Friday, September 30, 2011

vinveliyil ulaa

பெர்சியஸ்இந்த வட்டார விண்மீன் கூட்டத்தில் சுமார் 90 விண்மீன்கள்
காட்சி தருகின்றன. இதன் தோற்ற உருவத்தை கிரேக்க
புராணத்தில் வரும் பெர்சியஸ் என்ற வீரனைப் போல் உருவகப்படுத்தியுள்ளனர் . இவனுடைய வலக் கரத்தில்
ஒரு நீண்ட வாள் இருப்பது போலவும் இடக் கரத்தில்
அருவருப்பாகத் தோற்றம் தருகின்ற மதுசாவின் வெட்டப்பட்ட
தலையை ஏந்தி உள்ளது போலவும் சித்தரிக்கப்
பட்டுள்ளது. பெர்சியசின் தாய் டானே கருவுற்று
பெர்சியஸ்ஸைப் பிள்ளையாகப் பெற்றெடுத்தபோது ,
சீயஸ் பர்ர்க்க வருவது போல வந்து
தாயையும் ,பிள்ளையையும் சிறைப்பிடித்து ,
ஒரு மரத்தாலான பெட்டிக்குள் வைத்து கடலில்
வீசி எறிந்து விடுகின்றான் .பெர்சியஸ்
வளர்ந்து பெரியவனான பின், அவனுடைய தாத்தாவாகவும் ,
அர்கோஸ் நாட்டின் அரசனாகவும் இருக்கும் அக்ரீசியசைக்
கொன்று விடுவான் என்று அசரீறு வாக்குச் சொன்னதால் ,
இது அரசனுடைய உத்தரவால் நடந்தது. ஆனால் மரப்பெட்டி
கடலில் மிதந்து சென்று செரிபஸ் எனும் தீவை அடைய ,
அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த டிக்டைஸ் என்ற
மீனவன் இவர்களைக் காப்பற்றுகின்றான் .
இந்த டிக்டைஸ் அத் தீவிற்கு அரசனாக இருந்த
பாளிடெக்டெஸின் சகோதரனாவான் .இவனுடைய வளர்ப்பில்
பெர்சியஸ் பெரிய வீரனாக் வளர்கின்றான் .
சூன்யக்காரி மதுசா யாரையெல்லாம் பார்கின்றாளோ
அவர்களெல்லாம் வெறும் கல்லாகச் சமைந்து விடுகின்றார்கள் .
அதனால் அவளை வெட்டிக் கொன்று விட்டுத் திரும்பும்
வழியில் ஆண்ட்ரோமெடா என்ற இளவரசியை , சீட்ஸ்
என்ற திமிங்கிலத்தை கல்லாகச் சமைத்து விட்டு ,
அதன் பிடியிலிருந்து காப்பாற்றுகின்றான்.ஆண்ட்ரோமெடா
வட்டார விண்மீன் கூட்டத்திற்கு வடகிழக்கில் அமைந்துள்ள
இக்கூட்டத்தில் சில சிறப்பம்சம் கொண்ட விண்மீன்கள்
உள்ளன .பால்வெளி மண்டலத்தின் செறிவான பகுதி
பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டம் வழியாக ஊடுறுவிச்
செல்கிறது. அதனால் வானவியலாருக்கு இப்பகுதி கவர்ச்சி
மிகுந்ததாக இருக்கிறது. மேலும் பெர்சியசின்
கதையில் வரும் பல கதாபாத்திரங்கள் - பெரிச்யஸ்,
பிகாசஸ் ,இளவரசி ஆண்ட்ரோமெடா, சீட்ஸ் என்ற
திமிங்கிலம் , ஆண்ட்ரோமெடாவின் தாய் கசியோப்பியா ,
அவளுடைய கணவன் அரசன் சீபுஸ் எல்லாம் விண்வெளியில்
காணப்படும் வெவ்வேறு வட்டார விண்மீன் கூட்டங்களை
நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
மிர்பாக் என அழைக்கப்படும் ஆல்பா பெர்சி வெண்மையும்
மஞ்சளும் கலந்த மாபெரும் விண்மீனாகும். இதன் தோற்ற
மற்றும் சார்பிலா ஒளிபொலிவெண் முறையே 1 .79 , 4 .51
ஆகும். இது 592 ஒளி ஆண்டுகள் தொலைவில்
தளர்ச்சியாகவும் ,பெரிய அளவினதாகவும் உள்ள
மெலோட்(Melotte ) என்ற ஒரு விண்மீன் கூட்டத்தில்
காணப்படும் முதன்மை உறுப்பாகும் .

அல்கோல் எனப் பெயரிடப்பட்டுள்ள பீட்டா பெர்சி
இவ்வட்டார விண்மீன் கூட்டத்தில் காணப்படும் சிறப்புத்
தன்மை மிக்கதொரு விண்மீனாகும்.
அல்கோல் என்றால் அரேபிய மொழியில் பேயின் தலை
என்று பொருள். இது மதுசா என்ற தீய ஆவியின் தலையாகச்
சித்தரிக்கப்பட்டு அவளுடைய கொடூரமான கண்ணாக அல்கோல்
விளங்குகிறது. அல்கோலில் இன்னும் ஹைட்ரஜனே
முக்கிய எரிபொருளாக உள்ளது. இது ஒரு நூறு
மில்லியன் ஆண்டுகள் வயதானதாக இருக்கலாம் என
மதிப்பிட்டுள்ளனர்.

பீட்டா பெர்சி ஒரு மாறொளிர் விண்மீன் என்பதை 1667 ல்
இத்தாலி நாட்டு வானவியலார் கியோ வன்னி மோண்டனாரி
(Giovanni Montanari ) என்பார் கண்டுபிடித்தார் . இது
ஒன்றையொன்று மாறிமாறி மறைக்கின்ற நெருக்கமாக
அமைந்திருக்கும் இரட்டை விண்மீன் என்றும், சுற்றி வரும்
போது ஒன்றையொன்று இடைமறைபபதால் அது மாறொளிர்வது
போலத் தோன்றுகிறது என்றும் பின்னர் தெரிந்து கொண்டனர்.
முதன் முதலாக இனமறியப்பட்ட மறைவு மாறொளிர்
விண்மீன் இதுவாகும். பல நூற்றாண்டு காலம் பீட்டா
பெர்சி இடைமறைப்பு வகை மாறொளிர் விண்மீனுக்கு
எடுத்துக்காட்டாக விளங்கியது. அதற்குப் பிறகு பீட்டா பெர்சி
போல பல விண்மீன்களை விண்வெளியில் வானவியலார்
இனமறிந்தனர் என்றாலும் அவையாவும் அல்கோல் வகை என்றே அழைக்கப்பட்டன.

Thursday, September 29, 2011

arika iyarppiyal

உள்ளீடற்ற முப்பட்டகம்கண்ணாடியாலான முப்பட்டகத்தின் ஒரு பக்ககத்தில் வெள்ளொளி
விழும் போது நிறப்பிரிகை ஏற்பட்டு நிறங்களால் ஆன
நிறமாலை மறுபக்கத்தில் வெளிப்படுகிறது. ஊதா ஒளி
சிவப்பு ஒளியை விட அதிக அளவிலான விலக்கத்திற்கு
உட்படுகிறது.அதே ஒளியை உள்ளீடற்ற முப்பட்டகத்தின்
வழி செலுத்த நிறமாலை தோன்றுவதில்லை . ஏன் ?

முப்பட்டகத்தின் இரு பக்கப் பரப்புகளை தடிப்புள்ள கண்ணாடித்
தகடுகளாகக் கருதலாம். இதில் விழும் கதிர்கள் படுகதிருக்கு
இணையாக வெளியேறுவதால் நிறப்பிரிகை ஏற்படுவதில்லை .
எனவே நிறமாலை ஏற்படுவதில்லை .

ஒளி விலகல் எண்ணின் சிறுமம்

ஊடகம் எதுவானாலும் ஒளி விலகல் எண் எப்போதும்
ஒன்றைவிடக் கூடுதலான மதிப்பைப் பெற்றுள்ளது. ஏன்?
ஒளி விலகல் எண்ணின் சிறுமம் எது ?

ஓர் ஊடகத்தின் ஒளி விலகல் எண் என்பது வெற்றிடத்தில்
ஒளியின் திசை வேகம் மற்றும் அவ்வூடகத்தில்
ஒளியின் திசை வேகம் இவற்றின் தகவாகும். வெற்றிடத்தில்
ஒளியின் திசை வேகம் பெருமமாக உள்ளது.
வெற்றிடம் தவிர்த்த பிற ஊடகங்களில் ஊடகத்தைப்
பொறுத்து ஒளியின் திசை வேகம் பெருமத்தை விடக்
குறைவாக இருக்கும். எனவே ஊடகங்களின் ஒளி விலகல்
எண் எப்போதும் ஒன்றை விடக் கூடுதலாக
இருக்கும். வெற்றிடத்தின் ஒளி விலகல் எண் 1 ஆகும்.
இதுவே ஒளி விலகல் எண்ணின் சிறுமமாகும்.

Some representative refractive indices Material λ (nm) n .
Vacuum 1 (per definition)
Air at STP 1.000277
(Gases at 0 °C and 1 atm )
Air 589.29 1.000293
Carbon dioxide 589.29 1.00045

Helium 589.29 1.000036
Hydrogen 589.29 1.000132
(Liquids at 20 °C)
Arsenic trisulfide and sulfur in
methylene iodide 1.9
Benzene 589.29 1.501
Carbon disulfide 589.29 1.628
Carbon tetrachloride 589.29 1.461
Ethyl alcohol (ethanol) 589.29 1.361
Silicone oil 1.52045
Water 589.29 1.3330
Solids at room temperature
Titanium dioxide(also called Titania or Rutile)
589.29 2.496
Diamond 589.29 2.419
Strontium titanate 589.29 2.41
Amber 589.29 1.55
Fused silica (also called Fused Quartz) 589.29 1.458
Sodium chloride 589.29 1.544
Other materials
Liquid Helium 1.025
Water ice 1.31
Cornea (human) 1.373/1.380/1.401
Lens (human) 1.386 - 1.406
Acetone 1.36
Ethanol 1.36
Glycerol 1.4729
Bromine 1.661
Teflon 1.35 - 1.38
Teflon AF 1.315
Cytop 1.34
Sylgard 184 1.43
Acrylic glass 1.490 - 1.492
Polycarbonate 1.584 - 1.586
PMMA 1.4893 - 1.4899
PETg 1.57
PET 1.5750
Crown glass (pure) 1.50 - 1.54
Flint glass (pure) 1.60 - 1.62
Crown glass (impure) 1.485 - 1.755
Flint glass (impure) 1.523 - 1.925
Pyrex (a borosilicate glass) 1.470
Cryolite 1.338
Rock salt 1.516
Sapphire 1.762–1.778
Cubic zirconia 2.15 - 2.18
Potassium Niobate (KNbO3) 2.28
Moissanite 2.65 - 2.69
Cinnabar (Mercury sulfide) 3.02
Gallium(III) phosphide 3.5
Gallium(III) arsenide 3.927
Zinc Oxide 390 2.4
Silicon 590 3.96 [13]

Wednesday, September 28, 2011

vinveliyil ulaa

மீராவும் அண்மைக் கால ஆய்வுகளும்


மீராவின் நிறமாலையை நுட்பமாக ஆராய்ந்த போது அது பற்றி
வேறு சில உண்மைகளும் தெரியவந்தன.1919 ல் மீராவின்
நிறமாலையில் வெப்ப மிக்க வெண்ணிற விண்மீன் ஒன்றின்
நிறமாலையும் மேற்பொருந்தி இருப்பதை அறிந்தனர் .
இது ஒரு B 8 வகை விண்மீன் போலத் தோன்றியது .
இவ்வகை விண்மீன்களின் புறப்பரப்பு வெப்பநிலை 18000
டிகிரி கெல்வின் ஆகவும், சாதாரண ஹீலிய அணுவின்
நிறமாலை வரிகளையும் கொண்டதாக இருக்கும். ஏறக்குறைய
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ,மீரா சிறுமப் பிரகாசத்தில்
இருக்கும் போது அதற்கு மிக அருகாமையில் தோற்ற
ஒளிப்பொலிவெண் 10 - 12 உடைய ஒரு சிறிய விண்மீன்
இருப்பதை அட்கின் என்ற வானவியலார் சுட்டிக்காட்டினார் .
இது 9 செகண்டு அளவே மீராவிடமிருந்து அப்போது விலகி
இருந்தது.இவ்விண்மீன் மீராவை சில 100 ஆண்டுகளுக்கு
ஒரு முறை சுற்றி வருகிறது என்று கண்டறிந்துள்ளனர். இவ்
விண்மீனும் ஒரு வகையான மாறொளிர் விண்மீன் என்றும்
இதுவும் உருமாற்றத்தால் பிரகாச மாற்றம் பெறுகிறது என்றும்
ஆராய்ந்து தெரிந்து கொண்டனர் .

மீராவின் துணை விண்மீன் மீராவின் நிறையைக் கணக்கிட
உதவியாய் இருக்கிறது .துணை விண்மீனின் நிறை 2.5
சூரிய நிறை என்றும் ,மீராவின் நிறை 1.5 -2 சூரிய நிறை
என்றும் மதிப்பிட்டுள்ளனர் .இது மீராவின் சராசரி
அடர்த்தி சூரிய அடர்த்தியில் 2 x 10^-7 மடங்கு எனத்
தெரிவித்துள்ளது. இது சற்றேறக் குறைய வெற்றிடத்தின்
அடர்த்திக்கு ஒப்பானது.

