Thursday, October 25, 2012

Vinveliyil Ulaa


விண்வெளியில் உலா

லியோ விண்மீன் வட்டாரம்

36 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டென போலா (Denebola ) என்றழைக்கப் படும் பீட்டா லியோனிசின் தோற்ற ஒளிப் பொலிவெண் 1.6. இது சிங்கத்தின் வால் பகுதியில் அமைந்துள்ளது. இதை நம்மவர்கள் உத்திரம் என அழைப்பார்கள் .

அல்ஜிபா (Algieba) என்றழைக்கப்படும் காமா லியோனிஸ் 126 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ஓர் இரட்டை விண்மீனாகும்.இவை இரண்டும் 600 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் பொன்னிற ஆரஞ்சு நிறத்துடன் ஒளிரும் பெரு விண்மீன்களாகும் .இவற்றின் ஒளிப் பொலிவெண் முறையே 2.4 ,3.5 ஆகும் தொலை நோக்கியால் பார்க்கும் போது அகன்ற தொலைவில் 5 கொண்ட ஒரு விண்மீன் இருப்பதைக் காணலாம் எனினும் இது அல்ஜிபாவுடன் ஈர்ப்புத் தொடர்பின்றி உள்ளது. ஜோஸ்மா (zosma) எனப் பெயரிடப்பட்ட டெல்டா லியோனிஸ் 58 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.56 ஒளிப் பொலி வெண்ணுடன் காணப்படுகிறது . ஆசாத் ஆஸ்ட்ராலிஸ் (Asad Australis) என்ற எப்சிலான் லியோனிஸ் 251 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2.97 ஒளிப் பொலி வெண்ணுடனும், சோர்ட்( Chort) என்ற தீட்டா லியோனிஸ் 178 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.33 ஒளிப் பொலிவெண்ணுடனும் அட்காபேரா (Adhafera) என்ற சீட்டா லியோனிஸ் 99 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.43 ஒளிப் பொலிவெண்ணுடனும் ,ஈட்டா லியோனிஸ் 2130 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.48 ஒளிப் பொலி வெண்ணுடனும் சுப்பரா என்ற உமிகிறான் லியோனிஸ் 135 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.52 ஒளிப் பொலிவெண்ணுடனும் ,ரோ லியோனிஸ் 5720 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.84 ஒளிப் பொலிவெண்ணுடனும், ராசெலாஸ் (Rassalas) என்ற மியூ லியோனிஸ் 133 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.88 ஒளிப் பொலிவெண்ணுடனும் இக் கூட்டத்தில் காணப் படுகின்றன. இவற்றுள் அருகருகே அமைந்துள்ள தீட்டா மற்றும் டெல்டா லியோனிஸ்ஸை நம்மவர்கள்  பூரம் என்று அழைக்கின்றார்கள். சீட்டா

 லியோனிஸ் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அகன்ற இடை வெளியுடன் கூடிய

 மும்மீனாகும். இதை வடக்கு மற்றும் தெற்கில் 35,39 லியோனிஸ் என்று அழைக்கின்றார்கள் . இவற்றின்  ஒளிப் பொலி வெண் 6 . இவ்வட்டாரத்தில் ஆர் லியோனிஸ்என்ற ஒரு பெருஞ் சிவப்பு விண்மீன் மீரா மாறொளிர் விண்மீன் போல தன பிரகாசத்தை 10 மாதத்திற்கு ஒரு முறை பெரும, சிறும பிரகாசமாக 4 மற்றும் 11 என்ற ஒளிப் பொலி வெண்களுக்கிடையே அலைவுறச் செய்கிறது.

