திருடுதல்,,களவாடுதல், கொள்ளையடித்தல் போன்ற குற்றங்கள் மக்கள் ஏமாந்திருக்கும் போது அவர்களுடைய உடைமைகளைத் தனதாக்கிக் கொள்ள ஏமாற்றுபவர்களால் செய்யப்படுவனவாகும்..அளவு குறைவாக க் கொடுத்தல், கலப்பட மற்றும் .போலிப்பொருளைக் கொடுத்தல், ஈடான பொருள் வாங்கிக்கொண்டு பொருளைக் கொடுக்க மறுத்தல் போன்ற குற்றங்களும் ஏமாற்றி பிறரிடமிருந்.து பொருள் சம்பாதிப்பதாகும் இவைகளும் ஒருவகையில் ஊழலே .
சிலர் கோயில் உண்டியலையும் ,எ டி எம் மிஷினையும் தூக்கிச் சென்று கொள்ளையடிக்கின்றார்கள் சிலர் நகைக் கடைகளில் கன்னக்கோலிட்டு உட்புகுந்து கொள்ளையடிப்பார்கள் யாருமில்லாத போது கதவை உடைத்து வீடு, கடைகளுக்குள் நுழைந்து திருடுவார்கள் . ஏ டி எம் மிஷினில் நிரப்ப எடுத்துச் செல்லும் பணத்தையும்,பணப்பட்டு வாட்டிற்காக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லும் பணத்தையும் சிலர் இடைமறித்து அபகரித்துக் கொள்ளவர்கள் . பிறருடைய வங்கிக் கணக்கு எண்ணையும் ,கடவுச் சொல்லையும் அறிந்து கொண்டு சிலர் உரிமையில்லாத பணத்தைத் திருட்டுத் தனமாக எடுப்பார்கள். சேமிப்புக் கணக்கு எண்ணையும் ,கடவுச் சொல்லையும் அறிந்து கொள்வதற்கு நாடகமாடுவார்கள். உங்கள் மொபைல் எண்ணுக்குக் .கோடிக்கணக்கில் பரிசு விழுந்திருக்கின்றது என்று நம்பவைத்து தேவையான விவரங்களை நம்மிடமிருந்தே கறந்துவிடுவார்கள் .சிலர் வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி ஏமாற்றி விவரங்களை கேட்பார்கள் .
பெண்கள் தனியாகச் சாலைகளில் நடந்து செல்லும் போது அவர்களுக்கிருக்கும் பாதுகாப்பின்மையைத் தெரிந்துகொண்டு அவர்களுடைய கழுத்துச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடுவார்கள். இன்றைக்கு இது கூட்டு முயற்சியில் வெற்றிகரமாகச் செய்யப் படுகின்றது. ஒருவர் துப்புக் கொடுப்பார் . இருவர் ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வண்டியில் விரைந்து பெண்ணுக்கு அருகாமையில் பயணித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கிலியை அறுத்துக்கொண்டு நொடிப் பொழுதில் காணாமற் போய்விடுவார்கள்.,அடையாளம் தெரியாமலிருக்க ஹெல்மெட் வேறு அணிந்திருப்பார்கள்.