நீல நிறங் கொண்ட துணை விண்மீன் வெப்ப மிக்க ஓர்
இடைநிலைக் குள்ள விண்மீனாகும்.இது சாதாரண விண்மீனுக்கும்
சிறு வெள்ளை விண்மீனுக்கும் இடையில் அமைந்திருக்கிறது .
இதன் விட்டம் சூரிய விட்டத்தில் 10 ல் ஒரு பங்கே .
அடர்த்தியோ 3300 மடங்கு .இதன் சுற்றுக் காலம் 260
ஆண்டுகள் .இது மீராவிலிருந்து 8 பில்லியன் கிலோமீட்டர்
தொலைவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது .துணை
விண்மீன் தொடர்ந்து குளுர்ச்சியடையும் போது மீரா நீண்ட
காலத்திற்குப் பிரகாசமாக உள்ளது. மீரா விண்மீன் வீசும்
அடர்த்தியான காற்று ,துணை விண்மீனின் பரப்பில் மோதி
பேரளவு ஆற்றலை உமிழ்கிறது. இந்த ஆற்றல் துணை
விண்மீனால் கதிர் வீச்சாக வெளியே வீசப்படுகிறது என்று
இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

டௌ சீடி என்ற விண்மீனின் தோற்ற மற்றும் சார்பிலா
ஒளி பொலி வெண் முறையே 3.49,5.68 ஆகும். இது
சூரியனைப் போல 0.62 மடங்கு பிரகாசிக்கின்றது .இதன்
நிறை 0.85 சூரிய நிறையாகும். இது மிகவும் உயரளவு
தனித்த இயக்கமுடையதாகக் காணப்படுகின்றது .
விண்வெளியில் ஓராண்டுக்கு இது 2 செகண்டு தொலைவு
கடக்கிறது. இந்த இயக்கத்தை நாம் தெளிவாக உணரக்கூடியதாக
இருப்பதால் இது பூமிக்கு அருகாமையில் உள்ளது எனலாம் .
இது 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக
மதிப்பிட்டுள்ளனர். மிக அருகாமையில் இருக்கும் 20
விண்மீன்களுள் இதுவும் ஒன்று.

டௌ சீடி ஒரு மஞ்சள் நிற குறு விண்மீனாகும் .
சற்றேறக் குறைய நமது சூரியனை ஒத்திருக்கிறது .
என்றாலும் சூரியனை விட சற்று சிறியது ,குளிர்ச்சியானது .
இது இப்போது ஒரு A வகை விண்மீனாக உள்ளது. சூரியன்
ஓர் அச்சைப் பற்றி ஒரு மாத காலத்திற்கு ஒரு முறை
தனைத்தானே சுற்றி வருவதைப் போல ,இந்த விண்மீனும்
தற்சுழலுகிறது என்றாலும் சூரியனை விட விரைவாக
இயங்குகிறது .தூசி போன்று ஒரு படலம் இந்த விண்மீனைச்
சுற்றி காணப்படுகிறது. சூரியனுக்கு ஒரு குடும்பம்
இருப்பதைப்போல இதற்கு ஒரு குடும்பம் என்று அனுமானிக்க
இது இடம் தருகிறது. எனினும் என்று வரை எந்தக் கோளும்
இனமறியப்படவில்லை.

டௌ சீடி யின் நிறமாலை அதில் சிறிய அளவில்
உலோகங்கள் இருக்கலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது.
டௌ சீடி யின் உலோகத் தன்மையே ,அதற்கு கோள்
இருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது. இந்த உலோகத்
தனிமங்கள் டௌ சீடி யால்உமிழப்பட்டு வெளியேறும் போது
கோளாக உறைந்து போக வாய்ப்பிருப்பதால்
வானாவியலார் அவ்வாறு உருவாகியிருக்கலாம் என நம்பினார் .
டௌ சீடி F வகை விண்மீனாகத் தொடங்கி அதன் தற்சுழற்சி
வீதம் திடீரென்று தாழ்ந்திருக்க வேண்டும் என்று
கொள்கையாளர்கள்கருத்துத் தெரிவித்துள்ளனர் .இதற்கு
அந்த குளிர்ந்த விண்மீனைச் சுற்றி வரும் கோள்களே காரணமாக
இருக்கலாம் .இக் கோள்கள் விண்மீனின் கோண உந்தத்தை
உள்வாங்கிக் கொள்வதால் விண்மீனின் சுழற்சி வேகம்
மட்டுப்படுத்தப்படுகிறது. நமது சூரியனைப் போல உயிரினம்
உள்ள கோள்களைப் பெற்றிருக்கலாம் என்று பொதுவாக
நம்பப்படுகிறது . அமெரிக்க விண்வெளி
ஆய்வாளர்கள் இந்த விண்மீனை நோக்கி சமிக்கை
அலைகளை அனுப்பி வைத்தார்கள்.ஆனால் அதற்கு பதில்
மொழியாக எந்த சமிக்கை அலைகளும் எதிரொளிக்கப்
படவில்லை. இது அங்கு உயிரினம் இல்லாததையோ
அல்லது உயிரினம் இருந்து செய்திப் பரிமாற்றம் பற்றிய நுட்பம் அறியாதவர்களாகவோ இருக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது .


இவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் M 77 என்று பதிவு
செய்யப்பட்டுள்ள ஒரு சுருள் புய அண்டம் உள்ளது. இதன் பரந்த
முகப் பரப்பு தெரியுமாறு இது விண்ணில் விரவியுள்ளது .இது
மிகவும் பிரகாசமான மையத்தைப் பெற்றுள்ளது. இதை சைபெர்ட் அண்டம் (Seyfert galaxy ) என அழைக்கின்றார்கள் .

arika iyarppiyal

ஒளி வட்டம்


சில சமயங்களில் நிலவு மற்றும் சூரியனைச் சுற்றி மங்கலான
வெண்ணிற வட்டம் காணப்படுவதுண்டு.இதை
நாம் ஆலவட்டம் என்று அழைக்கின்றோம்.'halo' என்று
ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள் .இது ஏற்படுவதற்கு
என்ன காரணம் ?


வளி மண்டலத்தின் உயர் மட்டத்திலுள்ள சின்னச் சின்னப்
பனிக்கட்டிகளில் விழும் ஒளி ,ஒளி விலக்கத்திற்கு
உட்படுவதால் இந்த ஆலவட்டம் ஏற்படுகிறது. ஆறுமுகிப்
பனிக்கட்டிப் படிகங்கள் ஊசி வடிவிலும் ,தட்டையாகவும்
எல்லாத் திசைகளிலும் அமைந்திருப்பதால் அவற்றில் விழும்
ஒளி பன்னிலை அக ஒளி எதிரொளிப்பை
ஏற்படுத்துகிறது. இதுவே ஆல்வட்டமாகக் காட்சி தருகிறது .
இது ஏறக்குறைய வானவில் ஏற்படுவதை ஒத்தது .
ஆனால் வானவில் சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் தோன்றும்.
ஆலவட்டம் அதே திசையில் தோன்றுவதுடன் எப்போதும் ஒளி
மூலத்தைச் சுற்றியே அமைந்திருக்கும்.பெரிய ஆலவட்டத்தின்
ஆரம் 220 டிகிரி . இது உயர் மட்டத்திலுள்ள காய வைத்த
பஞ்சு போன்ற தோற்றமுள்ள மேகத்தில் உள்ள பனிக்கட்டியால்
சிறும விலக்க முற்று ஏற்படும் ஒளி விலக்கத்தால் ஏற்படுகின்றது.
கொரோனா எனப்படும் சிறிய ஆலவட்டம் சில கோணங்களினால்
ஆன ஆரமுடையது .இது வளி மண்டலத்தில் உள்ள
நீர்த்துளிகளினால் ஏற்படும் விளிம்பு விளைவு ஒளி விலக்கதால்
ஏற்படுகின்றது.

Tuesday, September 27, 2011

vinveliyil ulaa

மீரா விண்மீனின் நிலை


விண்மீனின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலுள்ள கனிம
வேதிப் பொருட்கள் சிதைவுறுகின்றன. அதனால் வளிமண்டலம்
ஒளி உட்புகு தன்மையைப் பெறுகிறது. குளிர்ச்சியுறும் போது இந்த
வழிமுறை பிற்போக்காக நடைபெறுகிறது. விண்மீன் பெருமப்
பிரகாசத்தில் இருக்கும் போது வெப்ப மிக்க ஹைட்ரஜன்
அதன் புற மண்டலத்தில் விண்மீனால் உமிழப்பட்டு, விண்மீனின்
பிரகாசத்தை அதிகரிக்கச் செய்கிறது.இவை நிறமாலையில்
பிரகாசமான உமிழ் வரிகளை ஏற்படுத்தக் காரணமா யிருகின்றன.
மீராவின் புறப் பரப்பின் துடிப்பு, அதன் புறப் பரப்பிலிருந்து
எல்லாத் திசைகளிலும் 20 கிமீ/வி என்ற வேகத்தில்
வீறிட்டெழும் புழுதிக் காற்றினால் விண்மீனின் மூலப்பொருள்
தடையின்றி வெளியே விரவிச் செல்ல துணை செய்கிறது.
இது விண்மீனை விட்டு நெடுந் தொலைவு கடந்து சென்ற பின்,
குளிர்ந்து திண்மமாக உறைகிறது. .விண்மீனின்
சேர்மானப் பொருளைப் பொறுத்து இது மக்னீசியம் அல்லது
இரும்பு சிலிகேட்டாக இருக்கலாம். புகையில் உள்ளது
போலத் தூள் வடிவக் கார்பனாகவும் இருக்கலாம். இவை
அங்கு ஒரு மறைப்பூடகமாக நிலைபடுவதால்
சில காலத்திற்குப் பிறகு ஒளிரும் எஞ்சிய விண்மீனின்
உள்ளகத்தை மறைத்து விடுகிறது. மீராவின் இந்நிலையை
பரிணாம வளர்ச்சிப் படிகளின் மூலம் விளக்கியுள்ளனர்.விண்மீனின்
ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்த பின் அதன் கட்டமைப்பில்
குறிப்பிடும்படியான மாற்றங்கள் அடுத்தடுத்து ஏற்படுகின்றன.
ஈர்ப்பால் சுருங்கி மையம் சூடாகின்றது . போதிய
சூடடைந்தவுடன் ஹீலியம் அணு எரிபொருளாகப் பயன்படத்
தொடங்குகிறது .
ஆனால் உள்ளகத்தைச் சுற்றியுள்ள புற அடுக்குகளில்
ஹைட்ரஜன் தொடர்ந்து ஹீலியமாக மாறுகிறது.
அப்போது புற அடுக்கு தீவிரமாக விரிவடைந்து குளிர்ச்சியடைகிறது . இந்நிலையில் இருக்கும் மீரா
பெருஞ்சிவப்பு விண்மீனாகக் காட்சிதருகிறது. இது நமது
சூரியனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்
காட்டுவதாக இருக்கிறது .

மீராவின் உள்ளகத்தில் ஹீலியம் பிணைவுற்று கார்பனாக மாறிக் கொண்டிருக்கிறது .ஒரு சில காலத்திற்குப் பின்
இது மஞ்சள் நிறப் பெரு விண்மீனாக உருமாறும். புறவோட்டுப்
பகுதியில் ஹைட்ரஜனே இன்னும்
எரிபொருளாகக் கொள்ளப் படுவதால் விண்மீனின் விரிவாக்கம்
அதனால் ஓரளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
அங்கு ஹைட்ரஜன் தீர்ந்தவுடன் விண்மீன் மேலும் விரிவுற்று
பெருஞ்சிவப்பு விண்மீனாகும். அப்போது
அதன் ஒளிர் திறன் இன்னும் அதிகமாக இருக்கும் .ஹீலியம்
மையத்தில் தீர்ந்த பின் ,ஹீலியம்
புறவோட்டுப் பகுதியில் தொடர்ந்து எரிந்து கார்பனாகும் .இந்த
நிலையில் மீரா இப்பொழுது உள்ளது என ஆராய்ச்சி
யாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்நிலைக்குத் தள்ளப்பட்ட மீரா இன்னும் நீண்ட காலம் வாழ வாய்ப்பில்லை .அழிவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும்
ஒரு விண்மீன் மீராவாகும். துடிப்பின் மூலம் பெருமளவு
மூலப்[பொருளை இவ் விண்மீன் வெளியில்
உமிழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 10000 ஆண்டுகள் இதன்
புற வோட்டுப்பகுதி முழுவதும் வெளியேறி
பரந்த புகைப்படலமாக அதைச் சுற்றி நெடுந் தொலைவு வரை
விரவி இருக்கும். அப்போது இது கோளவடிவ
நெபுலாவாகக் காட்சி தரும் . நம்முடைய சூரியன் இன்னும் 5000
மில்லியன் ஆண்டுகளில் ஏறக்குறைய
இதே வழிமுறையைப் பின்பற்றி கோளவடிவ நெபுலாவாக
உருமாறலாம் என்று கூறுகிறார்கள் .

Monday, September 26, 2011

arika iyarppiyal

ஆழ் கடலில் சிவப்பு ரத்தம் பச்சை நிறமாகி விடுமா ?
ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட நிறங் கொண்டிருப்பதற்குக் காரணம், அது அந்நிற ஒளியைத் தவிர்த்து பிற
ஒளியை உட்கவந்துவிடுவதும் ,அந்நிற ஒளியை எதிரொளிப்பதும் ஆகும். இதற்கு அப்பொருளில் சிறப்புத் தன்மை கொண்ட
வேதிப்பொருள் ஒன்று இருக்க வேண்டும். இலை பச்சையாக இருப்பதற்கு காரணம் குளோரோபில் என்ற பச்சையமாகும் .
இது பச்சை தவிர்த்த பிற நிற ஒளியை உட்கவருகிறது. இரத்தம் சிவப்பாக இருப்பது அதிலுள்ள ஹிமோகுளோபின்
காரணமாகிறது .
ஆழ் கடலில் ஒருவர் இரத்தத்தை பச்சை நிறமுடையதாகக் கண்டார். ஆழ் கடலில் கறுப்பாகத் தோன்றிய மீன், கரைக்கு வரும் போது கருஞ்சிவப்பாகத் தோன்றியது. இந்த நிறமாற்றம் ஏன்
தோன்றுகிறது ?
பச்சை நிறப் பொருள் பச்சை தவிர்த்த பிற ஒளிகளை உட்கவருவதை போல கறுப்பு நிறப் பொருள் அனைத்து
ஒளிகளையும் உட்கவரும் என்றும் வெண்ணிறப் பொருள் ஒரு ஒளியையும் உட்கவராது என்றும் கூறலாம்.
நீர் சில குறிப்பிட்ட ஒளியை உட்கவருவதால் அது முழுமையான நிறமற்ற பொருள் அல்ல . நீரின் பரப்பில் விழும் வெண்ணிற ஒளி ஆழ் கடலில் (15 மீட்டர் ஆழத்திற்கும் கூடுதலான ஆழத்தில் ) வடிகட்டப்பட்டு கால் பங்கு ஒளியே சென்றடைகிறது .30
மீட்டர் ஆழத்தில் சிவப்பு நிறம் சிறிதும் இல்லை . நீர் மூலக்கூறுகள் சிவப்பு ஒளியை பிற நிற ஒளியை விட அதிகமாக உட்கவருகின்றன .சிவப்பு நீங்கிய வெள்ளொளி பச்சை கலந்த நீல நிறத்துடன் தோன்றுகிறது. 200
மீட்டர் ஆழத்திற்கு அப்பால் ஒளி சிறிதும் இல்லை.

arika iyarppiyal

இருளில் ஒளிரும் எருதின் கண்கள்


இரவில் நாம் பேருந்து அல்லது சிற்றுந்து மூலம் பயணம்
செய்யும் போது எதிர்ல் வரும் விலங்குகளின் கண்கள்
பிரகாசமாக ஒளிர்வதைப் பார்க்கிறோம் . இருளில் அவை
எப்படி பிரகாசிக்கின்றன ?

இரவில் உண்மையில் விலங்கினங்களின் கண்கள்
பிரகாசிப்பதில்லை .ஏனெனில் அவைகளுக்குத் தானாக
ஒளியை உமிழும் தன்மை இல்லை .அவற்றின் மீது
விழும் ஒளியை எதிரொளிப்பதால் இப்படிப் பிரகாசிக்கிறது .
சாலை ஓரம் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கைக் காட்டிகளைப்
போல இது செயல்படுகிறது எனலாம். சிவப்புக் கண்ணாடி போல
தெளிவான சிவப்பு நிறத்தை சிலந்தியும், பச்சை நிற
ஒளியை குள்ள நரியும் ,ஒளிரும் சிவப்பு நிறத்தை முயலும்
தருகின்றன. சிவப்பு நிறத்திற்கு கண்ணில் உள்ள நீர்மங்களில்
கரைந்துள்ள சிறப்பு வேதிப் பொருளே காரணமாகும் .
பெரும்பாலான விலங்கினங்கள் இரவில் நடமாடுகின்றன.
இரை தேடுவதையும் ,வேட்டையாடுவதையும்
இரவிலேயே செய்கின்றன. கண் விழியின் பின்புறத்தில்
இவை ஒளி எதிரொளிப்புத் தளத்தைப் பெற்றுள்ளது .
ஏனெனில் கிடைக்கும் நிலவொளி மற்றும் விண்மீன்களின்
ஒளியைக் கொண்டே அவை இரவில் புற உலகைக்
காண வேண்டியிருக்கின்றன. இந்த ஒளி கண்ணில் விழுந்து
பல மடங்கு பெருக்க மடைந்து வெளியேறுகிறது .
மனிதர்களின் கண்களுக்கு இத்தகைய தன்மை இல்லை.
மேலும் முழு இருட்டில் விலங்கினங்களால்
பார்க்கமுடியாது . ஆனால் பார்பதற்குத் தேவையான
குறைந்த அளவு வெளிச்சம் ,மனிதர்களுக்குத் தேவையான
அளவைவிடக் குறைவு

Sunday, September 25, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

ஜி -10 நாடுகளின் வளர்ச்சித் திட்டம் குறித்த ஆலோசனைக்
கூட்டத்தில் பங்கேற்று ப் பேசிய நமது நிதி அமைச்சர்
பிரணாப் முகர்ஜி அவர்கள் வளரும் நாடுகளுக்கு உலக
வங்கி கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார் .
கூடுதல் நிதி பலமுறை வாங்கி அதை இந்தியா சரியாகப்
பயன்படுத்திக் கொண்டதா ? அப்படி வாங்கப் பட்ட
நிதி முறையாக உண்மையான திட்டங்களில் செலவழிக்கப்
படாமல் பலருடைய பாக்கெட்டுகளில் போய் முடங்கியதால்
கறுப்புப் பணமாக் வெளி நாடுகளில் பதுக்கப் பட்டது .நிதி
உதவி கேட்பதற்கு முன்னர் அது எதற்காகக் கேட்கப் படுகிறது
அதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் ,அதை நடை
முறைப்படுத்துவதற்கான வழி முறைகள் யாவை ,பணம்
சரியாக திட்டங்களில் செலவழிக்கப் படுகிறதா என்பதற்கு
கண்காணிப்பு போன்றவை வலுவாக இருக்க வேண்டும்
காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஊழல்,
ஆதர்ஷ் காலனி ஊழல் ,2ஜி அலைக் கற்றை ஊழல்
இப்படி ஊழல் எல்லை இன்றி விரிந்து செல்ல நிதி உதவியைப்
பயன் படுத்திக் கொள்ளக் கூடாது .
வெறும் திட்டங்களை முன் மொழிவதாலும் அதை
அரைகுறையாக கால தாமதத்துடன் பலவீனமாக
நிறைவேற்றுவதாலும் அது மக்களின் வளர்ச்சிக்கும்
நலத்திற்கும் நன்மை பயக்கும் அணுகுமுறையாக இருக்காது.
மக்களுக்கு வேண்டியது அவர்கள் மகிழ்ச்சியாகவும் ,
ஏற்றத் தாழ்வின்றி சமுதாயத்தோடு ஒற்றுமையாகவும் ,
பயமின்றி நேர்மையாகவும் வாழ சம வாய்ப்புகளே .
நாளைக்கு என்று என்றைக்குமே கிடைக்காத அறு சுவை
உணவு வேண்டாம் ,
இன்றைக்கு குடிக்க நிச்சியமான கஞ்சி கிடைத்தால் போதும்

Saturday, September 24, 2011

vinveliyil ulaa


மீராவின் பிரகாசம் 332 நாட்களுக்கு ஒரு முறை ஏற்றத்
தாழ்வுடன் ஒளிர்கிறது..இது ஏறக்குறைய ஒவ்வொரு
ஆண்டிற்கும் ஒரு மாதம் முன்னதாக வரும். மீரா அடிவானத்தில்
இருக்கும் போது பகல் பொழுதில் மட்டுமே
பிரகாசமிக்க நிலை ஏற்படுவதால் நீண்டகாலம் இது கண்களுக்குத்
தென்படாமல் தப்பி வந்தது .1993 ஜூன்
17 ல் சூரியோதையத்திற்கு முன்னர் மீரா காட்சி தந்த பின் சில
காலம் காண முடியாத நிலையில் இருந்து விட்டு மீண்டும் 1998
ல் காட்சி தந்தது .
நேரடித் தோற்றப் பிழை யிலிருந்து மீரா 220 ஒளி ஆண்டுகளுக்கு
அப்பால் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர் .1925
ல் எப் .ஜி பீஸ் (F .G .Pease ) என்பார்,பெரிய ஒளிக் குறுக்கீட்டு
விளைவு மானியைக் கொண்டு ,இதன் கோண விட்டத்தை
அளவிட்டறிந்து இதன் விட்டம், சூரியனின் விட்டத்தைப் போல
400 மடங்கு இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர் . பெருமப்
பிரகாச நிலையில் இதன் விட்டம் இன்னும் கூடுதலாக 500
மடங்கு சூரிய விட்டமாக இருக்கலாம் என்றும் சிறுமப் பிரகாசத்தின்
போது இது 200 மடங்கு இருக்கலாம் என்றும் மதிப்பீடுகள்
தெரிவித்துள்ளன .இதன் நிறை சூரியனின் நிறையைப்போல 2
மடங்குதான்.இதன் அடர்த்தி சூரியனை விடப் பல
மடங்கு குறைவு .கட் புலனறி ஒளியில் இதன் பிரகாசம்
சூரியனைவிடச் சிறிதளவே குறைவு.பெருமப்
பிரகாசத்தின் போது இது சூரியனை விட 250 மடங்கு
கூடுதலாகப் பிரகாசிக்கிறது .

மீரா மற்றும் மீரா போன்ற மாறொளிர் விண்மீன்களின்
நிறமாலைகள் சற்றேறக் குறைய ஒன்று போல இருக்கின்றன .
இவற்றின் நிறமாலையில், டைட்டனியா ,சிர்கோனியா போன்ற
பல்வேறு கனிம வேதிப்
பொருட்களின் செழிப்பான உட்கவர் பட்டைகள் அடங்கியிருக்கின்றன.
இக் கூட்டுப் பொருட்கள் ,வெப்ப நிலையில்
ஏற்படும் சிறிய ஏற்றத் தாழ்வுகளுக்கு உணர்வு நுட்ப மிக்கதாக
இருப்பதால் உட்கவர் பட்டைகளின் செறிவும்
மாறொளிர்தலின் அலைவுக் காலச் சுற்றுக்கு ஏற்ப மாற்றம்
பெறுவதைக் காண முடிகிறது. நீண்ட
காலச் சுற்றுக் காலத்துடன் கூடிய மாறொளிர் விண்மீன்களின்
பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு ,கட்புலனறி
ஒளி நெடுக்கையில் அதிக வீச்சுடன் இருப்பதற்கும் ஆனால்
விண்மீன் உமிழும் மொத்தக் கதிர் வீச்சு குறைவான
மாற்றத்துடன் காணப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.
பெருமப் பிரகாசத்தின் போது மீராவின் நிறமாலையில்
ஹைட்ரஜன் மற்றும் சில உலோகங்களின் பிரகாசமான
உமிழ் வரிகள் தென்படுகின்றன. ஆனால் சிறுமப் பிரகாசத்தின்
போது அவை உட்கவர் வரிகளாக மாற்றம்
பெறுகின்றன ,நிறமாலையில் காணப்படும் இந்த அலைவு
கால நிலைப்[ பெயர்ச்சி ,நீண்ட கால சுற்றுக் காலத்துடன்
கூடிய மாறொளிர் விண்மீன்கள் எல்லாம் சிபிட்ஸ் வகை
விண்மீன்களை போல தம் புறப் பரப்பை விரிந்து
சுருங்கச் செய்கின்றன என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக
இருக்கிறது.(ஆனால் சிபிட்ஸ் வகை விண்மீன்களில்
இத் துடிப்பு அதன் புற படலத்தின் ஒளியியல் பண்பை
மாற்றுவதில்லை)

மீராவின் பிரகாச மாற்றத்திற்கு நம்ப முடியாத பல காரணங்கள்
பல காலகட்டங்களில் பலரால் சொல்லப்பட்டன .இது விரைவாகச்
சுழலும் ஒரு மங்கலான பெரிய கோள வடிவங் கொண்டிருந்தாலும்,
பிரகாசமான சிறிய உள்ளகத்தைப் பெற்றிருக்கிறது என்று சிலர்
இதற்குக் காரணம் கூறினார் , வேறு சிலர் இது நீட்சி யுற்ற
கோளமாக உள்ளது என்றும் இதை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்
போது வெவ்வேறு பிரகாசமுடையதாகத்
தோன்றுகிறது என்றும் கூறினார். சர் வில்லியம் ஹெர்ஷல் என்பார்
1777 - 1780 ல் மீராவை நுணுகி ஆராய்ந்து ,அதற்கு சனி வளையம்
போல வளையங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார் .இது சில சமயங்களில்
பரந்த முகப் பரப்புடனும்,சில சமயங்களில் குறுகிய விளிம்புத்
தோற்றத்துடனும் காணப்படுவதாகவும்
தெரிவித்துள்ளார் .எனினும் 1926 ல் சர் ஆர்தர் எட்டிங்டன் இதற்கு,
இந்த விண்மீனின் துடிப்பினால் அதன் புறப்படலம் உருமாற்றம்
பெற்று பிரகாசத்தின் மாறுதலுக்கு காரணமாகிறது எனக் கூறினார் .
எனினும் இந்த விளக்கம் சிபிட்ஸ் போன்ற குறுகிய கால மாறொளிர் விண்மீன்களுக்கு மட்டும் ஏற்புடையதாக இருக்கிறது. மீரா போன்ற
நீண்ட கால மாறொளிர்
விண்மீன்களுக்கு இணக்கமாக இல்லை .மீராவில் அதன் புற
அடுக்கு மட்டுமே விரிந்து சுருங்குகிறது .
இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை.

Friday, September 23, 2011

arika iyarppiyal

கானல் நீர் எப்படி உண்டாகிறது ?


கடும் கோடை வெயிலில் தார்ச் சாலைகளில் சென்று
கொண்டிருக்கும்போது தொலைவில் கானல் நீர் தென்படும்.
அதனால் தரைக்கு மேலாக உள்ள பொருட்கள் பிம்பம்
தலைகீழாகத் தெரியும். அதாவது வறண்ட சாலையில்
கொஞ்சம் தண்ணீர் கொட்டிக் கிடப்பது போலவும் ,அதில்
மரங்கள்,கட்டடங்கள் போன்றவை மெலிதாக பிரதிபளிப்பதைப்
போலவும் தோன்றும், இப்படித் தோன்றுவதற்கு என்ன காரணம் ?

கோடை காலத்தில் புவிபரப்பு மிக அதிகமாகச் சூடேறுவதால் ,
அதை ஒட்டியுள்ள காற்று அதிகமாகச் சூடாக்கி அடர்த்தி
குறைவாகிவிடுகிறது .ஆனால் அதை அடுத்துள்ள காற்று
அதை விட அடர்த்தி மிக்கதாக இருக்கும். தொடர்ந்து மெதுவாக
வெப்பச் சலனம் ஏற்பட்டாலும் இவ்வடர்த்தி வேறுபாடு
நிலையாக இருக்கிறது. அதனால் காற்றடுக்குகளில் ஓர்
அடர்த்திச் சரிவு கீழ்நோக்கியும் ,வெப்ப நிலைச் சரிவு
மேல்நோக்கியும் ஒழி விலகல் எண் (refractive index )
சரிவு கீழ் நோக்கியும் ஏற்படுகின்றன. இது தார் சாலைகளிலும்
பாலை வனங்களிலும் குறிப்பிடும்படியாக இருக்கிறது.

