Saturday, March 14, 2020

அப்துல் கலாமின் பொன்மொழிகள்

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்  ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்   - அப்துல் கலாம் 
பிறப்பை எவரும் முயன்று பெறுவதில்லை. அது பெற்றோர்களின் விளையாட்டால் நிகழ்ந்தது. எவரும் தங்கள் பிறப்பை வேண்டாம் என்று மறுக்க முடியாது . அது போல இறப்பையும் வேண்டாம் என்று தடுத்துக் கொள்ள முடியாது . ஒருவருடைய பிறப்பும் இறப்பும் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை ..ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை அப்படியில்லை . வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்வதும் பயனில்லாமல் கழிப்பதும்   அவரவர் கையில் தான் இருக்கின்றது.   ஒருவருக்குக் கிடைக்கும் பேறும் புகழும் அவருடைய வாழ்க்கையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது .என்பதால் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள முயலவேண்டும் என்பதே வாழ்க்கையின் அடிப்படை.
வாழ்க்கை என்பது பிறருக்குப் பயன்தருவதற்கும் அதையும் தொடர்ந்து  செய்வதற்கும் தன்னைத் தானே தகுதி படுத்திக் கொள்ள இறைவன் கொடுத்த வாய்ய்பு. என்பதை வெகு சிலரே புரிந்துகொண்டிருக்கின்றார்கள் .எப்படி வாழவேண்டும் என்று தெரிந்து கொள்ளும் காலம் வரும் போது பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துவிடுகின்றனர் . இதில் வேடிக்கை என்னவென்றால் இன்னும் வாழக் காலம் கொடுத்தாலும்  சமுதாய வாழக்கையைப் புரிந்து கொள்வதேயில்லை. வாழ்க்கை வாழ்நாள் முழுக்க முழுத்திருப்தி இல்லாததாக இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் எப்படி வாழவேண்டுமோ அப்படி சிந்தித்து வாழ்வதைவிட எப்படி வாழக்கூடாதோ அப்படி சிந்திக்காமலே வாழ்வதுதான். பொதுவாக இப்படிச் சிந்திக்கின்ற போது சமுதாயத்தின் நலங் கெடுக்கும் எதிரிடையான எண்ணங்களே மனதில் இடம் பிடித்து விடுகின்றன.
பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கை   எண்ணங்களாலும் உணர்வுகளாலும் ஆளப்படுகிறது.வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும்  இவை ஒவ்வொருவருக்கும் அகக் காரணிகளாக இருப்பதால் சமுதாய நலனுக்காக இவற்றை மேம்படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில் சமுதாய நலனுக்குள் தனிமனித நலம் இலைமறைவு காய்மறைவு .
நேரத்தை யாரும் நிறுத்திவைக்க முடியாது . நேரம் பின்னோக்கிச் செல்வதுமில்லை . புதிய நொடியில் புதிய நிகழ்வைப் பெறலாமே ஒழிய பழைய நிகழ்வைப் பெறமுடியாது சும்மா இருந்தாலே நேரம் கழிந்துவிடும் .வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான் பிறப்பிலிருந்து இறப்புவரை அது நேரஞ் சார்ந்தது ,நேரத்தைக் கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை . குறுகிய வாழ்நாளில் அரிய காரியங்களைச்  செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கவேண்டும் பலர் தனக்காக மட்டுமே  வாழ்வார்கள்சமுதாயத்தை வாழவைக்கும் போது அச்சமுதாயத்தோடு சேர்ந்து தானும் நலமாக வாழமுடியும் என்பதை உணர்ந்து   சிலர் சமுதாயத்திற்காக வாழ்வார்கள். இவர்கள் மட்டுமே வாழும்போது மட்டுமின்றி வாழ்ந்து மறைந்த பின்பும் மக்களால் நினைக்கப்படுகின்றார்கள்ஐந்திலும் சாவு நூறிலும் சாவு . வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி.ஆனால் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் சமுதாயத்திற்காகச் சாதனை படைத்த மக்களே ..
கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது  நீ  தூக்கத்தில்  காண்பது  அல்ல . உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே (இலட்சியக்) கனவு             

