Saturday, March 19, 2011

Vanna Vanna Ennangal

சின்னச் சின்ன ஆசை கள்
சின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்ஈழத் தமிழர்களை சமாதிகட்டிவிட்டு

இந்திய மீனவர்களை

எல்லை மீறிநீர் என்று

சிறைப்பிடித்து சித்தரவத்தை செய்யும்

ஸ்ரீலங்கா

நிகழப்போகும் நிலநடுக்கத்தால்

நீண்ட தொலைவு விலகிச் செல்ல ஆசைசின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்தீவிரவாதிகளை ஊட்டி வளர்த்து

இந்தியாவில் ஊடுருவ வைத்து

உயிர்க்கொலையும் கொடுமையும் செய்துவிட்டு

உண்மைகளை மறைக்கும்

பாகிஸ்தான்

சீனப் பெருஞ்சுவர் போல இடையே

ஒரு நெடுஞ்சுவர் கட்டிவைக்க ஆசைசின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்வல்லரசு என இறுமாந்து

இந்தியாவிற்குச் சொந்தமான

அண்டைப்பகுதி அருணாச்சலப் பிரதேசத்தை

அப்படியே அபகரிக்க நினைக்கும்

சீனா

உள்நாட்டுக் குழப்பத்தால்

உருக்குலைந்துபோக ஆசைசின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்இயற்கையின் சீற்றத்தோடு

அணுஉலையின் வெடிப்பும் சேர

ஒரே நாளில் ஓடிந்துபோனது

உழைப்பால் உயர்ந்து வாழ்ந்த

ஜப்பான்

துயரில் வாடும் மக்களுக்கு

தூங்காது உதவ ஆசைசின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்இந்தியனாய் இருந்துகொண்டே

