Wednesday, July 11, 2012

அலுமினியம் -பண்புகள் அலுமினியம் ஒரு வெண்மையான உலோகம். இதன் அடர்த்தி 2698 கிகி/கமீ.உருகு நிலை 933 K கொதி நிலை 2740 K,அணு எண் 13,அணு நிறை 26.98.வெள்ளியைப் போன்று உறுதியான அலுமினியத்தை அடித்து தகடாகவும் ,மெல்லிய கம்பியாக நீட்டவும் முடியும். அலுமினியம் நல்ல கடத்தியாக விளங்குவதால் வெப்பத்தையும்,மின்சாரத்தையும் எளிதாகக் கடத்துகிறது.தங்கம்,வெள்ளி செம்புக்கு அடுத்த படியாகச் சிறந்து விளங்குவது அலுமினியம். இதற்குக் காரணம் இதிலுள்ள கட்டற்ற எலக்ட்ரான்களே(free electrons)ஆகும். அலுமினியம்,அதே அளவு எடை கொண்ட செம்பை விட இரண்டு மடங்கு கூடுதலாகக் கடத்தும் திறனைப் பெற்றிருக்கிறது.இவற்றுள் அலுமினியமே 904 ஜூல்/கிகி /கெ என்ற அளவில் மிக அதிகமான சுய வெப்பத்தை(specific heat)ப் பெற்றுள்ளது.சுயவெப்பம் ஒரு பொருளின் வெப்ப ஏற்புத் திறனை மதிப்பிடுகின்றது. ஒரு கிகி நிறையுள்ள பொருளின் வெப்ப நிலையை 1 டிகிரி C உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலே அப்பொருளின் சுய வெப்பம் என்பதால் உயரளவு சுயவெப்பம் கொண்ட அலுமினியம் குறைந்த வெப்ப நிலை மாற்றத்தோடு உயரளவு வெப்பத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது அலுமினியத்தின் வெப்ப ஏற்புத் திறன் செம்பை விட 2.35 மடங்கும்,வெள்ளியை விட 3.86 மடங்கும்,தங்கத்தை விட 6.85 மடங்கும் அதிகமானது . வறண்ட மற்றும் ஈரமான காற்று வெளியில் அலுமினியம் நிலையானது. எனினும் அதன் பொலிவு,ஒரு மெல்லிய ஆக்சைடு படலத்தைத் தன் புறப்பரப்பின் மீது ஏற்படுத்திக் கொள்வதால் மங்கிப் போகிறது.இது கவசமாகச் செயல்பட்டு காற்று வெளி மற்றும் நீர்மங்களில் உள்ள வீரிய ஆக்சிஜனிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. அலுமினியப் பொடியைச் சூடு படுத்தி போதிய அளவு வெப்ப நிலையை உயர்த்தினால் ,அது ஆக்சிஜனோடு இணைந்து பிரகாசமான வெண்ணிற ஒளியை உமிழ்ந்து எரிகின்றது.அப்போது அதிக அளவு வெப்பம் வெளிப்படுகிறது.அலுமினியம்,நைட்ரஜன் மற்றும் கந்தகத்துடன் நேரடியாக இணைகிறது.அலுமினியம் ஆக்சிஜன் மீது நாட்டம் கொண்டிருப்பதால் இது ஒரு வலிமையான ஆக்சிஜநீக்கி ஊக்கியாகச் (reducing agent) செயல்பட வல்லது.