M.65 (NGC 3623) என்று பதிவு செய்யப்பட்ட Sb வகை சுருள் புய அண்டம் 35 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும் ஒளிப் பொலி வெண் 9.3 உடனும், M.66 (NGC 3627) என்று பதிவு செய்யப்பட்ட M .65 உடன் ஒட்டியுள்ள மற்றொரு Sb வகை சுருள் புய அண்டம் ஒளிப் பொலி வெண் 9 உடனும் M.95 (NGC 3351) என்ற SBb வகை சுருள் புய அண்டமும் M.96 ( NGC 3368) என்ற Sb வகை சுருள் புய அண்டமும் இவ்வட்டாரத்தில் உள்ளன.                      M.105, E 1 வகை நீள் வட்ட அண்டமாகக் காட்சியளிக்கின்றது. இந்த அண்டங்களின் தோற்ற ஒளிப் பொலி வெண் 9-10 என்ற நெடுக்கைக்குள் உள்ளது. M.65 யும் M.66 ம் சற்று சாய்வாகத் தோன்றுவதால் நீள் வட்டம் போன்ற உருவத்தில் தெரிகின்றன.M.95 மற்றும் M.96 இரண்டும் ஏறக்குறைய 20 -25 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.

இவ்வட்டாரத்தில் 7.78 ஒளி ஆண்டுகள் தொலைவில் வுல்ப் (Wolf)359 என்று குறிப்பிடப் படுகின்ற ஒரு குறு விண்மீன் உள்ளது .இது பிராக்சிமா செண்டரி,பெர்னார்டு விண்மீனுக்கு அடுத்து மூன்றாவதாக நமக்கு அருகில் இருக்கும் ஒரு விண்மீன். இது 1918 ல் மாக்ஸ் வுல்ப் என்பாரால் கண்டுபிடிக்கப் பட்ட மிகவும் மங்கலான குறுஞ் சிவப்பு விண்மீனாகும்.இதன் ஒளிர் திறன் சூரியனின் ஒளிர் திறனில் 50000 ல் ஒரு பங்குதான். தோற்ற ஒளிப் பொலி வெண் 13.45 .இது அவ்வப்போது தன் மூலப் பொருளை பீற்றி வெளியேற்றுகிறது.

Vethith thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -வனேடியம் (Vanadium )- கண்டுபிடிப்பு

 

 

1801 ஆம் ஆண்டில் மெக்சிகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்டரஸ் மானுவெல் டெல்ரியோ அந்நாட்டில் கிடைத்த ஒரு கனிமப் பொருளை பகுத்தாராய்ந்து அதில் ஒரு புதிய தனிமம் இருபதைக் கண்டுபிடித்தார் .வேதி வினைகளின் போது இது பன்னிற வேதிச் சேர்மங்களை ஏற்படுத்தியதால் அதைப் பான்குரோமியம் என அப்போது குறிப்பிட்டார். இச் சொல் பன்னிறங்களைச் சுட்டும் கிரேக்க மொழிச் சொல்லாகும் .அதன் பிறகு அவரே சிவப்பு என்ற பொருள் தரக்கூடிய கிரேக்க மொழிச் சொல்லான எரிட்ரோனியம் (erytronium) என்ற சொல்லைத் தேர்வு செய்தார். இப் புதிய உலோகத்தின் பல வேதிச் சேர்மங்கள் சூடுபடுத்தும் போது சிவப்பாகி விடுகிறது என்ற கண்டுபிடிப்பே இப் பெயரைச் சூட்டு மாறு தூண்டியது. ஆனால் வோலர் என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி இது தூய்மையற்ற குரோமியம் என்று தெரிவித்தார். அதன் பிறகு 1830 ல் இதே தனிமம் வனேடியம் என்ற புதிய பெயருடன் நில்ஸ் செப் ஸ்ட்ரோம் என்பாரால் மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டது. வனாடிஸ் என்பது ஸ்காண்டி நேவியர்களின் பெண் கடவுள். 1869 ல் இங்கிலாந்து நாட்டு வேதியியலார் ஹென்றி ரோஸ்கோ தூய வனேடியத்தைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். ஹைட்ரஜன் மூலம் குளோரைடுகளை அகற்றி 99 .8 % தூய்மையைப் பெற்றார்.

