Friday, August 27, 2021

 ஒழுக்கமின்மை

 

அகத்தடைகளில்  முதன்மையானதும் முக்கியமானதும் சுய கட்டுப்பாடுகளை மீறி பின்பற்றி ஒழுக்கப்படும் ஒழுக்கமின்மையே.. ஒழுக்கமின்மையை மறைவொழுக்கமாகப்  பின்பற்றி ஒழுகும்   ஒருவர் ஒழுக்கத்தைப்பற்றி வாய் கிழியப்   பேசுவது சமுதாய     மதிப்பை உயர்த்திக்கொள்வதில் கொண்டுள்ள விருப்பமாகும்.  ஒழுக்கத்தைப் பேசுவதும் ,ஒழுக்கமின்மையை மறைவொழுக்கமாகச் செய்வதும்    சமுதாய மதிப்பில்  களங்கம்  ஏற்பட்டுவிடக்கூடாது   என்பதில் காட்டும்  அக்கறையாகும்.தன்னிடம் இல்லாத ஒழுக்கத்தை இருப்பதாகக் காட்டிக்கொள்ள பேசுவதும், இருக்கும் ஒழுக்கமின்மையை மறைக்க மறைவொழுக்கமாகச் செய்வதும் போலித்தனமான நடவடிக்கை களாகும் ..இதனால் பெரும் பாலான மனிதர்கள் சமுதாயத்தில் இரட்டை வேடம் போடுகின்றார் கள் .  பிறர் பார்க்க ஒன்றைச் செய்வது ,பேசுவது ,தனக்காக வேறொன்றைச்  செய்வது,பேசுவது  இவர்களுடைய பண்பாகும் .இந்த இரட்டை மனநிலை பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும்  பிரதிபளிப்பதால்   அதுவே  ஒரு அகத்தடையாக அமைந்துவிடுகின்றது .இரட்டை மன நிலை என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கருத்துக்  களினால் ஏற்படும் குழப்பநிலையாகும் ..ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை யில் ,ஒரு குறிப்பிட்ட  எண்ணத்தையும் , செயலையும் பெறுவதில் இது தாமதத்தை ஏற்படுத்திவிடுகிறது 

இலக்கைத் தீர்மானித்துக்கொண்டு ஒரே பாதையில் செல்பவனுக்கு அகத்தடை ஒரு தடையாக இருப்பதில்லை .ஆனால்  குறுக்குப்பாதையிலும் ,மாறி மாறி மாற்றுப் பாதைகளிலும் செல்பவனுக்கு அகத்தடை அடங்காத் தடையாக இருக்கும்  .     .        ..    

No comments:

Post a Comment