வெற்றி
தோல்விகள் எல்லாம் தோல்விகளே இல்லை. வெற்றியை நோக்கிய பயணம் முடிவுக்கு வராத வரை
தோல்விகள் செங்கற்கல்லாகும் போது வெற்றி ஓர் அழகான கட்டடமாக உருப்பெறுகின்றது
வெற்றிக்கு நிச்சியமான பரிசு இருப்பதை போல தோல்விகளுக்குமுண்டு. அது அறிவை வளர்க்கும் அரிதான அனுபவமாகும். இந்த அறிவு வெற்றியால் கிடைப்பதில்லை.
வெற்றியில் இரணடு் விதம் ஒன்று உடனடி வெற்றி மற்றொன்று படிப்படியான வெற்றி. உடனடி வெற்றி லாட்டரியில் பரிசு விழுந்ததைப் போல படிப்படியான வெற்றி உழைப்பிற்குக் கிடைத்த ஊதியம்.
தோல்விகளை சந்தித்து விட்டால் வெற்றிக்கான வாய்ப்புகள் மேலும் மேலும் அதிகமாகும்.
வெற்றியின் ஆணவம் தலையிலும் தோல்வியின் வருத்தம் இதயத்திலும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்
வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நம்முடைய எண்ணங்களின் வெளிப்பாடுதான்.ஏனெனில் வெற்றியும் தோல்வியும் அதோடு முடிவடைவதில்லை.