Monday, July 9, 2012

cartoon

கார்ட்டூன் இரு பாலரும் கலந்த நண்பர்கள் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது ஒரு தோழி " மிகவும் நம்பமுடியாத ஆனால் இயற்கைக்கு முரண்படாத ஒரு செய்தி சொல்வோருக்கு நம்பமுடியாத ஒரு பரிசு காத்திருக்கிறது " என்றாள் தோழன் 1: எனக்கு நேற்றிரவு இறக்கை முளைத்தது.நான் சந்திர மண்டலம் சென்று உலாவிவிட்டு இப்பொழுதான் வந்தேன் தோழன் 2: நான் பறக்கும் தட்டைப் பார்த்தேன்.வேற்றுலகவாசிகளோடு விளையாடிவிட்டு வந்தேன் தோழன் 3: தமிழ்நாட்டில் இனி மின்தடையே இல்லாதது மாதிரி கனவு கண்டேன் . தோழன் 4: அமைச்சர் வழக்கம் போல மக்களிடம் சென்று குறைகளைக் கேட்காமல் ,குற்றம் நடக்குமிடத்திற்கே சென்று கண்காணித்து குற்றவாளிகளை பணிநீக்கம் செய்தார். தோழன் 5: மந்திரி பணம் வாங்காமல் பணி நியமன ஆணை தந்தார் தோழன் 6: அரசு அதிகாரிகள் இலஞ்சம் கேட்கவில்லை. கடமைகளைச் செய்தனர். கடைசித் தோழன் பரிசைப் பெற்றான். ஏன் என்று மற்ற தோழர்கள் கேட்டனர். அதற்கு அந்தத் தோழி கூறினாள் "எண்ணத்தால் நம்ப முடியாவிட்டாலும் மனம் சிலவற்றை நம்புகிறது. மனம் எதையெல்லாம் நம்புகிறதோ அவையெல்லாம் கனவுகளாக மலருகின்றன.ஊழல் இல்லா இந்தியா வை மனம் கூட நம்ப மறுக்கிறது.எந்தச் செய்தி எண்ணத்தாலும்,மனதாலும் நம்ப முடியாததாக இருந்ததோ அவருக்கே பரிசு "என்றாள்

Sunday, July 8, 2012

Vinveliyil ulaa

விண்வெளியில் உலா வுல்ப் ராயட் விண்மீன் பற்றி ... நிறமாலையால் O வகைக் குட்பட்ட ஆனால் பிரகாசமான உமிழ்வரிகளைக் கொண்டுள்ள விண்மீன்களை வுல்ப் ராயட் விண்மீன் என்பர்.19 ஆம் நூற்றாண்டில் இது பற்றி விரிவாக ஆராய்ந்து முதன் முதலாகத் தெரிவித்த பிரான்சு நாட்டு வானியல் அறிஞர்கள் C.J.E.வுல்ப் மற்றும் G.ராயட் பெயரால் இது அழைக்கப்படுகிறது.இது எல்லா வகையான விண்மீன்களைக் காட்டிலும் வெப்பமிக்கது.40,௦௦௦ முதல் 100,000 டிகிரி கெல்வின் நெடுக்கையில் புற வெப்ப நிலையைக் கொண்டுள்ளது. வெப்ப மிக்க சாதாரண O வகை விண்மீனின் புற வெப்பநிலை 30000 டிகிரி கெல்வின் ஆக உள்ளது.வுல்ப் ராயட் விண்மீன்கள் பெரும்பாலும் ஹீலியத்தை எரிபொருளாகக் கொண்டுள்ளன.ஒரு வுல்ப் ராயட் விண்மீன் ஓராண்டில் பத்தாயிரம் அல்லது நூறாயிரத்தில் 1 பங்கு சூரிய நிறையை உமிழ்வதாக மதிப்பிட்டுள்ளனர்.சராசரியாக ஒரு வுல்ப்-ராயட் விண்மீனின் நிறை 10-12 சூரிய நிறையாக இருக்கிறது. அதனால் ஒரு வுல்ப் ராயட் விண்மீன் 1000-10000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்க முடியாது எனலாம்.பெரும்பாலான வுல்ப்-ராயட் விண்மீன்கள் நிறமாலையால் மட்டும் உணரமுடியக் கூடிய நெருக்கமான இரட்டை விண்மீன்களாக உள்ளன. இதன் துணை விண்மீனும் எப்போதும் நிறைமிக்க,வெப்பமிக்க O அல்லது B வகை விண்மீன்களாக உள்ளன. சிரியசுக்கும் உமிகிரான்(o)2 கானிஸ் மெஜோரிசுக்கும் நடுவில் அழகான,பிரகாசமான M 41 என்று பதிவு செய்யப்பட்ட தனிக்கொத்து விண்மீன் கூட்டமுள்ளது 24-25 ஒளி ஆண்டுகள் அகலமுள்ள இது 2570 ஒளி ஆண்டுகள் தொலைவு தள்ளி உள்ளது .இதில் ஒளி பொலிவெண் 7 உடன் கூடிய 80 விண்மீன்கள் இருக்கலாம் என அறிந்துள்ளனர்.இதிலுள்ள விண்மீன்கள் சங்கிலித் தொடர் போல உள்ளன.
முர்சிம்(Murzim) எனப்படும் பீட்டாகானிஸ் மெஜோரிஸ் சிபி வகை மாறொளிர் விண்மீனாக உள்ளது .இதில் தோற்ற ஒளிப் பொலி வெண் 2 ஆக இருப்பினும் பிரகாசம் முழுமையாக

