Monday, May 27, 2024

 ஒரு தனியார் நிறுவனமும் அரசாங்கமும் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன . தனியார் நிறுவனம் தனி யொருவரால் நிறுவப்பட்டது .அங்கு அவரே முதலாளி . அவர் விருப்பப்படி நிர்வாகம் செய்யலாம் .முதலாளி ஒருவர் தொழிலாளி பலர் . அரசாங்கம் என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. அங்கு மக்களே முதலாளி .ஆனால் வர்த்தக முதலாளிகளைப்போல அதிகாரமில்லாதவர்கள் . இங்கு முதலாளி போல ச் செயல்பாடும் ஆள்பவர்கள் சிலர் , தொழிலாளிகள் போல உழைப்பைக்கொட்டும் மக்கள் பலர். நிறுவனத்தில் முதலாளி முதலீடு செய்து இலாபம் ஈட்டுவார் .நிறுவனத்தின் வளர்ச்சி அவரது உள்ளார்ந்த குறிக்கோளாக இருக்கும். அரசாங்கத்தில் ஆள்பவர்கள் முதலீடு இன்றி , உழைப்பின்றி அரசின் சொத்தை தனதாக்கிக் கொள்வார்கள் . நாட்டின் வளர்ச்சி வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமே இருக்கும் .நாட்டின் வளர்ச்சிக்காக சொந்தமாக முதலீடு செய்யாமால்  இலாபத்தை மட்டுமே அனுபவிக்க நினைக்கும் இவர்களால் நாடு வளம் பெறுவதில்லை 

Monday, May 13, 2024

Story of a Movie

 

நீண்ட   நாட்களுக்குப்  பிறகு நான்  “மஞ்சுமோல் பாய்ஸ்” என்ற படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விறுவிறுப்பாக இருந்தது. கிளைமாக்ஸ் சூப்பர் . எல்லோராலும் கைவிடப்பட்ட பின்பு கடுமையான கூட்டு முயற்சியால்  ஒரு குழு விபத்தில் சிக்கிய தங்கள் நண்பனின் உயிரைக் காப்பாற்றிய போது அனைவருமே உணர்ச்சி பொங்க சத்தமிட்டனர் . ரியாலிட்டி விறுவிறுப்புக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது   அது போல ஒரு படத்தை ஆங்கிலத்தில் கூடுதல் விறுவிறுப்புடன் தயாரிக்கமுடியும் . அதற்கான கதை இதோ .இது விண்வெளிப்பயணம் மற்றும் பயணத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பானது .

 

ஒரு  விண்வெளி ஆய்வு  நிறுவனம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாமான முயற்சியில் ஈடுபடுகின்றது. அந்த நிறுவனம் விண்வெளியில் இருக்கும் ஆளில்லாத ஒரு கிரகத்திற்கு 20-30 நபரை அழைத்துச் செல்வதாகவும் அதற்கு இவ்வளவு கட்டணம் என்றும் விளம்பரம் செய்கின்றது . 1000 பேர் விண்ணப்பிக்க , நேர்காணல் மூலம் தகுதியான 20 பேரைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் .அந்த 20 பேருக்கு ,நீண்டகால விண்வெளிப்பயணத்திற்கு வேண்டிய எடையற்ற நிலையில் செயல் புரிதல் , உணவு சாப்பிடுதல் , நீர் குடித்தல், மற்றவர்களோடு தொடர்பு கொள்ளுதல்  விண்கலத்தை விட்டு விண் வெளிக்கு வெளியேறுதல் , வெளியிலிருந்து உள்ளுக்குள் வருதல் ,போன்ற பயிற்சிகளை அளிக்கின்றனர் . எல்லோருக்கும் பாதுகாப்பிற்கான விண்வெளி உடை கொடுக்கப்பட்டு  விண்வெளிப்பயணம் குறிப்பிட்டபடி நடக்கிறது .குறிப்பிட்ட கிரகத்தை அடைந்து .விண்வெளியில் தெரியும் அதிசயங்களை எல்லோரும்  கண்டு ரசிக்கின்றனர்  .பின்னர் கிரகத்திலிருந்து எல்லோரும் தாய்க்கலத்தை அடைய ஒவ்வொருவரும்  முயற்சி செய்யும் போது ,கடைசியாக முயன்றவர்  செய்யும் தவறால் கிரகத்திலேயே தங்கிவிடும் நிலை ஏற்படுகின்றது .எல்லோரும் தாய்க் கலத்தை எட்டியபின்பே ஒருவர் விடுபட்டுப்போனது தெரிய வருகின்றது. அந்தப்  பயணியைக் கடுமையான முயற்சிக்குப் பின்னர் காப்பாற்றிவிடுகின்றனர் /அல்லது கடைசியாக வருபவர் தாய்க் கலத்தோடு இணைய முயலும் போது தவறான உடலியக்கம் காரணமாக தாய்க்கலத்தை விட்டு மெதுவாக விலகிச் செல்கிறார் .அவரை எல்லோரும் சேர்ந்து காப்பாற்றி பூமிக்கு அழைத்து க்கொண்டு வருகின்றனர். அப்படிக்காப்பற்றப்படுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