சிலர் பழைய நகைகளுக்கு மெருகுபோடுகின்றேன் என்று தங்கத்தை கரைத்து எடுத்துக் கொண்டுவிடுவார்கள் சிலர் பித்தளைகுத் தங்க முலாம் பூசி ஏமாற்றிவிடுவார்கள் .நகைகளில் அரக்கு போன்ற வேற்றுப்பொருட்களை அடைத்து எடையைக் கூட்டி ஏமாற்றுவார்கள் .சேதாரம் அதிகம் என்று சொல்லி அதிகம் வசூலித்து விடுவார்கள்
நகைக்காக மாதாமாதம் சீட்டுப்பணம் கட்டுபவர்களையும் , அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு டெப்பாசிட் செய்தவர்களையும் ஏமாற்ற ஒருநாள் காணாமற் போய்விடுவார்கள் . வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருகின்றேன் , அரசாங்க வேலைக்குப் பணி நியமன ஆணை வாங்கித் தருகின்றேன்,சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகின்றேன் என்று சொல்லி நிறையப் பணம் வாங்கிக் கொண்டு அலையவிட்டு ஏமாற்றிவிடுவார்கள் .மக்கள் மக்களால் ஏமாற்றப்படும் போது சில பெண்கள் தங்கள் கற்பையே பறிகொடுப்பதுமுண்டு..சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, பெற்றோர்களின் சம்மதமின்றி வீட்டைவிட்டு ஓடிவந்த பெண்களை இந்த ஏமாற்றுக்காரர்கள் எளிதில் ஏமாற்றி சுகங்களை அனுபவித்து விட்டு இறுதியில் பாலியல் தொழிலுக்குத் தள்ளிவிட்டுவிடுவார்கள் மருத்துவப் படிப்பு மற்றும் ஒரு சில உயர் படிப்புக்கு இடம் , பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் ,பதிவாளர், தேர்வாளர் பதவிகள் அரசாங்கப் பணி ஒப்பந்தம், உயர் பதவிகள் , தொழில் தொடங்க வங்கிக் கடன் போன்றவற்றை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்வார்கள்.
நேர்மையான வழிமுறைகள் வரையறுக்கப்பட்டு பின்பற்றி ஒழுகுவதற்கு எளிமையாக இல்லாததால் எதிர்மறையான வழிமுறைகளில் நாட்டங் கொண்டு சிலர் ஏமாற்றவும் பலர் ஏமாறவும் செய்கின்றார்கள் . கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இன்றைக்கு சமுதாயத்தில் மிகுந்து வருகின்றன. பாலில் தண்ணீரைக் கலப்பார்கள். இது உடல் நலத்திற்கு கேடு இல்லை. ஆனால் இன்றைக்கு பாலில் யூரியா போன்ற உரங்கள் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகின்றன மாளிகைச் சாமான்கள் , அழகு சாதனப் பொருட்கள் ,மது போன்றவற்றில் உடல் நலத்திற்குத் தீங்கு செய்யும் வேற்றுப்பொருட்களைக் கலக்கின்றார்கள் சுவைக்காகவும், அழுத்தமான நிறத்திற்காகவும் உணவுப் பொருட்களில் நிறமூட்டிகளைச் சேர்பதுண்டு .இவை பெரும்பாலும் உடலுக்கு ஓவ்வாமையைத் தரும் .
மனிதர்கள் மனிதர்களிடம் காட்டும் இரக்கத்தைக் கூடத் தவறான வழிகளில் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் .சிலர் போலி நிறுவங்களுக்கு பொருள் உதவி கேட்டு வருவார்கள் .சிலர் யாசகம் கேட்டும் , தாகத்திற்கு நீர் கேட்டும், எதோ முகவரி விசாரிப்பது போலவும் வருவார்கள். தனியாக இருக்கின்றார்களா என்பதை அறிந்து கொண்டு கைவரிசையைக் காட்டிவிடுவார்கள் .வீடு புகுந்து கொள்ளையடிப்பது, கழுத்துச் சங்கிலியை பறிப்பது போன்ற செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றார்கள் . சிலர் சிறு குழந்தைகளைக் கடத்தி ஊரில் பிச்சையெடுக்க விட்டு சம்பாதிப்பார்கள் சிலர் கூட்டங்களில் பிக்பாக்கெட் அடிக்க பழக்கி விடுவார்கள் . பொதுவாக மகப்பேறில்லாதவர்கள் குழந்தைகளைக் கடத்துவதில்லை. தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள்தான் பிள்ளைகளைக் கடத்துகிறார்கள்.பாலியல் தொழில் நடத்துவதற்காக இளம் பெண்களைக் கடத்திச் சிறைப்பிடித்து வைத்திருப்பார்கள் .கடினமான வேலைகளைச் செய்ய அடிமையாய் ச் சிலரைப் பிடித்து வைத்திருப்பார்கள்