை போன்று தோற்றம் தருகின்றன. டபிள்யு அர்சா மேஜோரிஸ்ஸில் இரட்டை விண்மீன்கள் 8 மணி நேரத்தில் ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. அதாவது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு விண்மீன் மற்றொரு விண்மீனை மறைக்க தோற்றப் பிரகாசத்தில் மாற்றம் ஏற்படுகின்றது . இந்த விண்மீன் சுமார் 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஏறக்குறைய இரு சூரியன்கள் போல இருக்கின்றது. இதன் முதன்மை விண்மீன் சூரியனைப் போல .99 மடங்கு நிறையும் 1.14 ஆரமும் ,1.45 ஒளிர்திறனும் கொண்டிருக்க துணை விண்மீன் .62 மடங்கு நிறையும் ,83 ஆரமும், 1.௦௦ ஒளிர்திறனும் கொண்டுள்ளது. இன்றைக்கு இருக்கும் எந்தத் தொலை நோக்கியாலும் இவற்றைப் பகுத்து உணர முடியவில்லை W அர்சா மேஜோரிஸ் பற்றித் திரட்டிய விவரங்கள் யாவும் காலத்தால் ஏற்படும் அதன் தோற்றப் பிரகாச மாற்றத்தைக் கொண்டு பெறப்பட்டவையாகும். மறைப்பின் போது இதன் ஒளிப்பொலி வெண்ணில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. இதன் ஒளிப்பொலிவெண் 7.8 முதல் 8. வரையிலான நெடுக்கைக்குள் மாற்றம் பெறுகின்றது.