Monday, May 6, 2024

தமிழ் மொழியில் மருவுச் சொற்கள்

தமிழ் மொழியில் மருவுச் சொற்கள்

றகரம் தகரமாகி மொழி  மறுவுதல் றகரமும் தகரமும் வல்லினங்கள் என்றாலும் தகரத்தின் உச்சரிப்பிற்கு குறைவான முயற்சியே தேவைப்படுகின்றது . இந்த சிறிய அனுகூலமே மொழியின் மறுவுதலுக்கு அடிப்படையாக இருக்கின்றது .

ஒரு சொல்லில் அடுத்தடுத்த இரு எழுத்துக்கள் ஒன்று றகர மெய்யாகவும் மற்றொன்று றகர உயிர்மெய்யாகவும் இருக்கும் போது அவை உச்சரிப்பின் எளிய முயற்சியில் தகர மெய்யாகவும், தகர உயிர் மெய்யாகவும் மற்றம் பெற்று வழக்காற்றில் மருவி நிலைபெற்றுவருகின்றன .இதற்கு எண்ணிறந்த எடுத்துக்காட்டுகளை காட்டலாம்

காற்று - காத்து     வற்றிய   - வத்திய        பத்தரை மாற்று - பத்தரை மாத்து

விற்று - வித்து       முற்றிய - முத்திய        சோற்றுக் கற்றாழை - சோத்துக் கத்தாழை

நாற்று - நாத்து    ஊற்றிய - ஊத்திய        ஆற்றோரம் - ஆத்தோரம்

நேற்று - நேத்து     ஏற்றிய - ஏத்திய           முதல் சுற்று - முதல் சுத்து

குற்றம் - குத்தம்                                                இளையாற்றங்குடிஇளையாத்தங்குடி

ஏற்றம் - ஏத்தம் 

  கிணற்றடி - கிணத்தடி 

கீற்று   கீத்து 

கயிற்றில்  கயித்தில்      கற்றுக்கொண்டான் - கத்துக்கொண்டான் 

நூற்றில் ஒரு பங்கு - நூத்தில் ஒரு பங்கு 

நெற்றி நெத்தி 

வற்றாத   வத்தாத 

வற்றுமா  வத்துமா 

விற்றான் வித்தான் 

தோற்றான் தோத்தான்  ஒற்றிக்கொள் ஒத்திக்கொள் 

பெற்றவள் பெத்தவள் 

 

இதில் ஒரு ஆராய்ச்சியே செய்யலாம் .விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்க         

Saturday, May 4, 2024

 அப்போதைக்கு ஒரு சிறிய அனுகூலம் கிடைத்தால் போதும் . எவ்வளவு பெரிய குற்றங்களையும்  செய்யத்  தயாராகிவிடுகின்றார்கள். இந்த விபரீதமான மனப்போக்கு அரசியல்வாதிகளிடமிருந்து அதிகாரிகளையும், மக்களையும் தொற்றிக்கொண்டு விட்டது. அதனால் ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களை எதாவது ஒருவழியில் ஏமாற்றிப் பிழைக்கும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் .பெரும்பாலான மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்று தெரியாமலேயே ஏமாற்றப்படுகின்றார்கள் .ஏமாந்தவர்கள் அதை ச் சரிக்கட்ட ஏமாற்றும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள்