Saturday, June 21, 2014

கார்ட்டூன்






கலி காலம்டா .குடிசை வீட்டில என்ன இருக்கு. குடிசை வீட்டில் கூடவா திருட்டு ?
ஆமாண்டா , அது என் காதலி சுப்புலக்ஷ்மி குடிசை வீடுடா 
நேற்று பீச்சில கதைக்கின்ற போது " 50 கிலோ தங்கம் அந்தக் குடிசையி பாகாப்பின்றி இருக்கு. அது எனக்கு வேண்டும். எனக்கே வேண்டும்.கதை மாறினா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது " என்று சொன்னதைக் கேட்ட யாரோ அவளைப் பின் தொடர்ந்து வந்து  இதைச் செய்திருக்க வேண்டும் என்று நினக்கின்றேன்

Wednesday, June 18, 2014

eluthatha kaditham

எழுதாத கடிதம் 
தவறு செய்பவனைக் காட்டிலும் திரும்பத் திரும்ப அதே தவறுகளைச் செய்பவன் மோசமானவன். அவன் திருந்துவதை விட தவறு செய்வதே நல்லது என்று நினைப்பதால் திருந்துவதற்கு விரும்புவதில்லை. செய்யும் தவறுகளை  மறைவாக இன்னும் நுட்பமாகச் செய்யும் கலைகளைக் கற்றுக்கொள்கின்றான்.தவறு செய்பவன் பொருளாதாரத்தால் முன்னேறலாம் ஆனால் சமுதாயம் பின்னேறுகின்றது. அதனால் அவனும் காலங்கடந்து பின்னேற்றத்தையே சந்திக்கின்றான்

தவறு செய்பவனைக் காட்டிலும் செய்யவேண்டிய தன் கடமைகளைச் செய்யாமல் இருப்பவனே  பெருந் தவறு செய்தவனாகின்றான். பெரும்பாலான அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் இந்த வட்டத்திற்குள் வந்து விடுகின்றார்கள். தவறு செய்பவர்களால் சமுதாயத்தில் தவறுகள் தூண்டப்பட்டு அது பெருக்கமடைகின்றது. அந்த வகையில் தவறு செய்பவர்களைக் காட்டிலும் தன் கடமைகளைச் செய்யாமல் தவறு செய்பவர்களே கூடுதல் தவறுசெய்தவர்க ளாகின்றார்கள். தவறு செய்தவன் தண்டிக்கப்படவும் கூடுதல் தவறு செய்பவன் தண்டிக்கப்படாமல் இருப்பதும் இந்நாட்டில் சாதாரணம் .அது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள இப்போது யாருக்கும் அக்கறை  இல்லை. அகக் கட்டமைப்பு ,தனி நபர் வருமானம் மட்டுமே ஒரு வளமான மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதில்லை. மக்களின் மனப்பாங்கு மாறுமாறு மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் லைர்ளும் நடந்து கொள்ள வேண்டும் அக்காலம் இந்தியாவில் இனி வருமா

Wednesday, June 11, 2014

cartoon

கார்ட்டூன்
இறைவன்
இந்தியாவில் இறைவனைத் தவிர எல்லோரும் பொய்யர்கள் 
உண்மையைப் பொய்யாக்குவார்கள் பொய்யை உண்மையாக்குவார்கள் .யாருக்கும் எது பொய் எது உண்மை என்பதே தெரியாது.
.னின்
இறைவன் வாய் திறந்து பேசுவதே இல்லை. பேசினால் தானே அவரும் பொய்யரா இல்லையா என்பது தெரியவரும்
இறைவன்
இந்தியாவில் இறைவனைத் தவிர எல்லோரும் தவறு செய்கின்றார்கள். தவறுகளே செயல்கள், செயல்களே தவறுகள்..பிறருக்குத் தெரியாமல் தவறு செய்வார்கள்.தெரிந்து விட்டால் மறைப்பார்கள் 
இறைவன் இயற்கையாய் உலகை நடத்திச் செல்கின்றார். எதிர்காலம் முழுவதும் முன் திட்டமிடப்படுதால் அது சிலருக்குத் தவறாகவும் சிலருக்கு நல்லதாகவும் தெரிகின்றது.
னின்.  

எதிர்காலம்  தெரியா விட்டால் இறைவனும் சாதாரண மனினே

Thursday, June 5, 2014

Eluthatha Kaditham

ழுதாத கடிதம்
ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டு கொஞ்சம் மன நிம்மதியோடு வாழமுடியுமா என்று யோசித்து ஆட்சியை வேறொருவரிடம் ஒப்படைத்தார்கள். நீண்ட காலத்திற்குப் பின் பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா ஆட்சியைப் பெற்றது .நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றார். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை  கொண்டவர் போலத் தெரிகின்றார். நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கொஞ்சம் அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. (

யார் யார் கண்பட்டதோ .முழுமையாகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்குமுன் மனித வள மேம்பாட்டுத் துறை காபினெட்  அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கலவித் தகுதி கேள்விக் குறியதாகிப் போனது. கோபிநாத் முன்டே  சாலை விபத்தில் இறந்து போனார் .ஸ்மிருதி இராணி யின் கல்வித் தகுதியை வெளிப்படுத்திய டெல்லி பல்கலைக் கழக

லுவலர்கள் நான்கு பேரைத் தற்காலியமாகப் பணி நீக்கம் செய்தார்ர்கள். இது மிகப் பெரும் தவறு. பொது வாழ்வில் தவறு  செய்யும் யாரையும் குடி மக்கள் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்ட உரிமையுண்டு. இந்த உரிமையை   எளியோராய் இருந்தால் ச்சப்படுத்தியும் வலியோராய் இருந்தால் சரிக்கட்டியும் தவறுகள் வெளிப்படாதவாறு செய்து விடுகின்றார்கள். இதனால் தவறுகள் திருத்தப்படாமல் வளர்வதற்கும் ,திருத்துவதற்கு   யாருமில்லாமலும் போய்விடுவதால் பிற்காலத்தில் இதன் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும்.ஆதாரத்துடன் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதை தடுப்பதால் மக்களின் மன நிலை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மையால் ச்சப்பட்டு ச்சப்பட்டு அவர்கள் தவறுகளை எதிர்க்கும் மனப்பான்மையையே விட்டு விடுகின்றார்கள். அண்மையில் மும்பையில் நகரப் பேருந்தின் ஒரு பெண் ட்டுநருக்கும் ஒரு பயணிக்கும் சச்சரவு வர அப் பயணி பெண் ட்டுநரை அடித்து நொறுக்கிவிட்டார். அப்போது கூடியிருந்த கோடி மக்களில் எவரும் எதிர்க்கவும் இல்லை தடுக்கவும் இல்லை. சினிமாக் காட்சியை ரசிப்பது போல கண்டு ளித்தனர்.  இதுதான் இன்றைக்கு உண்மை நிலை. இதில் மாற்றம் வராமல் எந்த மாற்றம் வந்தாலும் பயனில்லை