Tuesday, December 24, 2019

பெர்மாட்டின் இறுதித் தேற்றம்- நிரூபணம் -2


பெர்மாட்டின் இறுதித் தேற்றம்- நிரூபணம் -2
மும்மடி எண் தொடர்புகளின் பொதுப் பண்பும்  தீர்வும்

மும்மடி எண்கள் சில குறிப்பிட்ட பொதுப் பண்புகளைப் பெற்றுள்ளன. ஓரெண்ணின்  மும்மடிக்கும் (x3 )  மடி மூல எண்ணிற்கும் (x) உள்ள வேறுபாடு x3 – x = x ( x2  - 1)  = (x-1)x(x+1). இது இயலெண்  தொடரில்  அடுத்தடுத்துள்ள மூன்று ண்களின்
பெருக்கல் என்பதால் அதற்கு 6  ஒரு பொதுக்காரணியாக இருக்கின்றது. இப்பண்பு  (x-1)x (x +1) = 6n  என்று தெரிவிக்கின்றது. எனவே மும்மடி எண்களை  x3 = 6nx  + x  என்ற தொட ர்பால் குறிப்பிடலாம். மும்மடி எண்களின் இப் பண்பை  3R31  வகைச் சமன்பாடுகளில் பயன்படுத்தி பெர்மாட்டின் இறுதித் தேற்றத்திற்கு 2R31   உட்பட்டிருப்பதை உறுதிசெய்யலாம்.

a3  + b3  + c3  = d3  என்ற பொதுத் தொடர்பில்  d  ன் மதிப்பு   a,b,c ன் மதிப்புக்களை விட அதிகமாக இருக்கும் என்றாலும் அவற்றின் கூட்டுத் தொகையை விடக்  குறைவாக இருக்கும்
                                                             d > a,b,c  ; d < a+b+c
எனவே  d = a +p = b + q = c+r  என்று கொள்ளலாம் . d = c + r  என்று வைத்துக்கொண்டு அதை பொதுச் சமன்பாட்டில் பதிலீடு செய்ய ,
          
                 a3  + b3  + c3  = d3
                6(na + nb + nc) + (a+b+c) = 6nd  + d = c+r
                a+b = 6(nd – na – nb – nc) + r  =  6n + r
                a3  + b3  =(a+b)3  - 3ab (a+b) = (6n+r)3  - 3ab(6n+r)
மேலும்
             a3  + b3  + c3  = d3  = (c+r)3
             a3  + b3  = r3 + 3cr(c+r)
இரு சமன்பாடுகளையும் ஒப்பிட,

3c2r + 3cr2 + r3  -  (6n+r)3  + 3ab(6n+r) = 0
இருபடிச் சமன்பாட்டை தீர்வு செய்து c  ன் மதிப்பை அறியலாம் . இது r , n , (a + b )  இவற்றின் மதிப்புக்களைச் சார்ந்திருக்கிறது.

c =- (r/2) ± (1/2r) [ r4 + 288n3  r +144 n2  r2 + 24 n r3  - 4abr (6n+r) ]1/2

              r            n          a+b           a3  + b + c3  = d3
             1             1            7                  [1,6,8=9]3
             1             2          13                  [3.10,18 = 19]3
             1             3          19                  [2,17,40 =41]3
             1             4           25              தொடர்பு இல்லை 
             1             5          31                 [12,19,53=54]3
             1             6          37                 [14,23,70 = 71]3
             1             7          43                 [12,31,102=103]3
              1            8          49                தொடர்பு இல்லை
                1             9            55                  தொடர்பு இல்லை

இந்த வழிமுறை a3  + b3  + c3  = (c+r)3  என்ற பொதுத் தொடர்புக்கு முழு எண்களாலான தீர்வுகளைப் பெறப் பயனுள்ளதாக இருக்கின்றது.

a  யின் எல்லா முழு எண் மதிப்புகளுக்கும்  ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட  3 R31   தொடர்பை ஏற்படுத்த முடியும்

[1,6,8=9]3, [2,17,40 = 41]3 , [3,10,18=19]3, [4,57,248 =249]3 ,[5,86,460 =461]3 , [6,121,768 = 769]3,
[7,162,1190=1191]3, [8,209,1744 =1745]3 , [9,262,2448= 2449]3, [10,321,3320 = 3321]3

இது போன்ற எண்  தொடர்புகளை

a3 + [6Ta  - (a-1)]3  + [ 8a + 3a(a2 + a – 2) ]3  = [ 8a + 1 + 3a(a2 + a – 2) ]3

என்ற பொதுத் தொடர்பால் பெறமுடியும். இது போல ஒரு குறிப்பிட்ட a யின் மதிப்பிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட  எண் தொடர்புகளை நிறுவலாம். (a=3) ,(a=7) என்றிருக்கும் போது

[3,4,5=6]3 ,[3,10,18=19]3 , [3,34,114=115]3 , [3,36,37=46]3
[7,14,17=20]3 , [7,317,525=5613, [7,162,1190 = 1191]3
போன்ற எண் தொடர்புகளைப் பெறலாம்.
     
3 R31     வகை பொதுச் சமன்பாட்டில் ஏதாவதொரு மூல  எண் சுழியானால்  அது 2R31   வகைக்கான ஒரு பொதுச் சமன்பாடாகும். a  சுழியானால் இச் சமன்பாடு 13  = 13 என்று மட்டுமே மாற்றம் பெறுகின்றது.  b சுழியானால் இச் சமன்பாடு 6Ta = (a-1) என்ற நிபந்தனையை ஏற்படுத்துகின்றது . இந்த நிபந்தனை a = 0 , Ta  = 0  என்ற நிலையில் மட்டுமே உண்மையானதாக இருக்கின்றது. c = 0 எனில் , a ஒரு சிக்கல் எண்ணாகி விடுகின்றது. ஒரு உறுப்பைச் சுழியாக்கிவிட்டு 3 R31  தொடர்பை 2R31  தொடர்பாக மாற்றமுடியாது என்று இது தெரிவிக்கின்றது. இது பெர்மாட்டின் இறுதித் தேற்றத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.


No comments:

Post a Comment