அணு உலையும் வாழ்வியலும் -4
அணு உலையில் ஓவ்வொரு கருப்பிளப்பினாலும் கிடைக்கும் 2 அல்லது 3 நியூட்ரான்களில் அடுத்த கட்ட
கருப்பிளப்பிற்கு ஒரேயொரு
நியூட்ரானை மட்டும்
பயன்படுத்த வேண்டும். குறைவாகப்
பயன்படுத்தினால் அது
பற்றாக்குறைக்கு வழி வகுக்கும். வளர்ச்சிக்கு அது ஒரு
பெரும் தடை. அதிகமாகப் பயன்படுதினால்
அது சமுதாயத்திக்கு கேடு .ஆற்றல்
பகிர்ந்து நலம் தருவதற்கு
முன்பே ஓரிடத்தில் குவிந்து எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கின்றது.. நல்லவை குறைய ஒருவரும் விரும்பலாகாது.
அல்லவை வளர சிறிதும் இடம்தரலாகாது என்பதையே இது
எடுத்தியம்புகின்றது.
அணு உலையிலிருந்து வெளிப்படும் ஆற்றலை
உடனுக்குடன் வெளியேற்றி சமுதாயத்தின்
பயன்பாட்டிற்குக் கொடுக்க வேண்டும் .இல்லாவிட்டல்
அணு உலை
வெடிப்புக்கு ஆளாகி சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிடும் அணு குண்டுகளை விட மக்களின்
தன்னலப் போக்கு ப ற்றிய எண்ணங்களே சமுதாயத்தை அழிக்கும் வலிமையான காரணமாக இருக்கின்றது
. அணு உலை ஒரு போதும் ஆற்றலைச்
சேமித்து வைத்துக் கொள்வதில்லை,அதுபோலத்தான்
அரசும் .மக்களுக்கான வளத்தை
தனக்காக சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது. இப் போக்கிற்கு இருக்கும் ஆதாரங்களை அழித்து விட்டாலும்
பின்விளைவுகள் புலப்படுத்திக் காட்டத் தவறுவதில்லை அவர்களுடைய வாழ்க்கை
முறையில் காணப்படும் திடீர் மாற்றங்களே அதை அப்பட்டமாக எடுத்துக்
காட்டுகின்ட்றது. .இதனால் மக்களும் நீதி தவறி நடக்கத் தொடக்கிவிடுகின்றார்கள். மட்டிக்கொள்ளாமல் எவ்வளவு
பெரிய தவறுகளைச் செய்தாலும்
அவன் நல்லவன் என்று கொள்ளப்படுவதால் இதில்
எல்லோரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவே விருப்பம் காட்டி வருகின்றார்கள்.