அதிகாலையில் அமைதியான ஏரியின் பரப்பு வளிமண்டலக்
காற்றை விடச் சூடாக இருக்கும். மாலையில் காற்றைவிடக்
குளிர்ச்சியாக இருக்கும்,பனிப் பிரதேசங்களில் காற்றின்
மேலடுக்கைவிடக் கீழ் அடுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
இது போன்ற சூழல்களில் காற்று வெளியின் ஒளி விலகல்
எண் சீரற்றதாக இருக்கிறது. இதனால் மாற்றங்களைப்
பொறுத்து பல வகையான வினோத பிம்பங்களைப் பார்க்க
முடிகிறது.

தொலைவில் உள்ள ஒரு பொருளை நோக்கும் போது
அதிலிருந்து சற்று சரிவாக கீழ் நோக்கி வந்து நம்மை அடையும்
ஒளிக் கற்றை அடர்மிகு ஊடகமான காற்றின் மேலடுக்கிலிருந்து
அடர் குறை ஊடகமான காற்றின் கீழடுக்கிற்குச் செல்வதால்,முழு
அகப் பிரதிபளிப்பு ஏற்படுகிறது. அதாவது அடர் குறை ஊடகத்திற்குச் செல்லாமல்,அடர் மிகு ஊடகத்திலேயே எதிரொளிக்கப்படுகிறது.
இது தரையின் கீழிருந்து வருவது போலத் தோன்றும்.அதனால்
தரையில் தண்ணீர் இருப்பது போலவும் அதன் எதிரொளிப்பினால்
அப்படி பிம்பம் தெரிவது போலவும் நாம் உணர்வதால் அந்தப்
பொய்யான தண்ணீரை கானல் நீர் என அழைக்கிறோம் .

Thursday, September 22, 2011

arika iyarppiyal

இரு இழை விளக்குகளும் ஒளியியல் குறுக்கீட்டு விளைவும்


ஓர் ஒளி மூலத்திலிருந்து இரு ஒளிக் கற்றைகளைப் பிரித்து
அவற்றைக் குறுக்கிடச் செய்ய ஒளியியல் குறுக்கீட்டு வளைவு
(Interference ) தோன்றுகிறது.
இதில் சீரான தடிப்புடன் ஒளிச்செறிவு மிக்க ஒளிர் பட்டைகளும்,
இருள் பட்டைகளும் மாறிமாறி
காணப்படுகின்றன .இதைத் தோற்றுவிக்க ஓரியல் ஒளி(Coherent)
தேவை. அதாவது அவற்றின் அதிர்வெண்
சமாகவும் மாறாத தொடக்க நிலைக் கட்ட வேறுபாடும் ,
அலைவீச்சு சமாகவும் அல்லது ஏறக்குறைய சமமாகவும்
ஒரே அலைநீளமுள்ள ஒற்றை நிற ஒளியாகவும் ஒளி மூலம்
ஓரளவு குறுகியதாகவும் இருக்கவேண்டும் .
ஒரே மாதிரியான இரு 100 வாட் இழை விளக்குகளைக் கொண்டு
ஒளியியல் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்த முடியுமா ?

ஒரே மாதிரியான விளக்குகள் என்றாலும் அவற்றின் ஒளி
ஒரே அதிர்வெண் உடையதாக இருப்பினும் ,அலைநீளம்
சமமாக இருப்பினும் அலைக் கட்ட வேறுபாடு
அதே அளவில் மாறாதிருப்பதில்லை.அதனால் இரு100வாட்
இழை விளக்குகளைக் கொண்டு ஒளியியல் குறுக்கீட்டு
விளைவை ஏற்படுத்த முடியாது .

ஒளிச்செறிவு வேறுபாட்டால் குறுக்கீட்டு விளைவு என்னவாகும் ?


குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தும் இரு ஒளி மூலங்களில் ஒன்றின் ஒளிச்செறிவு ,பாதியளவு ஒளியை உட்புக அனுமதிக்கும்
பொருளால் பாதியாகக் குறைக்கப்பட்டால் ,ஓரியல் ஒளி மூலத்
தன்மை மாறுவதில்லை. அவற்றால் ஏற்படுத்தப்படும் குறுக்கீட்டு
விளைவு எப்படி இருக்கும் ?

இப்போதும் குறுக்கீடு விளைவுப் பாங்கு தோன்றினாலும்,
ஒளி மற்றும் இருள் வரிகளுக்கிடையே வேறுபாடும்
தன்மை குறைந்துவிடுகிறது. அதாவது இருள் வரிகள்
சற்று பிரகாசமடைகின்றன, ஒளி வரிகள் சற்று
மங்குகின்றன

arika iyarpiyal

வெண்ணிற ஆடையும் நீலமும்

வெண்ணிற ஆடைகளை வெளுக்கும் போது அதற்கு நீல நிறமிடுகிறோம்.வியாபாரிகள் சலவைச் சோப்பையே நீல
நிறத்தில் உற்பத்தி செய்து மக்களைக்கவருகிறார்கள்.
வெளுத்த பின் வெண்ணிற ஆடைகளுக்கு நீலமிடுவதேன் ?


தொடர்ந்து சலவை செய்யப்பட்ட வெண்ணிற ஆடை பழுப்பேறி
மஞ்சள் நிறங் கொண்டிருக்கும் .நீலமிடும் போது
இது மீண்டும் வெண்ணிறமாக் கப் படுகிறது. இதற்குக் காரணம்
நீளமும் மஞ்சளும் ஒன்றிணைந்து வெண்மை யாக்கவல்ல
நிறங்களாகும் .

கண்ணாடியின் நிறம் எங்கே போனது ?

நிறமுள்ள ஒரு சிறு கண்ணாடித் துண்டை நுண் பொடியாக்கினால்
அது வெண்ணிறமாகத் தோன்றுகிறது. கண்ணடித் துண்டின்
நிறம் என்னவானது ?

கண்ணாடி துண்டில் ஒளி விழும் போது ,அது பெற்றிருக்கின்ற
நிறத்தைத் தவிர்த்த பிற நிற ஒளி அலைகளை உட் கடத்த
அனுமதிக்கிறது .அக் குறிப்பிட்ட நிற ஒளி எதிரொளிக்கப்
படுவதால் அக் கண்ணாடி அந்நிறமுடையது போலத்
தோன்றுகிறது. நுண் பொடியாக்கப்பட்ட கண்ணாடியில்
ஒளி நுண் துகள்களின் வெவேறு தளங்களில் மீண்டும் மீண்டும்
விழுந்து எதிரொளிக்கப்படுகின்றது. அதனால் உட்கடந்து செல்வதில்லை ,உட்கிரகிக்கப் படுவதுமில்லை .விரவலுற்று
எதிரொளிக்கப் பட்ட வெள்ளொளி நிறமுடைய கண்ணாடியின்
பொடியை வெண்ணிற முடையதாகக் காட்டுகிறது

Wednesday, September 21, 2011

Eluthaatha kaditham

ஊழல் ஒழிப்பு
ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு நேர்மை ,எல்லோரிடத்திலும் நேர்மை மிக மிக அவசியம் ..இது அமைதியாக
உடலோடு உறங்கிக் கொண்டிருந்தாள் அதனால் யாதொரு பயனுமில்லை .இது அவர்களுடைய பேச்சிலும் ,முக்கியமாக
செயலிலும் வெளிப்பட்டுத் தோன்றவேண்டும் . சமுதாய வாழ்க்கைக்கு நேர்மை ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் .
அப்பொழுதான் அது காலப்போக்கில் நிலைப்பட்டு நிற்கும்.
நேர்மைக்கு முக்கியத்துவம் இல்லாத போழ்து ,பனியின் சீர்மை கெடும் ,அதனால் செயல் முறையில் காலதாமதம் ஏற்பட
மக்களிடைய ஒரு அவ நம்பிக்கை தூண்டப்பட்டு ஊழல் எளிதாக உள் நுழைந்து விடுகிறது .
ஊழலை உற்சாகப்படுத்த மக்களிடையே நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துகிறார்கள் .இதற்கு பணியில் கால தாமதம் அவர்களுக்கு ஆயுதமாகப்
பயன்படுகிறது.
வேலை ஆகவேண்டும் என்பதற்காக இலஞ்சம் கொடுப்பவர் கொடுக்க மனமில்லாமலேயே கொடுக்கிறார். வேலை செய்ய ஊதியம் வாங்கிக்கொண்டு
கூடுதல் பொருள் சேர்க்க ஆசைப்பட்டு ,அதே வேலையைச் செய்ய லஞ்சம் வாங்குகிறார். இதி கொடுப்பவர் ஊழலுக்கு எதிரி என்றும் வாங்குபவர்
ஆதரவாளர் என்றும் கூறமுடியாது. ஏனெனில் ஒரு சமயம் லஞ்சம் கொடுப்பவர் மற்றொரு சமயம் வாங்குபவராகி விடுகிறார் .
இதுவரை லஞ்சம் வாங்காவிட்டாலும் ,லஞ்சம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கூட ஒரு வகையில் ஊழலுக்கு ஆதரவு தான் . அதனால்
ஊழல எங்கே இருக்கிறது எங்கே இல்லை என்பதை யாராலும் வரையறுக்க முடியாது .
நேர்மையான அணுகுமுறை எல்லோரிடத்திலும் எங்கும் எதிலும் காணப்படவேண்டும் . அதற்கு அரசின் கண்காணிப்பு என்ற பயமும் ,
சுய கட்டுப்பாடு என்ற பழககமும்தான் நற்பயன் தரும் .

eluthaatha kaditham

எழுதாத கடிதம்
ஊழலை ஒழிப்பது என்பது சுலபமான வேலையில்லை. அரசிடம் இல்லாத கண்காணிப்பும் ,மக்களிடம் இல்லாத சுய கட்டுப்பாடும்
ஊழல் பெருகிப் போனதிற்கு அடிப்படையான காரணங்களாகும் . இவை இரண்டும் உணமையாகக் கடைபிடிக்கப் படாத போது
ஊழல் ஒழிப்பு என்பது இயலாத காரியமாகவே இருக்கும்.
இந்த விஷயத்தில் " prevention is better than cure " என்பதின் உட்பொருளை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லை அல்லது புரிந்தும்
புரியாதது போல நடந்துகொள்கிறோம் என்று தான் சொல்லவேண்டும். சுயக் கட்டுப்பாடு இல்லாத மக்களிடம் ஊழல் தொடங்கி இருந்தால்
பலவீனமற்ற அரசின் கண்காணிப்பு அதை ஆரம்ப நிலையிலேயே எளிதில் ஒடுக்கி இருக்கும் .கண்காணிப்பு இல்லாத அரசு காரணமாக
இருந்தால் மயக்கமும் சலனமும் இல்லாத மக்களின் விழிப்புணர்வு அதை வேரறுத்திருக்கும். மனம் அனுமதித்தால் யாருக்கும்
தெரியப்போவதில்லை என்று நாம் தவறாக நம்பி .பொது ஒழுக்கத்தைப் பெரிதும் சீர்குலைத்து விட்டோம் .அதன் விளைவுகளை எல்லோரும் சேர்ந்துதானே சந்திக்கப் போகிறோம் என்று அதைப் பற்றி யாரும் இப்பொழுது கவலைப் படுவதாகத் தெரியவில்லை . பின் விளைவுகள்
மிகவும் மோசமாக மாறுவதற்கு முன்னர் விழித்துக் கொள்வதுதான் அரசுக்கும் மக்களுக்கும் நல்லது.
ஊழலை ஒழிக்கவே முடியாது என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்றால் ,ஊழலை அவர்கள் மறைமுகமாக அனுமதிக்கின்றார்கள்
என்று அர்த்தப்படும் .ஊழலை ஒழிக்க அரசு முற்ப்பட்டால் ,செல்வாக்கும் பலமும் மிக்க பலரின் எதிப்புகளைச் சந்திக்க வேண்டிவரும் .
அதனால் அரசு கூடக் கவிழ்ந்து விடலாம்..மூடி மறைத்த பழைய ஊழல்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ,தன்னைத் தானே
காட்டி விடக் கூடும். எளிய வேலை ஆனால் நிறைய அனுகூலம் என்றே பழக்கப் பட்ட நம் அரசியல்வாதிகள் ,கடிய வேலை ,ஆதயமின்மை
இணைந்த பணிகளில் ஈடுபட விரும்புவதே இல்லை. அதனால் இதை மக்களின் பலவீனமாகவே சித்தரிக்க அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள் .
மக்கள் லஞ்சம் கொடுப்பதால் தானே ஊழல் உருவாகிறது என்பது இவர்கள் வாதம்.
இது உண்மையில் தவறான வாதம் என்று
தான் நான் கூறுவேன் . லஞ்சம் கொடுத்தல் உடனடி வேலை .இல்லாவிட்டால் ஒருக்காலும் இல்லை. .
அலைச்சல் ,மன உளைச்சல் ,கால விரயம் ,வீண் செலவு இவைதான் மிச்சம் .இதை எல்லாம் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாலும் தேவை
நிறைவேறா விட்டால் என்ன செய்யமுடியும் ?
மக்களும் ஊழலுக்கு உண்மையான எதிரிகளாக இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. இல்லாவிட்டால் ஊழல் அரசியல்வாதிகள் செழித்து
வளர்ந்திருக்க மாட்டார்களே .எப்போதோ அழிந்து போய் இருப்பார்களே ஊழலால் ஆதாயம் கிட்டும் போது யாருக்கும் தெரியாமல் அதை அனுமதிக்கிறான் .அதே ஊழலால் துயரம் வரும் போது எல்லோர்ரும் அறியுமாறு வாய்கிழியப் பேசுகின்றான் .
ஊழலைப் பொறுத்த வரை ஒவ்வொரு மனிதனும் இரட்டை வேடம் போடுகின்றான் . உள்ளே ஒருவன் வெளியில் ஒருவன் .