இந்தியாவைச் சுரண்டிப் பிழைக்கும்

ஊழல் பேர்வழிகளை ஊக்குவித்து

மக்களைத் திண்டாட விட்ட

இந்தியா

ஒட்டுமொத்தமாய் அவர்களை இனங்கண்டு

அந்தமானில் குடிபெயர்க்க ஆசைசின்னச் சின்ன ஆசைகள்

நெஞ்சில் ஒலிக்கும் ஓசைகள்

vanna vanna ennangal

பூமித்தாய்


நம் எல்லோருக்கும்

ஒரே தாய்

சாகாத சமுதாயத்தின்

பொதுத் தாய்

அவளுக்கு வயது

ஆயிரம் கோடி ஆண்டுகள்

வயதாகி விட்டாள் என்று

அவள் நலனில்

அக்கறை கொள்ள

மறந்துவிடாதேபடர்திருக்கும்

பச்சைத் தாவரங்கள்

அவள் உடுத்தியிருக்கும்

அழகிய ஆடைகள்

பூத்துக் குளுங்கும் பூக்கள்

அவள் சிந்திவைக்கும்

புன்னகைகள்

அழகாய் என்றைக்கும்

இளமையாய் இன்றைக்கும்

அவள் இருக்கின்றாள்உயர்தோங்கிய மலை

பூமித்தாயின் இதயம் போல

நிலத்தில் ஓடும் நீரோட்டம்

இந்த இதயத்தால்

நிகழும் இரத்தவோட்டம்பரந்து விரிந்த கடல்

சுருங்கி விரியும் சுவாசப்பை போல

எங்கும் வீசும் காற்றோட்டம்

இதன் இயக்கத்தால்

நிகழும் மூச்சோட்டம்நெடுந்தூரம் ஓடிச் சென்று

கடலில் கலக்கும்

கடியநீர்

சூரிய ஒளியை சுவாசித்து

ஆவியாக்கி மேகமாக்கி

மேட்டு நிலங்களில்

மலையாய் பெய்து

களைத்துப் போன

உலகை மீண்டும் மீண்டும்

உயிர்பூட்டுகிறது .நம் எல்லோருக்கும்

ஒரே தாய்

பூமித்தாய்

தாயின் பரிவு

இல்லையென்றால்

தவிக்கப்போவது

சாகாத சமுதாயமேWednesday, March 16, 2011

Arika iyarpiyal-43

இரு பாதரசத் துளிகள்ஒத்த இரு பாதரசத் துளிகள் இரண்டும் சம
வெப்பநிலையில் ஒரு தனி வெளியில்
உள்ளன .அவை இரண்டும் இயல்பாக மோதி
ஒன்றிணைந்து ஒரு பெரிய துளியாக
மாறுகின்றது .அதன் வெப்பநிலையை மிகத்
துல்லியமாக அளவிட்டறிய முடியுமானால்
சிறிய துளிகளைவிடப் பெரிய துளி சூடாக
இருக்கும் என்பதை அறியலாம் .இது ஏன் ?
அதற்கு வெப்ப ஆற்றல் எங்கிருந்து கிடைத்தது ?

                                      ******************
 
ஒரு பாதரசத் துளி கோள வடிவத்தில்
நிலைத்திருப்பதற்குக் காரணம் நீர்மத்தின்
பரப்பு இழுவிசையாகும். (Surface tension) . நீர்மத்தின்
உட்புறமும், புறப் பரப்பிலும் இருக்கும்
மூலக்கூறுகள் அல்லது அணுக்களுக்கிடையே
ஒரு வேறுபாடு உண்டு . நீர்மத்தினுள் அவை
எல்லாத் திசைகளிலும் சம அளவில் பிற
அணுக்களால் கவரப்படுகின்றன .ஆனால்
புறப்பரப்பில் அப்படி இல்லை.பரப்பிற்கு மேல்
ஊடகம் இல்லாததால் புறப் பரப்பில் உள்ள
ஒவ்வொரு துகளும் உள்நோக்கி இழுக்கப்படுகிறது .
இந்த இழுவிசையால் துளியின் புறப் பரப்பு
எப்போதும் சிறுமமாக இருக்கிறது . பரப்பை
அதிகரிக்க வேலை செய்யவேண்டும் .இது
அதில் நிலையாற்றலாகத் தேங்குகிறது .
இரு பாதரசத் துளிகளின் பரப்பை விடப் பெரிய
பாதரசத் துளியின் பரப்பு குறைவு . எனவே
பரப்பு இழுவிசையின் பரப்பாற்றல் குறைகிறது .
இந்த ஆற்றல் வெளி ஊடகத்திற்குச் செல்லத்
தடை செய்யப்பட்டிருப்பதால்
பெரிய துளியின் ஆற்றல் அதிகரிக்கிறது .Fun with Mathematics

Intra numeral mixing with Pythagorean triples
A most effective and quick way of getting R^2-relation
                                                              2 2

is intra numeral mixing with Pythagorean triple. This technique is useful
only for numeral relations, where equal numbers of squares with equal
number of digits are equated. If there is any difference in the number of
squares, then that much 0^2 must be added in the shortage side.

Similarly, if all the root numbers do not have equal number of digits, then
they can be made equal without affecting its

value by affixing sufficient number of zeros in front of them.For example 3^2 + 4^2 = 5^2 is written as

3^2 + 4^2 = 5^2 + 0^2

Intra numeral mixing means the number in one side, is simply

affixed in the front or prefixed at the end of the number in the other side.
In intra numeral mixing pairing can be interchanged, but pairing of
numbers must be same for both sides

For the given example,

Suffixing : 35^2 + 40^2 = 53^2 + 4^2 = 2825

Prefixing : 30^2 + 45^2 = 54^2 + 3^2 = 2925

By repeating the procedure one can generate more and more relations.

35^2 +40^2 = 53^2 + 04^2 gives

5335^2+440^2 = 3553^2 + 4004^2

435^2+ 5340^2 = 4053^2 + 3504^2

30^2+45^2= 54^2+ 03^2 gives,

5430^2+ 345^2= 3054^2 +4503^2

330^2+5445^2= 3054^2+ 4503^2

If we consider the Pythagorean triple (5,12,13), the number of digits
in the root numbers is not equal. Hence before making intra numeral mixing,
it is arranged as

05^2 + 12^2 = 13^2 + 00^2

It gives the following numeral relations,

1305^2+12^2= 513^2+1200^2 = 1703169

1312^2+5^2 = 500^2+1213^2 = 1721369

The mathematics behind it gives more insight on such relations.

