Thursday, May 29, 2014

Cartoon

கார்ட்டூன் 


புயலுக்குப் பின் அமைதி வரும்
எப்படிச் சொல்லுகின்றாய் ?
எந்தப் புயலும் தொடர்ந்து வீசிக் கொண்டிருப்பதில்லை அதனால்தான் ஆனால் அமைதி அப்படியில்லை.அமைதி தொடர்ந்து அமைதியாகவே இருக்கமுடியும். 
உண்மைதான்.புயல் தற்காலியமானது,அமைதி நிரந்தரமானது 
அதனால்தான்  போருக்குப் பின் அமைதி வரும் என்றும் 
கோபத்திற்குப் பின் சாந்தம் வரும் என்றும் 

சான்றோர்கள் சொல்கின்றார்கள்.. 

Tuesday, May 27, 2014

Eluthatha kaditham

ழுதாத கடிதம் 

நல்லது விளைந்திருப்பதாகக் கூறும் போது அதை விட அதிக அளவில் தீமைகளும் விளைந்திருக்கின்றன என்பது  பலர் அறிந்தும் அறியாத உண்மையாகும் .நல்லவை பெரும்பாலும் விளம்பரப்படுத்தப் படுகின்றன வெறும் விளம்பரத்திற்காகவே நல்லவை செய்யப்படாலேயே சொல்லப்படுகின்றன. ஆனால் தீமைகள் அப்படியில்லை,சொல்லப்படாமலேயே செய்யப்படுகின்றன நல்லனவற்றை விட அல்லவை அதிகம் விளைவும் அப்படி விளைய விளை ப் போக்கு நிலைப்பட்டுப்போவதுடன் அது பின்னொரு காலத்தில் திருத்தவே முடியாத ஒரு அபாயமான சூழ் நிலை உருவாகும். அதுவே நம் முன்னேற்றத்திற்கு ஒரு டையாக அமையும். நீ வாழ்வதற்கு உன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய உதவிகளைச் செய்வது நல்லது. அதற்குத் தேவையானவற்றை எல்லாம் தருவது அல்லது. காட்டில் ஒவ்வொரு மிருகமும் தனக்குத் தேவையான உணவைத் தன்னே தேடிக்கொள்ள வேண்டும் என்பது இயற்கையின் விதி. இந்த விதிகளுக்கு புறம்பாக நடப்பது மனிதர்கள் மட்டுமே. எவனொருவன் தனக்குத் தேவையானவற்றை குறுக்கீடின்றித் தானே தேடிக்கொள்ளும் பண்புள்ளவனாக இருக்கின்றானோ அவனே வாழத் தகுதியுள்ளவனாக இருக்கின்றான்.  வாழ்க்கையின் இலக்கணம் மாறிச் செல்வதை ன் இன்னும் அனுமதிக்கின்றோம்? இது அறியாமையின் ஒரு செயலா இல்லை வாக்கைப் போராட்டத்தின் ஒரு பரிணாம வளர்ச்சியா?  

Tuesday, May 13, 2014

Eluthatha Kaditham

Beware of  silent thief –M/s.Anand Rathi
I was trading shares with M/s.Anand Rathi,Trichy branch for the past few years. When I sell they charged more and deducted the same from my credit.They retain more money in my account without my permission. They do not give balance statement even quarterly.One cannot calculate how m uch they have deducted for what reason..For every trading I lose unexpectedly more. For example, When I sell  50 shares of Alembic pharmaceuticals for Rs.285.10 on 5-3-2014 I finally got Rs.13000 on 13-3-2014.
As I was not satisfied with the way of approach to customers, I wanted to close my trading account with them. When I submitted my requisition to closure on 4 th April 2014, they transferred my shares only on 26 th April ,that too after long fighting. In between I was not allowed to trade. After closing my trading account they were silent without giving back the remaining balance money in my account., again after long war.The balance statement given by them showed my balance is Rs.1174.99, but they gave only Rs.890.95 on 8 th May.They have deducted a sum of Rs.285 for no reason..I reported this state of affair to both SEBI and NSE. It must be SEBI and NSE to monitor the stock brokers whether they follow the rules and regulations strictly. Infact a far away customer cannot succeed  when they intentionally go wrong.If  such habit is allowed to grow by the ignorance and inability of customers, the whole system will not be a healthy source of economy of our nation.

Beware of Anand Rathi!