Tuesday, September 20, 2011

கண்ணாடி வில்லையையும் குவியாடியையும் நீரில் வைத்தால்


கண்ணாடியாலான குவி வில்லை, ஒரு பக்கத்தில் விழும் ஒளியை மறு பக்கத்தில் ஒரு புள்ளியில் குவியச் செய்கிறது. விழும் ஒளி இணைக் கற்றைகளானால்,குவியும் புள்ளி குவி மையம் (focus ) எனப்படும் .குவி யாடி தன் மீது விழும் ஒளியை
எதிரொளித்து விரிந்து செல்ல வைக்கிறது. .கண்ணாடியாலான ஒரு குவி வில்லையையும் ,குவி யாடியையும் காற்றூடகத்திற்கு
பதிலாக நீரில் வைத்தால் என்ன மாற்றம் ஏற்படும் ?

ஆடியின் குவிய தூரம் ,அதைச் சுற்றியுள்ள ஊடகத்தால் பாதிக்கப்படுவதில்லை .ஆனால் குவி வில்லையின் குவிய தூரம்
சுற்றியுள்ள ஊடகத்தைப் பொறுத்திருக்கிறது .வில்லையை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்தால் ,அதன் குவிய தூரம் அதிகரிக்கிறது .
ஏனெனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் காற்றூடகத்தைவிட நீரூடகத்தைப் பொறுத்து குறைவாகிவிடுகிறது

Monday, September 19, 2011

eluthaatha kaditham

எழுதாத கடிதம்

வளமான ஒரு நாட்டில் பிறந்து நலமாக வாழ முடியாது பரிதவிக்கும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது .
அவர்களில் நானும் ஒருவன் என்பதால் இந்நிலை கண்டு பெரிதும் மனம் வருந்தினேன்.

வயதாகி வயோதிகனாகவும் ஆகிவிட்டேன் .இருளகற்றும் அந்த ஒளி என் கண்களுக்கு இன்னும் தென்படவே இல்லை.

இந்தியாவில் வாழ்வோரை விட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாம் ஓரளவு மகிழ்ச்சியுடன்,குறைந்த அளவு செயற்கையுடன்,மனநிறைவாய்
வாழ்கின்றார்கள்.பழைய உறவுகளும்,மரபு வழியிலான பழக்க வழக்கங்களுமே இந்தியாவை அவர்கள் எண்ணத்தில் இன்னும் நிலைத்திருக்கச்
செய்திருகின்றன. பரிணாம வளர்ச்சியில் இவை தூக்கி எறியப்ப்படும்போதும்,பழைய உறவுகளுக்கு மாற்றாக புகுந்த நாட்டில் புதிய உறவுகளால் புதிப்பிக்கப் படும்போதும் இந் நிலைமையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுமோ?

ஒரு சில நாட்கள் வெளிநாடு சென்று வந்த ஒருவரே இந்தியாவோடு ஒப்பிட்டு வெளிநாட்டின் பெருமையை மேம்படுத்தி மணிக்கணக்கில் பேசுகின்றார் .
மக்களின் பொது ஒழுக்கம் மற்றும் சுமுதாயக் கட்டுப்பாடு அல்லது சுயக் கட்டுப்பாடு ,அதிகாரிகளின் நேர்மையான பணி,வர்த்தகர்களின் ஏமாற்றுதல்
இல்லாத வியாபாரம் மற்றும் பொழுதுபோக்கிற்கான விதவிதமான வசதிகள் ,வியப்பூட்டும் பெரிய பெரிய கட்டுமானங்கள் ,இயற்கையைப்
பாதுகாக்கும் மனப்பாங்கு,எல்லாம் அவை அப்படி பேசவைக்கிறது .
தன் கருத்தை வெளிப்படையாக எடுத்துச் சொல்லவும் முடியாமல் ,மனதுக்குள்ளே புதைத்து மூடி மறைக்கவும் முடியாமல் அவ்வப்பொழுது மனம் வெடித்துச் சிதறும் அவர்களுடைய
முணுமுணுப்புகளைச் சட்டெனப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் சுட்டெரிக்கும் வெப்ப மிக்க மூச்சுக் காற்று
அவர்களுடைய மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அயல் நாட்டைப் பார்த்துப் பார்த்து ஏங்கவும், நேசிக்கவும் மக்களின் மனநிலையில் ஒரு பரிணாம வளர்ச்சி ஏற்படுவதைக் காணமுடிகிறது. பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்பது நம்மை நாமே உயர்த்திக் காட்ட உலகிற்குச்சொன்ன வெறும் வாயளவுச் சொல்லாகிவிடுமோ என்ற அச்சமே மேலோங்கி வருகிறது.

வேலைவாய்ப்பு என்றாலும், நாயமான உற்பத்திப் பொருள் என்றாலும், வெளிநாட்டை நாடுகின்றார்கள்.அதுமட்டுமல்ல ,கொள்ளை யடித்த
கறுப்புப் பணமாக இருந்தாலும், அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூட அயல் நாட்டையே நம் மக்கள் விரும்புகிறார்கள்.
இந்த இழி நிலைக்குப் பல காரணங்களைக் கூறலாம். முதலாவது சீர்குலைந்து வரும் சமுதாயக் கட்டுபாடுகள்.சமுதாயத்தில் பெருகிவரும்
தண்டிக்கப் படாத குற்றங்களையும் ,அதிகரிந்து க் கொண்டே வரும் பாவச் செயல்களையும் சித்தரிக்கும் நாளேடுகளே இதற்க்கு வலுவான சாட்சிகள்

தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரனாகிவருகிறான். யாரும் யாருக்கும் கட்டுப்படுவதே இல்லை. தன்னிச்சை யான போக்கினால் இந்தியாவின்
தலை எழுத்தே மாறிவிடும் போல் தோன்றுகிறது .பலவீனமான அரசே இதற்குக் காரணமாக இருக்கமுடியும் என்பதைக் கல்விச் சிந்தனையாளர்கள்
கூறுகின்றார்கள் .
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறிய அளவில் பிறந்த ஊழல் இன்றைக்கு எங்கெங்கும் பேரியல் அளவில் வளர்ந்து விட்டது. எதிர்த்தால்
அரக்கனாக எதிரே நிற்கிறான் . அளிக்க முனைந்தால் எல்லையில்லாமல் எங்கும் பரவி சிரிக்கிறான் .ஊழலை ஒருபோதும் ஒழிக்கவே முடியாது
என்று அரசியல்வாதிகள் மக்களுக்குச் சமாதானம் சொல்கிறார்கள் .உண்மையான அரசியல்வாதி ஒரு போதும் இப்படிச் சொல்லவே மாட்டான்..
ஊழலை ஒடுக்குவது என்பது அவர்கள் நோக்கமில்லை என்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது.

Sunday, September 18, 2011

arika iyarppiyal

பறக்கும் விமானத்திலிருந்து கடலைப் பார்த்தால் .....விமானத்திலிருந்து பூமியின் பரந்த எல்லையை ஓரளவு பார்க்கலாம். தொலைவு கூடக் கூட பூமியின் முழு உருவத்தையும் பார்க்கக் கூடிய வாய்ப்பு அதிகம்மாகும்.
கடல் மீது விமானம் பறக்கும் போது, கடல் கருப்பாகத் தோன்றும். ஆனால் தொடுவானத்திற்கு அருகில் பறக்கும் போது இப்படித் தோன்றுவதில்;லை
ஏன் ?
ஒரு பரப்பிலிருந்து எதிரொளிக்கப் படும் ஒளியின் அளவு, படுகோணம் அதிகரிக்க அதிகரிக்கின்றது . கடலின் மீது விமானம் பறக்கும் போது ,கடலை
நேர்குத்தாகப் பார்க்க வேண்டி இருக்கிறது .குறைந்த படு கோணத்தில் விழுந்து எதிரொளிக்கப் படும் ஒளியே பார்வையாளரை எட்டுகிறது .
இது குறைவாக இருப்பதால் கடல் கருப்பாகத் தோன்றுகிறது .தொடுவானத்திற்கு அருகாமையில் பறக்கும் போது ,படு கோணம் அதிகமாகவும் ,
எதிரொளித்து பார்வையாளரை எட்டும் ஒளி அதிகமாகவும் இருப்பதால் கடல் சற்று பிரகாசமாகத் தோன்றும்

Thursday, September 15, 2011

vinveliyil ulaa

மீரா (Meera )

மீரா திமிங்கிலத்தின் தலைப் பகுதியில் அமைந்துள்ளது. செந் நிறமாய் ஒளிரும் இந்த விண்மீன் இது வரை இனமறியப்பட்ட
விண்மீன்களுள் மிகப் பெரிய உருவம் கொண்டது. இதை ஸ்டெல்லா மீரா ,ஓ சீடி(O -ceti ) கோலம் சீடி (Collum ceti ) என்று பல பெயர்களால்
அழைக்கின்றார்கள் . மீரா என்பதற்கு இலத்தீன் மொழியில் 'அற்புதமானது ' என்று பொருள்.
மீரா ஒரு மாறொளிர் விண்மீன் என்பதால் இதன் பிரகாசம் சீராக இல்லாது ஊர் அலைவு கால முறைப்படி தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது
உண்மையில் இப் பேரண்ட வெளியில் இது போல மாறொளிர் விண்மீன்கள் பல இருப்பினும் ,மீராவை அவற்றோடு ஒப்பிடமுடியாது .
ஏனெனில் மீரா சில நேரங்களில் விண்ணில்லுள்ள பிரகாசமிக்க விண்மீன்களுள் ஒன்று போலவும் ,வேறு சில சமயங்களில் பெரிய
தொலை நோக்கியால் கூட இனமறிந்து கொள்ள முடியாதவாறு மங்கலாகவும் தோன்றுகிறது .மீராவின் ஒளிவீச்சின் பெருமத்திற்கும்
சிறுமத்திற்கும் இடையே குறைந்தது 100 மடங்கு வேறுபாடு உள்ளது .நமது சூரியனும் இதுபோல கதிர்வீச்சு உமிழ்வால் ஒளிவீச்சில்
ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தினால் பூமியில் கரிம வளங்கள் யாவும் அழிந்து போய்விடும் .அதாவது உயிரினங்கள் ஏதொன்றும்
பூமியில் நிலையாக உயிர் வாழமுடியாது .இதனால் மீரா மற்றும் அது போன்ற விண்மீன்களின் குடும்பங்களில் உயிரினம் வாழ முடியாத
சூழல் நிலவும் கோள்களே இருக்க முடியும் என்று உறுதியாகக் கூறலாம் .
மீரா விண்மீனின் மா றோளிர்தலின் சராசரி சுற்றுக் காலம் 331 .62 நாட்களாகும். இதுவும் ஒவ்வொரு சுற்றிலும் சிறிது மாறுதலுக்கு
உட்படுகின்றது .அதனால் இதன் ஒளிப் பொலி வெண் -கால வரிபடத்தில் காட்டப்படும் பொதுவான மாற்றத்தில் ஏதும் மாற்றமில்லை எனினும்
பெரும மற்றும் சிறும ப் பிரகாச அளவுகளிலும் அலைவு காலங்களிலும் குறிப்பிடும் படியான நுண்ணிய அளவு மாற்றம் காணப்படுகிறது .
சிபிட்ஸ் வகை மாறோளிர் விண்மீன்கள் தன நீண்ட கால அலைவு காலத்தால் மட்டுமின்றி அதில் ஏற்படும் மாற்றத்தாலும் வேறுபட்டிருக்கின்றன.
மீராவின் சராசரி பிரகாசம் அல்லது ஒளிப் பொலிவெண் 3 .4 மற்றும் 9 .3 என்ற நெடுக்கையில் இருக்குமாறு ஒளிர்கிறது .பெருமப்
பிரகாசத்தின் போது இதுவே சீடஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் மிகவும் பிரகாசமானதாக இருக்கிறது .சிறுமப் பிரகாசத்தின் போது
10 .1 என்ற ஒளிப் பொலி வெண்ணுடைய விண்மீ னாகவும் தோற்றம் தருகிறது. 1779 ல் இது 1 என்ற ஒளிப் பொலி வெண்ணைப் பெற்றிருந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன .
சிறுமப் பிரகாச நிலையில் மீராவின் புறப்பரப்பு வெப்பநிலை 1900 டிகிரி கெல்வினாகவும் ,பெருமப் பிரகாச நிலையில் 2600 டிகிரி கெல்வினாகவும்
உள்ளது.இதன் தகவு 1 .37 ஆகும். ஒரு விண்மீனின் புறப்பரப்பிலிருந்து வெளியே உமிழப்படும் ஆற்றலை ஸ்டீபன் விதிப் படி மதிப்பிடலாம் .இதன்படி ஒரு சதுர மீட்டர் புறப் பரப்பிலிருந்து
கதிர் வீச்சாக வெளியேற்றப் படும் மொத்த ஆற்றல் ,புறப் பரப்பின் வெப்ப நிலையின் நான்காவது மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கும் எனலாம் .
எனவே பெருமப் பிரகாச நிலையில் மீரா விண்மீன் (1 .37 )^4 = 3 .52 மடங்கு சிறுமப் பிரகாச நிலையில்; உமிழும் கதிர் வீச்சை விட அதிகமாக
உமிழ்கிறது . இது மீராவின் பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு விகிதம் 100 மடங்கு இருக்கவேண்டும் என்றும் அதாவது அதன் ஒளிப் பொலி வெண்ணில
ஏற்படும் மாற்றம் 5 - 6 என்ற நெடுக்கையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது .இதற்கான விளக்கம் அனுமான அடிப்படையில் பலவாறு
கூறப்பட்டுள்ளது .
முதலாவது குளிர்ச்சியான பெருஞ் சிவப்பு விண்மீனான மீரா அகச் சிவப்பு கதிர்களை அதிகம் உமிழ்கிறது. அகச் சிவப்பு கதிர்கள் என்பன வெப்பக் கதிர்
வீச்சுகள், கட்புலனறி ஒளியின் அலை நீளத்தை விட அதிக அலை நீளமும், அதிர் வெண்ணை விட க் குறைந்த அதிர்வெண்ணும் கொண்டுள்ளன .
இவை கண்களால் உணரப்படுவதில்லை . மீராவின் வெப்ப நிலை அதிகரிக்கும் போது ,கட்புலனறி கதிர்வீச்சின் அளவும் மிகுதியாக அதிகரிக்கின்றது
ஆனால் அகச் சிவப்பு கதிர் வீச்சில் குறிப்பிடும் படியான மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை .அதனால் அகச் சிவப்பு அலை நீள நெடுக்கையில் ஏற்படும் பிரகாச மாற்ற்டம் கட்புலனறி ஒளி அலை நீள நெடுக்கையில் ஏற்படுவதை விட மிகவும் குறைவு .
இரண்டாவது ஒரு விண்மீனின் பிரகாசம் அதன் ஆரத்தையும் பொருத்திருக்கின்றது. அதனால் மீராவின் ஆரம் 20 சதவீதம் குறையும் போது ,பிரகாசத்தில் மாற்றம் ஏற்படும் என்றாலும் ,இது அதன் பிரகாசத்தில் ஏற்படும் 40 சதவீதம் மாற்றத்திற்கு
மட்டுமே காரணமாக இருக்க முடியும் .இறுதியாக கட்புலனறி ஒளிக்கு விண்மீனைச் சுற்றியுள்ள புறப் படலத்தின் ஒளிரு உட்புகு தன்மையில் ஏற்படும் மாற்றம். இது அப்பகுதில் உண்டாகும் கார்பன் என்ற கரித் துகள்களால் தூண்டப்படுகிறது .இதுவும் மீராவின் பிரகாசத்தை மங்கச் செய்வதில் ஒரு பங்கேற்கிறது .
ஆனால் இப் படலத்தால் உட்கிரகிக்கப் படும் ஆற்றல் ,அகச் சிவப்புக் கதிர்களாக மீண்டும் வெளியே உமிழப்படுகிறது .இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால் ,மீராவின் விட்டம் சிறுமத்திற்கு
அருகாமையில் இருக்கும் போது ,பெருமப் பிரகாசத்துடனும் இருப்பது போலத் தோற்றம் தரும் எனலாம் .