. சும்மா இருந்தாலே வெற்றி என்றால் எல்லோரும் ஒரு வேலையும் செய்யாமலேயே வெற்றி பெற்றவர்களாகிவிடுவார்கள்.ஓடுதளத்தில் ஓடாமலேயே ஒருவர் வெற்றி காணமுடியாது. குத்துச் சண்டை என்றாலும் யுத்தம் என்றாலும் போராடித்தான் எதிரியை வீழ்த்தி வெற்றிபெறமுடியும் . செயலின்றி வெற்றியில்லை.அதனால் இளைஞர்களே கனவு காணுங்கள் ஒருவர் செயலில் ஈடுபடுவதற்கு நினைவைத் தரும் கனவுகளே நுழைவாயில்  என்று அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை சந்திக்கும் போதெல்லாம் கூறுவார் 

கனவு காணுங்கள் தூக்கத்தில் அல்ல .விழித்துக் கொண்டே . தூங்கி க் கொண்டே காண்பது கனவல்ல . அக் கனவு மூங்கில் இலைமேல் படிந்த பனித் துளி போல விழிக்கும்  முன்பே  மறைந்து போகும் .. விழித்துக் கொண்டே காணும் கனவு தூங்கும் போது கூட உன்னைத் தட்டி எழுப்பும் என்பார்.

கனவுகளால் அடிமைப்படாதே கனவுகளை அடிமைப்படுத்து

1829- 1896 ல் வாழ்ந்த ஜெர்மன் நாட்டு வேதியியல் விஞ்ஞானியான பிரெடெரிக் ஆகஸ்ட் 
 கீகுள் (Friedrich August Kekule) பென்சீன் மூலக்கூறின் கட்டமைப்பைக் கண்டுபிடித்தவர் . தன் கண்டுபிடிப்பை வெளியிட்டு 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் போது 
பென்சீன் மூலக்கூறின் வட்ட வடிவக் கட்டமைப்பை ,ஒரு பாம்பு தன் வாலையே 
உணவாக நினைத்து தன் வாயால் கவ்விப் பிடித்துக் கொண்டிருப்பதை ஒரு நாள் பகற்
கனவாகக் கண்டேன்.அக்கனவே பென்சீன் கட்டமைப்பைக் கண்டறிய வழிகாட்டியாக அமைந்தது” என்று குறிப்பிட்டார் .கார்பன்-கார்பன் அணுவிடைப் பிணைப்பைப் பற்றி 
பகலிரவாய் 7 ஆண்டுகள்  ஆராய்ந்த பின்னரே பகற் கனவில் பென்சீன் மூலக்கூறு
ஒரு பாம்பு வடிவில் உருவகமாய்த் தோன்றியிருக்கிறது .பொதுவாக வெற்றி பெற
வேண்டும் என்று உண்மையாக நினைத்து அதற்காகத் தங்களை அர்பணித்துக் 
கொள்பவர்கள் வித்தியாசமாகச் சிந்தித்து செயல்படுவதால் செயல்திறன் அபரிதமாக 
இருக்கும்.இதற்குக் காரணம் மூளையோடு அகமனமும்  சேர்ந்து கொள்வதேயாகும் .
அகமனம் எப்போதும் சேகரித்த விஷயங்களை அசைபோடும், முடிவுகளை 
குறிப்புணர்த்தும்.கனவுகள் அகமனதின் ஒரு வெளிப்பாடு என்று உயிரியல்  அறிஞர்கள் 
கூறுவார்கள்மேலோட்டமாக அசைபோடும்போது கனவுகளுக்குப் பொருள்  விளங்காதுகணப்பொழுதில் மறந்தும் போகும்.அதனால் பலர் கனவுகளுக்கு மதிப்புக்  கொடுப்பதில்லை.

இந்தியாவின் கணித மேதை இராமானுஜனின் நோட்டுப் புத்தங்கங்களில் 4000 க்கும்  மேற்பட்ட சூத்திரங்களும் கணிதமொழித் தொடர்புகளும் வெறும் குறிப்பாக அவரால் 
எழுதப்பட்டுள்ளனவழிமுறைகளின்றி தீர்வுகளை மட்டுமே எழுதுவது என்பது  அகமனதின் தொடர்பின்றி இயலாதது.இத் திறமைக்குக் காரணம் நாமகிரி அம்மன் 
அருள்  என்று அடக்கமாக இராமானுஜன் கூறினாலும் ,உண்மையில் அவருடைய 
வற்றாத ஆர்வமும் முழுமையான ஈடுபாடும் பெற்றுத் தந்த திறமை என்றுதான்
சொல்லவேண்டும் .