Saturday, July 7, 2012

Eluthatha kaditham

எழுதாத கடிதம். மனதை நெருடிய இன்றைய பத்திரிக்கைச் செய்திகள் 1 .மதுரையில் மாணவர்களிடம் இரத்தம் உறிஞ்சும் இரத்த வங்கிகள்-தின மலர் 7-7-2012 இது பலவிடங்களில் காலங் காலமாய் நடந்து வருகிறது.தடையேதும் இல்லாததால் இத்தொண்டு பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி வருகிறது.சம்பாத்தியத்தில் பங்கு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும்பாலும் தற்காலியத் தடைகளை ஏற்படுத்துவதுண்டு.எழுதப்படாத ஒப்பந்தத்தால் முறைகேடான எந்தத் தொழிலும் மூலதனமின்றி செழித்து வளரும் முறைகேடுகள் அரசின் அனுமதியோடு வெற்றி நடை போடுமானால் ஒரு நாடு எப்படி வளமான எதிர்காலத்தைப் பெறமுடியும்? முறைகேடுகள் மனிதநேயத்தை அழிக்கும்,உண்மையான பொருளாதாரத்தை சீரழிக்கும்.வல்லரசாகப் போகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நாட்டிற்கு இது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.நாட்டின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் அது நேர்மையாகவும் செம்மையாகவும் நடைபெற அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து முறையான சுமுதாய அமைப்புகள் மூலம் கண்காணிக்கவும் வேண்டும் இது எல்லா அரசுகளின் ஒரு பொதுப் பண்பாகும். அரசு கண்ணை மூடிக்கொண்டு சும்மாவே இருந்தால் இது போன்ற சமுதாயக் கேடுகள் பெருகிப் போவதுடன் பிற்காலத்தில் ஒருபோது மறையவே மறையாது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்து மக்களுக்குத் தெரியவரும்போது தான் அது பற்றி அரசுக்கும் தெரிய வருகிறதாம் மக்களைச் சமாதானப் படுத்த வேண்டும் என்பதற்காக ஒப்புக்காகச் சில நடவடிக்கைகள் எடுத்தது போல நடிப்பார்கள் ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிச் செயல்படுவதில் சிறிதும் முனைப்புக் காட்ட மாட்டார்கள்.அதனால் சமுதாயக் கேடுகள் பரிணாம வளர்ச்சி பெற்று ஒரு புதிய வடிவத்தில் மீண்டும் அரங்கேறும்.மீண்டும் மக்களுக்குத் தெரியவரும் காலம் வரை. 2.ஐ ஏ எஸ் அதிகாரி சம்பத் சஸ்பெண்டு - தினமலர் 7-7-2012 இது சரிதானா? உள்ளதை உள்ளபடி சொல்வது குற்றமா? நல்லது நடக்கும் என்றால் பொய்யும் சொல்லலாம் என்பதைப் போல அதற்காக சில சமயங்களில் உள்ளதை உள்ளபடியும் சொல்லலாம் .வெளிப்படையான ஆட்சி முறையே வெற்றிகரமான ஆட்சியாக அமையும். மறைமுகமான காரியங்களினால்தான் ஊழல் பெருக வழி வகுக்கும்.ஊழலை ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அறைகூவும் அரசு தன அதிகாரிகள் மௌனமாய் இருக்க வேண்டும் என்று சொல்வதேன்.மக்களின் எதிர்ப்பு இல்லாமல் மறைவாய் நடக்கும் எந்த சமுதாயக் கேடுகளும் அரசால் திருத்தப் பட்டதேயில்லை.நம் நாட்டில் ஊழலை ஒழிக்கவே முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.மக்களுக்கு நட்பாக இருக்கும் அதிகாரிகள் ஒரு சிலரே.அவர்களையும் இப்படி முடக்கி விட்டால் மக்களுக்கு விமோச்சனம் இல்லவே இல்லை.ஒத்தக்கை சத்தப் படாது ,தனி மரம் தோப்பாகாது .உயர் அதிகாரிகளுக்கு இது புரிந்தால் சரி 3.கழுதைக்குச் சூடு வைத்துச் சித்திரவதை -தின மலர் 7-7-2012 வாயில்லாச் ஜீவன் சொல்லி வழக்காட வழியில்லை,இரக்கப்பட யாருமில்லை நேர்மையாகச் சம்பாதிக்கத் தெரியாத சோம்பேறிகள்,தங்களைக் கட்டுப்படுத்த யாருமில்லை என்ற தைரியத்தில் கழுதைக்குச் சூடு போட்டு அதை நியாயப் படுத்தி விளக்கமும் கொடுக்கின்றார்கள்.இவர்கள் அடுத்த பிறவியில் கழுதையாய்ப் பிறந்து சூடு படப்போகின்றார்கள் அப்போது கழுதையாய்க் கத்தினாலும் உங்களை யார் கவனிப்பார்கள்? ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை இவர்கள் ஏன் மறந்தார்கள்?

