Wednesday, April 30, 2014

cartoon

கார்ட்டூன்
குஜராத்தின் மோடியா தமிழகத்தின் இந்த லேடியா? யார் சிறந்தவர்?
எதுகை மோனையோடு பேசுவது எப்போதும் அழகல்ல. இலக்கிய மேடைளில் வேண்டுமானால் அது மிகையாக ரசிக்கப்படும்.
எதை இல்லை என்று வாதாடுகின்றோமே அது அப்போதே இருக்கின்றது என்று ஒப்புக்கொண்டாகி விடுகின்றது. அது போல மோடியை தாழ்த்திப் பேசப் பேச அவர் மேலும் மேலும்
உயர்ந்தவறாகின்றார் என்பதே உண்மை
இதைப்போல வ்வளவு வேண்டுமானாலும் ஒருவர் பேசலாம். சில எடுத்துக்காட்டுகள்
மோடி ரெம்ப ரெம்ப மோசடி 
எங்கும்  ஆடித் தள்ளுபடி குஜராத்தில் மட்டும் ஆண்டு முழுதும் மோடித் தள்ளுபடி 
மோடிக்குத் தெரியுமா தோடியின் இனிமை 
மோடிக்கு இருக்கு வெள்ளைத் தாடி 
என்னிடம் இருக்கு பல கோடி ,மோடியிடம் இருக்கா  ஒரு கோடி
மோடி ஒரு கேடி

மோடி பலே கில்லாடி

Monday, April 28, 2014

Eluthatha Kaditham

எழுதாத கடிதம்

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாயகம் ஒடுக்கப்பட்டு ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டதாக ஏதோ சாதனை  செய்து விட்டதைப் போல பேசுவது வேதனை அளிக்கின்றது.வேட்பாளர்களிடம் அளவுக்கு அதிகமாகப் பொருள் குவிந்திருக்கின்து.அதனால்தான் மிகுதியாகச் சேர்த்த பொருளை அள்ளித் தெளித்து வெற்றியால் அதைவிட அதிகமாகப் பொருள் குவிக்க நினைக்கின்றார்கள். பணப்பட்டுவாடா செய்வதை தடுத்து விட்டால்,வேட்பாளர்களின் இப் போக்கு மாறிவிடுமா? எப்போது அரசியல்வாதிகள் தவறான வழிகளில் பொருள் சேர்க்க அனுமதித்து விட்டோமோ அப்போதே ஜனநாயகம் செத்துப் போய்விட்டது.
ஓட்டுப் போடும் மக்களிடம் பொருள் இல்லை. நேர்மையாகப் பொருள் சம்பாதிக்க நிரந்தரமான வழியும் இல்லை. இன்றைக்கு சரியாகச் சாப்பிடவே வழியில்லை. எதிர்காலம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.அங்கே ஜனநாயம் செத்து விட்டது.  

வர்கள் பொருள் கொடுத்தால் மீண்டும் பொருள் சேர்க்க வழி. இவர்கள் பொருள் வாங்கினால்தான் உயிர் வாழ வழி. அவர்களிடம் கொடுப்பற்கென்றே தவறான வழிகளில் ட்டிய பொருள் இருக்கின்றது. ஜெயித்தால் கிடைக்கும் ஆதாயத்தை நினைத்து அதில் ஒரு சிறு பங்கை மக்களுக்கு முன் கூட்டியே பகிர்ந்து கொடுக்கின்றார்கள் இது இந்திய ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியாக வளர்ந்து வந்திருக்கின்றது என்பதை மறுக்கமுடியுமா? இது இன்றைக்கு சட்டப்படி குற்றமாக வர்ணிக்கப்படலாம். ஆனால் பதவி ஏற்று தவறாகச் சம்பாதிக்கும் வழிமுறைகளை சட்டப்படித் தடுக்க முடியாத போது இப் போக்கினால் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. .இயற்கையில் செயற்கையான பரிணாம வளர்ச்சியை அனுமதிக்கும் இந்திய ஜனநாயகத்தில் இதை ஒரு தர்மமாகவே கருதலாம். இதைத் தடுப்பதைவிட இப்படிச் செய்வதற்காகவே அப்படிப் பொருள்  சேர்த்த புண்ணியவான்களை அல்லவா சட்டம் தடுத்திருக்கவேண்டும்.குடிப்பது குற்றமில்லை. ஆனால் போதை கூடாது என்று சொல்வது போலல்லவா இருக்கின்றது. எளியோர் முன்பு வலியோர் போலக் காட்டிக் கொள்ளும் சட்டம் வலியோர் முன்பு எளியோர் போல இருப்பது ஜனநாயகம் என்று ஏற்றுக் கொள்ளமுடியாது.