arika iyarppiyal

தொலைக் காட்சி தொல்லைக் காட்சிஇன்று தொலைக் காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு தொலைக் காட்சி பெருகி உள்ளது. அதனால் சமுதாயத்திற்கு
நல்லதுமுண்டு ,தீயதுமுண்டு .இது பற்றி ஒரு பெரிய பட்டி மன்றமே நடத்தலாம் .எனினும் இது தவிர்க்க இயலாத அவசியத் தொல்லையாக
வளர்ந்து வருகிறது. இருட்டறையில் இருந்து கொண்டு தொலைக்காட்சியை பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். ஏன்
இருட்டறையில் தொலைக் காட்சித் திரை ஒரு பிரகாசமான ஒளி மூலமாக இருக்கும். கண்ணும் அதற்கு ஏற்ப தன்னை ஒரு நிலைப்
படுத்திக் கொண்டு விடும். பின்னர் திரையை விட்டு விலக்கி பார்வையை வேறு பகுதியில் செலுத்தினால் ,மங்கலான ஒளியால்
கண்மணி விரிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும். இந்த மாற்றம் விரைந்து நடைபெறும் .தொடர்ந்து மாறிமாறி ஏற்படும் இந்த
நிலை மாற்றத்தால் கண்ணில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் தொலைக் காட்சியைப் பார்க்கும் போது
வேறொரு புற ஒளி மூலமும் அறையில்; இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள் .

Wednesday, September 14, 2011

vinveliyil ulaa

cetus (சீடஸ்)

இது கடலரக்கன் அல்லது திமிங்கிலம் போன்று தோற்றம் தரக்கூடிய ஒரு வட்டார விண்மீன் கூட்டம். இது விண்வெளியில் அதை அளவு இடத்தை
ஆக்கிரமித்துள்ள கூட்டங்களுள் ஒன்றாகும். இக் கூட்டத்தில் சுமார் 100 விண்மீன்கள் வெறும் கண்ணுக்குத் தென்படுகின்றன.
இவ் வட்டார விண்மீன் கூட்டத்தில் எந்த விண்மீன் மிகவும் பிரகாசமானது என்பதை அறிவதில் முதலில் ஒரு சிக்கல் எழுந்தது.ஏனெனில்
வெவ்வேறு நேரத்தில் இது வெவ்வேறு விண்மீனை பிரகாசமிக்கதாகக் காட்டியது. இதனால் சரியான முடிவு நெடுங்காலம் எட்டப்படாமல்
இருந்தது. சீடஸ் விண்மீன் கூட்டத்தில் ஒரு மாறொளிர் விண்மீன் பிரகாசமிக்க விண்மீனாகத் தோன்றிய காலத்தில் அதுவே அக்கூட்டத்தின்
பிரகாசமான விண்மீன் என்று தொடக்கத்தில் வரையறுக்கப்பட்டதின் விளைவே இது எனப் பின்னர் அறியப்பட்டது.

கலிலியோ காலத்திய ஒரு வானவியலார் டேவிட் பாபிரிசியஸ் (David Fabricius ) .அவருடைய காலத்தில் மிகச் சிறந்து விளங்கினார்
இந்த மாறொளிர் விண்மீனின் கண்டுபிடிப்பு அவரால் தற்செயலாக விளைந்தது . 1596 ம ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தின் மையத்தில்
டேவிட் பாபிரிசியஸ் புதன் கிரகத்தை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். .அப்போது தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டு பயனில்
இல்லாமலிருந்தது .சீடஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் உள்ள தோற்ற ஒளிபொலிவெண் 3 ஆகவுள்ள ஒரு விண்மீனுக்கும்
புதன் கிரகத்திற்கும் இடையேயுள்ள கோணத் தொலைவை அலவிட்டறியும் முயற்சியில் இக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது .
சீடஸ் வட்டார விண்மீன் கூட்டம் பொதுவாக அதுவரை பிரகாசமான விண்மீன்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு முக்கியமான கூட்டமாக இல்லை
மேலும் அந்த வட்டாரத்தில் அவர் கண்டுபிடித்த அந்த விண்மீன் எந்தப் பட்டியலிலும் ,பதிவிலும் சுட்டிக் காட்டப்படவில்லை. அதனால் அந்த விண்மீன் அப்போது அவருக்குப் புதுமையாகவும் புதிராகவும் தோன்றியது. எனினும் நெடுந்தொலைவுகளில் உள்ள வட்டார விண்மீன்களின் பதிவுகள்
துல்லிய மற்றவையாக இருக்கலாம் என்பதாலும் மங்கலான விண்மீன்கள் பார்வையிலிருந்து தவறுவதற்கு வாய்ப்பிருப்பதால் .அவை விடுபட்டுப் போகலாம் என்பதாலும் அப்போது இதற்கு அவர் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை .எனினும் டேவிட் பாபிரிசியஸ் இந்த விண்மீனைத் தொடர்ந்து கண்காணிக்கத்
தவறவில்லை. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் அந்த விண்மீனின் தோற்ற ஒளிப் பொலி வெண் 2 ஆக மாறியது. ஆனால் செப்டம்பரில்
மங்கி ,அக்டோபரின் மையத்தில் சாதாரணக் கண் பார்வையிலிருந்து முற்றிலும் மறைந்து போனது அப்போது இது 1572 ல் டைகோ பிராகே கண்டறிந்த நோவா போல இதுவும் ஒரு நோவாவாக ,அதாவது மெதுவாக அழியும் ஒரு மாறொளிர் விண்மீனாக
இருக்கலாம் என்று தவறாக முடிவு செய்து அவ விண்மீனை மேலும் ஆராய்வதை விட்டுவிட்டார் .
ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1609 ல் ஜோகன் பேயர் (Johann Bayer ) என்பார் விண்மீன்களின் ஒளிப்படத் தொகுப்பைத் தயாரிக்கும் முயற்ச்சியில்
ஈடுபட்டு பல வட்டார விண்மீன் கூட்டங்களை மீண்டும் நுணுகி ஆராய்ந்தார். அப்போது சீடஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில்
டேவிட் பாபிரிசியஸ் என்பாரால் சுட்டிக்காட்டப் பட்ட அந்த விண்மீனின் தோற்ற ஒளிப் பொலி வெண் 4 எனக் குறிப்பிட்டு .அதற்கு உமிகிரான்(o ) சீடி
என்று பெயருமிட்டார் .
1638 ல் டச்சு நாட்டு வானவியலார் ஜோகன்ஸ் பொசைலிடஸ்(Johannes Phocylides ) என்பார் முத்த முதலாக இந்த விண்மீனின் மாறொளிரும்
தன்மையைக் கண்டுபிடித்தார் .முழுச் சந்திர கிரகணத்தின் போது கிடைத்த முழுமையான இருட்டில் இவ் விண்மீனை மீண்டும் ஆராய்ந்து அதன்
மாறொளிர் தன்மையை உறுதி செய்தார் .அதன்பின் இது முன்பு டேவிட் பாபிரிசியஸ் . பேயர் போன்றவர்களால் இனமரியப்பட்ட அதே
விண்மீன் என்றும் நிறுவினார் .17 ம் நூற்றாண்டின் மையத்தில் இந்த மாறொளிர் விண்மீன் நீண்ட காலச் சுற்று முறைக்கு உட்பட்டு
பிரகாசம் மாறிமாறி ஒளிரக் கூடிய ,அப்படி மாறும் அளவும் மிக அதிகமாக இருக்கக்கூடிய விந்தையான .வித்தியாசமான ஒரு விண்மீன் எனத் தெரிந்து கொண்டனர் /. 1648 ல் ஜெர்மன் நாட்டு வானவியலார் ஹெவிலியஸ் (Hevelius ) இவ் விண்மீனுக்கு மீரா (Mira ) எனப் பெயரிட்டார் .
நீண்ட காலச் சுற்று முறை கொண்ட மாறொளிர் விண்மீன்களுள் முதலில் கண்டுபிக்கப்பட்டது. இந்த மீரா. அதனால் அதன் பிறகு கண்டுபிக்கப்பட்ட
பல நீட காலச் சுற்று முறையுடன் ஒளிப் பொலி வெண்ணில் 2 .5 மாற்றம் ஏற்படுத்த க் கூடிய மாறொளிர் விண்மீன் களை மீரா வகை மாறொளிர் விண்மீன் கள் என்றே அழைக்கின்றனர் .பொதுவாக இந்த வகை விண்மீன்கள் குறைந்த புறப்பரப்பு வெப்பநிலை யுடன் குளிர்ச்சியான
பெருஞ்ச்சிவப்பு விண்மீனாக இருக்கும்

arika iyarppiyal

பறவைகளுக்கு மின் அதிர்ச்சி இல்லையா ?


மின் காப்பு செய்யப்படாத உயரழுத்த மின்கம்பி ஒன்றில் அமர்ந்த ஒரு பறவை மின் அதிர்ச்சிக்கு உள்ளாவதில்லை .
அதனால் மிகச் சாதாரணமாக அமர்ந்து விட்டு பறந்து சென்று விடுகிறது. ஆனால் அதன் இரு கால்களுக்கிடையே
உள்ள கம்பியை ஒரு பெரிய வளையமாக மாற்றி வைத்தால் ,பறவை மின் அதிர்ச்சிக்கு ஆளாகிறது . ஏன் ?
பறவையின் இரு காலகளுக்கும் இடைப்பட்ட கம்பியின் மின்தடை பறவையின் இரு கால்களுக்கு இடைப்பட்ட உடல் வழி
மின்தடையை விட மிகவும் குறைவு. அதனால் மின்னழுத்த வேறுபாடு புறக்கணிக்கத் தக்கவாறு சுழிமமாக இருக்கும். ஒரே
மின்னழுத்த முடைய இரு புள்ளிகளைத் தொடுவதால் மின் அதிர்ச்சி ஏற்படுவதில்லை .இரு கால்களுக்கும் இடைப்பட்ட
மின் கம்பி நீளமாக இருக்கும் போது,மின் தடை அதிகமாகவு மின்னழுத்த வீழ்ச்சி காரணமாக ஒரு மின்னழுத்த வேறுபாடும் ஏற்படும்.
இரு கால்களுக்கும் இடைப்பட்ட உடல் வழி மின்தடை ,இப்போது இந்த நெடுக்கையில் இருப்பதால் ,ஒரு குறிப்பிடும் படியான
மின்னோட்டம் உடல் வழி செலுத்தப்படுகிறது . அப்போது மின் அதிர்ச்சி ஏற்படுகிறது .

