Tuesday, October 25, 2016

kavithai

நானும் நல்லது செய்யப்போறேன்
முனைவர் .மெ. மெய்யப்பன்

அயின்ஸ்டின் என்றோருவர் பிறந்தாரு
ஆற்றலையும் பொருளையும் ஒன்றிணைத்து 
அணுவின் ஆற்றலை அளந்தாரு.

இராமன் என்றோருவர் பிறந்தாரு 
நீல வானம் நீலக் கடலின் 
நிறத்திற்கு விளக்கம் சொன்னாரு.

எடிசன் என்றோருவர் பிறந்தாரு 
எல்லா நாளும் உழைத்து 
எண்ணற்ற கருவிகளைத் தந்தாரு.

பெளமிங் என்றோருவர் பிறந்தாரு 
நோயால் மடியும் மக்களுக்காக 
பென்சிலின் மருந்தைக் கண்டாரு.

நானும் இன்றொருவராய்ப் பிறந்திருக்கின்றேன் 
நன்றைப் படித்து அவர்போல 
நல்லநல்ல செயல்களைச் செய்திடுவேன.