The intra numeral mixing made on a^2+b^2=c^2+d^2
(for Pythagorean triple d=0) gives,

(10c+a)^2+(10d+b)^2= (10a+c)^2+ (10b+d)^2
                                         = 101(a^2+b^2)+20(ac+bd)
or

(10c+b)^2+(10d+a)^2= (10a+d)^2+(10b+c)^2
                                          = 101(a^2+b^2)+20(ad+bc).

It is noted that in the intra numeral mixing, the numbers in the same
side cannot be paired up, as they do not preserve the balanced condition
of the relation.In this intra numeral mixing, we simply add with each number 10 times
the paired root number. It is found that the balance

of the new relations is not affected when the mixing is done with different
proportions of the two paired numbers.

For a^2+b^2=c^2+d^2, we have

(ma+nc)^2+(mb+nd)^2= (mc+na)^2+(md+nb)^2
                                             =(m^2+n^2)(a^2+b^2)+2mn(ac+db)

or

(ma+nd)^2+(mb+nc)^2= (mc+nb)^2+ (md+na)^2
                                           = (m^2+n^2)(a^2+b^2)+ 2mn(ad+bc)Friday, March 11, 2011

Vanna Vanna Ennangal

யார் சுதந்திரம் பெரிது ?
சுட்டெரிக்கும் சூரியனுகில்லா சுதந்திரம்

விட்டெறிந்த ஒளிக்கற்றைக்குண்டு

ஊடுருவும் ஒளிக்கில்லா சுதந்திரம்

உறங்கும் இருளுக்குண்டு

அச்சம்தரும் இருளுக்கில்லா சுதந்திரம்

அகல்விரி விண்வெளிக்குண்டுபருத்த அடிமரத்திற்கில்லா சுதந்திரம்

சிறுத்த கிளைகளுக்குண்டு

உறுதியான கிளைகளுக்கில்லாத சுதந்திரம்

உதிரும் இலைகளுக்குண்டு

அசைந்தாடும் இலைகளுக்கில்லா சுதந்திரம்

அதைத்தீண்டும் தென்றலுக்குண்டுஒப்பற்ற உழைப்பிற்கில்லா சுதந்திரம்

ஊடறுக்கும் ஓய்விற்குண்டு

உடல்நாடும் ஓய்விற்கில்லா சுதந்திரம்

உடன்வரும் உறக்கத்திற்குண்டு

ஆழ்ந்த உறக்கத்திற்கில்லா சுதந்திரம்

அழகிய கனவுகளுக்குண்டுஊமை உண்மைக்கில்லா சுதந்திரம்

ஓங்கி ஒலிக்கும் பொய்க்குண்டு

சிதறும் பொய்க்கில்லா சுதந்திரம்

சிறைப்பட்ட நாவிற்க்குண்டு

நரம்பில்லா நாவிற்கில்லா சுதந்திரம்

நாளும் எழுதும் கோலுக்குண்டுThursday, March 10, 2011

Vanna Vanna Ennangal

காதல் என்றால் என்ன ?
காதலென்று சொன்னால் ஒருவர்க்கு

உள்ளம் சிறகடித்து விண்ணில்

உயர உயரப் பறக்கிறது

கடுங் கசப்பைக் குடித்தாலும்

கரும்பின் அடியாய் இனிக்கிறதுகாதலென்றால் மற்றொருவருக்கு

இதயம் துடிதுடித்து மண்ணில்

உதிரம் உறையாமல் கொட்டுகிறது

விரைத் தேனை சுவைத்தாலும்

வேம்பின் வேராய்க் கசக்கிறதுஒரு சொல்லுக்கு இரு அர்த்தமுண்டு

ஒரே காதலுக்கு இரு சுவையுண்டோ?மனம் மயங்கும் இந்தக் காதல்

என்றால் என்ன ?அது சுகமான் சொர்க்கமா ?

சொர்க்கம் போன்ற நரகமா ?

பாவையர் மீது கொண்ட பற்றா ?

பூவை நுகரப் பூத்த விருப்பமா?அழகை அணைக்க விரும்பிய ஆசையா ?

மனதை அடக்க முடியா உணர்வா ?மூத்தோர் வழி வந்த பண்பா ?

