Saturday, September 3, 2016

creative thoughts

வெற்றி
வெற்றி ன்றும் வெறியால் வந்துவடுதில்லை.அதன் பின்னணியில் ஒரு நெடிய ஒழுங்கு முறை இருக்கின்றது 
உன்னை நீ வெற்றி கொள்ளாமல் பிறரையும் பிறவற்றையும் வெற்றி கொள்ள முடியாது வெற்றி பெற்றிருந்தால் அது தற்காலியமானதாகவே இருக்கும் 
நீ உள் மனத்தால் ஆளப்படுகின்றாயா அல்லது நீ உள் மனதை ஆள்கின்றாயா என்பதை பொருத்தே  உன் வெற்றி வாய்ப்பும் எதிர்காலமும்  இருக்கும்.
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் வெற்றி பெறக்கூடிய தகுதி அனைவருக்கும் சமமாக இருக்கின்றது.
வெற்றியைத் தீர்மானிப்பது பணமல்ல..பிள்ளையார் சுழி போடுவது எண்ணங்கள் தொடங்குவது ஆர்வமும் உழைப்பும் முடிப்பது விடா முயற்சி. முன்னது  மனம் (அகம்) பின்னது உடல் (புறம்) இரண்டும் ஒருங்கிணைந்து உறவாடினால் தான் வெற்றி பிறக்கும்/ 
வெற்றி தவறிப் போவதற்கு செய்ய வேண்டியதைக்  கவனமாகச் செய்யாமல் விட்டதைவிட செய்யக் கூடாததை ஆர்வமாய்ச் செய்ததே அதிகம் காரணமாக இருக்கின்றது.
உங்களை யாராராலும் தோற்கடிக்க முடியாது உங்கள் நம்பிக்கையில் நீங்கள் தோற்கும் வரை 
வெற்றி உன்னை நோக்கி வருவதில்லை. ஓவ்வொரு முறையும் நாம் தான் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும். நாம் பயணிக்க எட்டாத வெற்றியும் இடம் பெயர்ந்து செல்லலலாம் அப்போது நாம் பயணிக்க வேண்டிய தூரம் எதிர்பார்த்தை விட அதிகரிக்கும். அதனால் உழைப்போடு கூடுதல் உழைப்பும் தேவைப்படும். இ்தவேு விடாமுயற்சி.எனப்படும்.

No comments:

Post a Comment