Sunday, April 27, 2014

Cartoon

கார்ட்டூன் 
பாகிஸ்தான் இந்தியாவை விட மோசம்.
எப்படிச் சொல்கின்றாய் 
அங்கே பெரும்பாலும் ஆளும் அரசியல் லைவர்கள் சுட்டுக் கொல்லப் படுகின்றார்கள்.வஞ்சகமும் சூழ்ச்சியும் அங்கு அதிகம். மதத்தை கண்மூடித் தனமாக நேசித்து மக்களை நேசிக்கத் தவறி தீவிரவாதிகளாக மாறியவர்கள். நல்லவேளை பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து போனது. பிரியாமல் இருந்திருந்தால் இந்தியாவின் பெருமை உலக அரங்கில் தரம் தாழ்ந்து போயிருக்கும் 


Saturday, April 26, 2014

Cartoon

கார்ட்டூன்
இலங்கைப் பிரச்சனை ன் இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கிறது?

இலங்கையில் இன்னும் இராவணர்கள் இருப்பதைப் போல இந்தியாவில் இன்றைக்கு ஒரு ராமன் கூட இல்லையே.

முன்பு இராவணனுக்கு சீதை மேல் ஒரு கண். இன்றைக்கு அவன் தங்கை சூர்ப்பனகை ரும் இந்திய மீனவர்களை எல்லாம் லக்குமணன் போல நினைக்கின்றாள்

Eluthatha kaditham

எழுதாத கடிதம்


காந்தியை இனி யாரும் பார்க்க முடியாது என்றாலும் இந்த காந்தி தேசத்தில் காந்தியைப் போல ஓர் அரசியல் தலைவரைக் கூட இனி பார்க்க முடியாது என்பது தான் மிகத் துயரமானது .காந்திக்கு
ணையாக ஒரு சிலரை உலக நாடுகளில் பார்க்க முடிவதைப் போல இந்தியாவில் பார்க்க  முடிவதில்லை.இந்தியாவில் காந்தியைப் போல வேடமிட்டவர்கள், காந்தியைப் போல நடிப்பவர்கள்,காந்தியத்தை புறத்தே மட்டும் பேசுபவர்கள், காந்தியத்தைப் பின்பற்றுபவர்கள் போல காட்டிக் கொள்பவர்கள், மொத்தத்தில் காந்தியை நேசிப்பவர்கள் போல உலகிற்குக் காட்டிக் கொள்பவர்கள் தான் இப்போது இந்தியாவில் அதிகம் இருக்கின்றார்கள்,இது காந்தி தேசமாக இருக்கலாம் ஆனால் காந்தியமில்லாத தேசமாக வளர்ந்து விட்டது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெவ்வேறு கட்சியைத் சேர்ந்த அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் மாறி மாறி  ஒருவரையொருவர் குற்றம் கண்டார்கள் ,தரக் குறைவாகப் பேசினார்கள். தங்களைத் தாங்களே உயர்வாகப் பேசிக் கொண்டார்கள்.செய்யாத டமைகளையெல்லாம் தான் செய்த தொண்டாக வர்ணித்தார்கள்.

இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் சராசரி இந்தியனைப் போல வாழவில்லை.
தொண்டு உள்ளமும் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையும் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்.நாட்டின் செல்வத்தை எப்படியெல்லாம் சுரண்டிப் பிழைக்கலாம் என்று கனவு கண்டு மக்கள் முன்னே நாடகமாடி பதவியில் அமருமாசையால் கடமைகளைச் செய்யத் தவறியவர்களாக இருக்கின்றார்கள். மக்களுக்குச் சேவை செய்ய தான் மட்டுமே அரசாள வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.மேலை நாட்டுச் சரக்குகளை குடித்தும் ,அளவுக்கு மீறி உண்டும் பெரும்பாலான தலைவர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருக்கின்றார்கள். குடித்து விட்டு கும்மாளம் போடும் இவர்களா ஏழை இந்திய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போகின்றார்கள்.மக்கள் இவர்களை இனமறியலாம் ஆனால் என்ன பயன். இவர்களுக்கு மாற்றாக வேறொருவரைக் கொண்டு வர இவர்களால் முடியவே முடியாது. ஏனெனில் இந்தியாவில் அப்படிப்பட்ட வேட்பாளர்கள் யாருமில்லை என்பதே உண்மை.