Wednesday, March 16, 2016

creative thoughts

பாரதியின் மனதை வாசியுங்கள்

ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது .ஆனால் அதற்கு முன்னால் மிகச் சாதரணமாகத் தினம் தினம் சமுதாய வீதியில் நிகழும் கொலைகள், கொள்ளைகள், போன்ற இன்ன பிற குற்றங்கள் தடுக்கப்படவேண்டும். . கொலை களுக்கு  சாதி  மட்டுமே காரணம் இல்லை. .சாதியின் அடிப்படையில் சமுதாயத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வேறுபாடுகளே காரணம். இந்த வேறுபாடுகளே சாதி உணர்வை மேலும் மேலும் தூண்டி விடுகின்றது.

சாதி ஒழிப்பு ஆணவக் கொலைகளை ஒழித்து விடும் என்றாலும் அந்த உணர்வு குன்றிப் போய் விடாமல் பாதுகாப்பது யார் ?

பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் போது ஒழிக்கப்பட்ட சாதியைப் பற்றி ஏன் கேட்கப்பட வேண்டும் ?படிக்கும் போது உதவித் தொகை வழங்கும் போது ஏன் சாதியைப் பற்றிக் கேட்க வேண்டும்
வேலை தேடும் போது சாதி சார்ந்த முகவரியை ஏன் கேட்க வேண்டும் ? தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கும் பதவிகள் பகிர்வுக்கும் சாதி முக்கியப் பங்கு வகிக்கும் போது ஒரு குறிப்பிட்ட சாதி சேர்ந்த மக்கள் அந்த உணர்வை எப்படி விட்டொழிப்பார்கள். சாதி ஒழிப்பு கலப்புத் திருமணத்தால் பாதிக்கப்படும் இளசுகளுக்கு மட்டும் தானா ?
நீங்கள்  மனது  வைத்தால், ஒதுங்கி வழிவிட்டால்  கீழ் சாதியில் பிறந்த ஒருவனை முதலமைச்சர் பதவியில் நீங்களே  அமர்த்தலாமே.

சாதியை விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்? நிச்சியமாக் இன்றைய இளைய தலைமுறையினர் இல்ல. அப்படியென்றால் அது ஏன் இன்னும் தடுக்கப்படாமல் இருக்கின்றது ?
சாதி உணர்வு ,பதவி, வேலைவாய்ப்பு உதவித் தொகை ,போன்ற வற்றால் மக்களிடையே தக்கவைக்கப்    படுகின்றது. சாதி உணர்வு தங்கள் சமுகத்தின் உயர்வுக்கு ஒரு பாது காப்பு என்று மூத்த மக்கள் நினைக்கின்றார்கள். அதனால் அது இரத்த பாசத்தின் மூலம் இளைய தலை முறையினரிடம் ஊட்டப்பட்டு விடுகின்றது.  இந்த உணர்வு இன்னும் அழியாமல் இருப்பதற்கு அது அகத்தே  புதுப்பிக்கப்பட்டு வருவதுதான். காதல் மட்டும் விதி விலக்காக  இருப்பதால் அதனால் பாதிக்கப் படும் போது இளசுகளுக்கு ஆதரவாக சாதி ஓழிப்பு அரசியல் வாதிகளால்  சமுதாயத்தில் பேசப்படுகின்றது.

சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பா

வேஷம்  போடும்  அரசியல் வாதிகளே  பாரதியின் மனதை வாசியுங்கள்.


No comments:

Post a Comment