தாமஸ் ஆல்வா எடிசன் சில சமயங்களில் கைகளில் எடைக் கற்களைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கையில் அமர்திருந்த படியே தூங்குவாராம் .அந்த எடை நழுவிக் கீழே
விழும் போது தூக்கம் கலைந்து விழித்தெழுவாராம் .அப்போது அவர் கண்ட கனவுகளை நினைவு படுத்திப் பார்ப்பாராம்அவை பெரும்பாலும் ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு
மூலமாக இருக்குமாம்.வெற்றி பெறுவதற்காகக் கனவு காண்பவர்கள் தங்கள் கனவு
களை  நனவாக்கி  விடுவார்கள்கனவுகளை மொழிபெயர்க்கத் தெரிந்ததால்
இது இயல்பாகிறது .

மென்டலீவ் தனிம அட்டவணையைக் கண்டுபிடித்த வேதியியல்  விஞ்ஞானி .இவர் 
நெடுங் காலம் வேதித் தனிமங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அதனால் அவருடைய முயற்சியில் அகமனமும் சேர்ந்து கொண்டதுதனிம அட்டவணைக்குரிய அட்டவணையின் வடிவத்தை முதலில் தன்னுடைய கனவில் தான்  கண்டதாக இவரும் குறிப்பிட்டுள்ளார் .

வில்லியம் ஹெர்ஷல் ஒரு பழங்காலத்திய வானவியல் அறிஞர் இவர் யுரேனஸ் என்ற 
கோளைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் அதைக் கனவின் மூலம் தான் தெரிந்து கொண்டாராம். இவையாவும் ஒருவருடைய வெற்றிக்கு பகற்கனவும் ஒரு வலிமையான 
தூண்டுகோல்  என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு சில சரித்திரப் பதிவுகள். 

கனவு காணுங்கள் இளைஞர்களே என்று நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் . உண்மைதான் ,
உண்மையான கனவுகளே வாழ்க்கையில் உயர்ந்த மனிதர்களை
உருவாக்குகின்றது ஒரு செயல் எண்ணத்திலிருந்து உருவாகிறது ,ஆனால்
அந்த எண்ணங்களோ ஒருமுகப் படுத்தப்பட்ட சிந்தனையிலிருந்து உருவாகின்றன.
சேகரித்து சிதறிய கருத்துகளும் கனவுகளுக்குக் காரணமாக இருந்தாலும் மனதோடு  ஒத்ததிரும் ஒருங்கிணைந்த கருத்துகளே நிஜத்தைக் காட்டும்  நிழல்
வடிவக் கனவுகளுக்குக் காரணமாக இருக்கின்றன.

ஒரு ஆசிரியர் தன் மாணவனைப் பார்த்து உன் எதிர்காலக் கனவு என்ன என்று கேட்பார் .அம் மாணவர் நான் பொறிஞராகப் போகிறேன் என்றோ டாக்டராகப் போகிறேன் என்றோ கூறுவதைக் கேட்டிருக்கிறோம் . அவனுடைய கனவு உண்மையானதாக இருக்குமானால் எதிர்காலத்தில் அம் மாணவர் அப்படியே ஆகிறார் . இதில் ஒரு நுட்பமான உளவியல் கருத்து உள்ளடங்கி இருக்கிறது. ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்ல அது அதுவாகவே ஆகிவிடுகிறது என்பதுதான் . ஒப்புக்குச் சொல்லாமல் ,மனப்பூர்வமாகச் சொல்லிப் பாருங்கள் ,
உங்கள் பிள்ளையின் மனதில் அது ஆழப் பதிந்து விட்டால் அவர்களை நீங்கள் எப்படி உருவாக்கவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே உருவாக்கமுடியும் .

ஒரு சிலருக்கு இயல்பாகவே ஒரு ஈடுபாடும் ஆர்வமும் வந்துவிடும் . அவர்களோடு
ஒப்பிட்டு உங்கள் பிள்ளையும் அப்படி வரவேண்டும் என்று உங்கள் முயற்சி இல்லாமல் அவர்களைக் கட்டாயப் படுத்தாதீர்கள் . ஒவ்வொருவருக்கும் புறச்சூழல் வேண்டுமானால் ஒரேமாதிரியாக இருக்கலாம் ஆனால் அகச் சூழல் பெரிதும் வேறுபட்டது ..ஒரு கல்லுக்குள்ளே ஒரு அழகான சிலை இருக்கிறது என்பதை அதை வடிக்கும் சிற்பி மட்டுமே அது கல்லாய் இருக்கும்போதே  அறிவான் .அதைப்போல
உங்கள் பிள்ளைகளைப் பொருத்தமட்டில் நீங்கள் தான் தலைமைச் சிற்பி . 