முடிவில்லாத உறவு தந்த பாசமா?இருவர்மட்டும் பரிமாறிக்கொள்ளும் அன்பா ?

இல்லை இயற்க்கை நிலைபடுத்திய அறமா?பழகப் பழக அரும்பிய நட்பா ?

பருவத்தில் புகுந்த காமமா?

அது நட்பும் இல்லை

அன்பும் இல்லைஅங்கே ஒளிந்திருப்பது

இனப்பெருக்க உணர்வுகளே !

அடிப்படையில் இந்த உணர்வில்லாமல்

ஆணுமில்லை பெண்ணுமில்லை

காதலுமில்லை,கத்திரிக்காயுமில்லைகாதலுக்கு மனிதன் வேண்டுமானால்

பல பொருள் கொடுக்கலாம்

இயற்கையில் இந்தக் காதல்

சாகாத சமுதாயத்திற்கு

இனப்பெருக்க உணர்வு மட்டுமே.

.Wednesday, March 9, 2011

Arika ariviyal-44

கொதி நீரில் ஒரு பனிக் கட்டி


கொதிக்கும் நீரில் உருகாமல் ஒரு பனிக்கட்டித் துண்டை நிலைத்திருக்குமாறு செய்ய முடியும் .ஒரு சிறிய
சோதனைக் குழாயை எடுத்து அதன் கொள்ளளவில்
3 /4 பங்கு நீரை இட்டு நிரப்பி எடை கட்டிய ஒரு
பனிக் கட்டித் துண்டை உள்ளிடவும். இது அடியில்
போய் தங்கிவிடும். பின் சோதனைக் குழாயைச்
சரிவாகச் சாய்ந்து மெழுகுவர்த்தியின் சுடரால்
மேற்புற நீரைச் சூடுபடுத்தவும் .நீர் கொதித்து
ஆவியாகும் .எனினும் அடிப்பகுதியில் உள்ள
பனிக்கட்டி வெகு நேரம் நீராக உருகாமல்
நிலைத்திருக்கும்.இது எங்ஙனம் நிகழ்கின்றது ?
இதன் இயற்பியல் அடிப்படை என்ன ?

                              ******************

சோதனைக் குழாயின் அடிப்பகுதியில் உள்ள
நீர் குளிர்ச்சியாக இருப்பதால் பனிக்கட்டி மெதுவாக
உருகும் . மேற்பகுதியில் உள்ள நீர் சூடுபடுத்தப்பட்டு
அடர்த்தி குறைவாக இருப்பதால் ,வெப்பச்சலன
இயக்கத்தை அடிப்பகுதி நீரோடு மேற்கொள்வதில்லை .
மேலிருந்து ஆவியாகி வெளியேறுகிறது .
வெப்பக் கடத்தல் மூலம் வெப்பம் கடத்தப்படலாம் .
எனினும் தூய நீரின் கடத்து திறன் மிகவும் குறைவு .
இதன் காரணமாக அடிப் பகுதியில் உள்ள பனிக்கட்டி
மிக மிக மெதுவாக உருகுகின்றது

Eluthatha Kaditham-22

எழுதாத கடிதம்


அன்பார்ந்த அரசியல்வாதிகளே,

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்திய குடிமக்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு தலையாய பணி இருந்தது.
தங்களுடைய குடும்பம், வேலை இவற்றையெல்லாம்
விட்டுவிட்டு அந்தப்பணியில் ஈடுபட்டார்கள் . தங்கள்
நாட்டைச் சுரண்டும் .ஆங்கிலேயர்களை விரட்டப்
போராடினார்கள். நாட்டை விட்டு விரட்டிவிட்ட
பின்னர்தான் ஓய்ந்தார்கள்.

ஆனால் இந்தியா இன்றைக்கும் தான் சுரண்டப்பட்டு
வருகிறது.இப்போது ஆங்கிலேயர்களால் இல்லை.
இந்தியா இந்தியர்களாலேயே சுரண்டப்பட்டு வருகிறது.
மிகுந்து வரும் அரசியல்வாதிகளால்
சுரண்டப்படும் வீதம் அதிகரித்து 50 விழுக்காட்டுக்கும்
மேல் வளர்ந்துள்ளது..இது மேலும் அதிகரிக்கக்கூடிய
வாய்ப்புகளே நம் நாட்டில் நிலவுகிறது தம் நாட்டு மக்களே
தாய்நாட்டைச் சுரண்டுவதை கண்டும் காணாதவர்களாய்
இன்றைக்கு மக்கள் மாறிபோய் இருக்கிறார்கள்.
போராடிப் பெற்ற சுதந்திரத்திற்குப் பின் நம்முடைய
வாழ்க்கைத் தரம் முன்னேறும் என்று நம்பிக்
கொண்டிருந்தவர்களுக்கு தன வீட்டைத்தானே
சுரண்டுபவர்களைக் கண்டு நம்பிக்கை இழந்தார்கள்.
வேலை இல்லாத் திண்டாட்டம், பிள்ளைகளுக்கு
குறைந்த பட்ச கல்வி கொடுக்க முடியாமை , .
விலைவாசி உயர்வு , சுகாதார வசதிகள் இன்மை ,
அதிகாரிகளின் அலட்சியப் போக்கு,ஊழல் , எதாவது
ஒரு முறையில் ஏமாற்றப்படுதல், தன தனித் திறமையை வெளிப்படுத்திக்காட்டிவாழும் வாய்ப்பில்லாமை
போன்றவற்றால் திண்டாடும் அவர்கள் அதைத்தவிர்த்து
பிற விசயங்களைப் பற்றி சிந்திக்கவோ அல்லது
செயல்படவோ முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள்

அன்பார்ந்த அரசியல் வாதிகளே உங்களைச் சாடுவதோ,
தண்டனைக்கு வலியுறுத்துவதோ,வெறுப்பதோ எங்கள்
நோக்கமில்லை . நடந்தவை எல்லாம் நடந்தவைகளாக
இருக்கட்டும். இனி நடப்பவையாவது நல்லவைகளாக
இருக்கட்டும்.1. அரசியல்வாதிகளே,உங்கள் செலவுகளை உங்கள்
    ஊதியத்திலிருந்தே செலவு செய்யுங்கள்..அரசு   முறையான                         
    வேலைகளுக்கு அரசு செலவு செய்யட்டும் .ஆனால் அதற்காக
    ஆடம்பரமாக ,அதிகப்படியாக செலவுக்குத் திட்டம் போடாதீர்கள்.

2 .வரி என்பது நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனை    
    மேம்படுத்துவதற்க்காக வசூலிக்கப்படுவது. அதில் அரசு தன   
    செலவினங்களுக்கு (ஊதியம், அரசு முறையான
    செலவினங்கள்) 10 சதவீதம் மட்டுமே ஒதுக்கிக் கொள்ளலாம் .
   90 சதவீதம் நாட்டுக்காகவேசெலவழிக்கப்படவேண்டும.

3. மக்களை வசிகரிக்கும் வெறும் திட்டங்களைத் தீட்டுவது
   மட்டுமே உங்கள் செயல்படில்லை.அதன் தேவையை,
  முன்னுரிமையின் அடிப்படையில் முடிவுசெய்து
   செயல்படுத்தி,அது முற்றுப்பெறும் வரை கண்காணித்து
   நாட்டுக்கு அர்பனியுங்கள். அதில் ஊழல் இல்லாமல்  
   பார்த்துக்கொள்ளுங்கள்.

4 அதிகாரம் மிக்க பதவியில் இருக்கிறோம் என்று
   நினைக்காமல் உங்களை நம்பிய மக்களின் தொண்டனாக
  இருக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்
  கொள்ளுங்கள் .Monday, March 7, 2011

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் -21இந்திய நாட்டின் மீது அளவில்லாத பற்றும்,இந்திய
மக்களிடம் அளப்பரிய பாசமும் கொண்டு
உங்களுடைய வாழ்க்கையை இந்திய மக்களுக்காகவே அர்பணித்துவிட்டதாக மக்களை நினைக்க வைத்து
அதை நிலைப்படுத்திக்கொள்ள தொடர்ந்து
விடாமல் நாடகமாடிக்கொண்டு வரும் இந்திய
அரசியல்வாதிகளே ,