Friday, July 6, 2012

Social awareness- Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம் இது தினகரன் ஆகஸ்டு 5,2012 நாளிதழில் வெளிவந்த ஒரு சோகச் செய்தி.ஒரு பெண் 10 வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று விட்டாள். வருடத்தை வீணாகாமல் வென்று விட்டோம் இனி அடுத்த முறை தவறுகளைத் திருத்திக் கொண்டு அதிக மதிப்பெண்கள் வாங்குவோம் என்று எண்ணி அதற்காகச் சந்தோஷப்படாமல் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக தற்கொலை செய்து கொண்டாள். இது யாருடைய தவறு? புதிய உறவுகளுக்காக பிள்ளையைப் பெற்று மகளுக்காக பாசத்தோடு மகளை வளர்த்த பெற்றோர்களா? கல்வியோடு ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக் கொடுத்த ஆசிரியர்களா? கூடவே இருந்து உலகத்தைப் புரிந்து கொள்ள உதவிய தோழிகளா? நல்லவைகளை மறுத்துவிட்டு அல்லவைகளையே நல்லவை என்று மாறிவரும் சமுதாயமா? அல்லது உட்பகையாகிப் போன அவளுடைய மனமா? இதில் உண்மையில் எல்லோருக்கும் ஒரு பங்கிருக்கிறது. பிள்ளையின் பலத்தையும் பலவீனத்தையும் முதலில் தெரிந்து வைத்திருப்பது பெற்றோர்களே ஏனெனில் அவர்களே முதலில் அதிக நேரம் பிள்ளையோடு இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள் பலத்தை உற்சாகப் படுத்தி திறமையை மென்மேலும் வளர்ப்பதும் பிரச்சினைகளை எதிர்கொள்ள மனோதிடத்தை தூண்டுவதும் பலவீனத்தை மனதிலிருந்து அகற்றி அவ்வப்போது ஊக்குவிப்பதும் பெற்றோர்களே.அறிவுப்பூர்வமாக முடியாத பெற்றோர்கள் இதை அன்புப்பூர்வமாகச் செய்ய முடியும்.வாழ்கையில் எதிர்நீச்சல் போடுவதை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க மனதைப் பக்குவப்படுத்தவேண்டும் . பிள்ளைகளும் இப்பாடத்தை பெற்றோர்களைப் பார்த்துப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். உலகில் மனிதனைத் தவிர்த்து எல்லா விலங்கினங்களும் தங்கள் குட்டிகளுக்கு வாழ்க்கைப் போராட்டத்தை இப்படித்தான் கற்றுக் கொடுக்கின்றன. Animal Planet,Discovery Channel,National Geographic போன்ற டிவி சேனல்கள் தினமும் இதைத்தான் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.ஆசிரியர்கள் எப்போதும் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களையே நடத்திக் கொண்டிருக்காமல் வாழ்வியல் பற்றியும் சொல்ல வேண்டும் உலகில் சாதித்துக் காட்டியவர்கள்,தோல்வியை வெற்றியாக மாற்றி அமைத்தவர்கள்,உழைத்து முன்னேறியவர்கள்,விஞ்ஞானிகள் சான்றோர்கள் இவர்களைப் பற்றி இடையிடையே கூறி உற்சாகப் படுத்தினால் சோர்ந்த மனமும் சுறுசுறுப்படையுமே.பலவீனங்கள் மறைந்து பலம் தோன்றுமே. வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்க்க வேண்டும் அப்படிச் செய்ய மனப்பக்குவம் உள்ளவர்களால் மட்டுமே இயலும்.ஏனெனில் வெற்றிக்கும் சரி,தோல்விக்கும் சரி இதுதான் எல்கை என்று ஒன்று இல்லவே இல்லை வெற்றிக்குப் பிறகு தோல்வியும் வரலாம் தோல்விக்குப் பிறகு வெற்றியும் வரலாம்.ஒருவருடைய தோல்வியைக் கண்டு எள்ளி நகையாடுவது தவறு.ஏனெனில் இதனால் அவர் மனம் வேதனைப் பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்படலாம்.இனி மேல் வெற்றியைப் பாராட்டுங்கள் தோல்வியை கேவலமாகப் பேசி புண்படுத்தாதீர்கள்.தோல்விகளுக்குச் சமாதானம் செய்யவேண்டிய பொறுப்பு தோழிகளுக்கு உண்டு. கேவலமான,முறைகேடான,அநீதியான வெற்றிகளைப் பாராட்டும் சமுதாயம் இயல்பான,நேர்மையான தோல்விகளைப் பாராட்டுவதில்லை என்பது சமுதாயத்தின் பலவீனம் வெற்றியால் கற்றுக் கொள்வது ஏதுமில்லை. ஏனெனில் வெற்றி என்பது பெற்ற அறிவுக்குக் கிடைத்த பரிசு தோல்வி கற்றுக் கொடுப்பது ஏராளம்.ஏனெனில்,கற்ற கல்வியை இது செம்மைப் படுத்துகிறது. ஒவ்வொருவரும் தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் திடத்தைப் பெறவேண்டும். வெற்றிகளைத் தலைக்கும்,தோல்விகளை இதயத்திற்கும் எடுத்துச் செல்லும் பழக்கத்தை விட்டொழியுங்கள்.பழக்கம் வழக்கமானால் தற்கொலை எண்ணம் தலை தூக்குமோ?

