Sunday, February 14, 2021

பானை புதியதாக இருந்தாலும் ,அது ஓடையில்லாமல் இருக்கவேண்டும். அதன் அடிப்பகுதியில் ஓட்டை இருந்தால் அந்தப் பானையால்  பயனேதுமில்லை..பானையில் ஓட்டை இருந்தால் அதில் தண்ணீர் சேமித்து  வைத்து மக்களுக்குப் பயன் படுத்தமுடியாது . நீரை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.
பானையைப் பயன்படுத்தும் போது பழுதடைய  வாய்ப்புண்டு .ஓட்டை விளிம்பில் இருந்தால் பொறுத்துக்கொள்ளலாம்.அடியில் ஓட்டையிருப்பது யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை .  அடியில் ஓட்டை இருந்தால் விரைவில் வழிந்தோடி நீர் காணாமற்போய்விடும்.  அடியில் ஓட்டையிருக்கும் ஓட்டைப் பானை போன்றவர்கள் இந்திய அரசியல்வாதிகள் .அவர்களால் இந்தியப் பொருளாதாரம் காணாமற் போய்க்கொண்டிருக்கிறது
பானையில் ஓட்டையிருந்தால் அதை அடைத்துப் பயன்படுத்தவேண்டிய பொறுப்பும்  , புதிய பானை வாங்கிப் பயனுக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் பானையின் உரிமையாளருக்கு உண்டு. பழைய ஓட்டைப் பானைக்கு புதிய ஓட்டைப் பானை மாற்றாகாது .சரியான பானையைத் தேர்வுசெய்து வாங்கத் தெரிந்தவர்களால் மட்டுமே பழுதில்லாத பானையை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

Tuesday, February 9, 2021

ஊழல் செய்பவர்கள் நாட்டின் நலம் பாதிக்கப்படுவதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை .நாட்டின் வளர்ச்சிக்காகத் திரட்டப்பட்ட பொது நிதியில் பற்றாக்குறைபாடு ஏற்படுவதால்  நாட்டின் முன்னேற்றம் பின்தங்கி விடுகின்றது . எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்கு எடுத்துக் கொள்ளும்  நடவடிக்கைகளைவிட  உள்ளெதிரிகளாக விளங்கும் காரணிகளை முழுமையாக அழிக்க அதிகம் மேற்கொள்ள வேண்டும் பானை அழகாக இருந்தாலும் ஓட்டைஇருந்தால்  நீரைச் சேமித்துப் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை.எவ்வளவுதான் இயற்கையுரமிட்டாலும்  களை எடுக்கப்படாவிட்டால்  வேளாண்மையில் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கமுடிவதில்லை.
பொது முன்னேற்றத்தை தன் முன்னேற்றம் போல நினைக்கும் அரசியல்வாதிகள் இல்லை..அதிகாரமிக்கோரின்  செயலால் பொது முன்னேற்றம் பாதிக்கப்படும்போது எந்த அதிகாரமுமில்லாத மக்களால்   அதை எதிர்த்து ஒன்றும் செய்யமுடிவதில்லை .மேலும் அந்தப் பாதிப்பு எல்லோருக்குமானது என்பதால் யாரும் அதைப்  பெரிய இழப்பாகவும் நினைத்து வருத்தப்படுவதுமில்லை.