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்  ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்   - 
பிறப்பை எவரும் முயன்று பெறுவதில்லை. அது பெற்றோர்களின் விளையாட்டால் நிகழ்ந்தது. எவரும் தங்கள் பிறப்பை வேண்டாம் என்று மறுக்க முடியாது . அது போல இறப்பையும் வேண்டாம் என்று தடுத்துக் கொள்ள முடியாது . ஒருவருடைய பிறப்பும் இறப்பும் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை ..ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை அப்படியில்லை . வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்வதும் பயனில்லாமல் கழிப்பதும்   அவரவர் கையில் தான் இருக்கின்றது.   ஒருவருக்குக் கிடைக்கும் பேறும் புகழும் அவருடைய வாழ்க்கையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது .என்பதால் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள முயலவேண்டும் என்பதே வாழ்க்கையின் அடிப்படை.
வாழ்க்கை என்பது பிறருக்குப் பயன்தருவதற்கும் அதையும் தொடர்ந்து  செய்வதற்கும் தன்னைத் தானே தகுதி படுத்திக் கொள்ள இறைவன் கொடுத்த வாய்ய்பு. என்பதை வெகு சிலரே புரிந்துகொண்டிருக்கின்றார்கள் .எப்படி வாழவேண்டும் என்று தெரிந்து கொள்ளும் காலம் வரும் போது பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துவிடுகின்றனர் . இதில் வேடிக்கை என்னவென்றால் இன்னும் வாழக் காலம் கொடுத்தாலும்  சமுதாய வாழக்கையைப் புரிந்து கொள்வதேயில்லை. வாழ்க்கை வாழ்நாள் முழுக்க முழுத்திருப்தி இல்லாததாக இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் எப்படி வாழவேண்டுமோ அப்படி சிந்தித்து வாழ்வதைவிட எப்படி வாழக்கூடாதோ அப்படி சிந்திக்காமலே வாழ்வதுதான். பொதுவாக இப்படிச் சிந்திக்கின்ற போது சமுதாயத்தின் நலங் கெடுக்கும் எதிரிடையான எண்ணங்களே மனதில் இடம் பிடித்து விடுகின்றன.
பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கை   எண்ணங்களாலும் உணர்வுகளாலும் ஆளப்படுகிறது.வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும்  இவை ஒவ்வொருவருக்கும் அகக் காரணிகளாக இருப்பதால் சமுதாய நலனுக்காக இவற்றை மேம்படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில் சமுதாய நலனுக்குள் தனிமனித நலம் இலைமறைவு காய்மறைவு .
நேரத்தை யாரும் நிறுத்திவைக்க முடியாது . நேரம் பின்னோக்கிச் செல்வதுமில்லை . புதிய நொடியில் புதிய நிகழ்வைப் பெறலாமே ஒழிய பழைய நிகழ்வைப் பெறமுடியாது சும்மா இருந்தாலே நேரம் கழிந்துவிடும் .வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான் பிறப்பிலிருந்து இறப்புவரை அது நேரஞ் சார்ந்தது ,நேரத்தைக் கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை . குறுகிய வாழ்நாளில் அரிய காரியங்களைச்  செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கவேண்டும் பலர் தனக்காக மட்டுமே  வாழ்வார்கள்.  சமுதாயத்தை வாழவைக்கும் போது அச்சமுதாயத்தோடு சேர்ந்து தானும் நலமாக வாழமுடியும் என்பதை உணர்ந்து   சிலர் சமுதாயத்திற்காக வாழ்வார்கள். இவர்கள் மட்டுமே வாழும்போது மட்டுமின்றி வாழ்ந்து மறைந்த பின்பும் மக்களால் நினைக்கப்படுகின்றார்கள்.  ஐந்திலும் சாவு நூறிலும் சாவு . வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி.ஆனால் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் சமுதாயத்திற்காகச் சாதனை படைத்த மக்களே ..
கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது  நீ  தூக்கத்தில்  காண்பது  அல்ல . உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே (இலட்சியக்) கனவு             

. சும்மா இருந்தாலே வெற்றி என்றால் எல்லோரும் ஒரு வேலையும் செய்யாமலேயே வெற்றி பெற்றவர்களாகிவிடுவார்கள்.ஓடுதளத்தில் ஓடாமலேயே ஒருவர் வெற்றி காணமுடியாது. குத்துச் சண்டை என்றாலும் யுத்தம் என்றாலும் போராடித்தான் எதிரியை வீழ்த்தி வெற்றிபெறமுடியும் . செயலின்றி வெற்றியில்லை.அதனால் இளைஞர்களே கனவு காணுங்கள் ஒருவர் செயலில் ஈடுபடுவதற்கு நினைவைத் தரும் கனவுகளே நுழைவாயில்  என்று அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை சந்திக்கும் போதெல்லாம் கூறுவார் 