Monday, September 12, 2011

vinveliyil ulaa

டிராங்குல அண்டம்டிராங்குல அண்டத்தில் 50 க்கும் மேற்பட்ட சிபிட்ஸ் (Cipids ) வகை மாறொளிற் விண்மீன்களை இனமறிந்துள்ளனர்.இவற்றின் பிரகாசம்
(சார்பிலா ஒளிப்பொலிவெண்) கால முறைப்படி மாறி மாறி ஒளிர்கிறது சீபஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட
மாறொளிற் விண்மீன் போல இருப்பதால் இது போன்ற விண்மீன்களை சிபிட்ஸ் என்றே அழைத்தனர் . சிபிட்ஸ் வகை விண்மீன்களைப் பால் வெளி
மண்டலத்திற்கு வெளியே அருகாமையிலுள்ள அண்டங்களில் கண்ட போது ,அது விண்மீன்களின் தொலைவைக் கண்டறிய ஓர் அளவு கோலாக
இருப்பதை அறிந்து வியப்புற்றனர் .எடுத்துக்காட்டாக இரு சிபிட்ஸ் விண்மீன்கள் ஏறக்குறைய சமமான அலைவு காலத்தைப் பெற்றிருந்து ,அதிலொன்று மற்றதை விட 4 -ல் 1 பங்கே பிரகாசத்துடன் தோன்றினால்
இந்த பிரகாசம்- தொலைவுத் தொடர்பின் படி அது மங்கலானது எனலாம். பிரகாசமானத்தை விட இரு பங்குத் தொலைவில் இருக்கும் என்றும் கூறலாம். எனினும் இதில் ஒரு சிக்கல் உள்ளது. அதவாது குறைந்தது ஏதாவதொரு சிபிட்சின் சார்பிலா ஒளிப் பொலி வெண்ணை அறிந்திருக்க வேண்டும் . இல்லாவிட்டால் இதன் மூலம் கணக்கிடப்ப்படும் தொலைவுகள் சிபிட்ஸ் விண்மீன்களின்
சார்புத் தொலைவுகளையே
குறிப்பிடும். அதாவது அவ விண்மீன்களின் உண்மைத் தொலைவுகளைத் தெரிந்து கொள்ள முடியாது வானவியலார் சில விண்மீன்களின் உண்மையான இயக்கம் காரணமாக (Proper motion ) பல ஆண்டுகளில் ஏற்படும் இடப்பெயர்வை அளவிட்டறிந்து அதன் மூலம் அவற்றின் உண்மைத் தொலைவை அறிந்து பின் தோற்ற ஒளிப்பொலிவெண்ணை அளவிட்டறிந்து சிபிட்ஸ் வகை விண்மீனின் சார்பிலா ஒளிப்பொலிவெண்ணை அதைப் பயன்படுத்தி அறிகின்றார்கள் .
இந்த அண்டத்தை ஊடுருவியவாறு ஒரு நெபுலா விரிந்துள்ளது. இதன் நிறமாலை நம்முடைய அண்டத்தில் பரந்துள்ள நெபுலாவை ஒத்திருக்கிறது. பொதுவாக அண்டத்தின் மையக் கருவில் விண்மீன்கள் அடர்த்தியாக
இருக்கும். அதாவது விண்மீன்கள்
நெருக்கமாக இருக்கும். ஆனால் டிராங்குல அண்டத்தின் மையக் கரு வெப்ப மிக்க விண்மீன்களால் மிகவும் செறிவுற்றுள்ளது இத்தகைய தன்மை பால் வெளி மண்டலத்திலும் ஆன்றோமேடா அண்டத்திலும் காணப்ப் படவில்லை. இதனால் இவ்வகை அவைகளிலிருந்து சற்று வேறுபட்டுத் திகழ்கிறது.
சிவப்பு நிற வடிப்பான்களைக் கொண்டு இவ்வண்டத்தைப் படம் பிடித்துப் பார்த்த போது , கலைந்த தோற்றத்துடன் கூடிய சுருள் புயம் முழுமையாக மறைந்து போனது.தெரிய வந்தது. சுருள் புயங்களில் அமைந்துள்ள விண்மீன்கள் எல்லாம் வெப்ப மிக்க விண்மீன்களாக இருப்பதுடன் ,அவை குறைந்த அலைநீள முடைய நீல நிறமிக்க மின் காந்த அலைகளை உமிழ்வதை இது சுட்டிக் காட்டுகிறது. ஆனால் அண்ட வட்டத்தில் சிதறிக் கிடக்கும் பல பெருஞ்ச்சிவப்பு விண்மீன்கள் உள்ளன. இது வெவ்வேறு நிற ஒளியில் ஓரண்டம் ,மாறுபட்ட உருவத் தோற்றத்துடன் காட்சி தரும் எனப்தை உணர்த்துகிறது.

arika iyarppiyal

இரு சோதனைகளில் எது உண்மை ?

ஒரு மாணவன் 100 வாட் மின்னிழை விளக்கின் மின்தடையை
மதிப்பிட இரு சோதனைகளை மேற்கொண்டான் .
மல்டிமீட்டர் மூலம் மதிப்பிட 35 ஓம் என்ற மதிப்பைப் பெற்றான்.
இதை ஏற்கனவே மதிப்பிடப்பட்டு பல்பில் குறிப்பிடப்பட்டுள்ள
மதிப்பைக் கொண்டு உறுதி செய்ய முயன்றான் .அதில் 220
வோல்ட் ,100 வாட் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.மின்தடை
என்பது மின்னழுத்தத்தின் இருமடிக்கும் மின் திறனுக்கும்
உள்ள தகவாகும்.இது 484 ஓம் என்ற மதிப்பைத் தந்தது.
இதில் எது உண்மை ? இந்த முரண்பாடான முடிவை எப்படிக்
களைவது ?
***********

இரண்டுமே உண்மைதான். முதலில் செய்த சோதனையில்
மின்தடை தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ளது .
மின்தடை வழியாகச் செல்லும் மின்னோட்டம் அதன் வெப்ப
நிலையை உயர்த்தப் போதுமானதாக
இல்லை .ஆனால் மதிப்பிடப்பட்ட மினதடையானது,
மின்னிழை வெண்மையாகச்சூடுபடுத்தப்பட்ட நிலையில்
மின்னோட்டம் செல்லும் போது மின்திறன் பெறப்பட்டுள்ளது .
ஒரு பொருளின் மின்தடை வெப்ப நிலை
அதிகரிக்க அதிகரிக்கிறது . எனவே முதல் சோதனையில்
தாழ்ந்த வெப்ப நிலை மின்தடையும் ,இரண்டாவது
சோதனையில் உயர் வெப்ப நிலை மின்தடையும்
மதிப்பிடப்பட்டுள்ளன.
**************
இழை விளக்கும் மின்சுருளும்

ஒரு மின்னிழை விளக்கு செம்புக் கம்பியால் சுற்றப்பட்ட
நீண்ட மின் சுருளுடன் தொடரினைப்பில் இணைக்கப்பட்டுள்ளது
மின் சுருளின் உள்ளகம் காற்று . சுற்றில் ஒரு மின்னியக்கு
விசை கொடுக்க மின் விளக்கு எரிகிறது.
அப்போது ஓர் இரும்புத் தண்டு மின் சுருளின் மையத்தில்
உள்ளகமாக வைக்கப்பட்டால் ,மின்னிழை
விளக்கு பிரகாசமாக எரியுமா ? மங்கலாக எரியுமா ?
**************
மின் சுருளின் மின் நிலைமம் (Inductance ) இரும்புத் தண்டை
உள்ளகமாக வைக்கும் போது அதிகரிக்கின்றது
அதனால் மின் நிலைமத் தடை அதிகரிக்க , சுற்றில்
மின்னோட்டம் குறைகிறது. அதனால் மின்னிழை
விளக்கு மங்கலாக எரியும் எனலாம்

Saturday, September 10, 2011

vinveliyil ulaa

டிரையாங்குலம்


விண்மீன்என்ற சிறிய வட்டார விண்மீன் கூட்டத்தோடு காட்சி தருகிறது. இது அதற்கும் மேலாக உள்ள ஆண்ட்ரோமேடா விண்மீன் கூட்டத்திலுள்ள பீட்டா ஆண்ட்ரோமேடா விண்மீனுக்கும் ஏரிசுக்கும் இடையில் உள்ளது. இது பால் வெளி மண்டலத்தின் தென்னக விளிம்பைத் தொட்டவாறு அமைந்துள்ளது. இதன் தோற்றம், பிரகாசமான் மூன்று விண்மீன்களாலான ஒரு முக்கோணம் போலக் காட்சி தருகிறது.கிரேக்க காலத்தில் இதை நையில் நதியின் டெல்டா பகுதியாகக் கற்பனை செய்தார்கள் .பிறர் இதை சிசிலித் தீவாக உருவகப்படுத்திப் பார்த்தனர்.

இதில் மங்கலாகத் தெரியும் விண்மீன்களையும் சேர்த்து மொத்தம் 15 விண்மீன்கள் வெறும் கண்களுக்குப் புலப்படுகின்றன. இக் கூட்டத்தில் உண்மையில் (Mirach ) மிராக் என்று பெயரிடப்பட்ட பீட்டா ட்ரையாங்குலி என்ற விண்மீன்தான் மிகவும் பிரகாசமானதாகும். 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் தோற்ற ஒளிப் பொலிவெண் 3 ஆகவும் ,சார்பிலா ஒளிப் பொலிவெண்௦ 0 .09 ஆகவும் உள்ளன. மோதல்லா (Mothallah ) என அழைக்கப்படும் ஆல்பா ட்ரையாங்குலியின் தோற்ற மற்றும் சார்பிலா ஒளிப் பொலிவெண்கள் முறையே 3 .42 , 1 .95 ஆகும். இது ஏறக்குறைய 64 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. காமா ட்ரையாங்குலியின் தோற்ற ஒளிப்பொலிவெண் 4 ஆகும்.

தொலைநோக்கியால் இக் கூட்டத்தை நுணுகி ஆராயும் போது .இதன் அருகாமை வெளியில் 6 ட்ரையாங்குலி என்ற குறுகிய இடைத் தொலைவுடன் 5 ,7 என்ற தோற்ற ஒளிபொலிவெண்களைக் கொண்ட ஓர் இரட்டை விண்மீன் உள்ளது. இது கிளர்ச்சி நிலையற்ற சாதாரண வின்மீனாகும்.

இக் கூட்டத்தில் உமிகிரான் (o ) ஆண்ட்ரோமேடே என்ற இரட்டை விண்மீன் உள்ளது. இதில் தோற்ற ஒளிப் பொலிவெண் 3 .5 - 4 .0 என்ற நெடுக்கையில் மாறும் ஒரு மாறோளிர் விண்மீன் உள்ளது. இதிலுள்ள இரு விண்மீன்களும் வெப்பமிக்கதாகவும், ஒரு பொதுவான அச்சு பற்றி ஒன்றரை நாளுக்கு ஒரு முறையென ஒன்றையொன்று சுற்றிவருவதாகவும் இருக்கின்றன.

உணர்வு நுட்பமிக்க தொலை நோக்கி இதன் அருகாமையில் M 33 என்றும் NGC 598 என்றும் குறிப்பிடப்படுகின்ற ஓர் அண்டமுள்ளது. இதை ட்ரையாங்குல அண்டம் என்பர். இது சற்று கலைந்த சுருள் புயங்களையும் சிறிய அளவிலான அண்ட மையத்தியும் கொண்டுள்ளது. 2 .6 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இதன் மொத்த நிறை சூரியன் நிறை அலகில் 10 - 40 பில்லியன் நெடுக்கையில் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர். இது ஆன்றோமேடாவிற்க்கு அப்பால் ஈர்ப்பு விசையால் ஆண்ட்ரோமேடா அண்டத்தோடு ஒருகிங்ணைந்து செயல்படுகின்ற ஓர் அண்டமாக இருக்கலாம் என்று சார்லஸ் மெசியர் 1764 ல் கண்டறிந்தார். இது ஆண்ட்ரோமேடா அண்டத்திற்கு ஒரு துணை அண்டம் போல உள்ளது. ஆன்றோமேடா அண்டத்திற்கு அடுத்து பிரகாசமாக இவ்வண்டம் தோன்றினாலும், இதன் ஒட்டு மொத்த சராசரி பிரகாசம் 6 .2 ஒளிபொலிவெண் டைய ஒரு விண்மீனைப் போல உள்ளது. இதன் புறப்பரப்பு பிரகாசம் மங்கலாக இருப்பதால், கருமையாக இருள் சூழ்ந்த இரவு களில் மட்டுமே இதைச் சட்டென உணரமுடியும். இதன் சராசரி விட்டம், ஆன்றோமேடாவின் விட்டத்தில் மூன்றில் ஒரு பங்காகவும் ,விண்மீன்களின் எண்ணிக்கை 100 ல் ஒரு பங்காகவும் உள்ளது

arika iyarppiyal

தொடரிணைப்பில் 25 வாட் ,100 வாட் பல்புகள்

வீடுகளில் மின் இணைப்புச் செய்யும் போது பக்க இணைப்பையே நாடுவார்கள் . ஏனெனில் தொடரிணைப்பில் ஒரு பல்பு பழுதுற்றாலும் மற்ற பல்புகளும் எரியாது .
எனினும் சமயத்தில் சில விளக்குகளை எரியச் செய்யும் போது தொடரிணைப்பை நாடுவார்கள். 25 வாட் , 100 வாட் பல்புகள் இரண்டும் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு மின் னி யக்கு விசை கொடுக்கப்பட்டால் எது பிரகாசமாக எரியும் ?

எதில் ஜூல் இழப்பு அதிகமாக இருக்குமோ அது பிரகாசமாக எரியும் எனலாம். இது மின் இழை யின் மின்தடை மற்றும் மின்னோட்டத்தின் இருமடி இவற்றின் பெருக்கல் பலனாகும். திறன் என்பது மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் இவற்றின் பெருக்கல் பலனாகும்..ஆனால் மின்னோட்டம் என்பது மின்னழுத்தம்,மின்தடை இவற்றின் தகவு .எனவே கொடுக்கப்பட்ட மின்னழுத்த த்திற்கு மின்தடை என்பது,திறனுக்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது எனலாம். அதனால் 25 வாட் பல்பின் மின்தடை ,100 வாட் பல்பின் மிக்ந்தடையைப் போல 4 மடங்கு. இவையிரண்டும் தொடரிணைப்பில் இணைக்கப்படிருப்பதால் ஒரே அளவு மின்னூட்டம் செல்லும் .எனவே ஜூல் ஆற்றல் இழப்பு, மின்தடைக்கு நேர் விகிதத்தில் இருக்கிறது. அதாவது 25 வாட் பல்பு, 100 வாட் பல்பை விடப் பிரகாசமாக் எரிகிறது எனலாம்

Thursday, September 8, 2011

arika iyarppiyal

இது ஒரு திசை மின்னோட்டமா அல்லது மாறு திசை
மின்னோட்டமா ?மின் சுற்றில் மின்னோட்டம் இரு வகைப்படும்.
ஒன்று ஒருதிசை மின்னோட்டம் (dc).இது மின்கலங்கள் ,
மின் மாற்றிகள் ,மின் இயற்றிகள் மூலம் பெறப்படுகிறது.
மின்னணுவியல் சாதனங்கள் ,மின் காந்தம் மின் பொறி
விளக்குகளுக்கு இவ்வகை மின்சாரமே தேவை. மற்றொன்று
மாறு திசை மின்னோட்டமாகும் (ac ).இழை விளக்கு ,குழல் விளக்கு ,மின்னடுப்பு ,மின் மோட்டார் போன்றவற்றை
இயக்க இவ்வகை மின்சாரம் தேவை. வீடுகளுக்கு
விநியோகிக்கப் படுவது மாறு திசை மின்சாரமே. ஒரு
மின் மூலத்திலிருந்து கிடைப்பது ஒரு திசை மின்சாரமா
இல்லை மாறு திசை மின்சாரமா என்று எப்படி இனமறிந்து
கொள்வது ?