ஊழல் செய்து திடீரென்று பெரும் பொருள் சம்பாதிக்கும் நபர்கள் அந்தப் பணத்தை முடக்கி வைப்பதால் பயனற்றுப் போகின்றது . பறிக்கப்படாமல் பழுத்துத் தொங்கும் பழங்களைப் போல. அறுவடை செய்யாமல் வீணாகும் பயிரைப்போல . அந்தப்பணத்தைக் கொண்டு  அதிக விலைக்கு சொத்துக்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் காட்டுவதால் சொத்துக்களின் விலை குடி மக்களுக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்து விடுகின்றது. இதனால் நேர்மையாகச் சம்பாதித்து ஒரு சொத்தைக் கூட வாங்கமுடியாத நிலைக்கு மக்கள் ஆளாகிறார்கள் .அந்தப்பணத்தைக் கொண்டு தீய செயல்களில் ஈடுபடும் துணிவைப் பெறுவதால் .குற்றச் செயல்கள் நாட்டில் பெருகும் வாய்ப்பு தவிர்க்கயியலாததாக இருக்கின்றது. கையில் பொருள் மிகுதியாக இருப்பதால்  அதைக்கொண்டு  எதிர்ப்புக்களிலிருந்தும் , தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதோடு ,தொடர்ந்து தவறுகளைச்  செய்யவும் செய்வதால்  காவல் மற்றும் நீதித்துறைகள் இருந்தும் பயனில்லாமல் போகின்றது  

Monday, February 8, 2021

முன்னேற்றத்திற்க்காக முயற்சி மேற்கொள்ளும்போது அதில்  வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு யாருக்கும் ஒருபோதும் 1 ஆக இருப்பதில்லை , 1/2  க்கும் குறைவாகவே இருக்கின்றது முன்னேற்றம் என்பது அதற்கான திட்டங்களை முன்மொழிவதாலும் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் மட்டுமே நிறைவேறிவிடுவதில்லை .முன்னேற்றத்தில் முன்னழைத்துச் செல்லும் பொதுக் காரணிகள் இருப்பதைப்போல பின்னோக்கி இழுக்கும் வலுவான  காரணிகளும்   இருக்கின்றன . பொதுக் காரணிகளுக்கு இல்லாத  வலிமை பின்னோக்கி இழுக்கும் காரணிகளுக்கு  இருப்பதற்குக் காரணம் அவை தனி மனிதர்களால் அவர்கள் நலனுக்காக அவர்களால் மேற்கொள்ளப்படும் சுய முயற்சிகளாகவும் மறைவொழுக்கமாகவும்  இருப்பதுதான் பொதுவாக அரசாங்கமும் சரி தனி மனிதர்களும் சரி நேர்வழியில்  முன்னேற்ற நடவடிக்கைகளுக்குக் காட்டும் அக்கறையில்  பாதியளவு கூட அதற்குத் தடையாக இருக்கும் எதிர்மறைக் காரணிகளை அழிப்பதில் காட்டுவதில்லை .எதிர்மறைக் காரணிகளை முழுமையாக அழித்தால் மட்டுமே முன்னேற்றத்தை முழுமையாக அடையமுடியும். இந்தியா போன்ற வளரும் நாடுகள் சுயசார்பை நோக்கிய முன்னேற்றம் கானல் நீர் போலக் காட்சியளிப்பதற்குக் காரணம் ஊழல், இலஞ்சம் ,ஏமாறுபவர்க்குத் தெரியாமல் ஏமாற்றுவது போன்ற எதிர்மறைக் காரணிகள்  தாராளமயமாக்கப்பட்டு  ஆட்சிபுரிவதுதான் .
ஊழலை ஒழித்துக்கட்டாமல் பெறப்படும் முன்னேற்றம் உண்மையான முன்னேற்றமாகாது .அது ஊழல்  மேலும் வளர்வதற்கு வாய்ப்பைக் கொடுக்கும். எடுத்துக்காட்டாக நாட்டின் முன்னேற்றத்திற்காக கூடுதல் செலவு செய்யும்போது கூடுதல் ஊழலும் வெகு இயல்பாக நடக்கின்றது.,
*ஊழல் ஒழிய வேண்டும்,ஊழலற்ற ஒரு சமுதாயம் உருவாகவேண்டும்  என்றல் அது வெறும் வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லை உண்மையில் அது அவ்வளவு சுலபமான செயலுமில்லை . கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடின்றி சமுதாயத்தில் ஊழல் பெரிதாக வளர நாமே காரணமாகிவிட்டோம்.நாம் அனுமதித்ததால்தான் அது இன்றைக்கு நம்மையே அச்சப்படுத்துமளவிற்கு பெரிதாக வளர்ந்துவிட்டது   .மக்களின் வாழ்க்கையோடு ஒன்றரக் கலந்து விட்ட ஊழலை ஒழிப்பது என்பது இன்றைக்கு எல்லோருக்கும் பெரிய சவாலான பிரச்சனையாக  மாறியிருக்கின்றது .
