Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Wednesday, July 31, 2024
Tuesday, July 30, 2024
இறந்துபோன ஒரு அரசியல்வாதியைப் பற்றி நிகழ்கால அரசியல்வாதிகள் புகழ்ந்து தள்ளுவார்கள் .அவரைப்போல உண்டா ,அவர் இல்லாததது நாட்டிற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்றல்லாம் கதை அளப்பார்கள் .ஊரெல்லாம் பொதுமக்கள் செலவில் அவருக்கு சிலை வைப்பார்கள் . உண்மையில் அந்தச் சிலை உயிர்பெற்று வந்தால் பதவி யோ அரசியல் முக்கியத்துவமோ கொடுக்கமாட்டார்கள் .தங்கள் பதவிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் தடையாக இருப்பர் என்று அவரை அவமானப்படுத்தி ஒதுக்கிவைத்துவிடுவார்கள் .
இந்திய அரசியல் சட்டமும் , இந்திய அரசியல்வாதிகளின் சட்டமும் வேறுபட்டதாக இருக்கின்றது.அதனால் நாட்டின் தோற்ற முன்னேற்றமும் ,உண்மையான முன்னேற்றமும் ஒப்புக் கொள்ளமுடியாத அளவிற்கு மாறுபட்டதாக இருக்கின்றது
Monday, July 29, 2024
நம் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் மக்கள் நலனுக்காக அல்லும் பகலும் உழைப்பதாகக் கூறுகின்றார்கள் .ஆனால் நியாயமான ஒரு பொது அல்லது சொந்தப் பிரச்சனையின் தீர்வுக்காக முறையிட்டால் அதைச் சரிசெய்து கொடுப்பதில்லை. வெறும் வார்த்தைகளினால் நம்பிக்கையூட்டி திருப்பி அனுப்பி வைத்துவிடுகிறார்கள் . அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பதவி,மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் .இந்த நாடு அண்டை நாட்டினரின் சூழ்ச்சியால் அழியாது . மதவாதிகளின் ஊடுருவலால் அழியாது . குற்றவாளிகள் என இனமறியப்பட்டவர்களால் அழியாது . இந்த போலித்தனமான நாட்டுப் பற்றற்ற அரசியல்வாதிகளால்தான் அழியப்போகிறது . நான் உணர்ந்ததைப் போல நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் . இதற்கு என்ன தீர்வு என்று என்னைக்கேட்டால் சட்டத் திருத்தம் மட்டுமே .