Sunday, May 4, 2014

Cartoon

கார்ட்டூன்சில வாரங்களாக  நடைபெற்ற சினிமா பாட்டுப் பாடும் போட்டியில் வென்ற சினேகாவிற்கு 30 லட்சம் திப்புள்ள வீடு பரிசு 
இந்த ஆண்டு 1 வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்த சரஸ்வதிக்கு 1௦௦௦ ரூபாய் பரிசு 
சில வாரங்களாக  நடைபெற்ற பாட்டுக்குப் பாட்டு போட்டியில்    சுசீலாவிற்கு 5௦௦௦ ரூபாய் பரிசு

1330 குறள்களைப் பிழையின்றி ஒப்புவித்த திருவள்ளுவனுக்கு திருக்குறள் புத்தகம் பரிசு 

Saturday, May 3, 2014

Eluthatha kaditham

எழுதாத கடிதம்
எந்த நிர்வாகத்திலும் கண்காணிப்பு இல்லாததால் இந்திய மக்களிடையே  மிகச் சாதாரணமா விதி மீறிச் செயல் படும் எண்ணம் மேலோங்கி வருகின்றது.சுய கட்டுப்பாட்டை படிப்படியா இழந்து வருகின்றார்கள். கண்காணிப்பு இல்லாமை தீய செயல்களைச் செய்யத் துணிவைத் தரும்.  கண்காணிப்பாளர்களுக்கு கண்காணிப்பு இல்லாததால். இத் துணிவு இயல்பாகவே வந்து விடுகின்றது. சொல்லப்போனால் இந்த சைகளினாலேயே  கண்காணிப்பாளர் பதவிக்குப் போட்டி போடுகின்றார்கள் ஒருவரைக் கண்காணிக்க இருக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் போது அவர் குற்றச் செயல்கள் செய்யும் அளவு அதிகமாகவே இருக்கின்றது. பொது மக்களுக்கான கண்காணிப்பு அமைப்புகளை அரசாங்கம் சுய லாபத்திற்காக பலவீனப்படுத்தி விடும் போது அவை சரியாகச் செயல்படுவதில்லை.தன் அதிகாரத்தினாலும்,சரியாகச் செயல் படாத கண்காணிப்புப் அமைப்புககளினாலும் எவ்வித இடையூறுமின்றி எளிதாகத் தீய செயல்களைச் செய்யலாம் என்று நினைக்கின்றார்கள்.யாருக்கும் தெரியாமல் தவறு செய்யும் போது அதைத் தொடர்ந்து செய்ய
முடிவதோடு எதிர்ப்பின்றியும் செய்து முடிக்க முடிகின்றது. இப் போக்கு அதிகாரத்தில் இருக்கும் அரசியல் லைவர்களிடமிருந்து தான் தொடங்கியது. அதன் பரிணாம வளர்ச்சியில் உயர் அதிகாரிகளையும் அடுத்து அரசு ஊழியர்களையும் ,வர்த்தகர்களையும் ,இப்போது சாதாரண குடிமக்களையும் தொற்றிக் கொண்டது. .இது பரிணாம வளர்ச்சிப் படிகளில் நிலை பெற்று வருவதால் புதிய தலைமுறையினரின் உள்ளார்ந்த பண்புகளில் திருத்த முடியாத அளவுக்கு பெரிய
மாற்றங்களை உருவாகியுள்ளது.
கண்காணிப்புப் பணியில் இருந்து கடமையாற்றி சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டிய
பொறுப்புள்ளவர்கள் தம் பணியில் காட்டாத அக்கறையால் சமுதாயம் வெகுவாகச் சீழிந்து வருகின்றது. . ரேஷன் கடைக்குப் போனா அங்கே அளக்கப்படுவதுதான் அளவு. என்றைக்கு வேண்டுமானாலும் கடையைத் திறப்பார்கள் அல்லது மூடுவார்கள் .தங்கம்,வெள்ளி நகைகளில் எவ்வளவு செம்பு வேண்டுமாலும் கலப்பார்கள், சேதாரம் என்று தன் இஷ்டம் போல வைத்துக் கொள்வார்கள். பேருந்துக் கட்டணத்தை இஷ்டம் போல உயர்த்திக் கொள்வார்கள் பள்ளிக் கூடக் கட்டணத்தை விருப்பம் போல அதிகரிப்பார்கள் .கேட்பதற்கு யாரும் இல்லை. கட்டுப்பாடும் இல்லை. விற்கப்படும் பொருளின் தரத்தை எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக்  கொள்ளலாம்.விலையையும் விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளலாம்.மக்களிடம் எதிர்ப்பு பலமாகும் போது மட்டும் தற்காலியமாக சில நடவடிக்கைகள் வரும் போகும். விற்பனையில் ஏற்படும் சரிவு, போட்டி போன்ற காரணங்களினால் வியாபாரிகளாகவே விலையைக் குறைத்தால் தான் உண்டு.மற்றபடி மக்களை ஏமாற்றும் போக்கில் எந்தக் குறுக்கீடும் இருப்பதில்லை.

இந்தியாவை அழிக்க யாரும் வெளியில் இல்லை. இந்தியா இந்திய மக்களாலேயே அழியும்.