சிரிக்கவோ, அழுகவோ
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
சிலர் அழுது கொண்டே சிரிப்பார்
சிலர் சிரித்துக் கொண்டே அழுவார்
நான் சிரிக்க முயன்றாலும் அழுகைதான்
வருது
அழுகை மட்டும்தான் வருது
சிந்திக்க மறந்ததால் உனக்கு மட்டும் சிரிப்பு வரலாம்
நீ மட்டும் சிரித்தால் போதுமா?
சமுதாயமும் சேர்ந்து சிரித்தால் மட்டுமே
உன் னைப் போல வருங்காலத்தில்
உன் சந்ததியும் சிரித்து வாழும்.
அன்பான மக்களே,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்………..
விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்வோம்
நிலமற்றோர்க்கு ஏக்கர் நிலம் வழங்குவோம்
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தருவோம்
குடிசை வாழ் மக்களுக்கு இலவச
வீடுகள் கட்டிக்கொடுப்போம்
மீனவர்களுக்கு இலவச விசைப்படகுகள் அளிப்போம்
அனைத்து நகரங்களுக்கும் சலுகை விலையில் ஐயன் உணவகம், ஐயன் பூங்கா
ஐயன் வங்கி, ஐயன் இன்சூரன்ஸ், அனைத்து கிராமங்களுக்கும்
ஐயன் டீக்கடை,
எல்லா ஊர்களுக்கும்
ஐயன் குடிநீர், ஐயன் காய்கறி, ஐயன் பழம், ஐயன் இலவச மருந்தகம், ஐயன் மருந்து,
ஐயன் இலவச கணினி மையம், ஐயன் இலவச பொழுது போக்கு நிலையம், எல்லோருக்கும் ஐயன் நாள்காட்டி, ஐயன் ……இன்னும் …இன்னும்….
ஐயன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், இன்னும்
இந்த ஐயன் ரூபாய் நோட்டில்தான் இடம் பெறவில்லை. காலப்போக்கில்
அதற்கும் முயற்சி மேற் கொள்ளப்படும்.
அனைத்து மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி
பாடப் புத்தகங்களும் நோட்டுப் புத்தகங்களும் இலவசம்
பள்ளிக் கூடம் போய்வர இலவச பஸ் பாஸ்
மாணவிகளுக்கு விலையில்லா மொபெட், லாப்டாப்
அனைத்து மக்களுக்கும் ரேஷன் பொருட்
கள் இலவசம்
வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித் தொகை
மாதம் பத்தாயிரம்
வேலை கிடைக்காத பட்டதாரி முதியவர்களுக்கு உதவித் தொகை
மாதம் இருபதாயிரம்.
திருநங்கைகளுக்கு வேலை அல்லது உதவித் தொகை
வரம்பில்லா வாக்குறுதிகளுக்கு குறையொன்றுமில்லை
நாட்டின் நிதி நிலை பற்றி கவலைப்படத் தேவையில்லை
திட்டங்கள் ஏதுமின்றி இதையெல்லாம் செய்வோம் என்று சொல்ல
பாரத தேசத்தில் பெருகி வரும் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளால்
மட்டுமே முடியும்.
மக்களிடம் அதிகமாக வாங்கி கொஞ்சம் திருப்பிக்
கொடுப்பதற்கு திட்டம் எதற்கு ? நிதி ஆ தாரம் எதற்கு ?
வருவாயில் எவ்வளவு சதவீதம் பொதுமக்களுக்காக செலவுசெய்யப்படுகின்றது?
எவ்வளவு சதவீதம் களவுபோகின்றது? எவ்வளவு சதவீதம் வீணாக்கப்படுகின்றது?
உண்மையான புள்ளிவிவரம் தெரிய வந்தால் மயக்கமும் வரும், மரணமும் வரும்.
From:
Dr.M.Meyyappan,
Professor
of Physics (Retd)
74,Church
I Street, New Town
Karaikudi-630001