வனேடியம் ,கார்னோடைட், ரோச்கோலைட் ,வனாடினைட்,பாட்ரோனைட், போன்று 65 வகையான தாதுக்களில் கிடைக்கின்றது. பாஸ்பேட் பாறை மற்றும் ஒரு சில இரும்புத் தாதுக்களிலும் காணப்படுகின்றது. கச்சா எண்ணெயில் கனிம -கரிம மூலக் கூறுகளாகவும் உள்ளது. வனேடியத் தாதுக்கள் அமெரிக்கா,பின்லாந்து ,தென் ஆப்ரிக்கா ,வாடா ரொடீசியா ,பெரு.வெனிசுலா ,பிரான்சு போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது. .மக்னீசியம் அல்லது மக்னீசியம்- சோடியக் கலவையால் வனேடியம் ட்ரை குளோரைடை ஆக்ஸிஜனீக்க வினைக்கு உட்படுத்தி தூய வனேடியத்தைப் பெறலாம் .இயற்கையில் காணப்படும் வனேடியத்தில், வனேடியம் 50 (.24 %),வனேடியம் -51 (99 .76 %) உள்ளன.இதில் வனேடியம் -50 கதிரியக்க முடையது .இதன் அரை வாழ்வு 6 x 1015   

ஆண்டுகள் .பூமியின் புறவோட்டுப் பகுதியில் இதன்  செழுமை .02 % .இது ஈயத்தின் செழுமையை விட 15 மடங்கும் வெள்ளியின் செழுமையை விட 2000 மடங்கும் அதிகமானது.

பண்புகள்

இதன் வேதிக் குறியீடு V ஆகும். இதன் அணுவெண் 23 அணு எடை 50 94 ,அடர்த்தி 5960 கிகி /கமீ,உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 2193 K , 3673 K ஆக உள்ளன .தூய வனேடியம் பளபளப்புடன் கூடிய சாம்பல் நிற உலோகமாகும்.இது மென்மையானது ,கம்பியாகவும் இழுக்க முடிகிறது. இது காரங்கள்,கந்தக அமிலம்,ஹைட்ரோ குளோரிக் அமிலம் ,உப்பு நீர் போன்றவற்றின் அரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றது.ஆனால் 930 K க்கு மேல் உடனடியாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. உயர் வெப்ப நிலையில் அலோகங்களுடன் வினைபுரிகிறது.நைட்ரஜன்,ஆக்சிஜன்,ஹைட்ரஜன் போன்ற தனிமங்கள் சிறிதளவே சேர்ந்த போதும்,வனேடியம் ஒரு கடினப் பொருளாகி எளிதில் உடையக் கூடியதாகி விடுகின்றது.

எரிகற்களில் வனேடியத்தின் செழுமை அதிகமுள்ளது. முதிர்ந்த உறுதியான மரங்களின் அடிப்பகுதிகளில் வனேடிய உப்புகள் உள்ளன. கடல்  தாவர இனங்களிலும், கடல் வாழ் உயிரினகளின்  உடலிலும்           வனேடியம் அதிகம் இருக்கின்றது வனேடியம் உயிரினகளின் வளர் சிதை மாற்ற வினைகளில் வினையூக்கியாகச் செயல் படுகின்றது .ஜப்பான் நாட்டில் அசிடியா (ascidia) என்ற  கடல் வாழ் சிற்றுயிரியின் பண்ணைகளை அமைந்து அதன் உடலில் செறிவுற்றுள்ள 18 .5 சதவீதம் வனேடியத்தைப் பிரித்தெடுக்க முயன்று வருகின்றார்கள். மரப் பிசின்களின் உதவியுடன் அயனிப் பரிமாற்ற வினை வழி வனேடியத்தைப் பிரித்தெடுக்கும் நவீன முறையை அமெரிக்கர்கள் கையாளுகின்றார்கள்