சாதாரண குடிமக்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு
ஒவ்வொருநாளும் ஏதேதோ சொல்ல நினைக்கிறார்கள்.
சரியாக நினைத்திருந்தாலும் அவர்களில் யாருமே
சொல்ல வந்ததை சரியாகச் சொன்னதில்லை .
ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கைப்
போராட்டத்தை விட்டு வேறெதையும் சிந்திக்க
முடியாத சூழ்நிலையிலேயே தொடர்ந்து இருப்பதால்
இதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனால் இதையே அனுகூலமாக எடுத்துக்கொண்டு
அரசியல்வாதிகள் மனம் திருந்தாதிருப்பது கவலை
அளிக்கிறது. நீங்கள் எவ்வளவு பொய் சொன்னாலும்
கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு ஊழல்
புரிந்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்
வற்றாத வறுமையாலும், அநாகரிகக் கொடுமைகளினாலும் ,
மனம் திருந்தாத அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தினாலும்,
அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலும் ,தங்கள்
திறமையை வெளிக்காட்டி முன்னேற முடியாத இடைதடைகளினாலும் ,பெரும்பாலான மக்கள்
மனதில் இனம் புரியாத ஒருவித பயமே நிலவுகிறது.

மேலும் ,நேர்மையாக இனி வாழ முடியாது என்ற
மனநிலையே பரவலாகி வருகிறது. இந்த மோசமான நிலை நிலைப்படுமானால் .இந்தியாவை ஆயிரம்
மகாத்மா காந்திகள் வந்தாலும் காப்பாற்ற முடியாது.
அப்புறம் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டே இருக்கவேண்டியதுதான் .

இந்த நிலைமையை மாற்றும் தகுதியும்,பொறுப்பும்
உங்களிடம்தான் இருக்கிறது . இனிமேலாவது உங்கள்
கடமைகளை நிறைவாகச் செய்யுங்களேன் .

அன்புள்ள

இந்தியக் குடிமகன்

Sunday, March 6, 2011

Arika iyarpiyal-42

பாரென் ஹீட், சென்டிகிரேடு வெப்ப மானிகள்வெப்ப நிலையை அளவிடுவதற்கு பல அளவுகளும் ,
அதற்குரிய வெப்பமானிகளும் உள்ளன .சென்டிகிரேடு,
பாரென்ஹீட் இரண்டு அளவீடுகளும் புழக்கத்தில்
உள்ளன.ஒரு பொருளின் வெப்ப நிலையை
சென்டிகிரேடு, பாரென்ஹிட் வெப்பமானிகள்
இரண்டும் ஒரே அளவினதாகக் காட்டினால்
பொருளின் வெப்ப நிலை என்ன ?

                                  ***************

நீரின் உறை நிலையை 0௦ டிகிரி செல்சியஸ் என்றும்
கொதி நிலையை 100 டிகிரி செல்சியஸ் என்றும்
கொண்டது சென்டிகிரேடு அளவுகோல். இவை
பாரென்ஹீட் அளவு முறையில் 32 டிகிரி F ,212 டிகிரி F
ஆகும் . அதாவது 180 டிகிரி F , 100 டிகிரி C க்குச் சமம் ,
அல்லது 9 டிகிரி F = 5 டிகிரி C எனலாம் .
இவற்றிற்கான தொடர்பு (C -0 ௦)/100 = (F - 32)/180 .
எனவே C = 5 /9 (F - 32 ), அல்லது F = 9 /5 C + 32 .
F = C = x எனில் x = - 40 டிகிரி C அல்லது 40 டிகிரி F .

கெல்வின் அளவுகோலும் ,பாரென்ஹீட்
அளவுகோலும் சம அளவைக் காட்டினால்

(K - 273 )/ 100 = (F - 32) / 180 என்பதால்
அவ்வெப்பநிலை 574 .25 டிகிரி ஆகும்
Wednesday, March 2, 2011

 நாச வேலை செய்தது யார் ?