*எல்லோரும் ஊழல் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றார்கள். எல்லோரும் ஏகமனதாக விரும்பும் போது ஊழல் எப்படி இன்னும் தடுக்கப்படாமல் இருக்கின்றது  என்ற வியப்புடன் அதை நுண்ணாய்வு செய்யும் போது நம்முடைய விருப்பத்தின் உண்மையான முகம் தெரியவருகின்றது  ஒவ்வொருவரும் மற்றவர்கள் செய்யும் ஊழலை மட்டுமே கருத்திற்கொண்டு எதிர்க்கிறார்கள் .அவர்கள் செய்யும் ஊழலை மிகத் தாராளமாக அனுமதித்துக் கொள்கின்றார்கள் .இவர்களுடைய எதிர்ப்புக் கூட அவர்கள் செய்யும் ஊழலை மூடி மறைப்பதற்காக மட்டுமே வெளிப்படுகின்றது .
*ஊழல் ஒழிப்பு  வெறும் உணர்ச்சிகரமான வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லை. முனைப்புடன் கூடிய ஒரு செயல் திட்டத்தால் மட்டுமே நிறைவேற்றமுடியும் . அதையும் தனி மனிதனோ அல்லது அரசாங்கம் தனித்தோ  ஈடுபட்டு வெற்றி காணமுடிவதில்லை .ஏனெனில் அது ஒரு மறைவொழுக்கமாக இருப்பதால் எல்லோரும் ஒன்றிணைத்து  செயல்பட்டாலே  அதை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.  தற்காலியப்  பயன் கிடைக்கின்றது என்பதற்காக அதில் சுயவிருப்பம் கொள்வதை ஒவ்வொருவரும் புரிதலோடு தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
*ஊழலைக்  கட்டுப்படுத்தும் முயற்சியை யார் மேற்கொண்டாலும் அதை முழுமையாக  நிறைவேற்றக் கூடிய கடமையும்  அதிகாரமும்  அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனால் ஊழல் ஒழிப்பில் ஆட்சியாளர்கள்   நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும். ஏழை -பணக்காரன், பதவியிலிருப்பவன்- பதவியில்லாதவன்  என்ற பாகுபாடெல்லாம் ஊழல் ஒழிப்புக்கு எதிரானவை .ஊழல் ஒழிப்பு வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு முழு முதல் குற்றவாளி  அரசாங்கமே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் .  தலைக்கவசம் அணியாதவன் , வங்கியில் சேமிப்புக்கு கணக்கில் குறைத்த பட்ச பணம் இல்லாதவன் போன்றவர்களுக்கு கடுமையாக இருக்கும் சட்டம் ஊழல் புரிவோருக்கு அதில் பாதியளவு கூடக் கடுமையாக இல்லாமலிருப்பது அரசாங்கத்தின் தவறான ஊழல் கொள்கையையே படம் பிடித்துக் காட்டுகின்றது.
*குறிப்பிட்டபடி முன்னேற்றத்தை எட்டமுடியாததற்குக் காரணமாக, மக்கள் தொகைப் பெருக்கம், எழுத்தறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, கடமையாற்றாமை  மதம், இனம் , மொழி  ,தொழில், நிறம் போன்ற பலவிதமான வேற்றுமைகளினால்  அவ்வப் போது தலைகாட்டும் ஒற்றுமையின்மை, இயற்கைச் சீற்றத்தால் அழிவு,  பருவ மழை பொய்த்து போவதால் ஏற்படும் பஞ்சம் போன்ற  நிரந்தரமில்லாத சில காரணங்கள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக  இருக்கலாம்.ஆனால் ஊழல்,இலஞ்சம்  ஏமாற்றுபவர்களுக்குத் தெரியாமல் ஏமாற்றுதல் இவற்றை முழுமையாக ஒழித்துக் கட்டிவிட்டால் வேறு எந்த புதிய முயற்சியுமின்றி சும்மா இருந்தாலே வளர்ச்சி வீதம் பல மடங்கு உயரும். 50 சதவீத முன்னேற்றத்திற்கான வளர்ச்சியை எட்டுவது கூட சாத்தியமே.
