Sunday, August 29, 2021

 சுயநலம் என்ற எண்ணத்தை ஒழுக்கமின்மைமை வளர்த்துவிடுகின்றது . இதனால் ஒழுக்கமற்ற ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தோடு சேர்ந்து  வாழ்ந்து வந்தாலும் .சமுதாயத்திற்கு இனமறிந்து கொள்ள முடியாத ஒரு எதிரியாகவே வாழ்கின்றார் ..புற எதிரிகளை விட உள்ளெதிரிகளே மிகவும் ஆபத்தானவர்கள்..ஏனெனில் புற  எதிரியை இனமறிந்து கொள்வதைப்போல உள்ளெதிரிகளை  இனமறிந்து  தவிர்த்து முடிவதில்லை .சுயநலம் பொது நலச் சிந்தனைகளை வேரறுத்து விடுகின்றது ..ஆனால் சமுதாயத்தோடு இணைந்து வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும்   பொதுநலச் சிந்தனைகள் என்பது சமுதாய இலக்கணம் என்பதால் சுயநலச் சிந்தனைகளை துறந்து பொதுநலச் சிந்தனைகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது . சுயநலச் செயல்பாடுகளை மறைத்துவிட்டு  மற்றவர்களுக்காக பொதுநலத்தை  பேச்சு வழக்கில் மட்டும் மேற்கொள்ளும் பழக்கம்  மக்களிடையே  பரவி வருகின்றது   

 

இது தவறு இது சரி என்று ஏதும் அறியாத பிறந்து வளரும் குழந்தைகளிடமும் ஒழுக்கமின்மை மேலோங்கி வருவதற்கு யார் காரணம் ? மறைவொழுக்கத்தைப் போற்றும் இந்தச் சமுதாயமே காரணமாக இருக்க முடியும் ..பெரும்பாலும் குழந்தைகள் முதலில் பெற்றோர்களிடமிருந்து பின்னர் உறவினர்கள்,  நண்பர்கள் மற்றும் சமுதாயத்திலிருந்து  பழக்கங்களைக் கற்றுக்கொள்கின்றன.. .தற்காலியமான  சுகங்களைத் தருவதாலும்  , உடல் உழைப்பு குறைவாகத் தேவைப்[படுவதாலும்  தீய பழக்கங்களை குழந்தைகள் மிக விரைவாகவும் எளிதாகவும் கற்றுக்கொண்டுவிடுகின்றன. அது .கட்டுப்பாடுகள் மிகுந்த ,சுதந்திரமான இயக்கத்தை மட்டுப்படுத்துகின்ற நல்ல பழக்க வழக்கங்களை வாழ்க்கைக்குத் தேவையற்றவை எனப்  புறந்தள்ளிவிடுகின்றது  ,ஒழுக்கம்  எண்ணத்தில் தோன்றுவதற்கு  முன்னரே உள்ளுக்குளேயே ஒழுக்கமின்மை  மிகப் பெரிய அளவில் வளர்ந்து  விடுவதால்  திருத்தவே முடியாத ஒரு சமுதாயமே சாகாத சமுதாயமாக வளம் பெறுகின்றது இன்றைக்கு இளைஞர்கள் கட்டுப்பாடுகளின்றிச் சுற்றித் திரிவதையும் ,பெரியோர்களை மதிக்காமல் அறிவுரைகளை இழிவுபடுத்துவதையும் , வீண் பிடிவாதம் செய்வதும் ,மறைவொழுக்கங்களை விட்டுவிடாமல் மேலும் நுட்பமாய்ச்  செய்வதையும்  பழக்கமாகக் கொண்டுள்ளார்கள் இது பொதுவாக எல்லோருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருப்பதால் , அதன் வளர்ச்சியை யாரும் கட்டுப்படுத்துவதோ  அல்லது கண்டுகொள்வதோ இல்லை        