பனி பெய்யும் கடுங் குளிர் காலத்தில் சில சமயங்களில்
குடிநீர் வரும் குழாய் அல்லது மேனிலை நீர்த்
தொட்டியிலிருந்து வரும் குழாய்கள் திடீரென்று தானாக
வெடித்து விடுகின்றன .இந்த நாச வெளிக்கு யார்
காரணம் ?
                                      ****************
  
 கடுங் குளிர்காலத்தில் சுற்றுப் புறத்தின் வெப்பநிலை 0 ௦
டிகிரி செல்சியெஸ்க்கும் கீழே சென்று விடுகிறது. அதனால்
குழாய் வழி வரும் நீர் குழாய்க்குள்ளேயே
உறைந்து விடுகிறது .உறைவதால் நீர் பனிக்கட்டியாக
நிலை மாற்றம் பெறுகிறது .பனிக்கட்டியின் அடர்த்தி
நீரை விடக் குறைவு.அதாவது நீர் உறைந்து
பனிக்கட்டியாக மாறும் போது அதன் கனஅளவு
அதிகரிக்கிறது இதுவே அதன் அடர்த்தி குறைவிற்குக்
காரணம் .நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் பிணைப்பில்
(hydrogen bond) ஈடுபடுவதில்லை .பனிக்கட்டியில்
நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் பிணைப்பால்
ஒரு சீராகப் படிந்து உறைவதால் அதிக வெளியை
எடுத்துக் கொண்டு கனஅளவை அதிகரித்துக் கொள்கிறது .
நிறை மிக்க பெரிய பாறையை உடைந்துப்
பொடியாக்குவதற்கு இயற்கை இந்த வழிமுறையைப் பயன்படுத்துகிறது .பாறைகளின் இடுக்கில்
தேங்கி இருக்கும் மழைநீர் உறையும் போது
விளையும் வெப்ப அமுக்கத்தால்  சிறு சிறு
துண்டுகளாக உடைந்து விடுகின்றது.

                                                   ***************
 
. துருவப் பிரதேசங்களில் வாழும் நீர் வாழ் உயிரினங்கள்
 துருவங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மக்கள்
வாழ்வதற்கு ஏற்றவை அல்ல .கடுங் குளிர்,எங்கும்
பனி படர்ந்த பகுதி ,மரம் செடி கொடிகள் ஏதுமில்லாத
பனி வனம் . மக்கள் ஒதுக்கிய இப்பகுதிகளில் உள்ள
நீர் நிலைகளில் நீர் வாழ் உயிரினங்கள் மட்டும்
எப்படி நிம்மதியாக வாழ்கின்றன ? நீர் நிலைகள்
உறைந்து போனால் அவை மடிந்து போய் விடாதா ?

                                 ****************

 நீர் மாறுபட்ட சில தன்மைகளைப் பெற்றிருக்கின்றது .
நீர்ம நிலையில் ,திண்மநிலையை விட அதிக அடர்த்தியைப் பெற்றிருக்கிறது .இதனால் பனிக்கட்டிகள் நீரில்
மிதக்கின்றன, அப்படி மிதக்கும் பனிக்கட்டி அடியில்
உள்ள நீருக்கு ஒரு வெப்பக் காப்பாக இருப்பதால்
நீர் மேலும் குளிர்விக்கப்பட்டு பனிக்கட்டியாக
மாறுவதில்லை. புறவெப்பநிலை 0௦ டிகிரி செல்சியஸ்
ஆக இருப்பினும் உள்வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலையில் இருக்கும். ஏனெனில் 4 டிகிரி
செல்சியஸ் வெப்பநிலையில் நீரின் அடர்த்தி அதிகம் .
மேலும் அடி நீர் உறையாதிருப்பதற்கு அதன் மீது
படந்திருக்கும் பனி செயல்படுத்தும் அழுத்தமும்
ஒரு காரணமாகின்றது .இதனால் பனி படர்ந்த துருவப்
பகுதிகளில் குளிர் காலத்திலும் நீர் வாழ் உயிரினங்கள்
எவ்வித இடையூறுமின்றி அடியில் உள்ள நீரில் வாழ
முடிகிறது. 4 டிகிரி செல்சியஸ் லிருந்து 0௦ டிகிரி
செல்சியஸ் வரை பருமப்பெருக்கம் அடைவதால் அடர்த்தி குறைகிறது .அதனால் அடர்த்தி குறைந்த மேல் மட்ட
நீர் அடர்த்தி மிகுந்த கீழ் மட்ட நீரோடு கலப்பதில்லை .