Wednesday, July 4, 2012

Social awareness-Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம் கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன .மீண்டும் வகுப்பறை,ஆசிரியர்கள் ,பாடப் புத்தகம்,ஹோம் வொர்க் ,டெஸ்ட் இவையெல்லாம் ஒரு சராசரி மாணவன் தன் வாழ்கையில் வெற்றி பெறுவதற்கு வகுக்கப்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சராசரி திட்டம் தாம்.இந்த சராசரித் திட்டங்களைக் கூட ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தவறுபவர்கள் வாழ்கையில் தோல்விகளைச் சந்திப்பர்கள் என்று சொல்வதை விட தோல்விகளைச் சந்திப்பதற்கு அதிகமான வாய்ப்புக்களைப் பெறுவார்கள் என்று கூறலாம் . காலங் காலமாய் பெரிய மாற்றமின்றி பின்பற்றப்பட்டு வருவதால் இது உறுதியான வெற்றிக்கு உறுதி கூறும் நிரூபிக்கப்பட்ட வழிமுறை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .பாடம் படிப்பது சுவாரசியமின்றி இருக்கிறதா அப்படியானால் குறை உங்களிடம் இல்லை உங்கள் மனதில் தான் இருக்கிறது. அலிபாபாவின் அண்ணன் காசிம் திருடர்களின் குகைக்குள் நுழைவான் எங்கு பார்த்தாலும் தங்கமும்,வைரமும்,ரத்தினங்களும் கொட்டிக் கிடக்க என்ன தேவை என்பதும் தெரியாமல், எதை எடுப்பது என்பதும் புரியாமல் ,எல்லாவற்றையும் அப்பொழுதே தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையுடன் செயல்படுவான்.பேராசையில் குகையிலிருந்து வெளியேறும் மந்திரச் சொல்லையும் மறந்து,நேரத்தை வீணாக்கி விடுவதால் சிக்கிக் கொள்வான்.கைக்கருகிலிருந்த செல்வங்கள் எதுவும் கிட்டாமல் வாழ்கையை இழந்து விட்ட காசிம் நிலையைத்தான் இது நினைவூட்டுகிறது. நீங்கள் கல்வி என்ற செல்வம் கொட்டிக் கிடக்கும் கல்லூரிக் குகையில் காலடி எடுத்து வைத்திருகின்றீகள்.வரையறுக்கப் பட்ட காலம் வரை நீங்கள் நிதானமாகவும் உங்களுடைய எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு அதற்கேற்ப புரிதலுடன் கல்வியைப் பெறுவதும் உங்கள் செயலாக இருக்குமானால் வெற்றியைத் தேடி நீங்கள் போக வேண்டியதில்லை, அது தானாக உங்களைத் தேடி வரும். கல்வி என்பது பயன்பாட்டின் மொழி. எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கற்கும் கல்வி எப்போதும் சுவாரசியமாக இருக்கும். பயனின்றி குவித்து வைக்கப் பட்ட செல்வத்தை மீட்டு ஏழை மக்களின் பயனுக்கு கொண்டு வந்த அலிபாபா வாழ்கையில் வெற்றி பெற்றான் ஆனால் பயனற்ற செல்வத்தை அபகரித்து மீண்டும் பயனற்றதாகவே வைத்திருக்க நினைத்த காசிம் தன் முயற்சியில் தோற்றுப் போனான். மாணவர்களே நீங்கள் படிக்கும் கல்வியை சுவாரசியமாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களால் முடியும் ஏனெனில் இதற்கு புறத்தே எதிர்ப்புகள் இல்லை. எதிர்ப்பு இருந்தால் அது நிச்சியம் உங்களிடமிருந்துதான் விளைந்திருக்கும்.இதை நீங்கள் புரிந்து கொண்டால் இது மட்டுமல்ல உங்களால் எதுவுமே முடியும்.முடியாதது என்று எதுவும் உங்கள் அகராதியில் இருக்க முடியாது.

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் அலுமினியம் கண்டுபிடிப்பு : அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பார்கள். களிமண்,செங்கல் போன்றவைகள் எல்லாம் அலுமினியம் சிலிகேட் என்ற சேர்மானப் பொருள்தான்.அலுமினியக் கலவைப் பொருள் என்று தெரியாமலேயே இப் பொருட்களை எல்லாம் மக்கள் நெடுங் காலமாய் பயன்படுத்தி வந்துள்ளனர். அலுமினியத்தின் முக்கியமான கனிமம் பாக்சைட் ஆகும். இதில் இரும்பு ஆக்சைடும்,டைட்டானியமும்,சிலிகானும் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன. பாக்சைட்டைத் தூய்மைப் படுத்தி Al2O3 என்று குறிப்பிடப்படுகின்ற அலுமினாவைப் பெற்று மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பெறலாம். பூமியில் தனிமங்களின் செழிப்பு எனும் வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் 8.1 என்ற மதிப்புடன் உள்ளது. அலுமினியத்தின் பிற கனிமங்கள் கிப்சைட், டையாஸ்போர்,பெல்ஸ்பார் (felspar) கிரையோசைட் போன்றவைகளாகும்.நவரத்தினங்களில் மரகதம் (Ruby) செந்நிறக் கல் (Garnet ),நீலக்கல்(Sapphier),பசுமை கலந்த நீலக் கல் (Turquoise) போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாக சேர்ந்திருக்கிறது.தங்கம்,வெள்ளி போல தனித் தனிமமாக இயற்கையில் காணப்படவில்லை. பொட்டாஷ் ஆலம் (Potash alum) என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டாகும்.இதைப் பழங்காலத்தில் கிரேக்கர்களும்,ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும்,சாயப் பட்டறைகளில் அறிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர். இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர்.1787 ல் லவாய்சியர் இது அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார்.1827 ல் ஜெர்மனி நாட்டு வேதியியலாரான பெடரிக் வோலர் (Friedrick Wohler) இதிலிருந்து தூய அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஆர்ஸ்டடு (Oersted) என்பார் அலுமினியத்தைப் பிரித்தெடுத்திருந்தாலும் அது மிகவும் தூய்மை யற்றதாக இருந்தது.முதலில் டேவி என்பார் இதற்கு அலுமியம் (Alumiyam ) என்றே பெயரிட்டார். இது பின்னர் அலுமினியம் என்று மாற்றம் செய்யப்பட்டது. பிரித்தெடுத்தல்
அலுமினியம் களிமண்ணிலிருந்தாலும் பொருளாதாரச் சிக்கன வலிமுரையினால் அதைப் பிரித்தெடுக்க முடியாது.எனவே அலுமினியம் செறிவுற்றுள்ள அதன் கனிமங்களிலிருந்தே அலுமினியத்தைப் பெற வேண்டியிருக்கிறது. இதற்குப் பேயர் வழிமுறை பரவலாகப் பயன் படுகிறது. பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தின் மூலமான அலுமினாவைப் பெறலாம். பின்னர் மின்னாற் பகுப்பு மூலம் அலுமினியத்தைப் பிரித்தெடுக்கலாம்.

