Thursday, September 19, 2024

 நூறாண்டு காலம் வாழ்வது எப்படி ?  -2

எல்லாம் இறைவன் செயல் என்று யாரும்  கடமையாற்றாமல் சும்மாவே இரு என்று சொல்வதில்லை. சும்மா இருந்துவிட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கு பிறக்காமலேயே இருப்பது இன்னும் மேலானது. நூற்றுக்கு நூறு சதவீதம் எதிர்காலத்தை முடிவு செய்யும் திறமை இருந்தால் கடவுள் என்ற நிழலுருவம் தேவையேயில்லை . கடவுளை வேண்டினால் செய்யும் செயலால் கிடைக்கும்   பயன் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கைதான். உண்மையில் ஒருவருடைய எண்ணங்களே அவரை வழிநடத்திச் செல்கின்றது . மற்றவர்கள் தவறு செய்யலாம் அது அவர்களுடைய எண்ணங்களின் போக்கு ஆனால்  நீ தவறு செய்வதற்கு ஒருபோதும் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே சொல்லப்பட்ட வாக்கியங்களே எல்லாம் இறைவன் செயல் . எல்லோரும் தங்களுடைய தேவையின் எல்லை என்ன என்பது தெரியாமலேயே அளவுக்கு மீறி சம்பாதிக்க விரும்பி செயல்படுகிறார்கள் இவர்களால் இவர்களுடைய வாரிசுகளும் தீயவொழுக்கங்களை பின்பற்றி ஒழுகும் பழக்கத்தை ஏற்றுக்கொண்டு விடுகின்றார்கள் . இவர்கள் தங்களுடைய வாரிசுகளுக்காகவும்  சம்பாத்தித்து சேர்த்துவைக்க நினைத்து வரம்பின்றி சம்பாத்தியம் செய்கின்றார்கள். வாரிசுகளுக்காகவும் இவர்களே சம்பாதித்து வைப்பதால் இவர்களுடைய வாரிசுகள் உழைப்பில் ஆர்வம் கொள்வதில்லை    .  இயல்பான நேர்மையான வழிமுறைகளில் முடியாத போது தவறான வழிமுறைகளில் மறைவொழுக்க நடவடிக்கைகளினால் செய்யும் பழக்கம் இன்றைக்கு ஏறக்குறைய அனைவரிடமும் தொற்றிக் கொண்டுவிட்டது .  அதிகம் சம்பாதிக்க அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றார்கள். அதிக சுகபோகங்களை அனுபவித்து சமுதாயத்தின் நல்லொழுக்ககங்களை சீர்குலைக்கின்றார்கள். எதிர்காலத்தைப் பற்றிய  நம்பிக்கையின்மையின் வெளிப்பாடே இச்செயல் . அளவற்ற சம்பாத்தியம் என்று வாழ்க்கையின்  குறிக்கோளைத்  தவறாகக் கொள்ளும்போது மன நிறைவான மகிழ்ச்சி கிடைப்பதில்லை. கையிருப்பை அதிகரித்துக் கொள்ளும் விருப்பத்தால்  அவர்கள் யாருக்கும் உதவக்கூட மாட்டார்கள் . மனம் கெட்டு அதனால் உடலும் கெட்டு அவர்களுடைய வாழ்நாளை சுருக்கிக்கொள்ள அவர்களே ஒரு காரணமாகி விடுகின்றார்கள் .அது இயற்கையின் விதி என்றுகூடச் சொல்லலாம் , யார் மற்றவர்களுக்கு பயனற்று வாழ்கின்றார்களோ அவர்கள் உலகில் மேலும் வாழ்வதற்குத்  தகுதியற்றவர்கள் என்று இயற்கையே ஒரு முடிவு எடுத்து விடுகின்றது.

Monday, September 16, 2024

 

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாக்கியங்கள்

நூறாண்டு காலம் தாண்டி வாழும் வழி

ஒரு மனிதனின் சராசரி வாழ்நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இன்றைக்கு 60-70 ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது .இதற்கு முதன்மைக் காரணம் நாம் கொள்ளை நோய்களை மட்டுப்படுத்துவதில் பெருமளவு வெற்றிகண்டதுதான். பெருகிவரும் நவீன மருத்துவ வசதியும் , உடல் நலம் மற்றும் சத்துணவு பற்றி மக்கள்கொண்டுள்ள அக்கறையும் ஆர்வமும் அதன் பின்விளைவுகளே . தவறான உணவுப் பழக்க வழக்ககங்கள் ,தாராளமாக அனுமதிக்கப்படும் மது ,புகை போன்ற உடல்நலத்தைப் பாதிக்கும் போதைப்பொருட்கள், இயல் வாழ்கைக்குப் பெரிதும் ஒவ்வாத இயற்கைக்கு மீறிய செயல்கள் போன்றவற்றால் வாழ்நாள்  சுருங்கிக் கொண்டே வருகின்றது.  உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு .புற்றுநோய் போன்ற பாதிப்புக்களினால்  இந்த சுருக்கம் ஏற்படுகின்றது   