ஊழலற்ற ஒரு சமுதாயம் உருவாகவேண்டும் என்பது நம்முடைய நீண்டகாலக் கனவு .அது நமக்கு மட்டுமின்றி நம் எதிர்காலச் சந்ததியினருக்கும்,சமுதாயம் முழுமைக்கும்  இயற்கையான பாதுகாப்புக் கவசமாக விளங்கும் .தனி மனிதர்களுடைய முன்னேற்றத்தை மட்டுமேயல்லாது  சமுதாயத்தின் முன்னேற்றத்தை நெறிப்படுத்தக்கூடியது. எல்லோருக்கும் வேலைகிடைப்பதால்  வேலையின்றி தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தீய செயல்களில் ஈடுபடுவது பெரிதும் தடுக்கப்படுகின்றது .ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றாலும் அதில் தனிமனிதர்களுக்கும் பங்களிப்பு இருக்கின்றது. ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குறை கூறுவதை விட்டுவிட்டு சமுதாய நலன் கருதி தங்கள் பொறுப்புக்களை அக்கறையுடன் மேற்கொள்ளவேண்டும் .கூட்டு முயற்சியில் எதிரி என்று யாருமே இருக்கக்  கூடாது அப்போதுதான் அது சிறப்பாக நிறைவேறும் வாய்ப்பைப் பெறும்.
  

Thursday, February 4, 2021

வெப்பம் என்பது ஒருவகையான ஆற்றல். வெப்பத்தை பொருட்கள் உட்கவரும்போது அதன் அகவியக்க ஆற்றலும் ஒரு வரம்பிற்கு அப்பாற்பட்டு புறவியக்க ஆற்றலும் அதிகரிக்கின்றன..அகவியக்க ஆற்றலை பொருளோடு தொர்புகொள்ளாமல் புறத்தோற்றத்தால் மட்டும் அறிந்துகொள்ள முடிவதில்லை.
வெப்பமானது ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ,கடத்தல் , சலனம் மற்றும் கதிர்வீச்சு என்ற மூன்று வெவ்வேறு வழிமுறைகள்  மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது .சிந்தனைகளுக்கும் , தொடரும் செயல்களுக்கும் ஆதாரமான எண்ணங்களும் இந்த வெப்பம் போலவே சமுதாயத்தில் பரவுகின்றன .முதலாவது உள்ளுணர்வு .இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ,வயதுக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப எல்லோரிடமும் இயற்கையாகவே இருக்கின்றது. .பிறந்த குழந்தை தாயிடமிருந்து பால் குடிப்பது அதன் உள்ளுணர்வு தூண்டிய செயல்.. குழந்தைப்பருவதற்குப் பிறகு இது மரபு வழியில் தொடர்கின்றது .எது நல்லது எது கெட்டது என்று தெரிவித்து  எதை  ஏற்றுக்கொள்ளவேண்டும் எதை  விட்டுவிடவேண்டும் என்று உணர்த்துவது இந்த உள்ளுணர்வே.  இந்த உள்ளுணர்வு வெப்பக்க கதிர்வீச்சு போன்றது .புற மூலக்கூறுகளுடன் அல்லது அணுக்களுடன்  தொடர்புகொள்வதால் வெப்பம்  , கடத்தல் மற்றும் சலனம் என இரு விதமாக கடத்தப்படுகிறது .மக்கள் மக்களுடன் நெருக்கமாய்த்  தொடர்புகொள்ளும் போது .அவர்களுடைய உரையாடல் மற்றும்  அறிவுரையால் அவர்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஏற்றுக்கொண்டு பின்பற்றும் வாய்ப்பைப் பெறுகின்றார்கள் . இது வெப்பக் கடத்தல் போன்றது. சமுதாயத்தைப் பார்த்து ஒருவர் தானாகக் கற்றுக்கொள் வதும் உண்டு. இது வெப்பச் சலனம்  போன்றது .