கனவு காணுங்கள் தூக்கத்தில் அல்ல .விழித்துக் கொண்டே . தூங்கி க் கொண்டே காண்பது கனவல்ல . அக் கனவு மூங்கில் இலைமேல் படிந்த பனித் துளி போல விழிக்கும்  முன்பே  மறைந்து போகும் .. விழித்துக் கொண்டே காணும் கனவு தூங்கும் போது கூட உன்னைத் தட்டி எழுப்பும் என்பார்.

கனவுகளால் அடிமைப்படாதே கனவுகளை அடிமைப்படுத்து

1829- 1896 ல் வாழ்ந்த ஜெர்மன் நாட்டு வேதியியல் விஞ்ஞானியான பிரெடெரிக் ஆகஸ்ட் 
 கீகுள் (Friedrich August Kekule) பென்சீன் மூலக்கூறின் கட்டமைப்பைக் கண்டுபிடித்தவர் . தன் கண்டுபிடிப்பை வெளியிட்டு 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் போது 
பென்சீன் மூலக்கூறின் வட்ட வடிவக் கட்டமைப்பை ,ஒரு பாம்பு தன் வாலையே 
உணவாக நினைத்து தன் வாயால் கவ்விப் பிடித்துக் கொண்டிருப்பதை ஒரு நாள் பகற்
கனவாகக் கண்டேன்.அக்கனவே பென்சீன் கட்டமைப்பைக் கண்டறிய வழிகாட்டியாக அமைந்தது” என்று குறிப்பிட்டார் .கார்பன்-கார்பன் அணுவிடைப் பிணைப்பைப் பற்றி 
பகலிரவாய் 7 ஆண்டுகள்  ஆராய்ந்த பின்னரே பகற் கனவில் பென்சீன் மூலக்கூறு
ஒரு பாம்பு வடிவில் உருவகமாய்த் தோன்றியிருக்கிறது .பொதுவாக வெற்றி பெற
வேண்டும் என்று உண்மையாக நினைத்து அதற்காகத் தங்களை அர்பணித்துக் 
கொள்பவர்கள் வித்தியாசமாகச் சிந்தித்து செயல்படுவதால் செயல்திறன் அபரிதமாக 
இருக்கும்.இதற்குக் காரணம் மூளையோடு அகமனமும்  சேர்ந்து கொள்வதேயாகும் .
அகமனம் எப்போதும் சேகரித்த விஷயங்களை அசைபோடும், முடிவுகளை 
குறிப்புணர்த்தும்.கனவுகள் அகமனதின் ஒரு வெளிப்பாடு என்று உயிரியல்  அறிஞர்கள் 
கூறுவார்கள்மேலோட்டமாக அசைபோடும்போது கனவுகளுக்குப் பொருள்  விளங்காதுகணப்பொழுதில் மறந்தும் போகும்.அதனால் பலர் கனவுகளுக்கு மதிப்புக்  கொடுப்பதில்லை.

இந்தியாவின் கணித மேதை இராமானுஜனின் நோட்டுப் புத்தங்கங்களில் 4000 க்கும்  மேற்பட்ட சூத்திரங்களும் கணிதமொழித் தொடர்புகளும் வெறும் குறிப்பாக அவரால் 
எழுதப்பட்டுள்ளனவழிமுறைகளின்றி தீர்வுகளை மட்டுமே எழுதுவது என்பது  அகமனதின் தொடர்பின்றி இயலாதது.இத் திறமைக்குக் காரணம் நாமகிரி அம்மன் 
அருள்  என்று அடக்கமாக இராமானுஜன் கூறினாலும் ,உண்மையில் அவருடைய 
வற்றாத ஆர்வமும் முழுமையான ஈடுபாடும் பெற்றுத் தந்த திறமை என்றுதான்
சொல்லவேண்டும் .