மின் மூலம் ஏசியா இல்லை டிசியா என அறிவதற்கு
முதலில் அதன் வெளியீட்டு மின்னழுத்தத்தைத்
தோராயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த
மின்னழுத்தம் 75 - 250 வோல்ட் நெடுக்கைக்
குட்பட்டிருந்தால் ஒரு நியான் விளக்கைக் கொண்டு
இனமறியலாம். இதில் இரு சுருள் வடிவ மின்வாய்கள்
ஒன்றுக்குள் ஒன்றாகப் பொருத்தப்பட்டிருக்கும் .இதை
மின் மூலத்துடன் நேரடியாக இணைக்க இரு
மின் வாய்களுமே ஒளிருமானால் அது ஏசி என்றும்
ஒரே ஒரு மின் வாய் மட்டும் ஒளிருமானால் அது
டிசி என்றும் முடிவு செய்யலாம் .
மற்றொரு சோதனை முறையை உயர் மற்றும் தாழ்ந்த
மின்னழுத்தமுள்ள மின்மூலங்களில் பயன் படுத்தலாம்.
40 வாட் பல்ப்பை மின் மூலத்தோடு நேரடியாக இணைத்து
ஒளிச் செறிவை அறிந்து கொள்ள வேண்டும். பின் பின்னோக்கு மின்னழுத்தத்துடன் செயல்படுமாறு ஒரு டையோடை
(உயரளவு பின்னோக்கு மின்னழுத்தத்தை தாங்க வல்ல )
பல்புடன் தொடரினைப்பில் இணைத்து மீண்டும் ஒளிச் செறிவைப் பார்க்க ,ஒளிச் செறிவு ஒன்று போல
இருப்பின் ஏசி என்றும் வேறுபட்டிருப்பின் டிசி என்றும் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, September 7, 2011

arika iyarpiyal

விளக்கின் பிரகாசம் எதில் அதிகம் - ஏசியிலா டிசியிலா ?
ஒரு மின்னிழை விளக்கை சம மின்னழுத்த முடைய டிசியிலும் ஏசியிலும் எரியவிட்டால் எதில் பிரகாசம் அதிகமாக இருக்கும். ?
டிசி மின்னழுத்தம் மாறாது நிலையாக இருக்கும்..ஆனால் ஏசி மின்னழுத்தம் இருமடியின் சராசரி மூலத்தால் (RMS ) அளவிடப்படுகிறது. ஏனெனில் ஏசியில் மின்னழுத்தம் ஒரு திசையில் சுழியிலிருந்து பெருமமாகவும்,பெருமத்திளிருந்து சுழியாகவும்,பின் எதிர்த் திசையில் சுழியிலிருந்து பெருமமாகவும்,பெருமத்திளிருந்து சுழியாகவும் தொடர்ந்து மாறுகிறது. எனவே ஏசி மின்னழுத்தத்தின் பெரும மதிப்பு 1 .41 மடங்கு எருமாடியின் சராசரி இருமடி மூலத்தின் மதிப்பாகும். எனவே ஏசி மின்னழுத்தம் கொடுக்கும் போது மின் விளக்கு பிரகாசமாக எரியும் எனலாம்.

Monday, September 5, 2011

eluthaatha kaditham

காரைக்குடி டவுன் சோமு பிள்ளைத் தெரு ஸ்ரீ சாஸ்த்தா கான்ஸ் ட்டரக்சன் எஸ் .பழனியப்பனிடம் 6 -3 -2011 அன்று ஒரு கட்டுமானப் பணி ஒன்றைக் கொடுத்து ஒப்பத்தம் செய்துகொண்டேன் . ஏறக்குறைய 6 மாத காலம் எடுத்துக் கொண்டதுடன் பணியில் ஒரு சுத்தமோ ,அழகோ இல்லை. கூலியைக் குறைவாகக் கொடுப்பதற்கும் ,உரிமையாளரிடம் கொள்ளை அடிப்பதற்கும் ஒத்துழைப்புத் தரும் பணியாளர்களை அமர்த்துவதால் கால தாமதம் ஆவதுடன் கட்டுமானப் பணியும் செம்மையாக நடப்பதில்லை . அது குறை இது குறை என்று சொல்லும் போது அவ்வப்போது நாமை ஏமாற்றுவதற்காக ஏதாவது ஒன்றை கட்டுமானத்தில் செய்வார். பிற்பாடு அது பில்லில் பெரிதாகத் தோன்றும் .குறை சொல்லும் போதெல்லாம் நாம்மை ஏதாவது சொல்லி சமாதானம் செய்வார் ஆனால் கடைசி வரை அதைச் செய்து தரவே மாட்டார். .அப்படி ஏதாவது செய்தால் அதற்கென்று தனியாக பில் போட்டுவிடுவார். .இப்படி என்னிடம் ஏறக்குறைய ஒரு லட்சம் வாங்கிவிட்டார்.
படு படு மோசமான கான்ஸ் ட்டரக்சன் .என்னைப் போல யாரும் அவரிடம் போய் ஏமாறக் கூடாது என்பதற்காகவே இதை வெளியிடு கின்றேன் ,பசு மாடுகள்
ஒற்றுமையாகவும் ஒன்றுக்கொன்று உதவியாகவும் இருந்தால் எந்தச் சிங்கமும் ஏமாற்ற முடியாதே
பெரும்பாலான மக்கள் இதுபோன்ற கட்டட கட்டுமான நிறுவனத்திடம் ஏமாந்து போகின்றார்கள் .இதற்கு ஒரு விடிவு காலம் வரவே வராதா ? .

vinveliyil ulaa


ஏரிஸ் Aries
மேஷ ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும்

மேஷ ராசிக்குரிய விண்மீன் கூட்டமான ஏரிஸ் ஒரு பொன்னிற ஆடு தரையில் அமர்ந்திருப்பதைப் போன்று காட்சி தரக்கூடிய ஒரு விண்மீன் கூட்டம் .இது ஒன்மையில் ஒரு வட்டார விண்மீன் கூட்டமாகும் .ஏப்ரல் -18 முதல் மே- 14 வரையிலான காலத்தில் சூரியன் இந்த விண்மீன் கூட்டத்தைக் கடந்து செல்கிறது. இது பிஸ்சஸ் மற்றும் டாரஸ் வட்டார விண்மீன் கூட்டங்களுக்கு நடுவில் உள்ளது. இதில் ஆல்பா ,பீட்டா காமா ஏரிடிஸ் என மூன்று ஓரளவு பிரகாசமான விண்மீன்கள் ஏறக்குறைய ஒரே கோட்டில் இருப்பது போல அமைந்துள்ளன . இதில் இருக்கும் அந்த மூன்று விண்மீன்களும் பிரகாச வரிசைப்படி ஆல்பா-பீட்டா-காமா ஏரிடிஸ் என காணப்படுகின்றன. அதாவது ஆல்பா ஏரிடிஸ் பிற இரு விண்மீன்களை விடப் பிரகாசமிக்கதாகவும் பீட்டா ஏரிடிஸ் காமா ஏரிடிஸ் சை விடப் பிரகாசமிக்கதாகவும் இருக்கின்றன .இது ஆண்ட்ரோமெடா அண்டத்திற்கு அருகாமையில் உள்ளது.
உணர்வு நுட்ப மிக்க தொலை நோக்கியால் இக் கூட்டத்தைப் பார்க்கும் போது.அந்த மூன்று விண்மீன்களும் மிகச் சரியாக ஒரே நேர் கோட்டில் அமையாததும் .காமா ஏரிடிஸ் சற்று விலகி ஒரு சிறிய முக்கோணம் போல தெரிவதும் தெரிய வந்தன. மேலும் ஆல்பா ஏரிடிஸ் இக்கு சற்று தள்ளி ஏறக்குறைய அதே நேர் கோட்டில் ஓரளவு மங்கலாக லாம்ப்டா எறிடிஸ் புலப்பட்டுத் தெரிந்தது .சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் இக் கூட்டத்தில் ஒளிபொளிவெண் 6 க்கும் அதிகமாக, அதாவது மங்கலான விண்மீன்கள் 50 இருக்கலாம் எனக் காட்டியுள்ளன .ஒளிப் பொலிவெண் என்பது தோற்றப் பிரகாசத்தை அளவிடும் ஒரு மதிப்பாகும் .குறைந்த ஒளிபொளிவெண் அதிகம்மான தோற்றப் பிரகாசத்தைக் குறிக்கும் .
எனினும் சிறப்புத் தன்மை கொண்ட விண்மீன்கள் இக்கூட்டத்தில் ஏதுமில்லை.
ஆல்பா ஏரிடிஸ் 66 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இதன் சார்பிலா ஒளிப் பொலிவெண் 0 .48 ஆகவும் (சார்பிலா ஒளிப் பொலிவெண் விண்மீனின் உண்மைப் பிரகாசத்தை அளவிட்டுக் கூறுகிறது.
தோற்ற ஒளிப் பொலிவெண் 2 .01 ஆகவும் உள்ளன .இந்த விண்மீனை வானவியலார் ஹாமல் (Hamal) எனப் பெயரிட்டு அழைக்கின்றனர் பீட்டா
ஏரிடிஸ் 60 ஒளி ஆண்டுகள் தொலைவில் 1.33 என்ற சார்பிலா, 2.64 தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் இருக்கிறது. இதன் பெயர் செராட்டன் (Sheratan) நம்மவர்கள் இதற்கு இட்ட பெயர் அசுபதி .இவ் வட்டாரத்தில் உள்ள 41 எரிடிஸ் என்ற விண்மீனைப் பரணி என அழைக்கின்றார்கள்

மெசார்தீம் (Mesarthim ) என அழைக்கப்படும் காமா எரிடிஸ் ,கண்ணுக்கு ஒரு விண்மீனாகக் காட்சி தந்தாலும் உண்மையில் இது ஓர் அகன்ற இரட்டை விண்மீனாகும். இவையிரண்டும் 8 செகண்டு கோண விலக்கத்துடன் விலகி உள்ளன .ஒரு செகண்டு என்பது ஒரு டிகிரியில் 3600 ல் ஒரு பங்கு ஆகும். சாதாரணத் தொலை நோக்கியால் இவற்றை பகுத்துப் பார்க்க முடியும். இவை இரண்டும் ஏறக்குறைய நீலங் கலந்த வெண்மை நிறத்துடன் ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன . இவற்றின் சராசரி ஒளிப்பொலி வெண் 4 .6 இவை இரண்டும் ஏறக்குடைய சமமான புற வெப்ப நிலையாக 11000 டிகிரி கெல்வின் நெடுக்கையைப் பெற்றுள்ளன. இது நமது சூரியனைக் காட்டிலும் 2 மடங்கானது. தொலை நோக்கி மூலம் இனமறியப்பட்ட முதல் இரட்டை விண்மீன் காமா எரிடிஸ் ஆகும். இதை இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் வல்லுநர் இராபர்ட் ஹூக் என்பார் 1664 ல் கண்டுபிடித்தார். ஹூக், அழுத்தம்-திரிபு (Stress -strain ) இவைகளுக்கிடையேயான தொடர்பைக் கண்டறிந்தவர். இது இன்றைக்கு ஹூக் விதி எனப்படுகிறது. இவர் ஒரு பொழுதுபோக்கு வானவியலார் ஆவார். கூர்மையாகப் பார்த்தால் காமா எரிடிஸ் இவர் பார்வையில் சிக்கியது.

லாம்டா ஏரிடிஸ் என்ற விண்மீனும் ஓர் இரட்டை விண்மீனே. இதிலுள்ள இரு விண்மீன்களும், காமா ஏரிடிஸ் சில் உள்ளதைவிட சற்று கூடுதலாக விலகியும்,இரண்டும் ஓரளவு மங்கலாகவும் உள்ளன. இதில் ஒரு விண்மீனின் ஒளிப் பொலி வெண் 5 ஆகவும் மற்றொன்று 8 ஆகவும் உள்ளன .இவையிரண்டும் 38 செகண்டு கோண விலக்கத்துடன் விலகிக் காணப்படுகின்றன. 1781 லிருந்து அவற்றின் சார்பு அமைவிடத்தை ,அதாவது அவை இரண்டிற்கும் உள்ள இடைவெளியை அளவிட்டறிந்த போது
அவையிரண்டும் மாறாதிருப்பது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தின . அதனால் அவை தனி விண்மீன்களோ என்ற குழப்பம் கூட ஏற்பட்டது. ஆனால் உண்மையில் அவையிரண்டும் புலவெளியில் ஒரே திசையில் சமமான திசைவேகத்துடன் நகர்ந்து செல்கின்றன. அவற்றின் வட்டச் சுற்றியக்கத்தை நீண்ட காலச் சுற்றுக் காலத்தின் காரணமாக உணரமுடியா திருக்கிறது.

ஏரிஸ் இராசி மண்டல வட்டார விண்மீன் கூட்டங்களுள் முதலாவதாகக் கொள்ளப்பட்டுள்ளது. முற்காலத்தில் இளவேனில் காலத்தில் தெற்கிலிருந்து வடக்காக நகரும் சூரியன், பேரண்ட நடுவரைக் கோட்டைக் கடக்கும் போது ஏரிஸ் வட்டார விண்மீன் கூட்டம் இருக்கும் பகுதியில் அமைகிறது. பூமியின் தற்சுழற்சி ஆச்சு, சுழலும் பம்பரம் போலத் தள்ளாட்டம் செய்வதால் , பேரண்டக் காட்சிகளும் அதற்கு ஏற்ப இடப்பெயர்வுக்கு உள்ளாகின்றன. அதனால் சூரியனின் கதிர் வீதியும் இடம் பெயர இப்போது சூரியன் நடுவரைக் கோட்டைக் கடக்கும் போது பிஷ்ஷாஸ் வட்டார விண்மீன் கூட்டம் இருக்கும் பகுதியில் அமைகிறது. எனினும் ஏரிஸ் வட்டார விண்மீன் கூட்டமே சூரியன் தமிழாண்டின் தொடக்க்கத்தில் சந்திக்கும் முதலாவது விண்மீன் கூட்டமாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் தொடரும் பூமியின் தள்ளாட்டத்தால் ஒரு கால கட்டத்தில் சூரியன் ஏரிஸ் வட்டார விண்மீன்கூட்டம் உள்ள பகுதில் இருக்கும் போது பேரண்ட கோளத்தின் நடுவரைக் கோட்டைக் கடக்கும்.