நூறாண்டு காலம் வாழ்வது எப்படி ?  -1

      உடல் நூறாண்டுகாலம் நலமோடு  வாழவேண்டுமென்றால் மனமும் நூறாண்டு காலம் நலமாக இருக்கவேண்டும் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள் . ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மனத்திற்குக் கொடுப்பதில்லை. மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது 100 ஆண்டு காலம் வாழ்வதற்கு  இயற்கை கூறும் எளிய இரகசியம் . போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சான்றோர்கள் கூறுவார்கள் . தகுதிக்கு மீறிய அளவில் ஆசைப்படுபவர்கள் மட்டுமே கிடைத்தது போதும் என்று முழுத் திருப்தியடையாமல் தவறுகள் செய்ய முனைவர்கள். அதிக அளவில் உணவு உண்டால் எப்படி மறுக்கடியால் உடல் அவதிப்படுமோ அப்படி தகுதிக்கு மீறிய ஆசைகளினால் மனம் நலங்கெட்டு வாழ்க்கையும்  பாதிக்கப்படும். குறிப்பிட்ட தகுதியைப் பெற்ற பின்பு முயன்று பொருள் தேடுவது வேறு ,தகுதியில்லாமலேயே     பொருளைச் சம்பாதிக்க ஆசைப்படுவது வேறு. முன்னது மற்றவர்களுக்கு நல் வழிகாட்டியாக இருக்கும்  பின்னது காலப்போக்கில் எல்லோரையும் தீயவர்களாக்கி விடும். நம்மடைய தகுதி எது என்று சரியாகத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை . எல்லோரும் வெவ்வேறு தகுதியுடைவர்களாக இருக்கின்றார்கள் . அவரவர் தகுதிக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் கிடைப்பது கிடைத்துக்கொண்டே யிருக்கின்றது. கிடைத்ததற்காக மகிழ்ச்சிகொள்ளமால் கிடைக்காததற்காக வருத்தம் கொள்வது மனதை நாமே துன்புறுத்துவதற்கு ஒப்பான செயலாகும்.  எது கிடைத்ததோ அதுவே அவருடைய  தகுதிக்குக் கிடைத்தது என்று திருப்தி கொள்ளவேண்டும் . அந்தத் திருப்தி வலுப்பெற்றால் வாழ்நாள் 90 சதவீதம் உயரும்.

 

Friday, September 6, 2024

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாக்கியங்கள்

மனிதநேயத்தை வளர்ப்பது அனைவருக்குமான கடமை

மக்களிடம்  அறியாமை மிகுந்திருக்கும் போதும் ,அரசாங்கம் அதைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை உண்மையாக நடைமுறைப் படுத்த முயலாதபோதும்  சமூகஆர்வலர் களாலும் .பொது ஊடங்கங் களினாலும்  மக்களிடையே ஒரு விழிப்புணர்வு தூண்டப்பட வேண்டும். தங்களுக்கென்று ஒரு கொள்கை மாற்றானுக்கு வேறொரு கொள்கை என்ற நிலைப்பாட்டை, கொள்கையால் பதவியை ஏற்றுக் கொண்டவர்கள் விட்டுவிடவேண்டும்.   ஓருபாற்கோடாமை உணர்வு டன் பொதுஊடகங்கள் செயல்பட்டு  சமூகநீதியைப் பாதுகாக்க வேண்டும். அப்பொழுதுதான்  சமுதாயத்தில் ஏமாற்றப்படு வதும், ஏமாறுவதும் பெருமளவு குறையும். இதனால் மறைவொழுக்க நடவடிக்கைகளையும்,  கட்டுப்பாடின்றி பெருகிவரும்    ஊழல்களை யும்,தடுப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இது மக்களிடையே நல்லொழுக்கத்தை இயல்பாக நிலைப்படுத்துகிறது. சமுதாயம் தழுவிய இப்போக்கு  உண்மையான மனிதநேயம் மலர்வதற்கு அடிப்படைக் காரணமாகின்றது. மனிதநேயம் சாகாத சமுதாயத் திற்கு ஒரு வலுவான பாதுகாப்பாக இருக்கின்றது. மனிதநேயமின்றி ஒரு சமுதாயம் அதன் பரிணாம வளர்ச்சியில் மேன்மையடைய முடியாது என்பதை  எல்லோரும் புரிந்துகொள்ளும் போது மனிதன் மனிதனை  ஏமாற்றும் மனப்போக்கு வலுவிழந்து போகின்றது.

எல்லோரும் அவரவர் தேவையைப் பெற்று ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு  மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று எல்லோரையும் சமதகுதிகளுடன் தான் படைக்கப்பட்டார்கள் .தகுதியை வளரும் போது வளர்த்துக்கொள்ளத் தவறியவர்களே குறுக்கு வழியில் சம்பாதிக்க மனித நேயத்தைத் துறந்து தவறு செய்யத் தொடங்குகிறார்கள் .இவர்கள் செய்யும் தவறுகள் திருத்தப்படாவிட்டால் அல்லது தண்டிக்கப்படாவிட்டால்  மற்றவர்களுக்கு அது பின்பற்றி ஒழுகத் தகுந்த பாடமாக அமைந்துவிடும்.