தவறான பரிணாம வளர்ச்சி
குற்றவாளிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கூட்டு என்று சில சமூகநலவாதிகள் கூறுவதாக சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் தமிழில் குறுஞ்செய்தியாக ஒளிபரப்பாகியது .இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஆனால் சான்றுகளோடு மெய்ப்பிக்க முடியாது. அப்படியே முடிந்தாலும் அது அம்பலம் ஏறாது. சில நாட்கள் பரபரப்பாக பேசப்படும் பின்பு அது மண்ணுக்குள் புதைந்து போய்விடும். உண்மையில் குற்றவாளிகளே அரசியல்வாதிகளாக அரசியல்வாதிகளே குற்றவாளிகளாக வருகின்றார்கள். தங்களுடைய குற்றங்கள் தங்களை என்றாவது ஒருநாள் தண்டித்து விடக்கூடாது என்று அரசியல் பாதுகாப்பையும் பலத்தையும் அனுகூலமாக்கிக் கொள்கின்றார்கள். .அரசியலுக்கு வந்தவர்களும் குற்றவாளிகளாக உருமாறுகின்றார்கள். இது வழக்கமாகி வருவது மிகவும் கவலை தரக்கூடிய விஷயமாகும்.
இதை மக்களால் ஒருகாலத்திலும் நிருபித்து மாற்றம் செய்ய முடியாது. அரசியல் தலைவர்கள் நினைத்தால் ஒருவேளை முடியலாம் ஆனால் அந்த உண்மையான அரசியல் தலைவர் எ\ங்கே இருக்கின்றார்.? புதிதாகப் பிறந்து வந்தாலும் வாழும் போக்கில் திசை மாறிப் போவதுதான் இங்கே வாடிக்கை. மக்களுக்கு வளமான வாழ்க்கைக்கு நம்பிக்கை பெறுமாறு நடந்து கொள்வதுதான் உண்மையான அரசியல் தலைவருக்கு அழகு . ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு வசதியான வாழ்கையை அவர்களுக்காக அவர்களே தவறான வழிமுறைகளினால் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள். தவறான பரிணாம வளர்ச்சி மிகப் பெரிய விபரீதங்களுக்குக் காரணமாகும் . .