ஊழல் புரியவேண்டும் என்ற  உள்ளுணர்வு  எந்த முயற்சியும் செய்யாமல் ஊழல் புரிவதற்கான வாய்ப்பு  தானாகக் கிடைக்கும் போது பெரிதும் தூண்டப்படுகிறது ..இப்படிப்பட்ட வாய்ப்புக்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே கிடைக்கின்றது .மக்களுக்கு இந்த வாய்ப்பு இல்லாததால் இந்த உள்ளுணர்வை கதிர்வீச்சு மூலம் அரசியல்வாதிகளிடமிருந்தும் , அரசு அதிகாரிகளிடமிருந்தும் வளர்த்துக் கொள்கின்றார்கள். .மேலும் ஊழல் செய்வேண்டும் என்ற எண்ணம் ஊழல் புரிந்தவர்களிடமிருந்துதான்  ஊழல் புரியப்போகின்றவர்களுக்கு பரவுகின்றது என்ற உண்மையை இது தெரிவிக்கின்றது .அரசியல்வாதிகளிடம் அரசு அதிகாரிகளுக்கும் , அவர்களிடமிருந்து மக்களுக்கும் இந்த ஊழல் எண்ணம் பரவுகின்றது.இந்தப் பரவலைத் தடுக்க வேண்டுமென்றால் ஊழல் புரியும் எண்ணத்திற்கு ஒப்பான கதிர்வீசும் பொருளின்  வெப்பம் தணிக்கப்படவேண்டும் .
கதிர்வீச்சினால் வெப்பம் ஏற்றப்பட்டு பொருளின் வெப்பநிலை உயர்ந்தால்,அது கடத்தல் மூலமும் சலனம் மூலமும் சமுதாயத்தில் பரவிச் செல்வதைத் தடுக்கமுடியாது. மக்களிடம் கடத்தல் மற்றும் சலனம் மூலம் பரவும் ஊழல் புரியும் என்ணங்களுக்கு மூலமாக இருப்பது அரசியவாதிகளாலும்  அரசு அதிகாரிகளாலும் கதிர்வீச்சு மூலம் பரப்பப்படும் ஊழல் எண்ணங்களே.

Wednesday, February 3, 2021

எல்லோரும் திருடர்களாக இருக்கின்றார்கள். திருடுதல் என்பது எல்லோரிடமும் ஒரு மறைவொழுக்கமாக இருக்கின்றது .பெரும்பாண்மையினரின் ஒழுக்க நெறியாக மாறிவிட்டதால் அதை இனி ஒழுக்க முடியாது. எப்படி கொரானாவோடு வாழ ப்பழகி கொண்டோமோ அது போல ஊழல் மாற்று திருட்டுச் சமுதாயத்தோடும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று திருட்டை நியாப்படுத்துவோர்  இன்றைக்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள், .திருடுவதற்குத்தான் தைரியம் வேண்டும் ,பிடிபடாமல் தப்பிக்கவும் நல்லவன் போல நடிக்கவும்  திறமை வேண்டும்..எனவே திருடுவது பிச்சை எடுப்பதை விட  மேலானது என்று சில பகுத்தறிவாளர்கள் கூறுவார்கள்.
எல்லோரும் திருடர்களாகவே இருக்கட்டும் .அது நாம் செய்த பிழை. திருடியவர்கள் திருட்டை நியாயப்படுத்தவும் காப்பவர்கள் திருட்டைக் கவனிக்காமல் விட்டுவிட்டதும் நாம் நெடுங்காலமாகச் செய்து வரும் தவறு .எல்லோரும் திருடனாகவே இருப்பதால் நீங்களும் திருடனாக இருக்க  விரும்புகின்றீர்களா? என்று அவர்களிடம் கேள்வி கேட்டால் அதற்குத் தெளிவான , உறுதியான பதில் கிடைப்பதில்லை. அதாவது எந்தக் கொள்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாரோ அதை வெளிப்படையாகச் சொல்ல வெட்கப்படுவதால் இந்த நிலை ஏற்படுகின்றது எதோ ஓர் உள்ளுணர்வு "ஆம், நானும் திருடனாக விரும்புகின்றேன்". என்று சொல்வதைத் தடுக்கின்றது. அது உண்மையில் இயற்கை தந்த உள்ளுணர்வு .அதை மறைத்துவிடலாம் ஆனால் எந்த நிலையிலும் ஒழித்துக் கட்ட முடியாது .