தாமஸ் ஆல்வா எடிசன் சில சமயங்களில் கைகளில் எடைக் கற்களைத் தூக்கி வைத்துக் கொண்டு இருக்கையில் அமர்திருந்த படியே தூங்குவாராம் .அந்த எடை நழுவிக் கீழே
விழும் போது தூக்கம் கலைந்து விழித்தெழுவாராம் .அப்போது அவர் கண்ட கனவுகளை நினைவு படுத்திப் பார்ப்பாராம்அவை பெரும்பாலும் ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு
மூலமாக இருக்குமாம்.வெற்றி பெறுவதற்காகக் கனவு காண்பவர்கள் தங்கள் கனவு
களை  நனவாக்கி  விடுவார்கள்கனவுகளை மொழிபெயர்க்கத் தெரிந்ததால்
இது இயல்பாகிறது .

மென்டலீவ் தனிம அட்டவணையைக் கண்டுபிடித்த வேதியியல்  விஞ்ஞானி .இவர் 
நெடுங் காலம் வேதித் தனிமங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அதனால் அவருடைய முயற்சியில் அகமனமும் சேர்ந்து கொண்டதுதனிம அட்டவணைக்குரிய அட்டவணையின் வடிவத்தை முதலில் தன்னுடைய கனவில் தான்  கண்டதாக இவரும் குறிப்பிட்டுள்ளார் .

வில்லியம் ஹெர்ஷல் ஒரு பழங்காலத்திய வானவியல் அறிஞர் இவர் யுரேனஸ் என்ற 
கோளைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் அதைக் கனவின் மூலம் தான் தெரிந்து கொண்டாராம். இவையாவும் ஒருவருடைய வெற்றிக்கு பகற்கனவும் ஒரு வலிமையான 
தூண்டுகோல்  என்பதை எடுத்துச் சொல்லும் ஒரு சில சரித்திரப் பதிவுகள். 

கனவு காணுங்கள் இளைஞர்களே என்று நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள் . உண்மைதான் ,
உண்மையான கனவுகளே வாழ்க்கையில் உயர்ந்த மனிதர்களை
உருவாக்குகின்றது ஒரு செயல் எண்ணத்திலிருந்து உருவாகிறது ,ஆனால்
அந்த எண்ணங்களோ ஒருமுகப் படுத்தப்பட்ட சிந்தனையிலிருந்து உருவாகின்றன.
சேகரித்து சிதறிய கருத்துகளும் கனவுகளுக்குக் காரணமாக இருந்தாலும் மனதோடு  ஒத்ததிரும் ஒருங்கிணைந்த கருத்துகளே நிஜத்தைக் காட்டும்  நிழல்
வடிவக் கனவுகளுக்குக் காரணமாக இருக்கின்றன.

ஒரு ஆசிரியர் தன் மாணவனைப் பார்த்து உன் எதிர்காலக் கனவு என்ன என்று கேட்பார் .அம் மாணவர் நான் பொறிஞராகப் போகிறேன் என்றோ டாக்டராகப் போகிறேன் என்றோ கூறுவதைக் கேட்டிருக்கிறோம் . அவனுடைய கனவு உண்மையானதாக இருக்குமானால் எதிர்காலத்தில் அம் மாணவர் அப்படியே ஆகிறார் . இதில் ஒரு நுட்பமான உளவியல் கருத்து உள்ளடங்கி இருக்கிறது. ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்ல அது அதுவாகவே ஆகிவிடுகிறது என்பதுதான் . ஒப்புக்குச் சொல்லாமல் ,மனப்பூர்வமாகச் சொல்லிப் பாருங்கள் ,
உங்கள் பிள்ளையின் மனதில் அது ஆழப் பதிந்து விட்டால் அவர்களை நீங்கள் எப்படி உருவாக்கவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே உருவாக்கமுடியும் .

ஒரு சிலருக்கு இயல்பாகவே ஒரு ஈடுபாடும் ஆர்வமும் வந்துவிடும் . அவர்களோடு
ஒப்பிட்டு உங்கள் பிள்ளையும் அப்படி வரவேண்டும் என்று உங்கள் முயற்சி இல்லாமல் அவர்களைக் கட்டாயப் படுத்தாதீர்கள் . ஒவ்வொருவருக்கும் புறச்சூழல் வேண்டுமானால் ஒரேமாதிரியாக இருக்கலாம் ஆனால் அகச் சூழல் பெரிதும் வேறுபட்டது ..ஒரு கல்லுக்குள்ளே ஒரு அழகான சிலை இருக்கிறது என்பதை அதை வடிக்கும் சிற்பி மட்டுமே அது கல்லாய் இருக்கும்போதே  அறிவான் .அதைப்போல
உங்கள் பிள்ளைகளைப் பொருத்தமட்டில் நீங்கள் தான் தலைமைச் சிற்பி .

No comments:

Post a Comment