Monday, July 2, 2012

Vinveliyil Ulaa

விண்வெளியில் உலா வுல்ப் ராயட் விண்மீன் (Wolf-Rayet star) சிரியசுக்கு கீழே O2(உமிகிரான் 2) என்றதோர் அரிய வகை விண்மீன் உள்ளது.வுல்ப் ராய்ட் என்று இதைக் குறிப்பிடுவர்.இதன் நிறமாலை பிற விண்மீன்களின் நிறமாலைகளிலிருந்து குறிப்பிடும் படியாக வேறுபட்டிருக்கிறது பொதுவாக ஒரு விண்மீனின் நிறமாலை தொடர் நிறமாலையாகவும் அதில் உட்கவர் வரிகளாகச் சில இருள் வரிகளும் பொதிந்திருக்கும் நீண்ட காலத்திற்கு விட்டுவிட்டுப் பிரகாசிக்கும் சில மாறொளிர் விண்மீன் களின் நிறமாலையில் பிரகாசமான உமிழ்வு வரிகளைக் காணமுடிகிறது.இது அந்த விண்மீன் அவ்வப்போது வெப்ப மிக்க வளிமங்களை தன்னைச் சுற்றியுள்ள குளிர்ந்த புற மண்டலங்களில் உமிழ ப்படுவதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.வெப்ப மிக்க நிறமாலை வகையால் A அல்லது B அல்லது O வகையைச் சேர்ந்த விண்மீன் களின் நிறமாலை குறுகிய பிரகாசமான உமிழ்வு வரிகளைப் பெற்றிருக்கின்றது.பெரும்பாலான வற்றில் சிவப்பு முனையிலிருந்து சில இருள் வரிகள் பிரகாசமான ஒளி வரியால் அடுத்தமைந்து சூழ்ந்துள்ளன.ஒரு விண்மீன் எவ்வளவு வெப்ப மிக்கதாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு இந்த உமிழ்வு வரிகளும் பிரகாசமிக்கனவாக இருக்கின்றன. நிறமாலையால் வேறுபட்டிருக்கின்ற இந்த விண்மீன்கள் விரிந்து வீங்கிய புறமண்டலப் பகுதிகளைப் பெற்றுள்ளன .விரிந்து வீங்கிய புறமண்டலப் பகுதிகள் பிரகாசமான வெப்ப மிக்க விண்மீன்களின் ஒரு பொதுப் பண்பாகும்.பொதுவாக ஒரு விண்மீனின் உள்ளகமான சலன மண்டலத்தைச் சுற்றி ஒளி மண்டலம் (Photosphere) இருக்கும்.விண்மீனிலிருந்து நமக்குக் கிடைக்கும் ஒளியெல்லாம் இப்பகுதியிலிருந்து வருபவையே.இம்மண்டலத்தை அடுத்திருப்பது நிற மண்டலமாகும் (Chromosphere).ஒளி இதைக் கடந்து வெளியேறும் போது ,இதிலுள்ள அணுக்கள், சில அலைநீளமுள்ள ஒளியை உட்கவர்ந்து கொள்வதால் தொடர் நிறமாலையில் இருள் வரிகள் தோன்றுகின்றன.நிற மண்டலத்தை அடுத்து எதிர்ப் போக்கான ஒரு மண்டலப் பகுதி உள்ளது.இது வெப்ப மிக்க உட்புறப் பகுதியிலிருந்தும்,ஒளி மண்டலத்திலிருந்தும் வரும் ஒளியில் ஒரு சில அலைநீளமுள்ளவற்றை உட்கவர்ந்து பின்னர் அதை அப்படியே உமிழ்ந்து விடுகிறது இது எல்லாத் திசைகளிலும் பரவிச் செல்வதால் அந்த ஒளியின் ஒரு பகுதி மட்டுமே நம்மை வந்தடைகிறது . ஆனால் பிற அலைநீளமுள்ள ஒளி எதிர்ப் போக்கான மண்டலத்தை ஊடுருவிச் செல்வதால் ,நிறமாலையில் இருள் வரிகளாகக் காட்சி தருகின்றன. சூரியனின் உருவ அளவை ஒப்பிட அதன் நிற மண்டலமும் எதிர்ப் போக்கான மண்டலமும் மிகவும் சிறியவை .ஏறக்குறைய முட்டைக்கு இருக்கும் ஓட்டைப் போல .இதனால் செறிவற்ற உமிழ் வரிகளுடன் கூடிய நிறமாலை தோன்றுகிறது. இந்த நிறமாலையும் முழுச் சூரிய கிரகணத்தின் போது மட்டுமே எளிதாகக் காண முடியும் ஆனால் நிற மண்டலம் ,விண்மீனின் ஆரத்தோடு ஒப்பிடக் கூடிய வகையில் இருக்கும் நிலையில் எதிர்ப்போக்கான மண்டலத்திலிருந்து வரும் கதிர்வீச்சும் நிற மண்டலக் கதிர்வீச்சுக்கு இணையான செறிவுடன் இருக்கும்.