60 சதவீத மக்கள் தங்களுக்கான வேலைகளைத் தங்களாகவே  தீர்மானித்து அதன் மூலம் சாம்பாதிக்கத் தொடங்குகிறார்கள் . காய்கறி உற்பத்தி , ஆடு கோழி வளர்ப்பு, கூலி வேலை , பண்டங்களைக் கொள்முதல் செய்து வீதிகளில் கூவி விற்பது ,வாடகைக்கு கார் ஓட்டுதல், சமையல் மற்றும் வீட்டு வேலை , துணி துவைப்பது, வீடு பெருக்கி சுத்தம் செய்வது ,சாணை பிடித்தல் ,கட்டட வேலை செய்தல் ,கல்லொடைப்பது.,தபால், செய்தித்தாள் ,விநியோகம் செய்தல் , துணி,மருந்து  மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனையாளராக வேலை செய்தல்,,சாயமிடுதல் ,வண்டி இழுப்பது, பாரம் சுமப்பது.,கருவிகளைப்  பழுது நீக்குவது, பட்டாசு , தீக்குச்சி உற்பத்தி, மீன் பிடித்தல், இப்படிப்  பலவேலைகள். வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற  முயற்சிக்கும் போது யாருடைய முயற்சியுமின்றி  அவர்களுக்கு இது போன்ற வேலைகள் மட்டுமே    கிடைப்பதற்கான   கூடுதல் வாய்ப்பிருப்பதால் , தங்கள் திறமைகளை மூட்டைகட்டிவைத்து விட்டு  செக்கு மாடு போல கடைசி வரை இதே வேலையைச் செய்யும்  நிலைக்கு ஆளாகிறார்கள். .இவர்களுடைய் வேளையில் அரசின் பங்களிப்பு ஏதுமில்லை.  5 சதவீதம்  முழுநேர அரசியல்வாதிகள்.10 சதவீதம் அரசியல் வாதிகளின் தீவிரத் தொண்டர்கள். . மீதமுள்ள 25 சதவீதத்தில் 15 சதவீதத்தினருக்கு  தனியார் துறை மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது எனவே 10 சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கே அரசு வேலைவாய்ய்ப்பைக் கொடுக்க முயற்சிக்கின்றது..தனியார் துறையில் முதலாளிகளாக இருப்பவர்கள் ,அரசியல்வாதிகளாகவோ அல்லது அரசியல் சார்ந்தவர்களாகவோ இருக்கின்றார்கள்,
ஒரு வளரும் நாட்டில் அக்கத் திறன் மிக்க தொழிலாளர்கள் அதிகம் இருக்கவேண்டும் .,அலுவலர்கள் அதிகமிருப்பதால்  நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்ற உற்பத்தித் திறன் அதிகமாவதில்லை.தொழில் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும்  ,தவறான தொழில் வளர்ச்சியைத் கண்காணித்து தடுக்கவும் , ,நாட்டைப் பாதுகாக்கவும் ,வரி வசூலித்து அரசின் நிர்வாகத்திற்குக் கொடுக்கவும் ,அலுவலர்கள் தேவை .உற்பத்தி என்பது ஒருநாட்டிற்கு வரவு .செலவு போக வரவைத் தரக்கூடிய வேலைகளே வளரும் நாட்டை வளர்ந்த நாடாக்கும்.நிர்வாகம் என்பது செலவு மட்டுமே. நிர்வாகச் செலவு தேவையில்லாமல் அதிகரிக்கும் போது உற்பத்தியால் கிடைத்த மீந்த வரவு குறையும் . சிலசமயங்களில் செலவு வரவையும் மிஞ்சி நஷ்டமாக இருப்பதுமுண்டு .நிர்வாகம் என்பது வேலைகளை க் குறைப்பதற்காக அல்லது பிற வேலைகளைச் செய்வதற்காக கூடுதல் பணியாளர்களை நியமிப்பதில்லை. .அது வழிகாட்டல் மற்றும் கண்காணிப்புடன் கூடிய சமுதாயப் பணி .