Friday, August 27, 2021

ஒழுக்கமின்மை

 பொதுவாக ஒழுக்கமின்மை சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு மதிப்புக்கொடுப்பதில்லை. சமுதாயம்  நலமாக இருந்தால் சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் நலமாகவே இருப்பார்கள் என்ற கொள்கையில் நம்பிக்கையின்றி சமுதாய நலனைப்  புறக்கணிக்கும் போக்கை ஒழுக்கமின்மை தூண்டிவிடுகிறது. சுயநலத்தில் கொண்டுள்ள அளவில்லாத விருப்பம்  சுய கட்டுப்பாடுகளின்றி செயல்படும்  துணிவைத்  தந்து மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் விருப்பத்தை பெருவிருப்பமாக்கி சமுதாயம் தழுவியவாறு வளர்த்து  விடுகின்றது. தீய செயல்கள் .மறைவொழுக்கமாக இருப்பதால் பொதுவாக எல்லோரும் தங்களுக்குத் தாங்களே நியாப்படுத்திக்கொண்டும் ,தங்களுக்கென்று ஒரு வரையறையையும் தனித்த  வரம்பையும் ஏற்படுத்திக் கொண்டும் மறைவொழுக்கச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். .மறைவொழுக்கச் செயல்களில் பிறர் அறியாமல் தொடர்ந்து செய்ய முடியும் என்பதாலும் , தப்பித் தவறி  கையும் களவுமாகப் பிடிபட்டாலும் தப்பித்துக் கொள்ள பல வழிமுறைகள் இருப்பதாலும் இப்போக்கு சமுதாயம் தழுவியவாறு வளர்ந்து வருகின்றது.  பொதுநலத்தைக்  குழி தோண்டிப் புதைத்து விட்டு   சுயநலத்தைப் பேணிக்காக்கும் ஒரு சமுதாயக் காரணியாக நிலைப்பட்டு வருகின்றது. புறத்தே எதிர்க்கப்பட்டாலும் . எல்லோராலும் அகத்தே ஏற்றுக்கொள்ளப்படுவதால்  பிற்காலத்தில் எந்த எதிர் நடவடிக்கைகளினாலும் தடுக்க முடியாத கடிய சமுதாயச் சூழலையே உருவாக்கி நிலைப்படுத்தும்.

 

சுயநல எண்ணத்தையும் , செயல்பாடுகளையும்  இந்த ஒழுக்கமின்மை வளர்த்துவிடுகின்றது . ஒழுக்கமின்மை தற்காலிகமான இலாபங்களை மட்டுமே தரும் .அது நிரந்தரமானதில்லை. ஒரு சமுதாயத்தில் ஒரு சிலர் மட்டுமே தீய செயல்களைச் செய்வார்களேயானால் அங்கு  ஒழுக்கத்தின் அழுத்தத்தால் அவர்கள்  தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு   அதிகமாக இருக்கும் . ஆனால் மறைவொழுக்கத்தால் பெரும்பாலானோர் தீயவர்களாக மாறினால் , சீரழியும் சமுதாயம் திருத்தப்படுவதற்கான வாய்ப்பே  இல்லாமல் போகும். இதன் பரிணாம வளர்ச்சி ஒட்டு மொத்த சமுதாயத்தின் அழிவிற்கு காரணமாக அமையும் .    

 ஒழுக்கமின்மை

 

அகத்தடைகளில்  முதன்மையானதும் முக்கியமானதும் சுய கட்டுப்பாடுகளை மீறி பின்பற்றி ஒழுக்கப்படும் ஒழுக்கமின்மையே.. ஒழுக்கமின்மையை மறைவொழுக்கமாகப்  பின்பற்றி ஒழுகும்   ஒருவர் ஒழுக்கத்தைப்பற்றி வாய் கிழியப்   பேசுவது சமுதாய     மதிப்பை உயர்த்திக்கொள்வதில் கொண்டுள்ள விருப்பமாகும்.  ஒழுக்கத்தைப் பேசுவதும் ,ஒழுக்கமின்மையை மறைவொழுக்கமாகச் செய்வதும்    சமுதாய மதிப்பில்  களங்கம்  ஏற்பட்டுவிடக்கூடாது   என்பதில் காட்டும்  அக்கறையாகும்.தன்னிடம் இல்லாத ஒழுக்கத்தை இருப்பதாகக் காட்டிக்கொள்ள பேசுவதும், இருக்கும் ஒழுக்கமின்மையை மறைக்க மறைவொழுக்கமாகச் செய்வதும் போலித்தனமான நடவடிக்கை களாகும் ..இதனால் பெரும் பாலான மனிதர்கள் சமுதாயத்தில் இரட்டை வேடம் போடுகின்றார் கள் .  பிறர் பார்க்க ஒன்றைச் செய்வது ,பேசுவது ,தனக்காக வேறொன்றைச்  செய்வது,பேசுவது  இவர்களுடைய பண்பாகும் .இந்த இரட்டை மனநிலை பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும்  பிரதிபளிப்பதால்   அதுவே  ஒரு அகத்தடையாக அமைந்துவிடுகின்றது .இரட்டை மன நிலை என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கருத்துக்  களினால் ஏற்படும் குழப்பநிலையாகும் ..ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை யில் ,ஒரு குறிப்பிட்ட  எண்ணத்தையும் , செயலையும் பெறுவதில் இது தாமதத்தை ஏற்படுத்திவிடுகிறது 

இலக்கைத் தீர்மானித்துக்கொண்டு ஒரே பாதையில் செல்பவனுக்கு அகத்தடை ஒரு தடையாக இருப்பதில்லை .ஆனால்  குறுக்குப்பாதையிலும் ,மாறி மாறி மாற்றுப் பாதைகளிலும் செல்பவனுக்கு அகத்தடை அடங்காத் தடையாக இருக்கும்  .     .        ..