அந் நிலையில் பிரகாசமான உமிழ்வரிகள் பதிவாகின்றன.அதனால் பருத்து வீங்கிய புறமண்டலத்தைக் கொண்ட விண்மீன்களின் நிறமாலையில் பிரகாசமிக்க உமிழ்வு வரிகள் காணப்படுகின்றன . வெப்ப மிக்க விண்மீன்கள் பருத்து வீங்கிய புறமண்டலத்தைப் பெற்றிருக்கின்றன எவ்வளவு வெப்ப மிக்கதாக ஒரு விண்மீன் இருக்கின்றதோ அந்த அளவிற்கு அது புறஊதாக் கதிர்களை அதிகம் உமிழும்.கட்புலனுக்கு உட்படாத ஆற்றல் மிக்க புறஊதாக் கதிர்கள். விண்மீன்களின் வளி மண்டலத்திலுள்ள அணுக்களின் மீது வலிமையாக கதிர்வீச்சு அழுத்தத்தை விளைவித்து ,ஈர்ப்புக்கு எதிராகச் செயல்பட வைக்கிறது அதனால் அவை புறப் பரப்பை விட்டு வெளியேறி வெகு உயரம் பரவிச் செல்கிறது விண்மீனின் இந்த பருத்து வீங்கிய புற மண்டலம் இளம் விண்மீன்களை உருவாக்கும் முயற்ச்சியை மேற்கொள்கிறது சில விஞ்ஞானிகள் விண்மீனின் விரைவான தற்சுழற்சி இந்த பருத்து வீங்கிய புற மண்டலத்தின் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கிறது என்று கூறுவார்கள். உண்மையில் வெப்ப மிக்க விண்மீன்கள் ஒரு அச்சைப் பற்றி விரைவாகச் சுழலும் தன்மை கொண்டுள்ளன. மைய விலகு விசை(centrifugal force) அணுக்களின் எடையைக் கணிசமாகக் குறைப்பதால் அவை விலகிச் செல்கின்றன என்றும் இவர்கள் விளக்கம் கூறுவார்கள்.இது உண்மையானால் பருத்து வீங்கும் புற மண்டலம் விண்மீனின் நடுவரைக் கோட்டுப் பகுதியில் அதிகமாக இருக்கவேண்டும் அதாவது கோள வடிவமான விண்மீனைச் சுற்றி சனி வளையம் போல இப் புறமண்டலம் விரிந்து இருக்கும் என்று கூறலாம்.பருத்து வீங்கிய புற மண்டலத்தின் பரிமாணமும்,நிறமாலை வரிகளின் பிரகாசமும் விண்மீனின் வெப்ப நிலை மற்றும் சுழற்சி வேகம் இவற்றை மட்டுமின்றி விண்மீனின் பிரகாசம் மற்றும் ஈர்ப்பு இவற்றையும் சார்ந்திருக்கிறது. எப்படி பூமி ஒரு வளி மண்டலத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கிறதோ அதைப் போல ஒரு விண்மீன் பருத்து வீங்கிய புற மண்டலத்தை கட்டுபடுத்தி உள்ளது.ஆனால் இதன் நிறமாலை சற்று வேறுபட்டுள்ளது . மெல்லிய தனித்த வரிகளுடன் ஆன நிறமாலை அகன்ற பிரகாசமான தனித்த பட்டைகளுடன் (bands) ஆனதாக மாற்றம் பெறுகிறது. அதனருகிலேயே சில இருள் வரிகளுடன் சில சமயங்களில் இல்லாமலும் உள்ளன. இருள் வரிகள் இருப்பின் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரகாசமான அகன்ற பட்டைகளுக்கு அடுத்தும் நிறமாலையின் ஊதா முனைப்பக்கம் பெயர்ச்சி பெற்றும் இருக்கும். நிறமாலையின் மையப் பகுதி பொதுவாக ஒரு வேதித் தனிமத்தின் நிறமாலை வரியாக பெயர்ச்சியில்லாமால் இயல்பான அமைவிடத்தில் இருக்கும். டாப்ளர் விளைவு காரணமாக இருள் வரிகள் பெயர்ச்சியுற்று இருப்பின் அது விண்மீன் வளி மண்டலத்தில் இருக்கும் வளிமத்தின் இயக்கத்தைச் சுட்டும். அகன்ற உமிழ் வரிகள் பட்டைகளுக்கு அருகாமையில் இருக்கும் இருள் வரிகள் 2000 கிமீ /வி என்ற வேகத்தில் இயங்கும் வளிமத்தால் ஏற்படுகின்றன.