Wednesday, November 20, 2019

sonnathum sollaathathum


நண்பர்களை மாறிவிடமுடியும் ஆனால் அண்டைவீட்டாரை மாற்ற முடியாது
                                                                                                     -    அடல் பிஹாரி வாஜ்பாய்

நல்ல நண்பர்கள் நன்மைகளை மட்டுமே தருவார்கள் ஆனால் தீய நண்பர்கள் நம்மையும் தீயவர்களாக்கிவிடுவார்கள்  நட்பை வளர்த்துக்கொண்ட பின்னர்   நண்பர்களை மாற்றிக்கொள்ள முடியாது. மாற்றிக்கொண்டாலும் அதன் பாதிப்பு தொடர்ந்து வரும். என்பதால் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நண்பர்களைக் கூட ஒருவர் மாற்றிக்கொண்டுவிடமுடியும் ஏனெனில் அது தன்வினைச் செயல். ஆனால் அண்டைவீட்டாரை மாற்ற முடியாது . ஏனெனில் அது எதிர்வினைச் செயல்.
அண்டைவீட்டாரோடு நல்லுறவு இருக்கும்போதுதான் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்வதுடன் இணைந்து முன்னேற்றமும் காணமுடியும். .இது வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பொருந்தும். பிரச்சனையான அண்டைநாட்டாரை மாற்றிக் கொள்ள முடியாமையால் இந்தியா தன் சுய முன்னேற்றத்தில் முழு கவனம் மேற்கொள்ள முடியவில்லை  .
எங்கிருந்தோ வந்து நாட்டை அபகரித்து  சில நூற்றாண்டு காலம் ஆண்டு, உரிமைகொண்டாட வாரிசுகளை வளர்த்து விட்டுச் சென்றதால் நாட்டின் ஒரு  பகுதியை இழந்தோம்.. அவர்கள் எதோ தங்கள் நாட்டை இழந்தது போலச்  சண்டை போடுகின்றார்கள். வெற்றி பெறமுடியாமல் இந்த வன்மத்தை மக்கள் எல்லோரிடமும் திணிக்கிறார்கள் . நல்லவர்களே இல்லாத ஒரு அண்டைநாடு  இந்தியாவிற்கு ஒரு  நிரந்தரமான பிரச்சனை..  .      

No comments:

Post a Comment