Wednesday, May 20, 2026

ஒன்றை நாம் எல்லோரும் சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே எல்லோருக்குமான மாற் றத்தை விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.ஒரு மனிதனின் பல விருப்பங்களில் எது அதிகம் விரும்பப்படுகின்றதோ அதுவே முதலில் நிறைவேறும் என்பது அறிவியல்.இது சமுதாயத்திற்கும் பொருந்தும். தீயவர்கள் பெருகி நல்லவர்கள் குறுகி வர நல்லவர்களும் தீயவர்களாக மாறும் நிலையே வளரும். தீயவர்கள் ஆட்சியை விரும்புவதில்லை.அதிகாரத்தையே விரும்புகின்றர்கள்.

Saturday, May 16, 2026

அரசியல்வாதிக்களுக்கென ஒரு தனித் தகுதி வகுக்கப் பட்டு சட்டமாக்கப் படவேண்டும். குறைந்த பட்சம் ஒரு டிகிரி. சட்டம் கற்றிருப்பது கட்டாயம்.அமைச்சகர்களுக்குதுறை சார்ந்த கல்வி பெற்றிருக்க வேண்டும். சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் முன்னேற்றம் வளர்ச்சி என்பது நமது வாயில் மட்டுமே.பிற நாடுகளோடு ஒப்பிடும் போது அது தெளிவாகத் தெரிய வருகின்றது. உணர்ச்சிவசப்படும்போது நாம் பெரிய தவறுகளைச் செய்துவிடுகின்றோம். மக்களுக்கான சட்டங்களை விட ஆட்சியாளர்களுக்கான சட்டங்கள் இன்னும் தெளிவாகவும் வலிமையாகவும் இருக்கவேண்டும்.

Monday, May 11, 2026

பொய்யையும் போலியையும் கண்டு உண்மையும் நேர்மையும்எதிர்த்த காலம்காணாமற் போய்விட்டது. ஒருபொய்யைஒரு போலியை மற்றொருபொய்யும்போலியும் தான்எதிர்க்கின்றது. வெற்றியும்கொள்கின்றது. எது போலி எது பொய் என்பதை அறியாத மக்கள் நம்புவதோடு அதை ப் பரப்பவும் செய்கின்றர்கள் அறிந்தவர்கள் கூட்டுச் சேர்ந்து பயன் பெறுகின்றார்கள்.

Monday, May 4, 2026

வெறும் வாய் வார்த்தைகள் மட்டும் வெற்றியைத் தருவதில்லை. ஒரு பணிக்குப் பின்னால் அர்ப்பணிப்பு இருக்கவேண்டும். அது அவர்களுடைய செயல் திறன், நேர்மைத்தனம், இவற்றை வெளிபடுத்துவதாக இல்லை. மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போகும்போது ஒவ்வொரு முறையும் ஆட்சிமாற்றம்ஏற்படுகின்றது